Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப் பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன். வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான் முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப் பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும். இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும். இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்…

  2. மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள் மனம் விரிந்து குவிந்தது மாதவ மனம் விரிந்து குவிந்தது வாயு மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர் மனம் விரைந்துரை மாண்டது முத்தியே. மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம். அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும். சாந்தி ஆசனம் செய்முறை: காலை, மாலை…

  3. விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும் வலியினால் அவர்கள் துடி துடித்துப் போய் விடுவதை நாம் அவதானித்து இருக்கின்றோம். ஏன் எமக்கும் அவ்வாறான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த வகையில் விதைகளில் ஏன் வீக்கம் ஏற்படுகின்றது, அதனை நாம் எப்படி தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ஆண்களின் விதைகளில் வீக்கங்கள் இரண்டு வெவ்வேறான முறைகளில் ஏற்படுகின்றன. ஆணுறுப்பு விதைகள் தனது இயல்பான தோற்றத்திலிருந்த விலகி தானாகவே முறுக்க…

  4. முதுகு வலியால் அவதிப்படுகின்றீர்களா? முதுகு வலி என்பது இன்று பரவலாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். பெரும்பாலும் 99 சதவீதமான முதுகு வலிகள் உங்களுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்ற முதுகு வலிகளும் இருக்கின்றன. இந்தப்பகுதியில் நாம் முதுகு வலி எதனால் ஏற்படுகின்றது? அதனை எப்படி குணப்படுத்திக் கொள்ளலாம்? பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துகின்ற முதுகு வலியை எப்படி கண்டறிந்து கொள்ளலாம்? போன்ற அத்தனை கேள்விகளுக்குமான விடைகளையும் தெரிந்து கொள்ளலாம். முதுகு வலியின் பாதிப்பானது ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலர் தன்னால் எந்த வேலையும் இதனால் செய்ய முடியாது என்பர், சிலர் அவ்வலியினை தாங…

  5. வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோபம். எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். கோபம் உங்களின் நட்பை மட்டும் கெடுக்கவில்லை. உங்கள் உடல் நலனையும் கெடுக்கின்றது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறக்கவும் நேரிடும். இன்றைய நமது ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கோபத்தால் ஏற்படும் உடல் பிரச்சனைகளைக் காணலாம்… மன அழுத்தம் …

  6. பால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்: முன்னாள் பொறியாளர் சொல்கிறார் ஆலோசனை... லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், சாப்பிடும் உணவில் விஷமும், ஆரோக்கியமற்ற தன்மையும் இருப்பதை அறிந்து, மென்பொருள் பொறியாளர் பணியை உதறிவிட்டு, சிறுதானிய வியாபாரத்தை துவக்கி உள்ளார் ஒருவர். இயற்கை அங்காடி: தண்டையார்பேட்டை, அகஸ்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜன், 42. பட்டப்படிப்பு முடித்து விட்டு, மென்பொருள் துறையில், 16 ஆண்டுகள் வேலைபார்த்தார். உணவு குறித்து ஆராய்ந்த அவர், சாப்பாடு சத்து இல்லாமலும், மெல்ல கொல்லும் விஷமாகவும் இருந்ததை உணர்ந்தார். அதையடுத்து, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர யோசித்து, முதற்கட்டமாக, தான் பார்த்து வந்த மென்பொருள் பொறியாளர் வேலையை உதறி…

  7. பல உடற்பயிற்சி மருத்துவர்களின் கணிப்பின்படி, உடற்பயிற்சியிலீடுபடுவதற்கு சற்று முன்னதாக ஒரு கப் காப்பியை அருந்துவதன் மூலம், உடற்பயிற்சியாளர் தனது உடற்பயிற்சி செய்யும் திறனைக் கூட்டமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நண்மைகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 1. அதிகப்படியான கொழுப்பு உடலிலிருந்து நீக்கப்படுகிறது. காப்பி குடிப்பதனால் கொழுப்பு சேகரிக்கப்படுள்ள கலங்களிலிருந்து பயிற்சிக்குத்தேவையான சக்தி எடுக்கப்படுவதால், அது உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்கிறது. ஒருவர் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது. 2. உடற்ப்யிற்சியின் முன்னர் ஒருவர் காப்பி அருந்துவதால் அதிலிருக்கும் கஃபீன் எனும் இரசாயனம் உடல் அதிகம் பாராமான சுமை…

  8. எச் ஐ வி வைரஸ் வரவர தீவிரம் குறைந்து வருவதாக முக்கிய விஞ்ஞான ஆய்வு ஒன்று கூறுகிறது. வரவர தீவிரம் குறையும் எச் ஐ வி வைரஸ் பொட்ஸ்வானாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபோது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை கண்டறிந்துள்ளார்கள். எச் ஐ வி வைரஸானது தான் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் உயிரியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் காரணமாக அதனால், முழுமையான எயிட்ஸ் நோயை ஏற்படுத்த நீண்ட நாட்கள் பிடிக்கிறது என்று அந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த முடிவுகள் ஓரளவு ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத சவாலாகவே தொடர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். http://www.bbc.co.uk/tamil/science/2014/12/141202_hivstudy

  9. கை நடுக்கம் உடல் நடுக்கம் நடுக்கம் என்றால் என்ன? பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில் shivering என்பார்கள்.. பயத்தினால் நடுங்குவது மற்றொன்று. இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும். பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்த…

  10. பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்? இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழ…

  11. இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. எது முகப்பரு? நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடிய…

    • 7 replies
    • 1.5k views
  12. நீங்கள் உடலளவில் நல்ல ஆரோக்கியமாக இருகின்றீர்கள், ஆனால் மனதளவில் உள்ளிர்களா? பலர் இல்லை! நிச்சயம் இன்றைய இயந்திர வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான். நமது செயல்களில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்கள் போதும் உங்களைக் குஷி படுத்த இதோ சில ஆலோசனைகள்.. * நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள். ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்பதில்லை. ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம். * இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூ…

    • 4 replies
    • 649 views
  13. கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார் கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி. சிறு­வ­ய­தி­லேயே கண் பார்வை குறை­வ­டைந்து போவ­தற்­கான காரணம் என்ன? தாய் வயிற்றில் சிசு இருக்­கையில் ஏதா­வது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்­புள்­ளது. அதில் (TORCH) என சொல்லப்படும் நோய்கள் சின்­னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கரு­த­ரித்து ம…

    • 0 replies
    • 26.8k views
  14. விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. *குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். *மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. *அதேபோல மிளகுக்கும் அதீத மருத்து…

  15. “திராட்சைக் கொடியில் பூ பிடிக்கும்போது விலை உயர்ந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிப்போம். அம்மருந்தில் ஒரு துளி கொடியின் ஓரிடத்தில் பட்டால் போதும், அம்மருந்தின் வீரியம் அக்கொடி முழுக்கப் பரவி விடும். அதன் பின்னர் பிஞ்சு பிடித்ததும், திராட்சைக் குலைகளை ஒருவகை பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி நனைத்து விடுவோம். இப்படி வாரத்திற்கு ஒருமுறை என 14 வாரங்கள் செய்வதுண்டு. அப்போதுதான் எவ்விதப் பூச்சிகளும் தாக்காமல் நமக்கு அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் திராட்சைப் பழங்களில் இல்லாமலா போகும்? நிச்சயம் இருக்கும். கொஞ்சம் யோசித்தேன்.. இப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் ஒரு விவசாயம் செய்து நாம் சம்பாதிக…

  16. உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவனோடு தொன்று தொட்டு உறவாடிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான எண்ணெய் வித்து எள் மட்டுமே. நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல், ஜனனம் முதல் மரணம் வரை அது பின்னிப்பிணைந்து உள்ளது. குணங்கள் : கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, காவி, சாம்பல் மற்றும் பொன்நிறம் என எள் பல வகைகளில் உள்ளது. உஷ்ணகுணமுடையது. தோல், முடி, உடலுக்கு நல்ல உறுதி, மென்மை கொடுக்கக் கூடியது. நினைவாற்றலை பெருக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடல் மெலிய எள் கலந்த மருந்து தயாரித்து வழங்குகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கவும், எள் கலந்தே மருந்து தயாரித்து தருகின்றனர். எள் இளைக்கவும், பருக்கவும் வைக்கும் திறன் கொண்டது. என்னென்ன சத்துக்கள் : அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம்,…

  17. நீங்க பழைய சாதம் சாப்பிட்டிருக்கிங்களா? முந்தைய நாள் வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு பாருங்கள்! தேவாமிர்தமாக இருக்கும். சாதாரண சோற்றை விட சக்தி மிகுந்தது பழைய சாதம். நம் முன்னோர்கள் இந்த பழைய சோற்றை சாப்பிட்டுத்தான் வலிமையானவர்களாக இருந்தார்கள். ‘இந்தப் பழய சாதத்தில் பி6, பி12 போன்ற ஏராளமான வைட்டமின்கள் இருக்கிறது’ என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள். பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பன்றிக் காச்சல் மட்டுமல்ல, எந்தக் காச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணமாகும். சிறு குடலுக்கு நல்லது. அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாகும். இளமையாக இருப்பார்கள்- …

  18. கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி, நோன்பு என இந்துக்களின் பண்டிகைகளின் போது இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஆனதுதான். அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான் இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம். அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகி…

  19. தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104 ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104 (திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.) திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத…

  20. உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) உயிர்மை மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை இது. நம்மில் பலருக்கு இந்த நோய் இருந்தும், அது இருக்கிறதென்று தெரியாமலே வாழ்த்து வருகின்றோம். என்னை மையமாக வைத்து, இந்த நோயைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதில் ‘நான்’ என்பது. நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது என் நண்பராகவோ அல்லது வேறு ஒரு நபராகவோ கூட இருக்கலாம். இதைப் படித்த பலர் பர்சனலாக யோசித்து, எதிர்வினையாற்றுகிறார்கள். இங்கு யாருக்கு இந்த நோய் இருந்தது என்பதல்லப் பிரச்சனை. நோய் மட்டுமே பிரச்சனை. இனித் தொடர்ந்து படியுங்கள். -ராஜ்சிவா- உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் …

  21. மனித உயிரை காவுகொள்வதில் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பாரிய பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பாம்பு, கரடி, புலி, சிங்கத்தை கண்டு பயந்த நாம் தற்போது கிருமிகளை கண்டும் அஞ்ச வேண்டியுள்ளது. நாம் உண்ணும் உணவு முதல் அனைத்து விடயங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் கிருமிகளை பரப்புவதில் தூவாய்கள் மிக மோசமான குற்றவாளியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமலறை துவாய்கள் மட்டுமன்றி குளியலறை துவாய்களும் நோய்களை மிக வேகமாக பரப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர். துவாய்கள் அதிக நேரம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதனாலும் வீட்டில் கிருமிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்துவதாலும் வீடுகளில் கிருமிகள் பெருகவும் பரவ…

  22. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி. மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில வ…

    • 3 replies
    • 3.8k views
  23. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது. ‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம். …

  24. நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லா…

    • 1 reply
    • 914 views
  25. காலை உணவை சாப்­பி­டாத குழந்­தை­க­ளுக்கு நீர­ழிவு நோய் வரும் அபாயம் அதி­க­ரிப்­ப­தாக மருத்­துவ ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கி­றார்கள். இங்­கி­லாந்தில் உள்ள சிறுவர் பள்­ளி­களில் 10 வய­துக்கு உள்­ளிட்ட குழந்­தை­களை ஆய்வு செய்­ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்­தை­க­ளுக்கு இன்­சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்­கி­றது. இதன் கார­ண­மாக இரண்டாம் வகை நீர­ழிவு வரு­கி­றதாம். குழந்­தை­களை அதிகம் தாக்­கு­வது முதல் வகை நீரி­ழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடு­வதன் மூலம் இரண்டாம் வகை நீரி­ழிவு வரு­கி­றது. சிறு­வ­ய­தி­லேயே இந்நோய் வரு­வதை தடுக்க காலையில் அவ­சியம் உணவு எடுத்துக் கொள்­ள­வேண்டும் என இங்­கி­லாந்தின் நல­வாழ்­வியல் ஆராய்ச்சி மையம் வலி­யு­றுத்­து­கி­றது. காலையில் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.