மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
குண்டலினி சக்தி குண்டலினி சக்தி குண்டலினி யோகத்தை உணர்ந்து அதன் அளவற்ற ஆற்றல் ஆன பிரபையில் மூழ்கி அந்த ஜோதியில் தானும் ஜோதி மாயம் ஆகி விட்டவர்களே சித்தர்கள்.சித்தர்கள் பலரும் இந்த குண்டலினி சக்தியை வாலை வழிபாடு,வலை பூஜை, ஆயி பூஜை என்றும் கூறுவார். இந்த வலை பெண் சோதி ரூபமுடையவள், சுடர் விட கூடியவள், பிரகாசிப்பவள். குண்டலினி சக்தி என்பது முதுகுத் தண்டின் கீழே தான் இருக்கிறது என்பது உண்மையானது இல்லை. மூலாதாரம் என்பது மல வாசலாகிய குதத்துக்கும் மூத்திர வாசலாகிய நீர்பைக்கும் மத்தியில் உள்ளது . அங்கே தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு சுருண்டு மண்டல மிட்டபடியாக தூங்கி கொண்டிருக்கிறது.அப்படி தூங்கி கொண்டிருக்கும் அந்த குண்டலினி பாம்பை யோக சக்தியைக் கொண்டு மூலாத…
-
- 9 replies
- 18.6k views
-
-
இந்தக்காணொலியை முழுமையாகப்பாருங்கள். பல செய்திகள் உள்ளன. மூலம்: The Ellen DeGeneres Show
-
- 4 replies
- 1.7k views
-
-
மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார். அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும். இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்பவற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- குருவும் சீடரும் மாசி 1882 "ம" முதல் முறையாக குருவை சந்தித்தல் அது ஒரு இளவேனிற்கால ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ இராமகிரு…
-
- 42 replies
- 13.6k views
-
-
பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகா பலசாலியான பீமன், எவ்வளவோ முயற்சி செய்தும், அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. அந்தப் பாம்பின் வலிமையை கண்ட பீமன், "சிரேஷ்டரே... எதற்காக என்னை பிடித்தாய். நான் பாண்டவர்களில் ஒருவனான பீமசேனன். என்னை இப்படி கட்டக்கூடிய நீ, யார்? வர பலத்தினாலோ, தபோ பலத்தினாலோ இப்படி என்னை கட்டியிருக்கிறாயா? எதனால் என்…
-
- 1 reply
- 1k views
-
-
[size=6]வீரத் துறவியும் வீரக் கவிஞரும்[/size] [size=4]என்றும் நம் நினைவில் நிற்கும் தினங்களில் ஒன்று செப்டெம்பர் 11. மகாகவி பாரதியார் அமரரான தினம் அது. இந்த ஆண்டு பாரதியார் நினைவு தினத்துடன் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவும் சென்னையில் கொண்டாடப்படுகிறது. [/size] [size=4]சிகாகோவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர். மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் எப்படி வேறுபடுகிறது என்பதைத் தன் அருமையான பேச்சின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். [/size] [size=4]அதற்கு முன்பு வெளிநாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்த இந்து சமயச் செய்திகள், பக்தி மற்றும் சம்பிரதாயங்கள் சார்ந்தவை. விவேகானந்தர்…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=2] [size=4]போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.[/size][/size] [size=2] [size=4]எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.[/size][/size] [size=2] [siz…
-
- 18 replies
- 2.3k views
-
-
எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பேரில் விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள். ஏனெனில், வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட இழிகுல மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள்,நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ அச்சமூகங்களுக்…
-
- 0 replies
- 672 views
-
-
[size=5]சுவாமி விபுலானந்தர் [/size] http://upload.wikimedia.org/wikipedia/ta/f/fe/Vipulanandar.jpg சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. Cambridge Senior பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், அ…
-
- 0 replies
- 3.2k views
-
-
[size=4]இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடினால்[/size] [size=3][size=4]நாளை உன்னைத் தேடிவரும் இன்பங்களை யார் வரவேற்பது?[/size][/size] [size=4]உன் கண்கள் நேர்மறையாக இருந்தால் உனக்கு இந்த உலகத்தைப் பிடிக்கும்![/size] [size=3][size=4] உன் நாக்கு நேர்மறையாக இருந்தால் இந்த உலகத்துக்கு உன்னைப் பிடிக்கும்![/size][/size] [size=4]எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையில் நமக்கு இல்லை. ஆனால் நம் நல்ல பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தையே மாற்றும் ஆற்றல் வாய்ந்தவை![/size] [size=4]திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.[/size] [size=4]நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது ஆனால் அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிது.[/size…
-
- 1 reply
- 1.4k views
-
-
நான் முகநூலில் பல சிந்திக்க வைக்கும் வரிகளை காண்கிறேன். கண்டுகொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் விரும்பினால் இணையுங்கள். இதிலுள்ள எதுவும் எனக்கு சொந்தமானதல்ல என்பதை முதலே தெரிவிக்கிறேன். பி.கு: படத்தை நீக்கி விட்டு வரிகளை மட்டும் இணைத்துள்ளேன். ------------------------------------------------------------------------------------------ எழுந்திருப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன
-
- 70 replies
- 32k views
-
-
[size=3][/size] [size=3][size=4]உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத்தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...[/size][/size] சொரணை [size=3][size=4]நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது. “மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்துவிடப் போகிறார்கள் என்றது அறுகம்புல். நெருஞ்சி சூடானது. “என்னைக் காலால் மிதி…
-
- 0 replies
- 873 views
-
-
[size=4]அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வத…
-
- 14 replies
- 6.3k views
-
-
சுவாமிகள் அச்சுவேலியைப் பிறப்பிடாகக் கொண்டவர்கள். அச்சுவேலியிலே சலவைத்தொழிலாளர் வம்சத்திலே சுப்பையா என்றொரு உத்தமர் இருந்தார். நல்ல கடவுட் பக்தர். அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கியவர். இவருக்கு ஒரு உத்தம புத்திரன், சரவணை எனப்பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். சரவணை இளமையிலேயே வசீகரமான தோற்றம் உடையவர். சரவணையின் வசீகரத்தோற்றம் நீராவியடியைச்சேர்ந்த வேளான் வகுப்பு அம்மையார் ஒருவருடைய மனதைக்கவர்ந்தது. சரவணைக் குழந்தையை வளர்க்க ஆசை கொண்டார். சுப்பையாவிடம் தன் கருத்தை அம்மையார் தெரிவித்தார். தனது மகன் ஒரு செல்வந்தர் வீட்டில் வாழ்வதை சுப்பையாவும் விரும்பினார். அதனால் சரவணைக்கு எக்குறையும் தெரியாது வாழும் வாழ்க்கை வசதி இறையருளால் கிட்டியது. இந்தச் சரவணைக் குழந்தை வளர்ந்…
-
- 0 replies
- 711 views
-
-
பதினாறு செல்வங்கள் எவை? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) 8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி) 9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்…
-
- 4 replies
- 9.2k views
-
-
ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது. அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது. அப்போது முதல் துறவி மற்ற …
-
- 2 replies
- 1.4k views
-
-
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தே ஞானவாழ்விற்குரிய இலச்சனை பதித்த பல சாதுக்களையும், தபோவனங்களையும் தன்னகத்தே கொண்ட தபதியாக ஒளிர்ந்தது இணுவில். அத்தகு திருப்பதியில் கந்தப்பர் சின்னக்குட்டி தம்பதியருக்கு ஐந்து பெண் மகவுகளின் பின்னர் ஆறவதாக 1906.05.24 பராபவ வைகாசி 11 வியாழன் ரோகிணியில் பிறந்தவர் வடிவேல். உரிய வயதிலே வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற குழந்தை அவ்வூர்ப் பாடசாலை ஒன்றிலே ஆரம்பக்கல்வியை கற்று வந்தது. வைத்திலிங்க உபாத்தியாயரிடமும், மாணிக்கச் சட்டம்பியார் என்பட்ட மாணிக்கத்தியாகராசா விடமும் தனிப்பட்ட முறையிலும் கல்வி பயின்று வந்தார். மாலை வேளைகளில் சேதூர் சட்டம்பியரிடம் நிகண்டு நன்னூல், இலக்கண நூல்கள் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் கற்றார். குழந்தையின் நடைம…
-
- 2 replies
- 642 views
-
-
[size=3][size=4]பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன[/size][/size] [size=3][size=4]என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும் அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது. முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். ௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர். இன்று இந்த வேலையை…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு…
-
- 0 replies
- 584 views
-
-
மனிதனுடைய இன்றைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் அவன் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்குமே தவிர எதுவுமே அவனை அமைதியடைய விடாது. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும்…
-
- 1 reply
- 5.2k views
-
-
அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே ஒரு குழந்தை மிகச்சிறந்த ஞானத்துடன் வளர முடியுமா? முடியும் என்பதற்கு சரித்திரச் சான்று பிரகலாதன் கதை. தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாரத ரிஷியின் மூலம் நற்சிந்தனை நிரம்பிய கதைகளைக் கேட்டு நாராயணனே பரம்பொருள் என்று உணர்ந்த குழந்தை அவன். அது எப்போதோ நடந்த கதை; இப்போது இந்தக் கலிகாலத்தில் அதேபோல கருவிலிருக்குபோதே ஒரு குழந்தையை நம்மாலும் உருவாக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்து வருபவர்கள் யூதர்கள் (JEWS) ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சில மாதங்களுக்கு முன் என் நண்பர் ஒருவர் யூதர்களைப் பற்றிய ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பி அதை தமிழ் மொழியாக்கம் செய்து தரச் சொன்னார். யூதர்கள் எப்படி மிகவும் சாமர்த்தியசாலிகளாக இருக்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை. நான்கே நான்கு மைல் சுற்றளவுள்ள இத்தீவில் பெரும்பகுதியோர் சைவவேளான் மரபைச்சார்ந்தவர்களாகும். இம்மரபிலே ஆறுமுகம் எனும்பெரியார் ஒருவர் வாழ்நதார். அவருக்கு ஒரு மகன். அம்மகனுக்கு முத்துக்குமாரசாமி என்று நாமகரணம் சூட்டினர். இந்த முத்துக்குமாரசாமியே பிற்காலத்தில் நயினாதீவுச் சாமியார் என்று அழைக்கப்பட்டார்…
-
- 1 reply
- 1k views
-
-
[size=5]06 பரமகுரு சுவாமிகள் .[/size] http://www.thejaffna.com/wp-content/uploads/2011/05/paramaguru.jpg ஈழத்துச் சித்தர்கள் பகுதி 5 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105892 இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர், சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=5]உன்னை விட்டு விலகிப் போக முடியுமா?[/size] ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை. 'அவரை எப்படி சந்திப்பது.. ?' என விசாரித்தான். 'கோவிலுக்குப் போ..!' என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். இனி, ஞானிக்கும் மனிதனுக்குமிடையே நடந்த உரையாடல்: ஞானி கேட்டார். "எங்கே போகிறாய் ?" "கடவுளைக் காண போகிறேன்!" "எங்கே..?" "கோவிலில்.. !" "அங்கே போய்... ?" "அவரை வழிபடப் போகிறேன்..!" "அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ...?" "தெரியாது..!" "எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும்..?" "அப்படியென்றால் ... ?" "உன்னுடைய வழிபாடு வெறும…
-
- 4 replies
- 1.3k views
-
-
[size=5]05 சித்தானைக்குட்டி சுவாமிகள் .[/size] http://www.karaitivu...am/100_5499.JPG ஈழத்துச் சித்தர்கள் பகுதி 4 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . [size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=105732[/size] பாரதக்கண்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த இராமேஸ்வரத்தை அண்டிய இராமநாதபுரத்தின் “பெருநாளி” என்னும் இராசதானியின் சிற்றரசரின் மகன் தான் சித்தானைக்குட்டி சுவாமி தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிப்பிட்டு வீட்டுக்கு வீடு மறனஓலம் கேட்டுக் கொண்டுடிருந்த வேளை இரு மகான்கள் வந்து உணவு கேட்டுண்ட வீடுகளில் கௌ;ளை நோயி ஏற்படாததை அறிந்து அவரிடம் கவரப்பட்டு சென்றவரே சித்தானைக்குட்டி சாமியார். அந்த மகானே பிற்காலத்தில் பெரியான…
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=5]அங்கீகாரம்[/size] ஒரு வீட்டில் அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் தங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த அக்கறை இருந்தது. பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவனும் தினசரி பள்ளிக்கூடம் போய் வந்தான். ஒரு நாள் அவனிடம் அம்மா கேட்டாள். "எங்கே! ஒன்னு, ரெண்டு சொல்லு பார்ப்போம்!". "ஒன்னு!". மௌனம். அதற்கு மேல் அவன் சொல்லவில்லை. அம்மா மீண்டும் 'சொல்லு' என்றாள். "ஒன்னு!". அத்துடன் நின்று விட்டது. அம்மா 'தரதர'வென்று பையனை இழுத்துக்கொண்டு ஆசிரியரிடம் போனாள். "இவனுக்கு ஒன்னு, ரெண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?" என்று கேட்டாள். "ஓ! கேட்டுப் பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!" என்றார் ஆசிரியர். "நீங்களே கே…
-
- 7 replies
- 1.2k views
-