யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..! 'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?' இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..! காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..! "சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ…
-
- 70 replies
- 10.7k views
- 2 followers
-
-
தலைமுறைகள் விடைகாண்பர்! ---------------------------------------------------------------------- விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள் கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும் உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே! விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும் தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும் அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்! சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே…
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஊர் விட்டு ஊரோடி வான் விட்டு நாடோடி நிலவரம் கலவரமாக நீயே என் கதி என ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி கண் எதிரே திரை விரித்தாய். தாய்க்கு நிகர்த்து மொழி பேசி உறவுக்கு நிகர்த்து கதை பேசி கடுகதி வாழ்வில் கனதிகள் குறைக்கும் திரைபேசியானாய் நான் அலைபேசி மறந்தேன். காலவெளியில் கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம் அத்தனையும் அடக்கி அமுசடக்கமாய் வளர்ந்து குமரியாய் குலுங்கி நிற்கும் யாழே... நீயே என் மனதை தைத்த மோக முள்... ஊர் தொலைத்தவனின் ஊனத்தை ஊமையாய் புரிந்து கொண்டவள்..! சாதனைக்குள் சோதனை சாதாரணம்..! சார்ந்திருந்தோர் எதிர் நின்றோர் எ…
-
- 10 replies
- 1.8k views
-
-
கொறோனாவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் உணவு நான் இல்லை... கொறோனாவே என்னிடம் மயங்காதே! நீ தேடும் partner என்னிலில்லை.... Winterல் சில நாள் flu வரலாம்! நீ seasonஏ பார்க்காமல் வந்தாயே! (2) குடிநீரும், ரசமும் வாங்கி வைத்தேன் - அது Peace of mindக்குத் தான் என யாரறிவார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே..... Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2) இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?! கொறோனாவே என்னிடம் நெருங்காதே... "தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே! (2) உன் பயத்தால் இன்று தனித்துள்ளேன் - எனினும் நீ பீடித்தால் நானும் இறைவனைக் காண்பேனோ?! கொறோ…
-
- 15 replies
- 2.3k views
-
-
கலையாத கனவு ---------------------------- என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆல…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு. நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து…
-
- 72 replies
- 8.9k views
- 1 follower
-
-
ஒன்று காலைக் கதிரவன் கதிர்பரப்பிக் கடைவிரித்த பின்னும்கூட நயினி கட்டிலில் இருந்து எழுந்திருக்க மனமின்றி படுத்தே கிடந்தாள். எழுந்து என்னதான் செய்வது? இந்தப் பரபரப்பான பாரீஸ் நகரின் எல்லையான பொண்டி என்னும் இடத்தில் தான் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடு அமைந்திருந்தது. ஐம்பது குடும்பங்களாவது வசிக்கும் அக்கட்டடம் பிரதான வீதியிலிருந்து சற்று உள்ளே அமைந்திருந்ததால் எவ்வித வாகன ஓசைகளும் இன்றி அமைதியான பிரதேசமாகக் காணப்பட்டதனால் நாமாக அலாரம் வைத்து எழுந்தாலோ அல்லது நித்திரை முறிந்து எழுந்தாலோ அன்றி யாரும் இடைஞ்சல் தர மாட்டார்கள். முகுந்தன் காலை ஆறுமணிக்கு எழுந்து வேலைக்குச் சென்றானென்றால் மாலை ஐந்து மணிக்குத்தான் திரும்ப வருவான். அதுவரை அவதியாகச் சமைக்க வேண்டிய …
-
- 33 replies
- 4.3k views
- 1 follower
-
-
என்னை உணரவைக்க வந்ததா? ------------------------------------------------------------------- இறுமாப்பில் எழுந்தாய் நீ மானிடனே என்னை வென்றதாய் என்னைப் புறந்தள்ளி இமயத்தையும் கடந்தாய் ஈரேழு உலகும் பறந்தாய் மறந்தாய் உன்னை; உன்னை மட்டுமல்ல என்னையும் மறந்தாய் எங்கெங்கோ பறந்தாய் என்னைப் பாதுகாக்க என்னோடு இணைந்து செல்ல சிந்திக்கவும் மறந்தாய் காணும் பொருளெங்கும் கண்கள் அலைபாய விண்ணையும் மண்ணையும் உன் எண்ணப்படி கடந்தாய் உன்னை அளப்பாய் என்னையும் அளப்பாய் ஆனால் அழிக்காதே! முன்னோர் சொன்னவற்றை உதறித் தள்ளவிட்டு உன் போக்கில் போகின்றாய் எனக்காக எல்;லாம் என்று சொன்னாய் உனக்காக ஏதும் இல்லை என்று சொல்லி வந்தது கொறொனா! பணமருக்கும்…
-
- 22 replies
- 2.4k views
-
-
இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற…
-
- 405 replies
- 37.2k views
- 2 followers
-
-
இல்லறம் இருமனம் இணைந்த திருமண வாழ்வில் இது ஒரு சுகராகம் பிரிவினை விரும்பும் இருவரின் வாழ்வில் இது ஒரு பெரும் சோகம் சரிநிகர் என மன உணர்வினை மதித்தால் இது ஒரு மலர்த் தோட்டம் பெரியவர் நான் என ஒரு மனம் நினைத்தால் இது ஒரு சிறைக் கூடம் அன்பெனும் கடலில் இதயங்கள் மிதந்தால் இல்லறம் ஒரு சொர்க்கம் துன்பங்கள் அங்கு தொடர்கதையானால் நிரந்தரமாய் நரகம் வாதங்கள் இல்லா வாழ்க்கையில் என்றும் வாசங்கள் பாரங்கள் பேதங்கள் எல்லாம் நேசங்களாக நெஞ்சினில் தாபங்கள் ராகங்கள் இசைக்க வாத்தியம் தேவை தாளங்களும் தேவை பாசங்கள் நெஞ்சில் பூத்திடும் வேளை சோகங்கள் தூரங்கள் தமிழொடு இனிமை இணைந்தது போல தம்பதிகள் இணைந்தால் அமிழ்தோ…
-
- 20 replies
- 3.6k views
-
-
கார் முகில்கள் கலந்துரையாடி அடை மழை தூவுதே எழில் மயில்கள் நடனம் புரியவே சாரல்களும் பாராட்டி கைதட்டுதே சோலைக்கு பசுமை சேலை கட்டிவிடும் உரிமை நீருக்கு கிடைத்ததே எண்ணிலடங்கா முத்தங்கள் வைக்கவே மண்ணில் விதை வித்துக்கள் பிறக்குதே மாரி நீ மகர்ந்தசேர்க்கை செய்யவே ஏரியும் தூறு வாரி தவம் கிடக்குதே திரை சென்று உவர்ப்பாகும் முன்பே இதழ்களில் இனிப்பானதே
-
- 2 replies
- 995 views
-
-
ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
-
- 7 replies
- 1.3k views
-
-
உ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர். …
-
- 73 replies
- 8.3k views
-
-
டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..! ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும…
-
- 63 replies
- 10k views
- 1 follower
-
-
அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார். இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்கு…
-
- 18 replies
- 3.2k views
-