சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகள…
-
- 0 replies
- 938 views
-
-
குழந்தைகளும் இன்டர்நெட்டும் ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி! குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது. குழந்தைக…
-
- 0 replies
- 926 views
-
-
1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண், கணக்குகளை குழந்தை சரியாகச் செய்கிறாரில்லையென்று சொல்லி முதுகெல்லாம் அடித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கைளை எடுப்போம் என்று குழந்தையின் பெற்றோரிடம் கதைத்துப் பார்க்கச் சொன்னேன். தாங்கள் கூலி வேலை செய்வதாகவும் தங்களுடைய பிள்ளை இதற்காக எதிர்காலத்தில் பழிவாங்கப்படும் ஆகவே வேண்டாம் என்று அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை போல் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் ஆ…
-
- 2 replies
- 964 views
- 1 follower
-
-
குழந்தைகளை அடிக்கலாமா? படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? *** சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது? * குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்ட…
-
- 51 replies
- 6.8k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றோர் தங்களது குழந்தைகளைக் கண்டிப்பதும், சில நேரங்களில் அடிப்பதும் குழந்தைகளின் மனதில் வாழ்நாள் வடுவாகப் பதிந்து, ஒரு தனி மனிதராகத் திறம்பட அவர்கள் வளர்வதையே பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதுகுறித்த புரிதல் தற்போது இந்திய சமூகத்தில் ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் அதேவேளையில், இன்றைய சூழலில் மற்றொரு பிரச்னையும் குழந்தை வளர்ப்பில் உருவெடுத்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து, மிகவும் பாதுகாத்து வளர்ப்பதால் அவர்கள் மிகவும் பலவீனமான …
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
-
- 0 replies
- 726 views
-
-
சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும். பாட்டியின் வழியே கதை கேட்க அத்தனை ஆர்வமாக இருப்பார்கள் பேரன் பேத்திகள். உணவு உண்ணும் பொழுதில் இருந்து ஆரம்பித்துவிடும் இந்தக் கூற்று, நிலாவினைக்காட்டி தூங்க வைப்பது வரையில் தொடரும். கதை கேட்பது பெரும்பாலும் கூட்டாகவே நிகழும். கூட்டுக்குடும்ப வாழ்வின் மிக முக்கியமான அம்சம் பாட்டிமார்கள் வழியே கடத்தப்பட்ட கதைகள் தான். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா மற்றும் மாமன் பிள்ளைகள், பக்கத்துவீட்டுப் பொடிசுகள் என்று பாட்டி அருகே அமர்ந்து கதைக் கேட்கும் காட்சி…
-
- 10 replies
- 1.3k views
-
-
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது ! சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு... "பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்…
-
- 15 replies
- 3k views
-
-
குழந்தைகளை வெல்லும் ஆயுதம் மா. ஆறுமுககண்ணன் ஓர் ஊரில் ஒரு ராஜா...'' இப்படித் தொடங்கியதும் கதை கேட்பதற்காகக் குழந்தைகள் ஆயத்தமாகிவிடுவர். அவர்களின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டோடும். அது ஒரு காலம். இன்றும் அவர்கள் விதவிதமான கதைகள் கேட்பதற்காகத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் கதை சொல்வதற்குத்தான் ஆள்களைக் காணோம். கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளின் கற்பனை உணர்வு, செயல் திறன் அதிகரிக்கிறது. கதைகளால் அவர்களின் மனதில் தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், அன்பு, சத்தியம் போன்ற நற்பண்புகள் ஆழமாக வேரூன்றுகின்றன. வெறும் ஏட்டுக் கல்வியால் ஆவியாகிப்போகும் குழந்தைகளின் மனம் என்ற நீர்நிலையில், கதைகள் என்ற மேகங்கள் கனமழை பொழிந்து மகிழ்ச்சி அலைகளைப் பரவச் செய்கின்றன.…
-
- 0 replies
- 906 views
-
-
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்க…
-
- 0 replies
- 868 views
-
-
உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும். காலை முதல் மாலை, ஏன் இரவு வரையிலும் அலுவலக பணிகளை முடித்து விட்டு மனஅழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாகத் தின்பண்டங்களை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். மேலும் அவர்களைத் திட்டவும் தொடங்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகளைத் திட்டும் போது அது அவர்களின் மனம்,ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றை எவ்வளவு பாதிக்கின்றது என்ற உண்மையை அறியாமல் பல பெற்றோர் நாட்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்... செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள் எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம். ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது. தொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு நகரத்தைப்போல ஆகிவிட்டது எனக் கூறுகிற அளவுக்கு இன்று இணையத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆனால், அதன் சாதகங்களோடு, சரி நி…
-
- 0 replies
- 328 views
-
-
குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ? by vithaiNovember 8, 2020 http://vithaikulumam.com/wp-content/uploads/2020/11/Kids-and-Casteism.jpg என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டி…
-
- 0 replies
- 513 views
-
-
பிறந்ததில் இருந்து பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் நாய்கள் மத்தியில் வளர்ந்த பெண் குழந்தை இன்று நாயாகவே வாழ்கிறாள். இப்படியான கொடூரங்களும் இந்த உலகில் குழந்தைகளுக்கு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.
-
- 9 replies
- 1k views
-
-
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மார்ச் 2023, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன. அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்ட…
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
குழந்தைகள் பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க! பள்ளித்தோழர்கள், சகவயது நண்பர்கள், சகோதரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை கொள்கின்றனரா ? இந்த பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும் என்று உளவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அவமரியாதை வேண்டாம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம். அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்ட…
-
- 0 replies
- 673 views
-
-
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ?? செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வே…
-
- 6 replies
- 1.8k views
-
-
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொனனுடுவேன், தலையை திருகிடுவேன், கையை முறிப்பேன் போன்ற வார்த்தைகளை உபய…
-
- 9 replies
- 3.6k views
-
-
குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் செய்யக் கூடாதது என்னென்ன? கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை …
-
- 0 replies
- 1.3k views
-
-
குழந்தைகள் முன்பு பெற்றோர் முத்தமிட்டுக் கொள்வதன் விளைவுகள்... தேவை கவனம்! முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள். கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும். ``இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. க…
-
- 0 replies
- 632 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 45 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில், இத்தாலியின் வடக்கு நகரமான பாவியாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன்களை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மகன்களில் ஒருவரது வயது 40, மற்றவருக்கு வயது 42. தனித்தனியாக வாழுமாறு தனது மகன்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரு மகன்களும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை வழங்கும்போது, "குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் பொறுப்பு என்பதால் ஆரம்பத்தில் மகன்கள் தங்கியிருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் 40 வயதுக…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவ…
-
- 0 replies
- 626 views
-
-
குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! .......... குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர…
-
- 1 reply
- 697 views
-
-
ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்…
-
- 0 replies
- 436 views
-