நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன். ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள். ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் (அலெக்சாண்டர் சொல்செனிற்சின் , 1962) அலெக்சாண்டர் சொல்செனிற்சின் எனும் ரஷ்ய எழுத்தாளர் பற்றி நான் முதலில் கேள்விப் பட்ட அதே காலப் பகுதியில் கம்யூனிசத்தின் சின்னமான பெர்லின் சுவர் இடிந்து, சோவியத் யூனியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. அவரது மொழிபெயர்க்கப் பட்ட எழுத்துக்களை அவ்வப்போது குறுங்கட்டுரைகளாகப் படித்ததோடு சரி. சுருக்கமாக, முன்னாள் சோவியத் செம்படைக் கப்ரனான அலெக்சாண்டர், ஜோசப் ஸ்ராலினை தனது தனிப்பட்ட கடிதமொன்றில் விமர்சித்த காரணத்தினால், எட்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டு சைபீரியாவின் கடூழிய முகாமுக்கு அனுப்பப் பட்ட ஒருவர். பல மில்லியன் பேர் இந்தக் குலாக் எனப்படும் கடூழியத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு அனுப்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழம் அமையணுமா..? B.R. மகாதேவன் கிழக்குப் பதிப்பகத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள புத்தகத்திற்கான அறிமுக விமர்சனம் ••••• காசித்தேவர்-பட்டம்மாள் தம்பதியின் மகன் அய்யநாதன் எழுதிய நூல் ”ஈழம் அமையும்’. 2002-2008 காலகட்டத்தில் வெப் துனியா இணைய இதழின் ஆசிரியராக அவர் இருந்தபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்: ஈழத் தமிழர்களின் வேதனைக்கும் விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் இந்திய வல்லாதிக்கமே காரணம். அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, ஐரோப்பா, ஈரான் ஈராக், ஐ.நா சபை, மத்யஸ்தம் செய்ய வந்த நார்வே, மருத்துவ சேவை செய்யவந்த செஞ்சிலுவைச் சங்கம் என ஒட்டுமொத்த உலகமும் ஈழ விடுதலையை முடக்கி சிங்கள அரசுக்குத் துண…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா) pro Created: 04 October 2018 போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=4][size=6]கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் [/size] [/size] [size=4]யமுனா ராஜேந்திரன் [/size] [size=4]“ஒரு யுத்தச் சூழல் மக்கள் வாழ்நிலையின் சகலதளங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பிரதிபலிப்புகள் எதிர்வினைகள் என்பன பற்றிய அச்சமில்லாத விசாரணைக்கான ஒரு வெளி தேவையாகிறது. விடுதலைப் போராட்டமும். வீரமும் பெருந்தியாகங்களும் திடசித்தமும் அரசியல் நிலைமைகளின் ஒரு பரிணாமமாய் அமைந்த நிலையில் ஈவிரக்கமற்ற கொலைகளும் வதைமுகாம்களும், சர்வாதிகார அகங்காரமும் மறுபுறம் செழிக்கலாயி…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது... புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்! ''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றி…
-
- 2 replies
- 1.4k views
-
-
குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்னும் நாவல் இரு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தாலும் இப்பொழுதுதான் எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலின் பெயர் எல்லோரையும் வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு. வாசிக்கும் முன்னர் அதுபற்றிய விமர்சனங்கள் பலவற்றை வாசித்ததில், எனக்குள்ளேயே அதுபற்றிய மிகைப்படுத்தப்பட்ட கற்பனையும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. திரு பாலகுமாரனின் முன்னுரை சிறிது நீண்டதாக இருந்தது எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்தியிருந்த ஒரு தோற்றம் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மை. அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம். அவரின் எழுத்து, முதல் நூல் என்று கூறமுடியாதவாறு விபரிக்கும் விதம் அரும…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழக் கவிஞர் தீபச்செல்வன் முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறு…
-
- 2 replies
- 1.4k views
-
-
செங்கை ஆழியானின் வாடைக்காற்று சந்திரவதனா வாடை பெயர்ந்துவிட்டது. நெடுந்தீவுத் தெற்குக் கடற்கரையில் செமியோனின் வரவுக்காக பிலோமினா காத்திருக்கிறாள். மூன்று வருடங்களாக, வாடைக்காற்று பெயரத் தொடங்கியதும் தந்தையுடன் ஒரு தொழிலாளியாக வந்து வாடி அமைத்து, மீன் பிடித்துச் சென்ற செமியோன் கடந்த வருடம் தானே சம்மாட்டியாக வந்தபோதுதான் அவனுக்கும் பிலோமினாவுக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது. வாடை முடிந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பும் போது அவளையும் தன் மனைவியாகத் தன்னோடு அழைத்துச் செல்லும் நினைப்புடன்தான் செமியோன் அவளுடன் பழகினான். ஆனால் பிலோமினாவின் அண்ணன் சூசைமுத்துவுக்கும், செமியோனுக்கும் ஒத்துவரவில்லை. செமியோன் ஒரு சம்மாட்டி. பிலோமினாவின் குடும்பம…
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புக…
-
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
#மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக நம்பி விட்டாரே பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது. நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை. எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள் சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்.. கதாசிரியர் இடையிடையே…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து http://www.mediafire.com/?44yi387ccxeavd7
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்நதியின் பார்த்தீனியம் : பேரழிவின் மானுட சாட்சியம் யமுனா ராஜேந்திரன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை ஈழத்தமிர்கள் வாழும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்கொண்ட நாட்களின் கொஞ்சம் முன்னாகத் துவங்கி, இலங்கையிலிருந்து அதனது கடைசி அணி வெளியேறும் காலத்தோடு முடிகிறது. ஈழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும்; அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து ஈழத்தவரால் எழுதப்பட்ட முத…
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழ் நாஸி பேக்கரி February 2nd, 2018 | : | வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது. இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து, இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே விருது வழங்கிக் கொண்டாடுவதை என்னவென்பது. அதேபோல, அப்பட்டமான தமிழ் நாஸிக் குரலை ஒலிக்கும் இந்த நூலை வெளியிட்ட அரங்குக…
-
- 1 reply
- 1.4k views
-
-
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "உணர்வுகள் கொன்றுவிடு" யாழ் இணையத்துக்கே சமர்ப்பணம்.
-
- 11 replies
- 1.4k views
-
-
வாசன் நான் என் வாசிப்பு அனுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பகிர்ந்து வருவதுண்டு. அவைகள் யாவும் எத்தனை பேரால் கவனங்கொள்ளப்படுகின்றது என்பது குறித்தெல்லாம் எனக்குப் பெரிதாக கவலை ஏதும் இல்லை. ஆயினும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் மட்டும் நான் எப்போதுமே அவதானமாக இருந்து வருகின்றேன். ஏற்கனவே ஈழவிடுதலைப் போரினாலும், அதன் உள்ளக முரண்பாடுகளினாலும், அதன் பகை முரண்பாடுகளினாலும் ஏற்படுகின்ற சர்ச்சைகளினாலும் அதன் குத்து வெட்டுக்களினாலும் ஏற்கனவே பல நட்புக்களினதும் உறவுகளினதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதே எனது மனநிலை. இந்த என்னுடைய அவதானத்தையும் மீறி ஒரு தடவை மட்டும் ஒரு சிக்கலில் மாட்டிக…
-
- 13 replies
- 1.4k views
-
-
‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நுால் அறிமுகம்) ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நூல் அறிமுகம்) ஆசிரியர்: சசி வாரியர் தமிழாக்கம்: இரா.முருகவேள் இந்த வாழ்வின் அருமை எப்போது தெரிகிறதெனில், சாவுக்கு நாள் குறிக்கப்படும்போதுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, முதுகு முள்ளந்தண்டினுள்ளிருக்கும் தண்டுவடத்தில் கட்டி என்று வைத்தியர் சொன்ன கணத்தில், என்னால் இழக்கப்படவிருந்த உலகம் சட்டென அழகாகிப்போனதைப் பார்த்தேன். நோயாகட்டும் மரணதண்டனையாகட்டும் ‘இதோ முடிந்துவிடப்போகிறது’எனும்போதே வாழ்வின்மீதான காதல் பெருக்கெடுக்கிறது; குறைகள், குற்றப்பட்டியல்கள் சிறுத்துப்போகின்றன. அதிலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் எரிதழலில் தினம்தினம் கருகும்போது…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீடு! http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2717:2015-05-22-04-04-09&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29
-
- 0 replies
- 1.4k views
-
-
“எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? May 12, 2021 - இரா.முரளி · புத்தக மதிப்புரை law “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்” -நூல் அறிமுகம் இரா.முரளி வெகு காலமாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும், எதிர்பார்க்கப்பட்டும் வருவது ஏழு தமிழர் விடுதலை. ஆனால் சமீபகாலமாக எழுவர் விடுதலை என்ற முழக்கம், ஒருவர் விடுதலை என்று மாறி வருவதை நாம் காணமுடிகிறது. பேரறிவாளனுக்கு மட்டுமே விடுதலை எளிதில் சாத்தியம், அவர் வெளியே வந்தால்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு எனக் கூறி பேரறிவாளனுக்கு மட்டும் குரல் எழுப்புபவர்கள் உண்டு. இந்நிலையில் “எழுவர் விடுதலையா?ஒருவர் விடுதலையா? உண்மையும் உருட்டலும்” எனும் தலைப்பில் ஏழு தமிழரி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கதை நடக்கும் வருடம் 3612,எழுநூறு கோடியாக இருந்த சனத்தொகை உலகப்பேரழிவினால் 35 கோடியாக சுருங்கி விட்டது பேரழிவிலிருந்து எஞ்சியிருப்பது தென் இந்தியாவும் இன்னும் சில தீவுக்கூட்டங்களும் கிட்டத்தட்ட லெமூரியா கண்டம் அளவில் அதற்கு ஒரு அரசன் அரசனுக்கு கீழ் பிரபுக்கள், கிட்டத்தட்ட அடிமையான மக்கள்.அரசனுக்கு பின்இருந்து அவனை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பத்தினை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சகலகலாவல்லவன். வெட்டாட்டம் நூலிற்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இன்று காலையில் தான் கிண்டிலில் டவுன்லோடினன் .. இப்போது முடித்தாச்சு...:) நல்ல ஒரு இயக்குனர் கையில் கிடைத்தால் தமிழில் சுப்பரான ஒரு sci-fi படம் கிடைக்கும் வெட்டாட்டத்தினை நோட்டா ஆக்கி கொத்து பரோட்டா போட்டதை போல …
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழ…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம் - யமுனா ராஜேந்திரன் ‘கவிதை என எழுதாதே வரலாற்றை’ என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். புனைவு எனும் பெயரில் எழுதப்படும் இன்றைய ஈழப் போராட்டப் புனைகதைகளுக்கு இந்த வரி அச்சொட்டாகப் பொருந்துகிறது. வரலாறு, புனைவு என இரண்டினதும் குறைந்த பட்ச அழகியல் அடிப்படைகளையும் புறந்தள்ளி இன்றைய ஈழப் புனைவுகள் எழுதப்படுகின்றன. வரலாறு எழுதுதலில் இரண்டு அடிப்படைகள் உண்டு, ஆய்வும் தரவுகளும் அதற்கான ஆதாரங்களும் கொண்டு கருத்தியல் பார்வையுடன் எழுதப்படுவது வரலாறு. குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் வாழ்ந்த மாந்தர்களின் மாதிரியை அனுபவதரிசனத்துடன் முன்வைப்பது புனைவு. புனைவு யதார்த்தத்தை முன்வைக்கிறது எனினும் அது யதார்த்தத…
-
- 0 replies
- 1.4k views
-
-
கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally…
-
-
- 21 replies
- 1.4k views
- 1 follower
-
-
ருக்மணி என்கிற பெண்ணைப் பற்றி ஓர் அரச மரம் பேசியதாக புனையப்பட்ட வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற தமிழின் முதல் சிறுகதை தொடங்கி இன்று வரை பல படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதைக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தனக்கே உரிய மொழி அலங்காரத்துடன் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார் வைரமுத்து. ஒவ்வொன்றும் வெவ்வேறான கதைக் களன்களைக் கொண்டவை. ‘மனிதர்கள் மீண்டும் குரங்குகள் ஆகிறார்கள்’ என்று ஒரு கதை. “டெல்லி நகரம் முழுதும் இருக்கிற குரங்குகளை எல்லாம் டெல்லி எல்லையை விட்டு வெளியேற்றிவிடுங்கள்’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது. குரங்குகளை ஏன் அப்புறப்படுத்தச் சொன்னார் நீதிபதி என்பதற்குப் பின்னால் ஒரு சுயநலப் படுதா விரிகிறது. குரங்கு…
-
- 0 replies
- 1.4k views
-