மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வரலட்சுமி விரதம் : 16.8.2013 *************** லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள்…
-
- 8 replies
- 2k views
-
-
ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக் கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப் படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது. வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும் உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள், வரலாற்றுப் …
-
- 0 replies
- 799 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா… வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்தி…
-
- 0 replies
- 336 views
-
-
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!'' -தந்தை பெரியார் உலகமே அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பத்து குதிரை சாரட்டுகளில் பறந்துகொண்டு இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம்! மார்க்சும் ஏங்கல்சும் தங்களது நெருப்புரைகளால் அறிவுலகில் பெரும் தீயை ஏற்படுத்தி, ஐரோப்பாவையே அதிர வைத்துக்கொண்டு இருந்த நேரம். இதன் எந்தச் சலனமும் இல்லாமல், உலக வரைபடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில், தாங்கள் யாரென்றே அறியாத பெருங்கூட்டமொன்று இருந்தது. அறியாமை அவர்களின் கண்களைக் கட்டியிருந்தது. மதம் அவர்களது மூளையை அடைத்திருந்தது. சாதி முதுகில் அமர்ந்து அவர்களை முழுவதுமாகக் க…
-
- 10 replies
- 3.6k views
-
-
தமிழக முதல்வர் மு. கருணாநிதி தவணை முறையில் சில புரட்சிக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் தற்போது பெரும் சர்ச்சைக்கு நிலைக்களனாகியுள்ளது. இந்த சர்ச்சையில் தீவிரமாக இறங்கி எதிரணியினருக்குச் சவால் விட்டுவரும் கருணாநிதி “ராமன் எந்தப் பொறியியல் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றான்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றும், ராம-ராவண யுத்தம் என்பதே ஆரிய-திராவிடப் போர்தான் என்று பண்டித நேருவே குறிப்பிட்டுவிட்டார் என்றும் பேசியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகியே குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். பண்டித நேரு “DMK is a fantastic nonsense” என்றும் கூடத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே…
-
- 2 replies
- 1.4k views
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்
-
- 5 replies
- 389 views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்திருவிழா நேற்று ஆரம்பம். (படங்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான கொடியேற்றம் சரியாக நண்பகல் 12 மணியளவில் சுபமுகூர்த்தவேளையில் இடம்பெற்றது. நேற்று முதலாம் நாள் கொடியேற்றத்திருவிழாவில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 21ம் திகதி சப்பரத்திருவிழாவும், 22ம்திகதி தேர்த்திருவிழாவும், 23ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற்று கொடிய…
-
- 2 replies
- 822 views
-
-
நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடைந்தது. செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக…
-
- 58 replies
- 5.3k views
-
-
வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 06:18.33 AM GMT +05:30 ] இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், ஹசனா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தான் பெளூரு(Belur). இது சிறிய தாலுகா ஆனாலும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. பெங்களூரிலிருந்து 222 கி.மீ. தூரத்திலும், மைசூரிலிருந்து 149 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பெளூருவில் சென்னகேசவா கோவில் மிகவும் பிரபலமானது. சென்னகேசவா கோவில் (Chennakesava Temple) ஹோய்சாலா விஷ்ணுவர்தன் (Hoysala Empire ) என்ற பேரரசரால் 1116 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தகோவில் 37 மீட்டர் உயரம் உடையது. ஒரு விசாலமான மேடையின் மீது கட்டப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
வர்ணமும் ஆஸ்ரமமும் செம்பரிதி அறிமுகம் பண்டைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நான்கு அடுக்குகளைக் கொண்ட இரு வகைச் சமூகப் பகுப்பமைப்பு என்று வர்ணாசிரம தர்மத்தைக் கூறலாம் இங்கு வர்ணம் என்பது வர்க்கத்தையும், ஆஸ்ரமம் என்பது தனிமனித வாழ்வுநிலையையும் குறிக்கின்றன. இந்த இரட்டைக் கோட்பாடு நடைமுறை இந்து சமயத்தின் தூண்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. நான்கு வர்ணங்கள் இவை- 1.பிராமண 2.க்ஷத்திரிய 3.வைஸ்ய 4.சூத்திர நான்கு ஆஸ்ரமங்கள் இவை 1.பிரம்மச்சரியம் 2.கிருஹஸ்தம் 3.வனபிரஸ்தம் 4.சந்நியாசம் ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்ற…
-
- 1 reply
- 1.9k views
-
-
மாமனிதர் கணேசமூர்த்தி எழுதிய இலங்கை மண் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் வழங்கிய உரை. புலிகளின் குரல் கருத்துப் பகிர்வில் இருந்து. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...thupakirvu.smil
-
- 15 replies
- 3k views
-
-
-
-ற.றஜீவன் வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (08) இடம்பெற்றது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/129796-2014-10-09-05-42-25.html
-
- 13 replies
- 1.4k views
-
-
பலாயிரக்கனக்கான பக்தர்களுடன் சேர்ந்து வல்லிபுர மாயவன் இன்று கடலில் நீராடி மகிழ்ந்தான் http://youtu.be/sRPeMScqIMY
-
- 4 replies
- 1.2k views
-
-
வல்லிபுர மாயவ னின் கொடியேற்றம். http://youtu.be/W5KO5AoEpXQ
-
- 0 replies
- 937 views
-
-
வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது. . 1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது. . வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம். . புறாப்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் திருவிழாவின் இறுதிநாளான தீர்த்ததிருவிழா அன்று 'கண்டறியா விழா' என்று அறியப்படுகின்ற இந்திரவிழா, திங்கட்கிழமை (04) கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறை ஊறணி தொடக்கம் ஊரிக்காடு வரையிலான 03 கிலோமீட்டர் தூரத்துக்கு வீதியின் இரு மருங்கிலும் வாழைகள், மூங்கில்கள் கட்டப்பட்டு பிரமாண்டமான மின்னலங்காரங்களுடன் மக்கள் வெள்ளம் திரள 08 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன. ஊறணி தீர்த்தக் கடற்கரையில் கடலுக்குள் மேடை அமைக்கப்பட்டும் குச்சம் ஒழுங்கைக்கு முன்னால் தொங்குபாலம் அமைக்கப்பட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், நெடியகாட்டில் பிரமாண்ட பிள்ளையார் உருவமும் வேம்படியில் சிவனும் வல்வெடித்துறை சந்தியில் பிரமாண்ட சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 8 replies
- 2.4k views
-
-
'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவா…
-
- 0 replies
- 1.2k views
-
-
வள்ளலாரின் திருவருட்பா 'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்…
-
- 2 replies
- 11.7k views
-
-
வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம் வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம். வள்ளலார் நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்தார். அனைத்து உயிர்களுக்குமான ஜீவ காருண்யத…
-
- 0 replies
- 805 views
-
-
-
வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண…
-
- 1 reply
- 1.6k views
-
-
வாசிப்பின் பயன் தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது. புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக. நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம். …
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
வாதம் பிரதிவாதம் விவாதம் அமெரிக்காவில், கதைகள் ஆய்வு, கருத்தாடு மன்றம் போன்றவையெல்லாம் இரண்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. என்னடா இவன் எப்போது பார்த்தாலும் அமெரிக்கா, அமெரிக்காயென்று சொல்லியே பேசுகின்றான் என்றேல்லாம் ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை. மாறாக, உரிய தரவுகள், சான்றுகள் கேட்டால் அளிக்க முற்படுவேன். https://schools.cms.k12.nc.us/communityhouseMS/Pages/CHMS-Clubs.aspx தற்போதைக்கு, மகளார் படிக்கும் இந்தப் பள்ளியின் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பொருட்டுத்தான், குழந்தைகளுக்கும் முதன்தலைமுறைக் குடிவரவுப் பெற்றோருக்குமான இடைவெளி நேர்கின்றது. அவர்கள் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு கொண்டிருப்பார்கள். அந்த மதிப்பீடு மேம்பட வே…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-