Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியில் தமிழ் நு}லகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்நூலகத்திற்கு நூல்கள் கோரப்படுகிறது. நீங்கள் எழுதிய அல்லது உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் எழுதிய நூல்களையும் நூலகத்திற்கு தந்துதவலாம். அல்லது உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் இருப்பின் தந்துதவவும். தமிழ் உட்பட யேர்மன் ஆங்கில நூல்களும் வரவேற்கப்படுகின்றது. நன்றி.

    • 5 replies
    • 3k views
  2. படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி! முருகபூபதி நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பத…

  3. நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நாவலின் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்லீடர் இணையத்தில் தொடராக வெளியிட்டுவைக்கப்பட்ட நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் தமிழருவி மணியன் தலைமையிலும் தமிழகத்தில் வைகோ தலைமையிலும் நடைபெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 19 – 06 -2016 அன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இது நாவலின் முதற் பாகம் எனவும்இ இரண்டாம் பாகம் கிளிநொச்சியிலிருந்து இரணைப்பாலை வரையுமான போரை மையமாகவும், மூன்றாம் பாகம் இரணைப்பாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுமான போரை சித்திரிப்பதாக அமையும் எனவும் இந்த நாவ…

    • 0 replies
    • 769 views
  4. Started by ஏராளன்,

    நீலகண்டம் முக்கியமான தமிழ் நாவல்கள் நான் ஒரு அந்தரங்கமான பட்டியல் போட்டால் அதில் சுனில் கிருஷ்ணனின் “நீலகண்டம்” இருக்கும். தமிழில் ஊனம் குறித்து வந்துள்ள ஒரு சில நாவல்களில் பெற்றோரின் தரப்பில் இருந்து குழந்தையின் ஊனத்தைப் பற்றி பேசும் தனித்துவமான படைப்பு இது. மரபணு கோளாறு கொண்ட குழந்தை ஒன்றை தெரியாமல் தத்தெடுக்கும் ஒரு தம்பதியின் வாழ்வில் வருகிற சிக்கல்களும், அதை இருவரும் தத்தம் வழிகளில் கையாள முயல்வதுமே நாவலின் களம். ஒரு நாவலை வாசிக்கையில் அங்கிங்கே நம் கவனம் பிசகாமல் நமது மொத்த கவனமும், ஏதோ கண்ணுக்கு முன்னால் அது ரத்தமும் சதையுமாக நிகழ்வதைப் போல, அதிலேயே குவிந்திருக்க வேண்டும். நான் அப்படியான ஒரு ஈர்ப்புடன், கொந்தளிப்புடனே “நீலகண்…

  5. தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர் நூலுக்கான முன் குறிப்பு ——————————————– ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். சமூக ஆய்வியலில் அவரது ஈடுபாட்டிற்குரிய பல்வேறு விடயங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் இனத்துவம், சமூக அர…

  6. நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம் எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம் அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன். …

  7. நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவி…

  8. முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள…

  9. நூல் அறிமுகம்: 'ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ யதீந்திரா - –ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலர…

  10. நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன் காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி. வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்…

  11. ,கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல். தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயி…

  12. நூல் அறிமுகம்: முருகபூபதியின் "சொல்லத் தவறிய கதைகள்" இரண்டு தளங்களில் இயங்கும் படைப்பாளியின் வாழ்வியல் அனுபவங்களை பேசும் பதிவுகள் நான் மெல்பனில் வாழ்ந்த காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பது வருடங்களாக நண்பர் முருகபூபதி அவர்களை அறிந்திருக்கிறேன். அந்நாட்களிலிருந்து இன்று வரை அவரை ஒரு இலக்கியவாதியாகவே அறிந்தவன் நான். தொடர்ந்து அயராது எழுதிக் கொண்டிருக்கும் அவரின் பதிவுகளை நூல்களில் மட்டுமல்லாது இணையத்தளங்களிலும் இதழ்களிலும் நான் வாசித்திருக்கிறேன். பத்திரிகையாளனாகவும் இலக்கியவாதியாகவும் இரு ஆளுமை கொண்ட அவரது எழுத்துலக அனுபவங்கள், அவரது இலக்கியப்படைப்புகளுக்கு உதவுகின்றன. இந்தச் சொல்லத் தவறிய கதைகள் என்ற புனைவு சாரா இலக்கியத்திலும் இந்த அனுபவ முத்திரைக…

  13. நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல் ‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்…

  14. புகைப்பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட்ட பின்னர், அது தொடர்பான அனுபவங்களை முன்வைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்களை ஆலன் கார், ஜாக்குலின் ரோஜர்ஸ் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். நேரடி அனுபவங்கள் என்பதால் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகங்கள் இவை. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் அரிது. இந்நிலையில், ஷாஜஹான் எழுதியிருக்கும் ‘அவசியம்தானா ஆறாம் விரல்?’ புத்தகம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேறத் துடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஆண்டுகளாகப் புகைப்பழக்கத்தைத் தொடர்ந்துவந்த ஷாஜஹான் அதிலிருந்து விடுபட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக, ஃபேஸ்புக்கில் எழு…

    • 0 replies
    • 636 views
  15. நூல் விமர்சனம்: தமிழக மக்கள் வரலாறு - காலனிய வளர்ச்சிக் காலம் - புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை! மின்னம்பலம் முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி தமிழக வரலாற்றை ஆராய முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஆவணக் குறிப்புகள் தமிழக குறிப்புகளில் கிடைக்காத பல சான்றுகளை அளிக்கின்றன. மிக நீண்ட காலமாகவே ஐரோப்பியர்களது நாட்குறிப்பு எழுதும் பழக்கமும், தாங்கள் செல்கின்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைக்கும் பழக்கமும் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பண்டைய செய்திகளை அறிந்துகொள்ள நல்வாய்ப்புகளை வழங்குகின்றன. தமிழக ஆய்வுச் சூழலில் பொதுவாகவே வரலாற்றை ஆராய முற்படுபவர்கள் மிகப் பெரும்பாலும் ஐரோப்பியரது ஆய்வு குறிப்புகளில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஆய்வில…

    • 1 reply
    • 1.1k views
  16. " தலைவரின் சிந்தனைகள் " என்ற இந்த நூல் முதற்பதிப்பாக 1995 இலும் இரண்டாவது பதிப்பாக 2005 இலும் 72 பக்கங்களைக் கொண்ட சிறியதொரு கையடக்க நூலாக வெளிவந்தது. இதனை தமிழினம் வாசிப்பதனூடாகப் பல்வேறு நடைமுறைகளையும் இன்றைய சூழலையும் புரிந்து கொள்ளலாம் என்பது எனது பார்வையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை வாசித்தல் அவசியமானது.

    • 4 replies
    • 3.8k views
  17. ஆங்கிலத்துடனான ஆரம்ப அறிமுகம் உள்ளவர்களிலிருந்து, ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தும் நூல் இது. பல்வேறு இதழ்களில் பல்வேறு துறைகள் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் ஜி.எஸ். சுப்பிரமணியனின் நகைச்சுவை ததும்பும் நடை ஆங்கிலம் படிப்பதை இனிமையான அனுபவமாக்குகிறது. சுவாரஸ்யமான உதாரணங்கள், எளிய உதாரணங்கள், அழகான சித்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஆங்கிலத்தை இலகுவாகப் புரியவைக்கும் நூல் இது. Price: Rs.190.00 Price: Rs.320.00 http://tamil.thehindu.com/publications/befriending-the-english-language/article7698664.ece

    • 15 replies
    • 4.2k views
  18. நூல்களின் வெளியீடு நிவேதா உதயராயனின் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற இருக்கின்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இளையதம்பி தயானந்தா விமர்சகர்கள்: திரு. கந்தையா ராஜமனோகரன் திரு. பசில் அலி திரு.யமுனா ராஜேந்திரன் திருமதி. மாதவி சிவசீலன் திரு. தினேஷ் திரு. சாம் பிரதீபன் மரியநாயகம் திரு. முல்லை அமுதன் வெளியிட்டு வைப்பவர் : திரு பத்மநாப ஐயர் காலம் : 12 .07. 2014 – மாலை 5 மணி இடம் : 76 A238,Kingston Road, London, SW19 1LA South Wimbildon tube ஸ்டேஷன் அருகாமையில் அனைவரையும் அன்புடன் அழை…

  19. Date: 09/02/14 In: Books, News திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் கவிஞர் நெற்கொழுதாசனின் “ரகசியத்தின் நாக்குகள்” நூல்வெளியீட்டு விழா , கவிஞர் மற்றும் அரசியில் ஆய்வாளர் நிலாந்தனின் தலைமையில் நடைபெற்றது. இலக்குவிய குவிய கீதம் அறிமுகத்தோடு, புத்தக வெளியீடு நடைபெற்றது. முதல் பிரதியினை நிலாந்தன் வழங்க மீராபாரதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வரவேற்புரையை ஜே.வினோத் அவர்கள் வழங்கினார்கள். தலமையுரையினை வழங்கிய நிலாந்தன் அவர்கள், நெற்கொழுதாசனின் கவி ஆளுமைகள் பற்றியும், இலகுவான எழுத்துநடை பற்றியும் சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தார். தொடர்ந்து வெளியீட்டுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். “இளம் கவிஞர்கள் அதிகம் வாசிக்கவேண்ட…

    • 31 replies
    • 2.7k views
  20. Started by கிருபன்,

    நேரம் ஆர். அபிலாஷ் நண்பர் விநாயக முருகன் ஒருமுறை என்னிடம் முழுநேர எழுத்தாளனாகும் தன் விருப்பத்தை கூறினார். அவர் இப்போது மென்பொருள் துறையில் இருக்கிறார். தினமும் எழுதும் பொருட்டு இரவெல்லாம் விழிக்க வேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு அவரது பகல் நேரத்தை முழுக்க வேலை உறிஞ்சிக் கொள்கிறது. இரவுத்தூக்கத்தை கடன் வாங்கி இருநாவல்களை எழுதி விட்டார். ஆனால் தனது ஒரு நாளின் முழுநேரத்தையும் எழுத்துக்கு செலவழிக்க ஆசை என்றவர் அதற்காய் எதிர்காலத்தை திட்டமிடுவதாய் கூறினார். எனக்கு அப்படி ஒருவர் முழுநேர எழுத்தாளனாவது உண்மையில் பயன் தருமா என ஐயம் தோன்றியது. மேற்கில் எழுத்தாளர்கள், குறிப்பாய் வெற்றி பெற்ற வணிக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், முழுநேர எழுத்தாளர்களாய் தான் இருக்கிறார்கள். அவர்களுக்…

    • 1 reply
    • 1.7k views
  21. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா நிறைவை ஒட்டி, கொரிய அரசாங்கம், சாகித்ய அகாடமியின் பரிந்துரைகள் வழியாக இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு 'தாகூர் விருது’ வழங்கியது. அந்த எட்டு எழுத்தாளர்களில், நம் எஸ்.ராமகிருஷ் ணனும் ஒருவர். 'யாமம்’ நூலுக்காக விருது பெற்றுள்ள எஸ்.ரா, தென்னிந்திய மொழிகளில் தாகூர் விருது பெற்றுள்ள ஒரே எழுத்தாளர்! ''விருது பெற்ற மனநிலை குறித்தும் விருதுகளோடு எழும் சர்ச்சைகள் குறித்தும் சொல்லுங்களேன்?'' ''ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப் பவனுக்கு குளூகோஸ் தருவதைப்போலத் தான் இந்த விருதுகள். மேலும் ஓடத் தூண்டும் என்பதற்கான குளூகோஸே தவிர, 'ஓடியது போதும், ஓய்வெடுங்கள்’ என்பதற்கான சமிக்ஞை அல்ல விருதுகள். நூற்றாண்டுகளைக…

    • 0 replies
    • 1.1k views
  22. தமிழ் எழுத்துலகில் மிக முக்கிய கவனம் பெறும் படைப்பாளி ஜெயமோகன். இலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் மிகுந்த வீச்சுடன் இயங்கி வருகிறார். கதா, சம்ஸ்கிருதி சம்மான், அகிலன் நினைவு விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருகிறார். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இலக்கிய இதழாக விளங்கிய ‘சொல் புதிது’ சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவருடைய ‘ரப்பர்’, ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘ஏழாம் உலகம்’, ‘கொற்றவை’, ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’, ‘கன்னியாகுமரி’ போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோயிலில் வசித்து வரும் ஜெயமோகன், தொலைபேசித் துறையில் பணியாற்றி வருகிறார். ‘கஸ்தூரிமான்’, ‘நான் கடவுள்…

  23. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இணையத்தில் தொடர்ந்து எழுத வந்தபோது சக இணைய எழுத்தாளர்கள் மட்டுமே வழிகாட்ட இருந்தார்கள். இங்கே அப்போது பெரிய எழுத்தாளர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். இணையம் ஒரு மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. அப்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வந்தவர்களில் முக்கியமானவர் அய்யா வண்ணதாசன். கவிதையைத் தேடி தொலைதூரம் போகிறவர் அல்ல அவர். அந்நிய மனிதனின் கைக்குட்டையை நுனி விரலால் பற்றி குப்பைத்தொட்டியில் போடுவோர் நிறைந்த உலகில், பார்க்க வந்த ஒருவர் மேசையில் மறந்து வைத்துவிட்ட கைக்குட்டை காற்று வாங்கும் சுதந்திரத்தை கவிதையாக்கி சேமிக்கிறார். குளத்தின் சலன வட்டங்களை சுருட்டிக் கூட்டில் வைத்து நகரும் நத்தையை நான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்று கற்பனை செய்ய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.