Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதியை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு தூத்துக்குடியில் விசாரணையில் இருக்கும் மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீப்பை திருப்பி அனுப்ப இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மாலைத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த சிறிய வகை சரக்குக் கப்பலில் கடலோரக் காவல் படையினர் மேற்கொண்ட சோதனையில், அகமது அதீப், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவரை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்த கடலோரக் காவல் படையினர் மத்திய- மாநில உளவுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அகமது அதீப்பிடம் டெல்லி மற்றும் சென்னையிலுள்ள குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையை மேற்கொண்டனர். இதன்போத…

  2. 25 APR, 2025 | 10:11 AM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தட…

  3. மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா! இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் கு…

  4. ''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…

  5. சபரிமலை போராட்டத்தில் கலவரம்.. கல் வீசி தாக்கியதில் ஒருவர் பரிதாப பலி.. போலீஸ் குவிப்பு! சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்த நபர் பலியாகி உள்ளார். கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இன்று போராடி வருகிறார்கள். நேற்று மாலையே இதற்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டது.நேற்று பாஜக சார்பாக கேரளா தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடந்தது. பாஜக மகளிரணி சார்பாக இந்த பெரிய போராட்டம் நடந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வ…

  6. ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்தும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர். …

  7. சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர…

  8. நாடு தழுவிய போராட்டம்: மோடி பதவியேற்ற கறுப்பு தினம்! மின்னம்பலம் நாடு முழுவதும் நாளை (மே 26) போராட்டம் நடத்த விவசாயிகள் விடுத்த அழைப்புக்கு திமுக உட்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாளை பிரதமராக மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே இதைக் கறுப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம் என்று போராட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நலனுக்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control - LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற…

  10. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடியை கடனாகப் பெறும் மத்திய அரசு இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெறவுள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளதால் வருடாந்த நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதேவேளை, 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தைகளில் இருந்து கடனாக இத்தொகையை மத்திய அரசு பெறுவது வழக்கம். தற்போது இந்தக் கடன்தொகை 12 இலட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது. இதனால…

    • 1 reply
    • 452 views
  11. கொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோரில் 3 சதவீதமானோருக்கு மாத்திரமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளில் இருந்து …

  12. நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..! -ஹரி பரந்தாமன் அக்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன். ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தி உள்ளார். ம…

  13. கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவி…

    • 1 reply
    • 285 views
  14. அயோத்தி தீர்ப்பு கலக்கம் தருகிறது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு தமது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் தாம் "மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்" தெரிவித…

  15. உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று இன்னும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் கொரோனாவின் முன் மண்டியிட்டே கிடக்கின்றன. அதேநேரம் இந்தியாவோ கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 16,504 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ந்தேதி கண்டறியப்பட்ட (97,894 பேர்) பாதிப்பை ஒப்பிடுகையில், இது சுமார் 6 மடங்கு குறைவாகும். 35 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட வல்லரசான அமெரிக்காவிலேயே 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 3½ லட்சத்துக்கு அதிகமானோர் உயிர…

  16. ஆந்திர பெற்றோர்கள் தங்களது மகள்களை கொலை செய்தார்களா? பின்னணி தகவல்கள் ஆந்திராவில் பெற்றோர்கள் தங்களது மகளை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் வசியம் நடந்ததா? எப்படி கொலை நடந்தது? கொரோனா பரிசோதனை எடுக்க மறுக்கும் தாய் சொல்வது என்ன?

  17. ட்ரோன் தாக்குதல் போன்ற புதிய ராணுவ சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா? ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 2 ஜூலை 2021, 05:01 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை பயன்படுத்தும் இந்திய ராணுவம். ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழி…

  18. புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் லோரன்ஸ்பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ). அதோடு லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவை தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி உடன் என்ஐஏ ஒப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது. அவரது குழு இந்தியாவில் 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு இயங்குவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி அவரது குழு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதன் மூலம் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி …

  19. விவாகரத்து கேட்டு நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமாரின் மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றில் இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ‌ஷர்மா, அக்‌‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் திகதி அதாவது, நாளை தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறத…

  20. புல்வாமா தாக்குதலுக்கு பின் காஷ்மீரில் 93 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளதா என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த் ராயிடம் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய ராய், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், எல்லை தாண்டிய ஊடுருவல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 43 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதே கருத்தை பதிவு செய்த உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியும், 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் தீவிரவாதம் சார்ந்த சம்பவங்கள் 28% குறைந்துள்ளதா தெரிவ…

    • 1 reply
    • 297 views
  21. பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு by : Dhackshala டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பெப்ரவரி 16ஆம் திகதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, கெஜ்ரிவால் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தி…

  22. அபாயகரமான நிலையை எட்டியுள்ள இந்தியாவின் காற்றின் தரம் தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையின‍ை எட்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர். காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிக…

  23. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில் அனாமிகா என்று குறிப்பிடப்பட்ட இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இர…

  24. கோவில் பிரசாதத்தில்... பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 12 பேர் பலி. பின்னணியில்... 2 பேர் கைதுகர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்திலுள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜைகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்று பிரசாதம்…

  25. பாஜக நிர்வாகிமீது பாலியல் புகார்; குடும்பத்தில் இருவர் கொலை- பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்ணும் மரணம்! மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிமீது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த வழக்கில், அவரின் சகோதரன் மற்றும் உறவினர் கொல்லப்பட்டதையடுத்து, தற்போது அவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் 5Comments Share பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியின் பிரமுகர் உட்பட நான்கு ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.