நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
நேற்று 06-04-2014 யாழ் கருத்துக்கள உறவும் என்னால் தம்பி என பாசத்துடன் அழைக்கப்படுபவருமான நெற்கொழுதாசனின் அழைப்புக்கமைய அவரது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். எனக்கு வேறு ஒரு கூட்டமும் இருந்ததை அவரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். நான்கு மணிக்கு விழா ஆரம்பிக்கும் எனக்குறிப்பிட்டதால் சரியாக நான்கு மணிக்கே அங்கு சென்றிருந்தேன். அவருடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அவருடைய நண்பரே பதிலளித்தார் மண்டப இடத்தை சரியாக வழி காட்டினார் வாசலில் வந்ததும் ஒரு இளைஞர் நின்றிருந்தார் அவரது படபடப்பில் இவர் தான் விழா நாயகனாக இருக்கும் என என்னை குகதாசன் என அறிமுகம் செய்தேன். ஆனால் அவர் என்னை இனம் காணவில்லை அவரது படபடப்பில் நான் நேரத்தை எடுக்காது உள…
-
- 26 replies
- 2.1k views
-
-
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…
-
- 0 replies
- 744 views
-
-
ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை இன்றும் தொடர்கிறது. யாழ்ப்பாண நூலக எரிப்பும், வன்முறைகளும், 1983-லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்…
-
- 0 replies
- 863 views
-
-
.http://www.projectmadurai.org/pmworks.html சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய தமிழ் காப்பியங்களுடன் ஏனையவை. ஒரே இடத்தில். மொத்தம்: 559 பொன்னியின் செல்வன் தமிழ் (169) , ஆங்கிலம் (278) கூட உள்ளது. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0169_01_01.pdf http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0278_01.pdf எதையோ தேடப் போக.... கிடைத்தது. http://www.projectmadurai.org/pmworks.html
-
- 1 reply
- 521 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின்... நினைவேந்தலும் , நூல் வெளியீடும்! யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது. அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்…
-
- 0 replies
- 428 views
-
-
84 இல் எனது 12 ஆம் வயதில் நான் ஓடத் தொடங்கியது இப்போது சில வருடங்களாகத்தான் ஓய்திருக்கிறேன்.எனது ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களில் தீவிரமாக இருந்திருக்கிறேன்.எனது 92 தொடக்கம் 93 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. கொழும்பு எனக்கு ஏற்கனவே பழக்கமான இடந்தான் (90 இல் இந்துக் கல்லூரியில் சில மாதம் படித்திருந்தேன்) என்றாலும் எதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது பழம்தமிழ் புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் தோண்றியது. மிக நல்ல புத்தகங்களைச் சேர்த்தேன்.நான் நோர்வேக்கு இடம்பெயரும் போது அனைத்து புத்தகங்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தென். ஆனால் பல பொதிகள் வழியில் தொலைந்து போயின. எனது உ…
-
- 8 replies
- 4.9k views
-
-
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களைக் கையாளவும் பெற்றோர்களுக்குப் பயன் படக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடாக வந்துள்ளது இந்த நூல். எளிமையும் ஆழமும் குழந்தை வளர்ப்பில் எழக்கூடிய பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், நோய்கள், அவற்றுக்கான தடுப்பு முறைகள், முதலுதவிகள், அந்த வயதுக்குரிய குழந்தைகளின் கல்வி, உளவியல், கற்றல் முறைகள் எனப் பல்வேறுபட்ட விஷயங்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்,மனம், சமூகப் பண்பு, கற்றல் திறன்கள், ஆளுமை என அனைத்திலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த உதவும் வகையில் இந்தக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முரண்டுபிடித்தல், தாக்கும் குணம் உள்ளிட்ட நடத்தைகளுக்கான காரணங்களையும் விவாதித்துள்ளார். கு…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று முக்கிய நூல்களின் அறிமுக நிகழ்வு! தொகுப்பாசிரியர்- தோழர் ரகுமான் ஜான் காலம்- 17 ஆகஸ்ட் 19 . சனி -மாலை 3 மணி இடம்- Trinity Centre Eastham -London ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டம் அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் அரசியல் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவுடன் செயற்பட்டவர். விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி போன்ற பல அமைப்புகளினூடாகத் தொடர்ந்த இவரது அரசியல் பயணத்தில் கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்தவர். உயிர்ப்பு, வியூகம் ஆகிய கோட்பாட்டு இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தொடர்ச்சியாக அர்சியல் உ…
-
- 0 replies
- 822 views
-
-
மழை vs வெயில், லிச்சி vs காபி, ஜன்னல் மலர் vs இறைவி... சென்னை புத்தகக் கண்காட்சி live! பொறுத்துப்பொறுத்துப்பார்த்து இந்த வருடம் புத்தகங்களை வாங்க புத்தக கண்காட்சிக்கு மழையும் படையெடுத்துவந்துவிட்டது. “ப்பா.. என்னா வெயில்” என்று வாசகர்கள் குரலில் துவங்கிய சென்னை 39வது புத்தகக் கண்காட்சி, துவங்கிய நான்கைந்து நாட்களில்‘ஐயையோ மழை.. மழை’ என்று பதிப்பாளர்கள் அலறியடித்து புத்தகங்களை மழையிலிருந்து காப்பாற்றப் போராடுவது என்று மாறிவிட்டதில் அப்செட்டில் இருக்கிறார்கள் பல பதிப்பாளர்கள். கடும் மழையினால் ஸ்டாலுக்குள் ஷவர் போலப் பொழிந்த மழை, உடைந்து விழுந்த மரப்பாலம் என்று பல தடைகளுக்கிடையே தட்டுத்தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்னும் …
-
- 0 replies
- 511 views
-
-
ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்? ஜெயமோகன் ஓவியம்: ஷண்முகவேல் காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின் தரிசனம் என்கிறோம். கேரளத்திலுள்ள ஆலயங்களில் மையத்தில் குடம் என்ற அமைப்பு உண்டு. எல்லா உத்தரங்களும் ஒன்றுசேரும் இடம். குடம்பூட்டுவது பெருந்தச்சன் செய்யவேண்டிய பணி. காவியம் என்பது ஒரு சமூகத்தின் குடம். ஒருசமூகம் என்பது மக்கள் சேர்ந்து ஒன்றாக வாழும்போது உருவாவது. அவர்கள் சேர்ந்து சிந்திக்கும்போது உருவாவது பண்பாடு. மக்கள் கதைகளினூடாக படிமங்களினூடாகச் சிந்திக்கிறார்கள். அ…
-
- 1 reply
- 742 views
-
-
கவிதை தன் மொழியையும் வடிவத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால், கவிஞனையும் இயற்கையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இயற்கையின் பிரம்மாண்ட அழகும், களங்கமற்ற அதன் அமைதியும் காலங்காலமாகப் பாடுபொருளாகி வந்தாலும் இயற்கையைப் பாடுவதில் ஜென் கவிதைகள் புதிய வாசலைத் திறந்துவிட்டவை. பழநிபாரதியின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஜென் கவிதைகளுக்குரிய கூறுகளைக் கொண்டிருப்பவை. பழநிபாரதியின் இலவம்பஞ்சு மொழி தமிழ் வாசகர்களை அழகான அனுபவத்துக்கு அழைத்துச்செல்கின்றன. தமிழ் வாசிப்புச் சூழலில் அரிதாகிவரும் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான நிலப்பரப்பிலிருந்து விரியும் காட்சிகள் வழியே ‘மெய்தேடல்’ உணர்வை முதல் வாசிப்பிலேயே சிலிர்ப்புடன் இந்தக் …
-
- 0 replies
- 684 views
-
-
சென்னையில் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வெளியீடு! December 31, 2018 ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெறுகின்றது. சென்னை, கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பலஸில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இன்று இரவு இடம்பெறும் புத்தக விழாவில் வெளியிடப்படும் இந்த நாவல் 2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இயக்குனர் கவிதா பாரதி தலைமையில் நடைபெறும் சிறப்பு வருகையாளராக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கலந்து கொள்கிறார். இதேவேளை இந்த நிகழ்வில், இயக்குனர் மீரா கதிரவன், தமிழக கவிஞர் மண்குதிரை, ஊடவியலாளர் செல்வ புவியரசன், எழு…
-
- 0 replies
- 555 views
-
-
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம். ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
Chai Time at Cinnamon Gardens - தெய்வீகன் ஈழத்தமிழ் பின்னணிகொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் எழுதிய "Chai Time at Cinnamon Gardens" நாவல் ஆஸ்திரேலியாவின் இலக்கியத்துக்கான Miles Franklin அதி உயர் விருதினை வென்றிருக்கிறது. சிட்னியில் சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சங்கரி எழுதிய மூன்றாவது நாவல் இதுவாகும். Miles Franklin விருதுக்குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து இந்த வெற்றிச் செய்தியை அறிவித்தபோது, நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, சங்கரி தனது வெற்றியை உணர்ந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. Miles Franklin விருதினை வெற்றிகொண்டுள்ள சங்கரிக்கு 60 ஆயிரம் டொலர் பணப்பொதி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தமிழ் இந்துவின…
-
- 1 reply
- 455 views
-
-
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது. யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக் கிடைத்தது. எமது முதல் அறிமுகம் ஒரு சர்ச்சையில் நாம் சிக்கும் போது எழுதிய பெரும் மடல் ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்தது. அத்தொடர்பிற்கு எமது கவிக்கிழவனாக இருந்த யாதவண்ணா தான் காரணமாக இருந்தார். அன்றொரு நாள் ஒரு மெயில் வந்திருந்தது “தம்பி விரைவில் வெளிநாடு ஒன்றிலிருந்து ஊர் வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்“ என்று இருந்தது. அத்துடன் தானும் வன்னியின் இறுதிப் போர் வரை அங்கே இருந்த ஒர…
-
- 1 reply
- 5.8k views
-
-
போக முடியாமல் இருக்கு ,அங்கு வேறு ஒரு விடயமும் இருக்கு என்று கேள்வி .
-
- 2 replies
- 943 views
-
-
இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன? எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக “ஒரு பேப்பர்’ பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அளவு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் ” நேற்றுப்போல இருக்கிறது” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இதுவும் எனது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலைப் போலவே வடலி வெளியீடாக வருகிறது. ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்.. விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓட…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில் சுயாந்தன் June 27, 2018 அண்மையில் அரச பணிக்கான பயிற்சியின் போது எங்களைப் பற்றிய சுய அறிமுகம் ஒன்று செய்யவேண்டி ஏற்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது கட்டம் வந்ததும் எனது வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டு பேர் முக்கியமானவர்கள், ஒருவர் எனது பழைய காதலி. மற்றவர் ஜெயமோகன் என்று கூறினேன். பழைய காதலி மூலம் பெண்களைப் புரிந்து கொள்ளவும் ஜெயமோகன் மூலம் இலக்கியத்தையும், வாழ்க்கையையும், வெறுமையையும் அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டுள்ளேன் என்றும் கூறினேன். பலருக்கு ஜெயமோகன் என்பவர் யார் என்று விளக்கம் கூறவேண்டிய துரதிஷ்டம் அப்போது உருவானது. அவரை ஒரு படைப்பாளி…
-
- 0 replies
- 454 views
-
-
[size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size] வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுத…
-
- 4 replies
- 798 views
-
-
[size=5]பாலைகள் மீது பறக்கும் துயரப்பறவைகள்[/size] [size=4] -இரவியின் 'பாலைகள்நூறு' கதைகள்மீதானவாசிப்பு-[/size] டிசே. தமிழன் 1. வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் த…
-
- 0 replies
- 564 views
-
-
Book Description Publication Date: February 22, 2013 The tropical island of Sri Lanka is a paradise for tourists, but in 2009 it became a hell for its Tamil minority, as decades of civil war between the Tamil Tiger guerrillas and the government reached its bloody climax. Caught in the crossfire were hundreds of thousands of schoolchildren, doctors, farmers, fishermen, nuns and other civilians. And the government ensured through a strict media blackout that the world was unaware of their suffering. Now, a UN enquiry has called for war-crimes investigations. Those crimes are recounted here to the wider world for the first time in sobering, shattering detail. http://www…
-
- 0 replies
- 699 views
-
-
சாட்சியின் மீதி? த. அகிலன் ‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’ சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின் இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால் அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி, சந்தித்த வேளையில் கவிதை குறித்தும், வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து, நிறையப் புத்தகங்களைத் தந்து, இலக்கிய நண்பர்களை அ…
-
- 1 reply
- 873 views
-
-
எமது சூழலியல் எனும் பெரும் பரப்பை காரணகாரியங்கள் ஊடாக உற்று நோக்கும் போது காலநிலைமாற்றம்,விவசாயப்பயிர்செய்கை,சுற்றுலாத்துறை,நீர்,வளி மாசாக்கம்,மண்ணியல் என்பன பாரிய அளவில் கோடிடப்பட்டு பார்க்கப்பட வேண்டியவை. அந்தவகையில் உலகப்போக்கோடு ஒத்து மாறுதல் அடைகின்ற காலநிலைமாற்றம் எம்சூழலிலும் செல்வாக்கு செலுத்துகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.அதனை நடைமுறையிலும் எம் சமூகம் கண்ணூடு கண்டுகொண்டிருக்கின்றது.இத்தகைய காலநிலை மாற்றத்திற்கு நாமும் பங்குதாரர்கள் என்பதில் மாற்றம் இல்லை.துமி எனும் பெரும் தேடல் செய்திப்பரப்பில் ஆராய்ந்திருக்கிறோம் வாசித்து பாருங்கள். வெளிவந்திருக்கிறது துமி மின்னிதழ் 15.0 இணையதளத்தில் சென்று பார்வையிட https://www.thumi.org …
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’ குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். பீட்டர் துரைராஜ் பீட்டர் துரைராஜ் இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், அரசியல்- சமூகப் பொருளாதார- சமத்துவ மேம்பாட்டிற்காகவும் ,ஒரு தேசம் ஒன்றை நிர்மாணம் செய்வதற்கான கட்டுமானங்களை நடைமுறைப்படுத்தி தன்வாழ்வை எமக்காக அர்பணித்து வாழ்ந்த டேவிட் ஐயா அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ம் திகதி ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து பிற்பகல் 8 மணிவரை பாரீசில் பின்வரும் முகவரியில் ந டைபெற் இருக்கிறது. இடம்: SALLE SANT BRUNO 9 , RUE SANT BRUNO 75018 PARIS Métro : LA CHAPELLE இந் நிகழ்வில் பி.ஏ காதர் அவர்களின் ‘இலங்கை தேசிய இனப் பிரச்சனையும் டேவிட் ஐயாவும்’ என்ற தலைப்பிலான உரையும், ‘அர்ப்பண வாழ்வில் வலிசுமந…
-
- 0 replies
- 422 views
-