நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உலகம் முழுவதுமே இன்று 'ஒபிசிட்டி' (Obesity ) எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே: மஞ்சள்: மஞ்சளை நாம்…
-
- 10 replies
- 2.3k views
-
-
ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்ட, மற்றும் முறையற்று பயன்படுத்திய வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் காது செவிடாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிற…
-
- 0 replies
- 522 views
-
-
புற்றுநோயின் பத்து பகைவர்கள் புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்ப…
-
- 1 reply
- 699 views
-
-
உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா 'எக்ஸ்டிரா லக்கேஜ்' என்று அலுத்துக் கொள்வர். ஆனால் அப்படி அலுத்துக் கொள்ளத் தேவையில்லையாம். மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் (King's College) ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்…
-
- 1 reply
- 721 views
-
-
படித்ததில், இவை யாழ் களத்திலுள்ளோருக்கு பயனுள்ளவையாக இருக்குமேயென இங்கே பதிகிறேன். கொலஸ்டரோல்(கொழுப்புச் சத்து) என்பது என்ன? இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு ப…
-
- 11 replies
- 6.5k views
-
-
நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கான முக்கிய சூட்சுமம், குறைவான அளவு உணவு சாப்பிடுவதில்தான் உள்ளதாக புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்களுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, மிருகங்களிடம் இந்த ஆய்வை நடத்திபார்த்ததில் அவை நூற்றுக்கு இருநூறு விழுக்காடு சரியென நிரூபணமாகி உள்ளதாக அடித்துக் கூறுகின்றனர் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள். இது தொடர்பாக அவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வில், கடுமையான உணவு கட்டுப்பாடு, அதாவது தேவைக்கு ஏற்ப, கொஞ்சமாக மட்டும் சாப்பிடுவது, முதுமை அடைவதை தள்ளிப்போடுவதாக தெரியவந்துள்ளது. குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆ…
-
- 16 replies
- 1.3k views
-
-
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி? சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும். எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே. அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம். சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் ச…
-
- 1 reply
- 802 views
-
-
-
பரம்பரை காரணமாகவும் புற்று நோய் வரலாம் புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயல்ல என்று மருத்துவ உலகம் இன்று நிரூபித்து வருகின்ற தருணத்தில், மேலைத்தேய நாட்டவர்களைப் போல் தெற்காசியாவில் வாழ்பவர்களுக்கு பெருங்குடலில் புற்று நோய் வருவதில்லை என்றும், ஆனால் இன்றைக்கு மாறிவிட்ட உணவு பழக்கத்தாலும் இவ்வகையான புற்று நோய் வரக்கூடும் என்று எச்ரிக்கை செய்கிறார் சென்னையில் பணியாற்றி வரும் புற்று நோய் சத்திர சிகிச் சை நிபுணர் டொக்டர் எம். பி. விஸ்வநாதன். சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றி வரும் இவரை சந்தித்து புற்று நோய் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டோம். புற்று நோய் கட்டியாக உருவெடுப்பதன் மருத்துவ காரணம் என்ன? …
-
- 1 reply
- 1.7k views
-
-
சிஸேரியன் சிகிச்சையும் சில சர்ச்சைகளும் http://healthwings.blogspot.com/2011/01/blog-post.html சீசர் என்பது மக்கள் அறிந்த ஒரு சொல் மட்டுமல்ல மக்கள் மனங்களை உறுத்தும் சொல் என்றாலும் அது தவறில்லை சீசர் என்பது சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு வழங்கப்படும் யாவரும் அறிந்த சொல் என்றே கூறவேண்டும் இது பெரும் சத்திர சிகிச்சை வகைக்குரியது அதாவது அயதழச ளரசபநசல என்னும் வகைக்குரியது இது ஆபத்து மிக்கது இதைவிட காயப்பட்ட பகுதி மீள சீரமைக்கப்பட சாதாரண மகப்பேற்றை விட கூடுதல் காலம் தேவை இருப்பினும் இன்னும் பல எதிரான காரணங்கள் இருப்பினும் கனேடியர்களுள் பலர் 2008 ஆம் ஆண்டில் தேவையற்ற சத்திர சிகிச்சைகளுக்கு பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர் என்று தேசியரிதியான ஆய்வொன்றின் முலம் தெரியவந்…
-
- 1 reply
- 1.5k views
-
-
'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுத…
-
- 0 replies
- 10.8k views
-
-
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். சாதாரணமாகத் தண்…
-
- 2 replies
- 3.3k views
-
-
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்ப…
-
- 0 replies
- 646 views
-
-
இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? புதன், 05 ஜனவரி 2011 13:21 சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் (நீரிழிவுநோய்) வரும் என்று சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். உண்மையிலேயே சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? அது பற்றி இங்கே பார்ப்போம். உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் தினமும் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும், அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், ஒருவரது பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும், அவரது உடல் அதிக பருமனாகவும் இருக்கும்பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபு காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக …
-
- 0 replies
- 1.6k views
-
-
வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மச…
-
- 5 replies
- 5.3k views
-
-
சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும். காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம். பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது. ஃபிளாஸ் (floss) செய்வதால் பற்களின் இடையே உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம். இதை செய்வதால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை என்றால்,…
-
- 0 replies
- 676 views
-
-
இரத்தத்தில் உள்ள பில்லியன் கணக்கான கலன்களில் செய்யக்கூடிய ஒரு இரத்த பரிசோதனையுடன் புற்றுநோயை கண்டுபிடிக்கக்கூடிய வசதி உருவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு இல்லை மூன்று வருடங்களில் இந்த இரத்த பரிசோதனை செய்யக்கூடியதாக இருக்கும்.
-
- 0 replies
- 747 views
-
-
குளிர்காலத்தில் `புளிப்பு' வேண்டாம்! சனி, 01 ஜனவரி 2011 05:44 குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன. பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, `அல்கலைன் சிட்ரைட்' என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது. புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொ…
-
- 0 replies
- 626 views
-
-
நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எர…
-
- 5 replies
- 1.3k views
-
-
புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து எ…
-
- 10 replies
- 3k views
-
-
வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும். சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி மறுவாழ்வு காணும் வைத்தியத்தில் வெற்றி… ! குடிச்சுக் குடிச்சே ஈரல்; போய் இளையதம்பி செத்தான்.. என்று நமது நாட்டில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் மதுவால் இறப்பவர்கள் பற்றிப் பேசிக்கொள்வார்கள். ஈரலில் துளைபட்டு நாசமானாலும், பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்து, அந்த இடத்தில் இன்னொருவரின் ஈரலை ஒட்டி வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடங்க இப்போது புதுவழி பிறந்திருக்கிறது. பஞ்சரான டயரை ஒட்டி மறுபடியும் காற்றடிப்பது போல வைத்தியத்துறையில் இந்தப் புதுமை எட்டித் தொட்டுள்ளார்கள் அமெரிக்க வைத்தியர்கள். அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் யோனத்தன் நுஸ் என்ற குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் ஈரல் பழுதடைந்து இறக்கும்…
-
- 0 replies
- 706 views
-
-
மாதுளை மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், தினமும் இரவில் ஒழுங்காக நித்திரை கொண்டாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார். தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எ…
-
- 0 replies
- 550 views
-
-
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனியிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பேர்லின் நகரைச் சேர்ந்த இம்மருத்துவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி. மற்றும் இரத்தப் புற்றுநோய்குள்ளான நோயாளியுடன் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் இவ்விரு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளியொருவர் குணப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். எனினும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோருக்கான பொதுவான சிகிச்சையாக இதை பயன்படுத்துவதற்கு முன்னர் பல வருடகால வேலைகள் எஞ்சியிருக்கின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குணப்படுத்தல் என்பது பலமான ஒரு வார்த…
-
- 3 replies
- 609 views
-