நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உடல் பருமனைத் தவிர்க்க புத்திசாலித்தனமான வழிகள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன், அழகு ச…
-
- 0 replies
- 676 views
-
-
சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். 'இத்தனை மாத்திரைகள் எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி நரைச்சிருக்கேனு, 'டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல் எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார். 'டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார் பரிதாபமாக. 'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுரு…
-
- 3 replies
- 2k views
-
-
அது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்துகொண்ட பிறகும் கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன. தூங்காத கண்கள் எல்லாவற்றையும் விரல் நுனியில் செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறபோதும்கூட, நம்மில் பலருக்கும் முந்தைய நாள் தூக்கம் கண்களை அழுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இல்லையா? இதற்கு என்ன காரணம்? தூக்கத்தை …
-
- 0 replies
- 1.3k views
-
-
கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால் விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர். முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம். ''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை... க்ரஞ்சஸ் (CRUNCHES) தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இதய நோய்க்கு, டி.எம்.டி., பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன? ‘டிரெட் மில் டெஸ்ட்’ என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கணினியில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இதனால், ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் நார்வே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரில் விளையாடுவது இன்று அதிகரித்துள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும். உடலில் எலும்பிலிருக்கும் எலும்புத் தாது குறையும்போது, எலும்புகள் வலுவிழந்து முறிய நேரிடும். உட்கார்ந்தே பணியாற்றும் சிறுவர்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்ப…
-
- 0 replies
- 263 views
-
-
ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்? உடல் பருமன் முற்றிய நிலையில் தீர்வு காண்பது கடினம். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இதைத் தடுக்க முடியும். உடல் பருமனாவதைத் தவிர்த்து ஃபிட்டாக இருக்க லேப்ராஸ்கோப்பி மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணர் சி.பழனிவேலு அளிக்கும் டிப்ஸ் இங்கே... சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்து…
-
- 0 replies
- 523 views
-
-
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது…
-
- 48 replies
- 45.4k views
-
-
புகையிலை ஒரு அமெரிக்கத் தாவரம். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த பின்னர் அங்கே படையெடுத்த ஐரோப்பியர்கள் அங்கே இருந்த பூர்வகுடி இந்தியர்கள் புகையிலை பிடிப்பதைக் கண்டு அதைத் தாமும் பிடிக்கத் தொடங்கினர். அதன்பின் புகையிலை உலகெங்கும் பயிரிடப்பட்டு, பயன்பட்டு வந்தாலும் அதன் தீமைகளை அன்று யாரும் அறியவில்லை. முதல், முதலாக சிகரெட்டின் தீமைகளை அறிந்த நாடு, நாஜி ஜெர்மனிதான். 1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz H. Müller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் க…
-
- 0 replies
- 902 views
-
-
‘உணவுக்கும் மருந்துக்கும் அதிக வேற்றுமை இல்லை’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. உணவு கட்டுப்பாடு குறையும்போது மருந்தை நாட வேண்டி உள்ளது. மருந்தைக் குறைப்பதற்கு, உணவைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய் மருத்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1.உணவும் உடற்பயிற்சியும் மனஉறுதியும் 2.உணவும் உடற்பயிற்சியும் மாத்திரையும் மனஉறுதியும் 3.உணவும் உடற்பயிற்சியும் ஊசியும் மனஉறுதியும் எப்படிச் சமாளிப்பது? இந்த மூன்றிலுமே உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது என்று சொன்னால், அதில் தவறில்லை. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்று…
-
- 1 reply
- 737 views
-
-
பிஸ்கட் பிடிக்கிறதா? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்... 'ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு. ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது. இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ... ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி. பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தால…
-
- 0 replies
- 877 views
-
-
# உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. # பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் ஜீரணமடைவதுடன் உடலால் விரைவில் கிரகிக்கப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன. # தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம். # நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. # பார்லி நீரை தினமும் அரு…
-
- 0 replies
- 507 views
-
-
Posted Date : 08:46 (31/07/2014)Last updated : 12:22 (31/07/2014) நியூ யார்க்: தேநீர், காபி குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'ஸ்டைரீன்' என்ற வேதி பொருள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வேதி பொருளான 'ஸ்டைரீன்' மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஆய்வின் தலைவர் டாக்டர் ஜேன் ஹென்னே கூறும்போது, இது துன்பம் விள…
-
- 3 replies
- 1k views
-
-
ஆஸ்த்மாவும் யோகமும் ஆஸ்துமா எனப்படுவது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நோய். நமது நுரையீரலில் உள்ள சுவாசக் குழாய்களில் ஏற்படும் தூண்டுதல்களுக்கு நமது உடல் அதிகமான பதில்வினை கொடுப்பதால் ஏற்படும் நோய் இது. புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகபடுத்தும். ஆஸ்துமா பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது, வெகு சிலருக்கு நடுவயதில் ஆரம்பிக்கலாம். பரம்பரையில் இது யாருக்கேனும் இருந்தால், வரும் சந்ததியினரையும் பாதிக்கலாம். புகைப்பிடித்தல், மாசு படிந்த சூழ்நிலை ஆகியவையும் ஆஸ்துமா வரக் காரணமாக இருக்கிறது. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏ…
-
- 2 replies
- 803 views
-
-
பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வேண்டியது !! பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும், தன் பெண் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும்.வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு உடல் ரீதியான தொந்தரவையும் தரக்கூடியவை. குறிப்பாக மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப்படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம். நீ இனிமே…
-
- 1 reply
- 566 views
-
-
நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்). ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும். நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறக…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது. ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்…
-
- 1 reply
- 2.2k views
-
-
நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? - அது ஒரு நீண்ட பயணம்! வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு 'மலம் வந்திருக்கிறது' என்ற தகவலை உணர்த்தும். அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என…
-
- 0 replies
- 556 views
-
-
ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? எடை குறைய என்ன வழி? 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்! ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடைய…
-
- 3 replies
- 3.8k views
-
-
இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது. சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி…
-
- 0 replies
- 616 views
-
-
கைக்குத்தல் அரிசியின் பலன்கள்.... அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால…
-
- 5 replies
- 1.2k views
-
-
அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் …
-
- 4 replies
- 569 views
-
-
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? #சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது. #உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சா…
-
- 0 replies
- 640 views
-
-
செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது. காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர். இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும். இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யல…
-
- 5 replies
- 906 views
-
-
கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும் 1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளில், மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய, 'ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு மூட்டுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதையே, முடக்குவாதம் என்கிறோம்.சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று,…
-
- 0 replies
- 2.5k views
-