நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மிளகாய் சாப்பிடுவது நல்லதா? நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. அளவுடன் தினசரி உணவில் சேரும் பச்சை மிளகாயும், அரைத்த கார மிளகாய்ப் பொடியும் உடலில் இருந்து நன்கு வியர்வை வெளியேற உதவுகிறது. இயக்கத்தைத் தூண்டிவிடுகிறது. வெப்பப் பிரதேச நாடுகளில் நோயாளிகளை உடனே வியர்க்கச் செய்யவேண்டுமென்றே கார மிளகாய் சேர்ந்த உணவைச் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் வியர்வைப் பெருகி காய்ச்சல் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும். மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
தண்ணீர்.. தண்ணீர்… on 16-10-2008 18:39 தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய…
-
- 7 replies
- 1.9k views
-
-
செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பொதுவான பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்ப…
-
- 10 replies
- 2.1k views
-
-
மரக்கறி வகைகள் மற்றும் பழங்களில் உள்ள பெக்ரினாலான (pectin) நார்பொருட்கள் (fibre)புற்றுநோயை உருவாக்கவல்ல Gal3 புரதத்தினை நிரோதிப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் நார்பொருள் நிறைந்த பல் வேறுபட்ட மரக்கறி வகைகளை மற்றும் பழங்களை உண்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதிலின்றும் எம்மை ஓரளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நார்பொருட்கள் உருளைக்கிழங்கில் இருந்து மேற்குறிப்பிட்ட வகைக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்த அதிகம் பயன்படக் கூடிய blueberries மற்றும் spinach ஈறாக பல வகை மரக்கறி வகைகளில் மற்றும் பழங்களில் அடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூலம்: http://www.kuruvikal.blogspot.com/
-
- 20 replies
- 5.3k views
-
-
கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள் நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம். கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை : 1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி 2. கடுமை குறைவான கணைய அழற்சி 3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும். தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி : பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கண…
-
- 0 replies
- 6.6k views
-
-
பல் மருத்துவம் பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள் Dr தாயப்பன் என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன? - பரிமளா, கொரட்டூர். ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள். பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது? - தினேஷ், மவுண்ட்ரோடு. கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முத…
-
- 5 replies
- 2.5k views
-
-
நெஞ்சு எரிச்சல் பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம். நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள…
-
- 0 replies
- 5.7k views
-
-
இனிய நண்பர்களே !! இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும். உடலையும் உள்ளத்தையும் அழகாக வைத்திருக்க பெரிதும் உதவுவது யோகாசனம். இந்நாளில், இது ஒரு நாகரீக, பணம் செய்யும் ஒரு கலையாக மேற்குலகத்தில் கருதப்பட்டாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்திற்காக யோகிகளும் சித்தர்களும் கீழைத்தேயத்தில் இக்கலையை பயன்படுத்தினர். இருந்தபோதிலும், நோயற்ற வாழ்வை கருத்தில் கொண்டு நாமிதை பயிலலாம்.
-
- 19 replies
- 5.8k views
-
-
பித்தவெடிப்பு, பாதத்தின் தோல் உரிதல் போன்றவற்றிக்கு..... எலுமிச்சம் பழத்தின் பலன்களில் ஒன்று...... ''சித்த வைத்தியத் திலகம் '' வைத்தியர் C.P. தண்டபாணி ற்.ஈ.M.Pயின் மருத்துவக் குறிப்பிலிருந்து. கால் பாதத்தில் வெடிப்புக்கள் இருந்தாலும், பாதம் சொரசொரப்பாக இருந்தாலும், பாதம் தோல் உரிந்து இருந்தாலும் புதிய எலுமிச்சை பழத்தை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காலில் ஒவ்வொரு நாளும் தேய்த்துவர வெடிப்புக்கள் நீங்குவதோடு பாதமும் கன்ணாடிபோல் அழகு பெரும். குறிப்பு: பல ''கிறீம்''கள் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க இருந்தாலும் இது இயற்கை வைத்தியம் என்பதால் உடலுக்குத் தீங்கில்லை. இளங்கவி
-
- 24 replies
- 12.9k views
-
-
அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள் ( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான கட்டுரை ) அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம். ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் …
-
- 0 replies
- 937 views
-
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
ஆண்களுக்கான அழகு குறிப்புகள் ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு என்பது என் கருத்து ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும். முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள் சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும். பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது …
-
- 49 replies
- 15.1k views
-
-
மகளிர் உடல்நலமும் ஹோமியோ மருத்துவமும் ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கு பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோ…
-
- 0 replies
- 2.9k views
-
-
குங்குமப்பூ மகத்துவம் சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:- 1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். 2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். 3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். 4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை …
-
- 20 replies
- 6.7k views
-
-
நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள் முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம். இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம். எப்படி ஆனதோ? நாரிப்பிடிப்பு ஏன…
-
- 13 replies
- 8.1k views
-
-
நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும் இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 3.4k views
-
-
மூட்டுவலி (Arthritis) _ ஹெச் தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போத
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களும், மன அழுத்தமும்................ Women, Tension, tamil, Relax ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் …
-
- 35 replies
- 10k views
-
-
பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால்…
-
- 43 replies
- 8k views
-
-
சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன. சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும் , இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும். சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உண…
-
- 10 replies
- 2.8k views
-
-
பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா? உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் க…
-
- 8 replies
- 2.4k views
-
-
கருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. source: http://kuruvikal.blogspot.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
உடலுக்கு உகந்த பாகற்காய்! திங்கள், 30 ஜூன் 2008( 12:37 IST ) பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்…
-
- 39 replies
- 6.6k views
-
-
சமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது. அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப…
-
- 30 replies
- 11.5k views
-
-
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செய்தி ஆதாரம்: http://kuruvikal.blogspot.com/
-
- 9 replies
- 2.8k views
-