மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
யோகி என்பவர் யார் ? குண்டலினி சக்தி யாருக்கு உடலில் கிளம்பியிருக்கிறதோ அவர் யோகியாவார் என்று கீதை கூறுகிறது. அதற்காக நாம் ஒவ்வொருவராகத் தேடிக் கொண்டிருப்பதை விட, நமக்கு குண்டலினி கிளம்ப நாம் என்ன செய்யலாம் ? அதற்கு நம் முன்னோர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்கிறார்கள் என்று கவனித்து, அதற்கான முயற்சியை மேற் கொள்வதே உத்தமம். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. குண்டலினி எழும்பியதற்கு அறிகுறி…
-
- 0 replies
- 648 views
-
-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன. இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
அ+ அ- இன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தினம்தான் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி.இந்த நாளில் இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டார். உலக மக்களுக்காக இந்த சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தேவன் இயேசு கிறிஸ்து.வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் இயேசுநாதரை காட்டிக் கொடுத்த போதும், அதை புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டார் இயேசு நாதர்.யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு நாதரை, பிலாத்து மன்னனிடம் கொண்டு சென்று நிறுத்தினர். பிலாத்து விசாரணை நடத்தினான். ஆனால் இயேசு நாதரிடம் ஒரு குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே என்றான் இறுதியில.ஆனால் கூடியிருந்த யூத கூட்டமோ, இயேசு நாதரை ச…
-
- 1 reply
- 3k views
-
-
http://www.bbc.co.uk/tamil/meta/dps/2012/01/bb/120106_nimalaiw_au_bb.asx இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது. இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பா…
-
- 1 reply
- 941 views
-
-
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.” அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார். பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான். “சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை …
-
- 5 replies
- 1.6k views
-
-
மஞ்சள் மழையே பொழிக! தேனருவி முழுக்க முழுக்க சித்தர்களின் அருவி. இங்கு எப்போதுமே அரூப நிலையில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அருகிலுள்ள குகைகளில் அமர்ந்து தவம் புரிகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவாக அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி தோறும் ஈசனை தேனால் அபிஷேகம் செய்கிறார்கள். எனவேதான் இங்கு சித்ரா பௌர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. அதை காணத்தான் இந்தக் கடினமான பயணம். எனவேதான் குற்றால மலையில் ஆற்றைத் தாண்டி கடினமான பாதை வழியாக மேலே வந்தோம். இருபது நிமிடங்கள் நடந்திருப்போம். அங்கு ஆங்கிலேயர்கள் நடந்து செல்ல பயன் படுத்திய இரும்புக் கம்பி வளைந்து நெளிந்து கிடந்தது. திடீர் திடீரென்று சிற்றாற்றில் வரும் வெள்ளத்தால்தான் இந்தக் கம்பி இப்…
-
- 0 replies
- 501 views
-
-
சைவ சமயமும்... வாழைப் பழமும். எப்போதும் இறைவழிபாட்டுப் பொருட்களில் வாழைப்பழம் தவறாறு இடம் பெற்று விடுகின்றது. பழம் பாக்கு வெத்திலை தேங்காய் என்று சொல்லும் போது கூட அங்கே பழம் என்று சொல்லப்படுவது வாழைப் பழத்தைத் தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றார் திருவள்ளுவர். எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வா…
-
- 4 replies
- 815 views
-
-
சிவசக்தி அந்தரசக்தி இந்துக் கலை - சிற்பக்கலை இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர். இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை. “இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவி…
-
- 0 replies
- 13.3k views
-
-
இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு, மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவரகசியம் இதிகாசப் படலம் விஷ்ணுவானவர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த் ஓர் பெரிய யுத்தத்தில் தேவர் தோல்வி கண்டது கொண்டு அவ்வசுரர்களைக் கொல்வதற்காக அப்போது, மகா பயங்கரமான யுத்தம் செய்கையில், அசுரர்கள் விஷ்ணுவால் மிகுதியாயக் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் மிகுதியாய்க் கண்டிக்கப் படலான போது, அவர்கள் விஷ்ணுவால் தோல்வி அடையப் பெற்றவர்களாகிப் பிருகுமுனிவர் ஆசிரமத்துக்கு ஓடி அம்முனிவரின் மனைவிபால் சரணடைந்தார்கள். அப்போது விஷ்ணுவானவர் சக்கரத்தை எடுத்துக் கொண்டு தாமும் அவ்வாசிரமத்துக்கு வந்து அங்கு அவ்வசுரர்களைக் கொல்ல எத்தனிக்கையில், பிருகு பத்தினியானவள் ஓ! விஷ்ணுவே! முனிவர் இல்லாத சமயத்தில் நீர் ஆ…
-
- 11 replies
- 3.6k views
-
-
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. தவக்காலத்தின் போது ஒரு வேளை மட்டும் உண்பது, இரு வேளை பட்டினி கிடப்பது, மாமிசம் உண்ணாமலும் மது அருந்தாமலும் இன்ன பிற கேளிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பது வளமையாகும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 0 replies
- 364 views
-