நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி. 2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள். ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம். கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் : https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு ந…
-
- 3 replies
- 643 views
-
-
எப்போது விடுதலை? July 26, 2020 / த.ராஜன் ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ …
-
- 1 reply
- 796 views
-
-
"வெந்து தணியாத பூமி" இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை (26.03.2022) அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரு. வரதன் கிருஸ்ணா அவர்கள் எழுதிய "வெந்து தணியாத பூமி" புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த வரதன் கிருஸ்ணா அவர்கள் ஈழப் புரட்சி அமைப்பில் (Eelam revolutionary organisation - EROS) இணைந்து செயல்பட்டவர். தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். மலையக மக்கள் வாழ்வு, அரசியல் மற்றும் தமது ஈழப் போராட்ட அனுபவங்கள் குறித்து மிக ஆழமான பார்வையையும், திறனாய்வுகளையும் வரதன் கிருஸ்ணா இந்நூலில் வெளிக்கொண்டு வந்துள்ளார். சமாதானத்திற்கான கனேடியர்கள் ஸ்ரீலங்கா சார்வு வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இலண்டன…
-
- 9 replies
- 764 views
-
-
நீதித் துறையில் பயணித்த ஒரு போராளியின் வாழ்க்கை! பீட்டர் துரைராஜ் 22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார். மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவ…
-
- 0 replies
- 590 views
-
-
கதைப்போம் வா. * பணிக்கர் பேத்தி* எழுத்தாளர் ஷர்மிளா செய்யத் எழுதிய நாவல் பற்றிய விமர்சனம். முஸ்லீம் சமூகத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்வினூடு இலங்கை அரசியலையும் பேசும் நாவல்.
-
- 5 replies
- 657 views
-
-
நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் - யுவால் ஹராரியை முன்வைத்து எந்த ஒரு திருவிழாவிலும், அதன் உற்சாகத்திற்கு மத்தியில் சிலரை நாம் நிச்சயம் காணவேண்டியிருக்கும், ஒரு குழந்தைக்கு பஞ்சுமிட்டாய்காரனும் , பலூன்காரனும் போல. பெரியவர்களை குறிவைத்து திருவிழா தோறும் செல்பவர்கள், நிமித்திகர்கள். கிளிஜோசியம் , கைரேகை , எலிஜோசியம், சோளி உருட்டி ஜாதகம் கணிப்பவர், குடுகுடுப்பைக்காரர். என, அது ஒரு முக்கியமான குழு. தம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே தெரிந்தவற்றையோ, அல்லது உண்மை என நம்பாவிட்டாலும் வருங்காலத்தை பற்றியோ , அல்லது நடப்பு சிக்கலுக்கான பரிகாரம் என, எதோ வடிவில் மனிதர்களுக்கு நிமித்திகர்கள் சொல்லால் கேட்பதில் அலாதி விருப்பம் இருக்கவே செய…
-
- 0 replies
- 440 views
-
-
சாந்தனின் 'சித்தன் சரிதம்' இளங்கோ-டிசே சாந்தன், எங்கள் வீட்டு நூலகத்திலிருந்த 'ஒரே ஒரு ஊரிலே' என்ற நூலின் மூலந்தான் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். அப்போது எனக்கு 11/12 வயதாகியிருக்கக் கூடும். எனவே அந்த வயதுக்குரிய விளங்கா வாசிப்பினூடாக அவரைக் கொஞ்சம் வாசித்திருந்தேன். பொறியியலாளராக கட்டுப்பெத்தையில் கல்வி கற்று, கொழும்பில் வேலையும் செய்த சாந்தன் 1977 இனக்கலவரத்தோடு யாழுக்குத் திரும்பினார். அதன்பிறகு யாழை விட்டு இன்றும் வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றபோதும், அன்றைய சோவியத்து ஒன்றியம், கென்யா போன்றவற்றுக்குப் பயணித்திருக்கின்றார். அந்தப் பயண அனுபவங்களை விரிவாக எழுதி நூல்களாகவும் வெளியிட்டிருக்கின்றார். 'சித்தன் சரிதம்' என்பது நாவலெனச் சொ…
-
- 0 replies
- 541 views
-
-
நல்ல பல தகவல்கள் உள்ளது. என்ர தலைமுறை கண்டிபபாக இதை கேட்டறிய வேண்டும். இதன் படி நாம் விழிப்பாக கவனமாக இருத்தல் வேண்டும். கன நாட்களாக இந்த 'நந்திக்கடல் கோட்பாடு' என்ற சொல்லையே கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் அதை முற்றாக அறிந்தேன். இதில் சொல்லப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் விழிப்பாக செயல்பட்டு எம்மீதான சித்தாந்த உளவியல் போரை நாம் முறியடிக்க வேண்டும்.
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
நீங்களும் வாருங்கள். உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள் உறவுகளே.
-
- 0 replies
- 684 views
-
-
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது. அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம். இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன். அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது. மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் . இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த …
-
- 3 replies
- 694 views
-
-
அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை By Ravindramoorthy -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- தேசியக் கலைஞர் சீ.கோபாலசிங்கம் அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை மட்டக்களப்புத் தேசத்தின் முதன்மையான கல்வியாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள். அவருடன் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. நான் 1957ல் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரிக்குச் சென்றபோது அவர் 9ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருடன் ஏற்பட்ட அண்ணன் தம்பி எனும் ம…
-
- 0 replies
- 606 views
-
-
-
- 1 reply
- 449 views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு December 1, 2021 வடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மன்னாரில் நடை பெறவுள்ளது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான எதிர் வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற உள்ளது. மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி ஏ.சகிலா பானு கலந்து கொள்ளவுள்ளார். …
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையில் சிங்களவர் நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி இலங்கையில் சிங்களவர் - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களுள் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வ…
-
- 1 reply
- 3k views
-
-
-
- 0 replies
- 491 views
-
-
அனுக் அருட்பிரகாசத்தின் 'A Passage North' இளங்கோ-டிசே I எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதைகளைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப்போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பி எழுதிப்பார்த்ததால்தான் அனுக் அருட்பிரகாசத்தின் 'வடக்கிற்கான பயணம்' (A Passage North) கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத 'மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை (short list) அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது. இந்த ந…
-
- 0 replies
- 771 views
-
-
–மலையகத் தமிழர்களின் போராட்டங்களை எடுத்துக்கூறும் ”வெந்து தணியாத பூமி” -அ.நிக்ஸன்- இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறா…
-
- 0 replies
- 343 views
-
-
அஜித் போயகொடவின் ‘நீண்ட காத்திருப்பு’ July 26, 2021 “இது என் கதை. நடந்தபடியே சொன்ன கதை” என ‘நீண்ட காத்திருப்பு’ நூலின் ஆசிரியர் ரியர் கொமடோர் அஜித் போய கொட கூறியபடி ஒரு கதையைச் சொல்வ தன் மூலம் வரலாறொன்றின் பக்கங்க ளைத் தேடலுக்கு உட்படுத்துகிறார். நூலை வாசிப்போரையும் தேடலில் ஈடுபட வைக்கி றார். ‘வடலி’யின் வெளியீடாக வரும் இந் நூலின் கதையை நூலாசிரியர் சொல்லக் கேட்டு, அரங்க இயக்குநரும், பதிப்பாசிரி யருமான சுனிலா கலப்பதி எழுதியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்பு தேவாவுடன் இணை ந்து சத்தியதேவனும், கௌரிபாலனும் செய் துள்ளனர். இந்த நூல் இலங்கைத் தீவிற்குள் தீர்க்கப்பட வேண்டிய அரசியலைப் பேசுவ தற்கான தேடலை ஏற்படுத்துகின்றது. நூலாசிரியர் பணி ஓய்வு பெற்ற கடற்பட…
-
- 1 reply
- 656 views
-
-
ஓராயிரம் சூரியன்கள்! "மரியம் தன் கடைசி இருபது அடிகளை எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடரும் இளம் தலிபான் ஆயுத தாரியின் நிழல் அவளோடு கூடத் தொடர்ந்தது. இவ்வளவு முயன்றும் இப்படித் தான் என் வாழ்வு முடியப் போகிறதா என்ற கேள்வியும் அவளுள் தொடர்ந்து வந்தது. ஆனால், ஒரு சிறு நல்ல காரியமாவது செய்து விட்ட திருப்தியோடு தான் போகிறேன் என்ற எண்ணமும் ஒரு மன மூலையில் இருந்தது!" (வரிக்கு வரி மொழிபெயர்ப்பல்ல) ஏற்கனவே நூற்றோட்டம் பகுதியில் நாம் பார்த்த பட்டமோடியை எழுதிய காலித் ஹொசைனியின் இன்னொரு படைப்பு இந்த "ஓராயிரம் சூரியன்கள்" நாவல். நாவலின் பின்புலம் கம்யூனிச பொம்மை ஆட்சியை ரஷ்யா ஏற்படுத்தி விட்ட பின்னர், தலிபான் உட்பட்ட யுத்தப் பிரபுக்களின் குழுக்கள் மீண்…
-
- 0 replies
- 832 views
-
-
ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள London Tamil Book Center இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். Mobile / WhatsApp : +44 7817262980
-
- 0 replies
- 502 views
-
-
தரவிறக்கம் https://noolaham.org/wiki/index.php/ஈழத்தமிழர்_இறைமை சில நூல்கள் அவசரத்துக்கு தேடினால் கிடைக்காது யாராவது இரவல் வாங்கி மறந்து விட்டு விடுவார்கள் அல்லது சேமிப்பு பகுதியில் எங்கு என்ன பெயரில் வைத்தோம் என்று தேட வேண்டி வந்திடும் இங்கு பதிவது இலகுவாக குறிப்புக்கள் எடுக்க உதவும் என எண்ணுகிறேன் நன்றி .
-
- 0 replies
- 636 views
-
-
இந்நூலின் ஒலிவடிவம் கீழ்க்கண்ட கொழுவியினுள் உள்ளது. சொடுக்கி கேட்கவும் http://pulikalinkuralradio.com/archives/label/audio-book
-
- 0 replies
- 966 views
-
-
“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “இலங்கை மண்ணின் தோற்றோர்” எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசு, பொலிஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள குறித்த நூல் உலகின் பிரபல்யமான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரபல சிங்கள எழுத்தாளரான புண்ணியகாந்தி விஜயநாயக்கவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “காத்திருக்கும் பூமி” எனும் நூலினை விமர்சித்து எழுதப்பட்ட இந் நூல் சமூக முன்னேற்றத்திற்காக இலங்கை மக்கள் எதிர் கொண்ட தனிமனித மற்றும் சமூக பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இலங…
-
- 0 replies
- 441 views
-
-
மயூரனின் கவிதைகள் நல்ல கவிதைகளுக்கான நம்பிக்கை! – ஓர் நூலாய்வு – கனகரவி 47 Views கவிஞர் இணுவையூர் மயூரனின் முதல் படைப்பாக “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்“ கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. இவரின் கவிதைகள் ஈழத்து வாழ்வியலையும் வலிகளையும் பேசுகின்றன. கவிதைகள் மனித மனங்களில் காட்சிகளை உருவாக்கும் சிந்தனையை மேம்படுத்தும் சக்தி மிக்கவையாகவே நான் பார்க்கிறேன். தற்காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏராளம் கவிதைகள் படைக்கப்படுகின்றன. மரபுக் கவிதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் சிலவேளை மரபை விலக்கிவிட இயலாதவையாகவும் கவிதைகளை நாம் காணலாம். தொடர் வாசிப்பில்லாதோர் கவிதைகளை கண்டு கொள்வதில்லை என்பது போல் கவிதைகளைப் படைப்போரும் சிந்தனையைத…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழ்நிலத்தை இழப்பது ஆர். அபிலாஷ் அ. முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலில் விஸா இல்லாமல் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர முயற்சிக்கும் ஈழ அகதிகளை ஒரு முகவர் உக்ரேனில் ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவதில், தூங்குவது, ஒரே தமிழ்ப் படத்தை வீடியோ கேஸட்டில் திரும்பத் திரும்பப் பார்ப்பது என கழிக்கிறார்கள். அவர்களுடைய சமையலுக்கான கறி, மீன், காய்கனி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பொறுப்பை கேயார் என்பவர் மேற்கொள்கிறார். துபாயில் வேலை செய்து அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு உக்ரெய்ன் வந்த புஷ்பநாதன் என்பவர் தன்னை வீரசைவ வேளாளர், ஊரில் பெரிய குடும்பம் என பெருமைப்ப…
-
- 0 replies
- 372 views
-