Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் – குவியும் பாராட்டுக்கள் கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு …

    • 3 replies
    • 954 views
  2. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு! இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்காக எங்கள் இதயங்கள் இப்போது செல்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவர…

    • 0 replies
    • 390 views
  3. லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளி…

  4. நினைவுகளை மறுத்து நீதி இல்லை – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஐ. நா. ஆலோசகர் அடமா 214 Views நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ. நாவின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அமெர…

  5. இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 29 Views “பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்” NEW YORK, UNITED STATES OF AMERICA, May 17, 2021 /EINPresswire.com/ — மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார். ஏழாவது ஆண்ட…

  6. உலகத்தமிழ் உள்ளங்களே! இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன. அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்! ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம். ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அ…

  7. கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்? -ஒரு புலன் விசாரணை மாயமான் ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு. இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்ன…

    • 0 replies
    • 781 views
  8. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல் 59 Views இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியி…

    • 1 reply
    • 627 views
  9. பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு 81 Views முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்ஸில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாரிஸ் புறநகர் பகுதியான கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. https://www.ilakku.org/?p=49536

  10. மோசடி கோஸ்ட்டியின் திருவிளையாடல் : £1billion பிரித்தானியாவின் ஒரு பல்கலைக்கழக மாணவி. பல்கலைக்கழகத்தில் இருந்து, வெளியேறி கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பின்னர், அண்மையில் வேலை ஒன்றினை எடுத்து இருக்கிறார். வேலை இடத்துக்கு, இவரின் சம்பளத்தில் மாதாமாதம் பிடிக்க வேண்டிய தொகை குறித்து, அரச திணைக்கள அறிவித்தல் வந்து இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் கடன் எதுவுமே வாங்கவில்லை. ஆகவே, அவர் குறித்த திணைக்களத்துடன் தொடர்ப்பு கொண்டார். security கேள்விகள் கேட்கப்பட்டபோது இவரால், சரியாக பதில் அளிக்க வில்லை என்று, மோசடியாளார் என்பது போல தொடர்பினை துண்டித்து விட்டார்கள். மீண்டும், மீண்டும் தொடர்ப்பு கொண்டு, அதே நிலைமை தொடர்ந்ததால், வெறுத்துப் போய் விட்டார், …

    • 0 replies
    • 841 views
  11. தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு 15 Views கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்…

  12. ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…

  13. சிங்களவர்கள், ஒண்டாரியா உயர் நீதிமன்றில், பிராம்டன் நகர தமிழர் இனவழிப்பு தீர்மானத்துக்கு, எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். Bill 104, Tamil Genocide Education Week Act, 2021 கனடிய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். சொல்லப்பட்ட இனவழிப்பானது, உலகின், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற எந்த ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஐநா கூட தனது விசாரணைகளை ஆரம்பிக்காத நிலையில் அது புலிகளின் அல்லது அதன் சார்பான ஆட்களின், பொய்யான செய்தியின் அடிப்படையில் உருவாக்கிய கட்டுக்கதை என்றும் அடித்து விட்டுள்ளார்கள். https://www.srilankancanadian.ca/index.php/2021/05/10/notice-of-constitutional-questio…

    • 8 replies
    • 1.8k views
  14. லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk

    • 10 replies
    • 1.5k views
  15. கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! AdminMay 7, 2021 கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்…

  16. https://www.aversan.com/

    • 2 replies
    • 1k views
  17. கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் காணாமல் போயுள்ள 16 வயதான இளம் பெண்ணின் தகவல் தர கோரிக்கை கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர். தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார். 5’ 5”” உயரமுடைய அவா், மெல்லிய உடல்வாகும் நீண்ட கருப்பு முடியும் கொண்டவர். இடது கையில் பச்சை குத்தியுள்ளார். காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். காணாமல் போன அன்று தரணிதா ஹரிதரன் ந…

  18. ஈழ தமிழரின் பால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கும் அளப்பரியது. 2009 Sri Lanka's Killing Fields மற்றும், தமிழ் மக்கள் வெஸ்ட் மினிஸ்டர் உண்ணாவிரதம், David Cameron வட பகுதி பயணம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஜான் ஸ்னோவின் எதிர் கால வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றிகள். https://www.bbc.co.uk/news/entertainment-arts-56929987

  19. பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது April 27, 2021 (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை) பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடிய…

  20. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம் A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance. 23 Views பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தட…

  21. பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது. நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள். சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள். என்ன நட…

    • 3 replies
    • 1.2k views
  22. சுயாதீனப் பொறிமுறை தொடர்பாக யஸ்மின் சூக்காவின் விளக்கக் குறிப்பு (Tool-kit) 52 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரின் இறுதியில் சிறீலங்கா தொடர்பான சுயாதீனப் பொறிமுறை (Independent Mechanism) அறிவிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சுயாதீனப் பொறிமுறையை எப்படிப் புரிந்துகொள்வது மற்றும் எப்படிப் பயன்படுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பாக உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (ITJP) என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான யஸ்மின் சூக்கா (Yasmin Sooka) எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விளக்கக் குறிப்பு (Tool-kit) ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். விளக்க குறிப்பின் முழுவடிவத்தைக் காண…

  23. தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார் 181 Views தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் 93ஆவது வயதில் கடந்த 09ஆம் திகதி தனது இல்லத்தில் காலமானார். தேசியத் தலைவரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தி மலரில் தனது கருத்துக்களை பதிந்திருந்தார். 1967 முதல் 1969 வரை அமெரிக்காவின் சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார். மேலும் இவர் தமிழீழ …

  24. தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக…

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடை அணந்தபடி, பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமாகினார். இது தொடர்பில், விடுதலைப் புலகளின் சீருமையை ஒத்த ஆடை அணிந்தபடி அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், விடுதலைப் புலகளின் தலைவரின் சார்பில் அஞ்சலி செலுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவின்படி, புலிகளை ஒத்த ஆடையுடன் சென்று அஞ்சலி செலுத்தியதாகவே கருத முடிகிறது. அவரது …

    • 6 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.