Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிவகாமியின் சபதம் “கல்கி” என்றாலே அனைவருக்கும் “பொன்னியின் செல்வன்” தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன்னுடைய மந்திர எழுத்துக்களால் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். “பொன்னியின் செல்வன்” விமர்சனம் எழுதிய போது அனைவரும் “சிவகாமியின் சபதம்” படிங்க அதுவும் இதே போல அசத்தலான நாவல் என்று கூறினார்கள். “பொன்னியின் செல்வன்” நாவல் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே! அதில் சோழர் பெருமை பற்றி என்றால் இதில் பல்லவர்கள் பற்றி. இரண்டுமே வெவ்வேறு களம் ஆனால், இரண்டிலுமே நாம் சம்பந்தப்பட்டு இதில் ஒரு அங்கமாக மாறி விடுவோம். அதாவது நாம் சோழ, பல்லவ குடிமக்களாகவே மாறி விடுவோம். பரஞ்சோதி பரஞ்சோதி என்ற சாதாரண நபர் ஆரம்பத்தில் நாவலை துவக்கி …

  2. யவன ராணி சரித்திர நாவல் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் நம் தமிழகத்தின் பெருமையை அதன் வீரத்தை படிக்கப் படிக்க நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பிறந்து இருக்கிறோம் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வாழ்கிறோம் என்று பெருமையாக உள்ளது. Image Credit – blaftblog.blogspot.com இதற்காகவாவது வரலாற்று நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சாண்டில்யன் வரலாற்று நூல்களைப் பற்றிச் சிறு வயதில் இருந்தே அறிந்து இருக்கிறேன் என்றாலும் தற்போது தான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சாண்டில்யன் யவன ராணி, கடற்புறா நாவல்கள் பலரிடையே பாராட்டுப் பெற்ற நாவல்களாக உள்ளன. இனி யவன ராணி சோழநாட்டில் யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியை அமைக்க அந்த நாட்டு சோ…

  3. போதையில் பல வகை ஆர். அபிலாஷ் போன வாரம் இங்கே ஒரு கூட்டம் நடந்தது. இணைய (போர்னோகிரபி, சமூக வலைதளங்களின்) போதை பற்றி ஒருவர் விரிவாக பேசினார். ஏற்கனவே நாம் கேள்விப்பட்டது தான். இணையம் நமது நரம்பணுக்களின் சர்க்யூட்டை மாற்றி அமைக்கிறது. உடனடி கிளர்ச்சிக்காய் மனம் ஏங்கத் துவங்குகிறது. எதையும் ஊன்றி பொறுமையாய் கவனிக்க முடியாமல் மனம் சிதறுகிறது, தத்தளிக்கிறது, அலைபாய்கிறது. இது தான் இணைய போதை. இது நம்மில் கணிசமானோருக்கு மிதமான அளவில் உண்டு. நான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் சென்னைக்கு படிக்க வந்த போது ஜெயமோகன் என்னிடம் இணைய போதை பற்றி எச்சரித்தார். அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கணினி மையங்களுக்கு போய்காளைவண்டி போல் ஓடும் இணையத்தை மேய வேண்டும். ஆன…

  4. .http://www.projectmadurai.org/pmworks.html சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய தமிழ் காப்பியங்களுடன் ஏனையவை. ஒரே இடத்தில். மொத்தம்: 559 பொன்னியின் செல்வன் தமிழ் (169) , ஆங்கிலம் (278) கூட உள்ளது. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0169_01_01.pdf http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0278_01.pdf எதையோ தேடப் போக.... கிடைத்தது. http://www.projectmadurai.org/pmworks.html

    • 1 reply
    • 507 views
  5. பருவம் – எஸ்.எல்.பைரப்பா எஸ்.சுரேஷ் நம்மை முதலில் தடுமாறச் செய்வது பாத்திரங்களின் வயது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்தையும் பாத்திரங்களின் வயதைக் குறிப்பிட்டே துவங்குகிறார் பைரப்பா. போர் மேகங்கள் திரள்கின்றன, மாபெரும் யுத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன- இந்தக் கட்டத்தில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படுகிறான். அவனது வயது அறுபத்து ஐந்து! நாமறிந்த மகாபாரதத்தை முழுமையாகப் புரட்டிப் போட்டு விடுகிறது இது. அமர் சித்ரா கதாவிலும் ராஜாஜியின் வியாசர் விருந்திலும் நாம் கண்ட கர்ணன் அல்ல இவன். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இளம்பருவ கர்ணன் அல்ல இவன், நாம் திகைப்புடன் கண்டு ரசித்த சிவாஜி கணேசனின் கோபக்கார கர்ணன் அல்ல இவன். போர்க்களம் புகத் தயாராகிக் கொண்டிருக்கும் அற…

  6. காற்றில் துளிர்க்கும் யாழ் சோழகக்கொண்டல் அ. முத்துலிங்கம் எழுத்தில் கனவென தூரத்தில் மிதக்கும் பால்யத்தின் நிலம் எங்கள் ஊர் கொள்ளிடக்கரையில் வானுக்குள் தலை நுழைத்து அரைநூற்றாண்டு வயதுடைய ஆலமரம் நிற்குமிடமே பிரதான நீர்த்துறை. அக்கரை கண்ணுக்கெட்டாத தூரம்வரை நீலம்பாரித்து நெடும்புனல் பாய்ந்த காலம் முதல், திசையின் தொடுப்புள்ளி வரை வெற்று மணலாகி கிடக்கும் இந்நாள் வரையிலும் அதுதான் நீர்த்துறை. எம் தகப்பனாருடைய காலத்திற்கு பிறகே இவ்விடம் துறையாக இருக்கிறது. எங்கள் தாத்தாவுக்கோ குளிக்கவும் துவைக்கவும் தோதுவான இடமென்பது இலவமரத்துத் துறைதான். பள்ளிநாட்களில் பார்வையில்லாத என் பெரியதாத்தாவை கைத்தடியைப் பிடித்துக்கொண்டு ஆற்றுக்கு கூட்டிப்போனால், இளவமரத்து துறைக்குத்த…

  7. நிலம் சனங்களினுடையது. ஆனால் உலகம் எங்கும் பூர்வீகச் சனங்களிடமிருந்து நிலம் பறிக்கப்படுகிறது. இனம், வர்க்கம், சாதி என அனைத்து மேலாதிக்கங்களாலும் நிலம் சனங்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. உலகில் ஒடுக்குமுறையை மேற்கொள்பவர்கள் நிலத்தை பறிக்கின்றனர். நிலத்தை பறிப்பதன் ஊடாக அதிகாரத்தை விரிவுபடுத்தவும் அந்த சமூகத்தை அழிக்கவும் திட்டமிடுகின்றனர். நிலத்திற்காகப் போராடும் ஈழ மக்களின் போராட்டத்தில் உலகம் எங்கும் இனத்தின் மேலாண்மையால் சாதியின் மேலாண்மையால் வர்க்க மேலாண்மையில் ஒடுக்கப்படும் சனங்களைக் காணமுடியும். சனங்களுக்குரிய இந்தப் பூமி சனங்களிடம் இருப்பதுதான் இந்தப் பூமிக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. இந்தப் பூமியை ஒடுக்குமுறையாளர்களும் அபகரிப்பாளர்களும் அபகரித்துத் தின்று கொண்…

    • 0 replies
    • 952 views
  8. வெற்றிச் செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான். சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது. அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்…

  9. உண்மை மனிதர்களின் கதைகள் - கருணாகரன் “ஆயுத எழுத்து“ என்ற புனைவின் ஊடாக தமிழ்வாசிப்புப் பரப்பில் அதிகமாக அறியப்பட்டவர் சாத்திரி. குறிப்பாக “ஆயுத எழுத்து“ முன்வைத்த அரசியலுக்காகவும் அது வெளிப்படுத்திய உள்விபரங்களுக்காகவும் உண்டாகிய சர்ச்சைகள், விவாதங்கள் மூலமாக சாத்திரி பரவலான அறிமுகத்தையடைந்தார். அதற்கு முன்பாக அவர் “ஒரு பேப்பர்“ என்ற பத்திரிகையிலும் “அவலங்கள்” என்ற தன்னுடைய இணையத்தளத்திலும் பத்திகளையும் கதைகளையும் எழுதியிருந்தார். அவையும் சர்ச்சைகளைக் கிளப்பியதுண்டு. சாத்திரியின் அரசியற் பார்வை, பெண்ணிய நோக்கு, வரலாற்றுக் கண்ணோட்டம், யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும்முறை போன்றவற்றில் பலருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் மறுப்புகளும் உண்டு. தனக்கெதிரா…

    • 18 replies
    • 3.4k views
  10. கடந்த ஞாயிற்றுக் கிழமை (09.04.2017) அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள தமிழர் அரங்கத்தில் அறிவியல் எழுத்தாளர் ராஜ்சிவா அவர்களுடனான கலந்துரையாடல், சாந்தி நேசக்கரம் அவர்களின் 'உயிரணை' நாவல் அறிமுகம், என்னுடைய 'நாங்கள்' சிற்றிதழ் அறிமுகம் ஆகிய மூன்று நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன. 50இற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ராஜ்சிவா அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை சபையோர் கவனமாக செவிமடுத்தனர். இப்படி ஒரு கலந்துரையாடல் எமது சூழலுக்கு புதிது என்பதனால், இந்த முயற்சிக்கு ஆதரவு இருக்குமா என்கின்ற சந்தேகத்தில் நான் அவருக்கு ஒரு மணித்தியாலமே ஒதுக்கியிருந்தேன். சபையோரின் ஆர்வத்தினால் நிகழ்வு மேலும் அரை மணித்தியாலம் நீண்டது. ராஜ்சிவா அவர்க…

    • 0 replies
    • 559 views
  11. அவுஸ்திரேலியாவில் 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' நூல் வெளியீட்டுவிழா! [Thursday 2017-04-20 20:00] முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்த்தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்" என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு …

    • 0 replies
    • 358 views
  12. Started by sathiri,

    என்னுரை வாசகர்களிற்கு வணக்கம்.. இது வரை காலங்கள் பத்திரிகை,சஞ்சிகைகளில் சிறு கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்த எனது முதலாவது நாவல் முயற்சி இது.கடந்த முப்பது வருடங்களாக இலங்கைத்தீவில் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்து விட்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் நான் பார்த்த, கேட்டு அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட பல முக்கிய விடயங்களையும், 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து தொடங்கி இந்த நாவலிற்குள் அடக்கியிருக்கிறேன. இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே நபருடன் சம்பந்தப் பட்டவையல்ல. பல நபர்களும் சம்பந்தப் பட்ட பல்வேறு சம்பவங்கள். ஆனால் இலகுவாக நாவலை நகர்த்துவதற்காக ஒரு கதாநாயகனை உருவாக்கி அவனூடாகவே இறுதிவரை நாவலை நகர்த்தியிருக்கிறேன். …

  13. குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர்…

    • 0 replies
    • 335 views
  14. எனது கவிதைத் தொகுப்பு இன்று இந்தியாவில் பூவரசியால் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகின்றது. நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ, இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும், மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது. வாசிக்கப்படும் கவிதைக்குள் செயல்ப…

  15. ரமேஷ் வவுனியன் எழுதிய ``தேடலின் வலி`` நூல் வெளியீடு ..வவுனியா ..

  16. ஊடகக் கறையான்கள் ஜெயமோகன் தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும்வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில்சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாமநோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையேஎழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாகஇருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும்அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறியவட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றையஅச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இ…

  17. யாழ். வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவரும், எழுத்தாளருமான கலாபூஷணம் வல்வை ந.அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 03 மணி முதல் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வை பண்டிதர் பொன்.சுகந்தன் முன்னிலைப்படுத்தினார். விழாவில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தரம் டிவகலாலா, பருத்தித்துறைப் பிரதேசத்தின் கலாசார வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் யோ.இருதயராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான க.தர்மலிங்கம், வே.சிவயோகன் ஆகியோர் நிகழ்த்தினர். நூல் வெளியீட்டுரையை வடமராட்சி வடக்க…

  18. புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி! சென்னை புத்தகக் காட்சி-2017 நேற்று தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் கொண்டாட்டம் இது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊடகங்கள் என்று ஒருசேரக் கொண்டாடும் பெருநிகழ்வு! பல ஆண்டுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்த இந்த விழா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக உருவெடுத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான சமூக மாற்றம் என்றே கருத வேண்டும். வலைப்பூக்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வருகையும் கூட இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். ஊடகங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்னும் நிலையில், …

  19. தமிழர்களின் பிரச்சனைகளை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சனைகளை, சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனாலையே “இப்படி ஒரு காலம்” எனும் நூலினை “மதக வன்னிய” என சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினேன் என நூலின் மொழி பெயர்ப்பாளர் அனுஷா சிவலிங்கம் தெரிவித்து உள்ளார். கவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. எழுத்தாளரான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம்” எனும் நூல் கிள…

  20. புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:- இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒ…

  21. “நாங்கள் இப்படித்தான் சுவாதி...ஜோதிமணிகளை எதிர்கொள்கிறோம்!” பி.ஜே.பியின் சமூக ஊடக அரசியல் பிண்ணனி #IamATroll அந்தப் புத்தகம் இப்படியாகத் தொடங்குகிறது, “அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ அல்லது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவோ அல்லது ஃபிரான்ஸ் அதிபர் ஃப்ரான்சியோஸ் ஹாலாந்தோ சமூக ஊடகங்களில் மிக மோசமான நடவடிக்கைகளில் (பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்கள், கொலை மிரட்டல் விடுபவர்கள்) ஈடுபடுபவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா....? நம் பிரதமர் இந்தத் தலைவர்களுடன் நட்பில் இருப்பதில் பெருமை கொள்கிறார். அதே நேரம்... அவர், பெண்களை இழிசொல்லால் கொச்சைப்படுத்துபவர்களையும், கொலை மிரட்டல் விடுபவர்களையும் பின்தொடர்கிறார்.…

  22. 2016-ல் கவனம் ஈர்த்த 15 புத்தகங்கள்... பரிந்துரைக்கும் 15 பிரபலங்கள்! ”புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வரிகள் இவை. வான் பார்த்து அல்லாமல் நிலம் நோக்கி சிறகு விரித்திருக்கும் சுதந்திரப் பறவைகள்தான் புத்தகங்கள். 2016-ம் வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், தங்களுக்குள் அப்படிப்பட்ட சிந்தனையையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய புத்தகங்கள் பற்றி குறிப்பிடுகிறார்கள் பிரபலங்கள். பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் சக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் எழுதிய ‘ஒளி ஓவியம்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். கேமிரா தொடர்பான டெக…

  23. துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்! ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.ஆனால், உள்ளே விட…

  24. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இணையத்தில் தொடர்ந்து எழுத வந்தபோது சக இணைய எழுத்தாளர்கள் மட்டுமே வழிகாட்ட இருந்தார்கள். இங்கே அப்போது பெரிய எழுத்தாளர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையம் ஒரு மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. அப்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் அய்யா வண்ணதாசன். கவிதையைத் தேடி தொலைதூரம் போகிறவர் அல்ல அவர். அந்நிய மனிதனின் கைக்குட்டையை நுனி விரலால் பற்றி குப்பைத்தொட்டியில் போடுவோர் நிறைந்த உலகில், பார்க்க வந்த ஒருவர் மேசையில் மறந்து வைத்துவிட்ட கைக்குட்டை காற்று வாங்கும் சுதந்திரத்தை கவிதையாக்கி சேமிக்கிறார். குளத்தின் சலன வட்டங்களை சுருட்டிக் கூட்டில் வைத்து நகரும் நத்தையை நான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்று கற்பனை செய்ய …

  25. 2016- ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு சிறு இசை நூலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளையும் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வரும் இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர், 1962-லிருந்து எழுதி வருகிறார். கலைக்க முடியாத ஒப்பனைகள், ஒளியிலே தெரிவது, உயரப் பறத்தல் கனிவு ஆகியவை இவரது சில சிறுகதைத் தொகுப்புகள். தற்போது விருதை வென்றிருக்கும் ஒரு சிறு இசை நூலை, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலையும் புலரி, முன்பின், ஆதி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடிதத் தொகுப்புகளையும் இ…

    • 5 replies
    • 4.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.