நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நெஞ்சு எரிச்சல் பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம். நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொர…
-
- 5 replies
- 1.5k views
-
-
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டல…
-
- 0 replies
- 657 views
-
-
இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நமது உடல் நலமும், மனநலமும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவின் தன்மை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை அமைந்துள்ளது. எனவேதான் ஆங்கிலத்தில் You are what you eat என்று சொல்வார்கள். அதாவது நீ சாப்பிடும் உணவின் தன்மைத்தான் நீ யார் என்று தீர்மானிக்கிறது என்று பொருள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைச் சர்க்கரைப் பொருள்கள் புரதம், கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புகள் என பலவகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றைப் பற்றிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது. பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறி…
-
- 5 replies
- 1.2k views
-
-
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமை…
-
- 9 replies
- 1.6k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசி என்றவுடன் என் ஞாபகத்திற்கு முதலில் வருவது சிறுவயதில் கோல்வேஸ் ( Galle Face ) கடற்கரையில் வாங்கி உண்ட அந்த மிளாகாய்தூள் உப்பு போட்ட அன்னாசித்துண்டுகள் தான். இங்கு என்னதான் சுவையான அன்னாசி கிடைத்தாலும் அந்த ருசிக்கு கிட்ட வராது :lol: அன்னாசி சுவையாக உள்ளதென்றுதான் சாப்பிட்டேன் ஆனால் இன்று தான் அன்னாசி சாப்பிடுவதால் நாம் அடையும் நன்மைகளை வாசித்தேன். நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள் அன்னாசியின் அருமை பெருமைகளை அன்னாசி நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம். மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள …
-
- 20 replies
- 8.4k views
-
-
பொதுவாக ஒரு சாதாரண மனிதன் இரண்டு முறை அல்லது ஐந்து முறை தும்முவதுடன் தும்மல் நின்று விடுகிறது. சிலருக்கு ஒரு நேரம் பத்து பதினைந்து தடவையாவது தும்மல் வரும், தும்மியே களைத்து விடுகிறார்கள்... மூக்கு அடைத்தும் விடுகிறது... இது ஓரிரு நாட்களுக்கு மட்டும் இல்லை பல ஆண்டுகளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போது தும்மல் வாறது ஒருபக்கம் இருக்க, பொது வாங்கனங்களில் இருக்கும் போது தும்மல் ஆரம்பித்து சங்கடப் படுத்துகிறது. தும்மல் தானே என்று இதுவரைக்கும் வைத்தியரின் ஆலோசனை கேட்கவில்லை. - எதனால் இப்படி ஏற்படுகிறது? - சுவாசக் குழாயில் ஏதும் பிரச்சனையா? - அல்லது பயப்பிட வேண்டிய அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லையா? விளக்கம் தெரிந்தால், தயவு செய்து அறியத் தாருங்கள். -நன்றி
-
- 12 replies
- 3.9k views
-
-
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவை…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவது நம்மில் பலருக்கும் தெரியாது. ஒரு செயற்கையான நிகழ்வினால், உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது. மேலும், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் துர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது. சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிட்டதும…
-
- 0 replies
- 555 views
-
-
இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு. வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய…
-
- 6 replies
- 869 views
-
-
-
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் 05 May 10 05:48 am (BST) மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்…
-
- 3 replies
- 978 views
-
-
தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் சத்துமிக்க ஆகாரம் என்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மை உடையது என்பதும் நாம் அறிந்ததே. தாய்ப்பாலில் இருக்கும் ஆல்பா லாக்டால்புமின் என்ற தாதுப்பொருள் புற்றுக்கட்டி களையும், புற்று செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு காம்லெட் என்று பெயரிட்டுள்ளனர். `ஹியூமன் ஆல்பாலேக்டால்புமின் மேடு லெத்தல் டூ டியூமர்’ என்பதன் சுருக்கம்தான் `காம்லெட்’. ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொ…
-
- 0 replies
- 590 views
-
-
-
உணவும் ஆரோக்கியமும்-காணொளிகள் http://www.youtube.com/watch?v=-iyeTq_3nng&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=GeH0bLB1zfo&feature=related
-
- 0 replies
- 702 views
-
-
தண்ணீரும் உடல்நலமும்... தண்ணி குடி எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது. நமது உடலிலும் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் பல மருத்துவ தன்மைகள் கொண்டது. நமது உடலில் தண்ணீரின் பங்கு: ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒ…
-
- 8 replies
- 7.8k views
-
-
தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களை உறுதியுடன் வைத்திருக்க உதவுகிறது. மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பொஸ்பரஸ் போன்ற கனியுப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்க உதவுகின்றது. முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது. நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குற…
-
- 5 replies
- 1.1k views
-
-
அகத்திக் கீரை "அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும். அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள். இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர். அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத…
-
- 4 replies
- 7k views
-
-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழி எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதை தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளுக்கு பல்வேறு அரிய குணங்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆப்பிள் உதவுகிறதாம். போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இந்த பழங்கள் என்று குறிப்பிட்டதில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் …
-
- 17 replies
- 1.4k views
-
-
உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோசமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம். மான ஆகாரம். அதாவது கால்சஷியம், விட்டமின்கள் நிறைந்த உணவு. கண்களுக்கான பயிற்சிகள். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பய…
-
- 0 replies
- 823 views
-
-
தகவல்: அருவி, நன்றி!
-
- 3 replies
- 1k views
-
-
இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் என்றால் என்ன…?உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது. இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது…? பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன. இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) …
-
- 1 reply
- 1.5k views
-
-
பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும். குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில் பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல் இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம். குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதி…
-
- 0 replies
- 602 views
-
-
மருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என பிரித்தானிய மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகள் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து முழுயைமாக விடுபட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 9000 பேரிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருந்துகளை உட்கொள்வதனால் எதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதனை தடுக்க முடியும் என்ற கருத்திலும் உண்மையில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் அ…
-
- 0 replies
- 651 views
-
-
-
- 6 replies
- 1.6k views
-