Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மலேசியாவுக்கு செக்….துருக்கிக்கு அடுத்த ஆப்பு… தயாராகும் மோடி அரசு.! இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் துருக்கிக்கு ஆப்பு வைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விஷயங்களில் துருக்கி நாடு ஆதரவாக இருந்து வருகிறது. உதாரணமாக, தீவிரவாத நிதி தடுப்ப அமைப்பான நிதி செயல் பணி குழு, தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை மற்றும் நிதியுதவியை தடுக்க ஆர்வம் காட்டவில்லை என பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது. பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு துருக்கி தனது வருத்தத்தை தெரிவித்தது. தீவிரவாதிகளை வளர்த்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துர…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பதிவாளரிடம் தங்கள் உறவை பதிவு செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநில பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் பொது சிவில் சட்ட மசோதாவில், `லிவ்-இன்` உறவில் இருப்பவர்களுக்கென வகுத்துள்ள விதிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, `லிவ்-இன்` உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மாவட்ட பதிவாளரிடம் அறிவிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேவேளையில், அந்த உறவில் இருக்கும்போது, க…

  3. படத்தின் காப்புரிமை Getty Images பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் பல, குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல என வரைவு மாற்றப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு புதிய பரிந்துரை வரைவு ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆ…

  4. 12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:03 AM உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. …

  5. பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …

  6. பஹ்ரைனால்... வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை பஹ்ரைனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட இந்த தடை மறு அறிவிப்பு வரை தொடரும் என தொழிலாளர் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மே மாத இறுதியில், கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பஹ்ரைன், சிவப்பு பட்டியலில் பல நாடுகளை இணைத்துள்ளது. இருப்பினும் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து குடியுரிமை பெற்ற நபர்கள் பஹ்ரைனுக்குள் இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் வேலை அனும…

  7. பொருளாதாரத்தில் சரிவை நோக்கி பயணிக்கிறது இந்தியா! In இந்தியா August 2, 2019 9:11 am GMT 0 Comments 1053 by : Krushnamoorthy Dushanthini உலக வங்கி வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பட்டியிலின்படி 2017ஆம் ஆண்டு 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டு 7 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே பொருளாதார மொத்த மதிப்பு சரிய காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7 வீதமாக க…

  8. தாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..! ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஜானகி சின்ஹானியா சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் அவருடைய 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம், தண்ணீர் எடுக்கச் சென்ற ஜானகி தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங…

  9. புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு மாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டியில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இறுதி முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். நடைமுறைகளின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும். ஆனால், மாலைதீவு மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருக்கிறார்கள் என்பதே உடனடியாகத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.வாக்காளர்களில் 58 சதவீதமானவர்கள் சோலீயை தெரிவுசெய்திருக்கிறார்கள்.அரசியல் சார்புகளுக்க…

  10. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு! ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18வது மக்களவை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் அட்டவணையை வெளியிடுவதற்கு முன், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு தயாராகி வருகின்றது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கினார். மேலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்தும் அவர் ஊடகங்களுக்கு விளக்கினார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்…

  12. 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படவில்லை. …

  13. இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …

  14. UNSC on Kashmir: காஷ்மீர் கடந்து வந்த பாதை - 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு - காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது. இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றி…

  15. சைக்கோ’ பாணி தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்டு இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி ஓராண்டுக்கு முன்பாக பஞ்சாபைச் சேர்ந்த பணக்காரப் பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை போலீஸாருக்குக் கடும் சவாலாக இருந்தது, துப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர், ஆனாலும் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் கொலையாளி செவ்வாயன்று சிக்கியதாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் போலீஸார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணின் பெயர் ஏக்தா ஜஸ்வால், இவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய டாக்ஸி வர்த்தகத் தொழில் இருந்தது, பணக்காரப் பெண், வயது 19…

  16. காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி? 8 ஆகஸ்ட் 2019 இ இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை…

  17. Published By: DIGITAL DESK 2 07 JUN, 2025 | 02:58 PM உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது. நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும். இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மன…

  18. இந்தியா - பாகிஸ்தான் எல்லை மோதல்: படையினர், பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் 14 பேர் பலி 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIAN ARMY ஜம்மு காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீரென மூண்ட சண்டையில் இரு தரப்பையும் சேர்ந்த படையினர், பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பக்கத்தில் மூன்று படையினரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பு கூறுகிறது. தங்கள் பக்கத்தில் நான்கு படையினரும், நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டு…

  19. கொரோனாவும் பரவிவரும் வெறுப்பு மனநிலையும்- டாக்டர் சிவபாலன் இளங்கோவன் April 4, 2020 - சிவபாலன் இளங்கோவன் · சமூகம் இந்தியா கொரோனோ பிப்ரவரி 19 ஆம் தேதி, வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் நகரம் அத்தனை கோலாகலமாய் இருக்கிறது. நகரத்தின் அத்தனை சாலைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் மட்டுமல்ல உணவகங்கள், மதுக்கூடங்கள் எங்கும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். மிலன் நகரமே திருவிழா கோலத்தில் இருக்கிறது. காரணம், அன்று நடக்கும் ஐரோப்பிய லீக்கின் ஸ்பெயினின் வெலான்சியாவிற்கும், அட்லாண்டிக் அணிக்கும் இடையேயான கால்பந்தாட்ட போட்டி. அந்த கால்பந்தாட்ட போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பெயினில் இருந்து வந்து குழுமியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இத்தாலியின் பல்வேற…

  20. பிகார் அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ் குமார் அரசு - 10 தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பிகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதன்கிழமை வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 243 உறுப்பினர்கள் கொண்ட பிகார் சட்டசபையில் 164 உறுப்பினர்களின்…

  21. படத்தின் காப்புரிமை Getty Images பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு போன்ற கொடூரமான குற்றச் செயல்களில், அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் திஷா சட்ட மசோதா 2019 (ஆந்திரா குற்றவியல் சட்டத் திருத்த மசோதா 2019) என்றழைக்கப்படும் இந்த சட்டத்துக்கு ஆந்திரப் பிரதேச அமைச்சரவை நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அது அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு…

  22. இந்தியாவில் இத்தனை படித்த பிச்சைக்காரர்களா ? டெல்லி: இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் படித்தவர்கள் என்ற விவரம் சென்செக்ஸ் கணக்கின் மூலம் வெளியாகி உள்ளது.இந்தியாவில் சகஜமாக எல்லோரும் பார்க்க கூடியது சாலையோர பிச்சைக்காரர்களைத்தான். ஜாதி, மதம், மொழி என்று பிரிந்து இருந்தாலும், எல்லா மாநிலத்திலும் பிச்சைக்காரர்கள் காணக்கிடைப்பார்கள்.பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் படித்துவிட்டு ஆங்கிலம் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், அது முழுக்க முழுக்க உண்மை என்று 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய சென்செக்ஸ் கணக்கு நிரூபித்து இருக்கிறது. ஆம், இந்தியாவில் அந்த அளவிற்கு படித்த பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் எத்த…

  23. இந்தியான்னா விட்டுரூவோமா? பாயும் அமெரிக்கா... சனி, 1 செப்டம்பர் 2018 (12:11 IST) இந்தியா ரஷ்யாவிற்கு இடையே ஆயுத கொள்முதலுக்காக ரூ.31,500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க கூடும். ஆனால், இதுகுறித்து அமெரிக்க உதவி ராணுவ மந்திரி கூறியது பின்வருமாறு, இந்தியா ரஷியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூ…

    • 2 replies
    • 626 views
  24. 03 Oct, 2025 | 05:17 PM இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறி…

  25. ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள்: ஜெகன்மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை அமைப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவருடைய அமைச்சர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவெடுக்கவுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக செல்ல முயன்ற தெலுங்கு தேசம் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமராவதியில் நடைபெறவுள்ள போராட்டத்தை தடுக்க அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சட்டமன்றத்தில் ஆந்திராவுக்கு கர்னூல், அமராவதி, விசாகப்பட்டினம் ஆகிய மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.