Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அபிநந்தன் மரியாதையுடன் நடத்தப்படுவார் – பாகிஸ்தான் பாகிஸ்தான் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் பாதுகாப்பாகவுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், இந்திய விமானப்படையின் விமானியொருவர் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். விங் கொமாண்டர் அபிநந்தன் இராணுவ விதிகளுக்கு உட்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தானால் நேற்று சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களில் பயணித்த விமானிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்தமை குறி…

  2. மோடியின் பதவியேற்பு விழா: புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் …

    • 1 reply
    • 381 views
  3. மாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காற்று மாசுபாடு வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசு…

  4. இந்திய ராணுவத்தை ‘மோடி கி சேனா’ என்று அழைப்பவர்கள் துரோகிகள்: யோகிக்கு வி.கே.சிங் சாட்டையடி பதில் Published : 04 Apr 2019 18:58 IST Updated : 04 Apr 2019 20:20 IST புதுடெல்லி மார்ச் 31, 2019 புகைப்படம். யோகி ஆதித்யநாத், வி.கே.சிங்.| பிடிஐ. ஏப்ரல் 1-ம் தேதி காஜியாபாத்தில் தேர்தல் கூட்டத்தில் இந்திய ராணுவத்தை உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘மோடி கி சேனா’ (மோடியின் படை) என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தேர்தல் ஆணையம் யோகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறவிடாதீர் மோடி மீண்டும் பிரதமரானால் நாடு சர்வாதிகார ஆட்சிக்கு மாறும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை …

  5. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மீண்டும் கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடிப்பு: தலைநகரில் நடந்த அவலம்; தவறுதலாக நடந்துவிட்டதாக விளக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்று சமூகத்தில் குரல்கள் வலுத்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களென்றும் பாராமல் அவர்கள் மீது கிருமிநாசினி மருந்து பீய்ச்சி அடித்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், தவறுதலாக நடந்துவிட்டது, எந்திரக்கோளாறால் அவர்கள் மீது குழாய் பழுதடைந்து மருந்து தெளிக்கப்பட்டது என்று தெற்கு டெல்லி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்…

  6. திரௌபதி முர்மு: பாஜகவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - யார் இவர்? 21 ஜூன் 2022 பட மூலாதாரம்,TWITTER குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். "முதன்முறையாக, பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவை அறிவிக்கிறோம்" என்று நட்டா கூறினார். …

  7. ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு! இந்தியா தலைமை ஏற்கும் காலகட்டத்தில் ஜி20 அமைப்பு, உலக அளவிலான மாற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டின் நிறைவு கூட்டத்தி; பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று பெருமிதம் தெரிவித்தார். அடுத்த ஒரு வருடத்தில் ஜி20 நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியா செயல்படும் என்றும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ஜி20 மாநாட்டை உலகளவிலான …

  8. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார். ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடம…

  9. சிறுபான்மையினர் உரிமை தினம்: இந்தியாவில் சிறுபான்மை மதங்களாக அறிவிக்கப்பட்ட 6 மதங்கள் எவை? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் மகிழ்ச்சியாக ஓடும் ஜிப்சி குழந்தைகள் இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு…

  10. கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்களை தூக்கி எறிந்த அமைச்சர்: வீடியோ வெளியானதால் பரபரப்பு கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ரேவண்ணா உணவு பொருட்களைக் கைகளில் கொடுக்காமல், அலட்சியமாகத் தூக்கி எறிந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், சிக்கமகளூரு, தென்கனரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பாக பொதுமக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் முத…

  11. ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க தயார்!- இந்தியா ஆபிரிக்க நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளில்லா விமானங்கள், அதிவேக ரோந்து படகுகள், இராணுவ போா் விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை அதிகரிக்க இந்தியா தயாராக இருக்கிறது. இதனூடாக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் நட்பு மேலும் வலுப்படும். இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கும் ஒத்துழைப்பு அளிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒடுக்கி அம…

  12. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மையே! “நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக” மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுவரை காலமும் நீட் நுழைவுத் தேர்வுகளில் எந்தவித முறைகேடுகளுமே நடக்கவில்லை என சாதித்து வந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தற்போது முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை நீட் நுழைவுத் தேர்வையே இரத்து செய்ய வேண்டும் என …

  13. படத்தின் காப்புரிமைFACEBOOK பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப் பெரிய நாடாக விளங்கும் பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சராக பதவியேற்கும் முதல் தமிழர் மட்டுமல்ல முதல் இந்தியரும் சசீந்திரன் முத்துவேல்தான். மத்திய அமைச்சராக ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, இவர் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக ஆறாண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளிக் க…

    • 1 reply
    • 517 views
  14. பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்! தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். இந்த மாகாணம் நீண்டகால கிளர்ச்சியின் களமாக இருந்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உட்பட, பிரிவினைவாத குழுக்கள் தொடர்ச்சியாக இங்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குஜ்தார் மாவட்டத்தில் இராணுவத்தால் நடத்தப்…

    • 1 reply
    • 172 views
  15. இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நா…

  16. கோடையில் பறவைகளுக்குத் தண்ணீர்: ரூ.6 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் மண் பாண்டங்களை வழங்கும் பறவை ஆர்வலர் Published : 13 Apr 2019 16:45 IST Updated : 13 Apr 2019 16:52 IST எர்ணாகுளம் ஸ்ரீமன் நாராயணன் கேரளாவைச் சேர்ந்த 70 வயது ஸ்ரீமன் நாராயணன், கோடையில் தண்ணீர் தேடி அலையும் பறவைகளுக்காக தண்ணீர் சேகரிக்க10 ஆயிரம் மண் பாத்திரங்களை மக்களிடம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தவறவிடாதீர் குஷ்பு கவனமாக இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை எர்ணாகுளத்தின் முப்பத்தடம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் விருதுகள் பெற்ற எழுத்தாளர். மண்பாண்டங்கள் வழங்குவது குறித…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 அக்டோபர் 2023, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டு…

  18. ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன? இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? அப்படியானால் சராசரியாக எந்தனை குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்? அப்படி மீட்கப்படும் குழந்தைகளில் எத்தனைபேர் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது. உண்மை நிலைவரங்களின் படி கடத்தப்படுகின்ற குழந்தைகளில…

  19. சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்க லடாக் எல்லையில் ட்ரோன்களை நிறுத்த முடிவு By RAJEEBAN 17 OCT, 2022 | 01:33 PM சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக லடாக்கில் ஆளில்லா விமானங்களை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அதன் பின் அமைதி திரும்பினாலும், லடாக் எல்லைப் பகுதி பதற்றமாகவே காணப்படுகிறது.இதையடுத்து அங்கு ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், அதிநவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் ஆளில்லாத அதிநவீன ட்ரோன்களை நிலை நிறுத்த இந்திய ராணுவ…

  20. படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை மோதி திறந்து வைத்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது. 2023ம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ம் தேதி அன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த சிலையை கடற்படையினர் தான் அமைத்தனர் என்றும், காற்றின் காரணமாக அது கீழே விழுந்தது உடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கூடிய விரைவில் அங்கே புதிய சிலை திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். …

  21. திகார் சிறைக்கு, தயவு செய்து அனுப்ப வேண்டாம்- ப.சிதம்பரம். தன்னை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாமென ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனக்கு 74 வயதாகின்றமையினால் தயவு செய்து திகார் சிறைக்கு மாத்திரம் அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் வலியுறுத்துவதாக அவரது சட்டத்தரணி கபில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ”அமலாக்கத்துறை வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை 3 நாட்கள் வீட்டுக் காவலில் அனுப்புங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம…

  22. 16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச…

  23. நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி மின்னம்பலம்2021-09-25 அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன. பைடன் பேசுகையில், "எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்…

  24. கார்கிவ் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. 'இன்று காலை கார்கிவ் நகரில் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R) Tamilmirror…

  25. பாகிஸ்தானில் அதிகரிக்கும் கட்டாய கடத்தல்கள். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்களின் அதிர்வெண் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,அங்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க எந்த சட்டமும் இல்லை. சிந்து காசி அஹ்மதில் 14 வயது இந்துப் பெண் கடத்தப்பட்டாள், பின்னர் உடனடியாக ஒரு குறிப்பிடத்தக்க வயதான நபரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருவரை அவர்களது வீட்டிலிருந்து கடத்திச் சென்று திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதற்கு எவ்வளவு தகுதி தேவை என்பதை கற்பனை செய்வது கடினம் அல்ல,கடத்தப்பட்ட இந்துப் பெண்களை கட்டாய மதமாற்றம் செய்வது வாடிக்கையானது. சிந்துப் பெண்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அவர்களது வீடுகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.