Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜனநாயக வரி - நிலாந்தன் 14 ஏப்ரல் 2013 அ .இரவியின் புதிய நூல் ஆயுதவரி காலச்சுவடு வெளியீடாக விரைவில் வருகிறது அதில் நிலாந்தன் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம் அவரைத் துரத்திக் கொண்டுவரும் அல்லது அவரைச் சுற்றி வளைக்கும். அல்லது அவரைத் தோற்கடிப்பதுமுண்டு. படைப்பாளியின் வாழ்க்கை படைப்பைத் தோற்கடிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதேசமயம் மாறக்கூடிய படைப்பாளி தனது மாறாப்படைப்பை கடந்து புதிய உச்சங்களை நோக்கிப் போவதும் உண்டு. ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான இரவியும் ஒ…

    • 3 replies
    • 729 views
  2. உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு -அ.நிக்ஸன்- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொ…

    • 2 replies
    • 729 views
  3. ஆக்காண்டி-இஸ்லாமபோபியா நாவல். September 28, 2023 சேனன் லண்டனில் திரள் குழுமம் 16-09-2023 அன்று நடத்திய கூட்டத்தில் முன்வத்த கருத்துக்கள் சில. திரள் குழுமம் காணொளியை வெளியிடுவதாக சொல்லி உள்ளார்கள் – வந்ததும் இங்கு பதிவிடப்படும் 1 ஆக்காண்டி ஒரு அரசியல் நாவல் என அறியப்படுவதால் அதுபற்றிப் பேசமுடியுமா என திரள் குழுமம் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடேசன் கேட்டிருந்தார். நாவலைப் படிக்க முதலே எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தது. ஜெப்னா பேக்கரி என்ற தனது நாவல் மூலம் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் ஆனவர் வாசு முருகவேல். ஜெப்னா பேக்கரி நாவலின் அரசியல் பின்னணி எனக்கு உடன்பாடற்றது. அந்த நாவலை தொடர்ந்து, வாசு முருகவேல் தன்னை அடையாளப் படுத்திக்…

  4. உரை அறிமுகவுரை -சுப. சோமசுந்தரம் எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சி…

  5. தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல், கதையல்ல காவியம். ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாள…

    • 0 replies
    • 715 views
  6. Salam Alaik Book Launch Event | SHOBSAKTHI SPEECH | ஷோபாசக்தி பேச்சு

    • 0 replies
    • 710 views
  7. தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர் நூலுக்கான முன் குறிப்பு ——————————————– ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். சமூக ஆய்வியலில் அவரது ஈடுபாட்டிற்குரிய பல்வேறு விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனத்துவம், சமூக அர…

  8. வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள் டிசே தமிழன் -'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு- 1. யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்…

  9. நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோ…

  10. குணா கவியழகனின் 'விடமேறிய கனவு' நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்தேன்

  11. இரண்டாவது ஆப்பிள் டிஜிட்டல் கடவுள் ஸ்டிவ் யாப்ஸ் நின்று, வென்ற கதை "ஃபாதர்! ஏன் ஆண்டவன் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யவில்லை? " "ஸ்டிவ் இது உனக்கு புரியாத விடயம்" "எனக்கு புரியாத விடயம் இனி வேண்டவே வேண்டாம்" இது தான் தத்துப்பிள்ளையான ஸ்டிவ் யாப்ஸ்! சீவாத தலைமுடி, ஒரு வாரமாக குளியல் பார்க்காத அழுக்கு உடல், ஆனால் பார்வையில் கூர்மை, வியப்பளிக்கும் அறிவு, மனதில் திமிர்! கஞ்சா, எல்.எஸ்.டி, ஹிப்பி வாழ்க்கை.இது தான் இளவயது ஸ்டிவ் யாப்ஸ். கல்லூரிபடிப்பை இடையில் நிறுத்தி பல ஆண்டுகள் ஆண்மீகத்தை தேடியவர். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி முதலாவது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து மூன்று தோல்விகள். திமிர் பிடித்த ஸ்டிவ் ஆப்பிள் நிறுவனத்திலிருந…

  12. இடைவெளிகளை நிரப்பும் எழுத்து: ஆர். காளிப்பிரஸாத் வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின் ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன. ஜெப்னா பேக்கரி நம் தலைமுறையில் நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இரு…

  13. Started by Athavan CH,

    ஒரு புத்தகத்தை வாங்கத் தூண்டுவது எது? புத்தகங்களின் தலைப்புகள், எழுத்தாளரின் பெயர் இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். ரசனையான படங்களுடன் வித்தியாசமான அட்டை வடிவமைப்பு இருந்தால், மேற்சொன்ன காரணிகளின் அவசியம் இல்லாமலேயே புத்தகத்தை எடுக்கக் கை நீளும். அப்படியான அட்டைப் படங்களை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுள் ஒருவர்தான் விஜயன். இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக எதிர் வெளியீடு, கருப்புப் பிரதிகள் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விஜயனின் கணினிவண்ணத்தில் மிளிர்கின்றன. நதிநீரில் விழும் கட்டிடங்களின் பிம்பங்கள், தலைகீழாகத் தொங்கும் நகரம் போன்ற தோற்றப் பிழையைக் கொடுக்கின்றன. நதியின் மறுகரைக்கு நடுவே பாய்கிறது ஒரு அம்பு. இப்படி ஒரு அட்டைப் படம். புத்தர் …

  14. 'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல் 'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்…

  15. நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத் February 17, 2019 ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத…

  16. இன்னும் சொல்லாதவை - தெணியான் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளன…

  17. இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது. அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம். இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன். அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது. மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் . இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த …

    • 3 replies
    • 698 views
  18. இன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் 29-11-14 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலின் சிறப்புப்பிர…

  19. மட்டக்களப்பில் இன்று ஏழு நூல்கள் வெளியீடு… கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த ஏழு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அவர்களினால் எழுதப்பட்ட நூல்களை அச்சிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வைக்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏழு எழுத்தாளர்களின் ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல…

  20. எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…

  21. பயங்கரவாத்திற்கு எதிரான போர், இறுதி யுத்தம் என்றெல்லாம் இராசபக்சேக்களால் சித்தரிக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு முடிவடைந்துவிட, அதன் பின்நிகழ்வுகள் நீடித்துவரும் ஒன்றாக, நேற்றுவரை போராளிகளாகவும், மாவீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் இருந்து வந்தவர் மீதான போற்றிப்பாடல்கள் இன்று வசைகளாக மாறிவிட்டன. விடுதலையின் மீட்பர்களான தமிழ் ஆயுத தாரிகள் குறிப்பாக பெண் விடுதலைப் போராளிகள் களச்சாவடைந்தது பற்றியல்ல அவர்கள் சோதனை சாவடிகளில் வைத்து காட்டிக் கொடுத்தவர்களால் கைது செய்யப்பட்டதோ, சிங்களப்படையிடம் சரணடைந்த பின்னர் தடுப்பு முகாமுக்குள் வைக்கப்பட்டதன் பின்னரானவையே முக்கியத்துவம் பெறுவதாய் இருக்கின்றன. இவை ஒருபடித்தான அல்லது நிலைத்த பார்வை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தந்த…

  22. ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி… அழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள். ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித…

  23. நீங்களும் வாருங்கள். உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள் உறவுகளே.

  24. இமையத்தின் 'செல்லாத பணம்' இளங்கோ-டிசே வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம்அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும்நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால்என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால்முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக்கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன்போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர்நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.