சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
காசு காசு என்று பேயாய் அலைந்து தம் குழந்தைகளையும் புறக்கணிக்கும் தமிழ் பெற்றோர்களுக்கு சமர்பணம்
-
- 1 reply
- 998 views
-
-
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் " விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே. - இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~ செம கடுப்பு (முகறையில ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது ) - டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், …
-
- 4 replies
- 1.6k views
-
-
சிலாபம் திண்ணனூரான் கொழும்பு புறக்கோட்டை வர்த்தக வீதிகளில் 'யோவ், யோவ்.வழி வழி.' என பெரும் சத்ததுடன் தள்ளு வண்டிகளில் மூடைகளை அடக்கி வைத்து வண்டியை தள்ளிக் கொண்டு போவார்கள். மனிதனின் ஒவ்வொரு கண்டு பிடிப்புகளுக்கும் வரலாறு உள்ளது. அவ்வாறு இவ்வண்டிகளுக்கும் வரலாறு உள்ளது. இவ் வண்டி வியாபாரம் வியப்பானது. புதுமையானது. இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தள்ளுவண்டி வியாபாரம் நடத்தி வரும் கணேஷ் தர்மலிங்கம். இத்தள்ளுவண்டித் தொழிலில் ஈடுபடும் நாட்டாமைகளுக்கு ஆரம்ப காலத்தில் நாடார் வர்த்தகர்களே கொழும்பில் வண்டிகளை நாளாந்த வாடகைக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். முன்னர் இவ்வண்டிகளின் சக்கரங்கள் லண்டன் யுத்த டாங்கியின் சக்கரங்களை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த மாதம், மாமல்லபுரம் உணவகத்தில் ஐரோப்பியப் பெண் கேத்தரீனைச் சந்தித்தேன். அவள் இந்தியா வந்து அன்றோடு 46-வது நாள். 24 வயதில் கேத்தரீன் பயணிக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா. தன் முதல் பயணத்தைப் பிரியமான அம்மா இறந்த அடுத்த வாரத்தில், அந்தத் துயரை மறப்பதற்காகத் தொடங்கியிருந்தாள். அடுத்து அடுத்து பயணிக்க ஒரு துயரம் அவளுக்கு வேண்டியிருக்கவில்லை. 'நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’ என்று இட்லி - சாம்பாரை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே கேத்தரீன் கேட்டபோது, ஒரு நாடோடிக்கு மட்டுமே அந்தப் பரந்த மனம் வாய்க்கும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் கேத்தரீன் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல. போர்ச்சுக்கல் நாட்டில் …
-
- 12 replies
- 2.6k views
-
-
ஐயா கமல் சாரு!!!! சொந்த லாபத்திற்காக மதத்தை சாடும் உங்களுக்கு!!!! சந்திராயன் இன்னும் பல விண்வெளி ஆராய்சிகள் இந்தியாவுக்கு தேவையா? செவ்வாயில் கிடங்கு கிண்டி மிதேன்வாயு ஆராய்ச்சி தேவையா? பல கோடிகளில் திரைப்படம் எடுத்து மக்களை வசீகரப்படுத்த/களிப்பூட்டுவதன் அவசியம் என்ன? காஷ்மீர் விரயத்தனங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? உலகத்தையே தூக்கிப்போடும் அளவிற்கு ஊழல்கள் நடக்கின்றது.தமிழ்நாட்டிற்கு பத்து வருசம் சாப்பாடு போடும் பணத்தை கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இதுபோன்று பல...... இவை எல்லாவற்றையும் இரு வருடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துங்கள்!!!!! நீங்கள் சொன்ன பசி தானாக பறந்து போகும். இனிவரும் காலங்களில் யாழ் உறவுகளும் செய்திகளை…
-
- 3 replies
- 995 views
-
-
பளீர் என்று வெளிச்சம். மின்சாரம் வந்துவிட்டது. கூடவே, இளம் பெண்ணின் குரல். “அண்ணா, பயப்படாதீங்க. என் பேரு சரண்யா. இவங்க எல்லாம் குடிநோயால் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. எல்லோரும் போய்ப் படுத்துத் தூங்குங்க” என்றார். தூக்கம் வரவில்லை. விடிந்திருந்தது. வெளியே வந்து பார்த்தேன். மழை ஓய்ந்திருந்தது. நேற்று இருட்டில் தெரியவில்லை. அது அப்படி ஒன்றும் காடு அல்ல. ஆனால், எங்கும் பசுமை பரவியிருந்தது. பறவைகளின் கீதங்களால் சூழல் ஏகாந்தமாக இருந்தது. குடிநோயாளிகள் மற்றும் மனநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்ற சூழல் இதுவே. காலை 7 மணிக்குத் தொடங்கியது யோகா, மூச்சுப் பயிற்சி. குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து ஆச்சாரமாக இருந்த ஒரு அக்கா, “எல்லோரும் சாப்பிட வாங்க” என்றார். அந்த அக்காவின் பெயர் …
-
- 0 replies
- 1k views
-
-
நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட). எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. சுற்றி வளைக்கும் கேள்வி “உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’. இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க…
-
- 1 reply
- 735 views
-
-
கவுரவத்துக்கான போராட்டம் உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கண் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை எங்கே போவது என்பது தெரியும் ஆனால் எப்படி போவது என்பது என்று தெரியாது எல்லா திறமைகளும் இருக்கின்றது அதை எப்படி செயற்படுத்துவது என்பது தெரியாது இப்படித்தான் பல திறமை சாலிகள் தங்களிடம் இருக்கும் பல வரங்களை வைத்து கொண்டு அவற்றை எப்படி இந்த உலகிற்கு காட்டுவது என்பது தெரியாமல் அடைக்கப்பட்ட பாதையில் நிற்பதை போல விழித்து கொண்டிருக்கிறார்கள் . பல மனிதர்கள் தமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க விரும்புவதில்லை தான் மட்டும் சாதிக்க வேண்டும் தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தங்களை போல் வரக்கூடாது என நினைக்கிறார்கள் சில வெற்றியாளர்கள் தன்னை பற்றி சொல்லும் போது மிகவும் கடுமையான உழைப்பில்தான் நான் உயர்ந்து நிற்கிறேன் என்று மட்டுமே ச…
-
- 2 replies
- 631 views
-
-
-சிலாபம் திண்ணனூரான்- தன் அதிநுட்ப உழைப்பால் எத்தனையோ மனிதர்ளை சந்தோஷப்படுத்தும் வகையில் சாவி தயாரிப்பவர் ஜே ஏ. எம். அன்சார். கொழும்பு, கொம்பனி வீதியைச் சேர்ந்த அன்சாரை சந்திப்பதற்காக பாமர மனிதர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினை இவர் சாவி தயாரிக்கும் ஸ்தானத்திற்கு வருவதை காண முடியும். சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தையில் இலங்கையின் பிரபல புகைப்பட நிறுவனம் ஒன்றின் முன்றலிலேயே இவரின் தொழில் நடைபெற்று வருகின்றது. உல்லாசப் பயணிகளுக்கான வழிகாட்டியாக ஆரம்பத்தில் தொழில்புரிந்த அன்சார், தனது இருபதாவது வயதில் தனது நண்பரோடு இணைந்து சாவி தயாரிப்புத் தொழிலை பழகியுள்ளார். பின்னர் 1991இல் சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கும் சில மாதங்கள் …
-
- 0 replies
- 614 views
-
-
https://www.facebook.com/video/video.php?v=4511241234586&set=vb.1697294808 மனதை கலங்க வைத்த காணொளி...
-
- 5 replies
- 919 views
-
-
ஏன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் தெரியுமா? எந்த ஒரு உறவாக இருந்தாலும், கல்யாணம் தான் மிகவும் உயர்ந்த ஒரு உறவாக உள்ளது. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க கல்யாண நாள் அப்படிங்கறது ஒருத்தர் பல நாளா காத்துகொண்டிருந்த எல்லையில்லாத மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரக்கூடிய நாள். கல்யாணத்திற்காக தயாராவதற்கு முன் பல விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. மக்கள் பல வயதுகளில், பல சூழ்நிலைகளில் திருமணம் புரிகிறார்கள். நாம் இப்போது திருமணத்தை தள்ளிப்போடாமல் சீக்கிரம் செய்து கொள்ள வேண்டியதற்கான காரணங்களைப் பற்றி அலசுவோம். இந்த காரணங்களை ஆராயும்போது இதனால் ஏற்படும் பயன்களில் மூழ்கிவிடுவோம். எனவே, சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டியதற்கான சில காரணங்களைப் பார்க்கலாம் வாங்க.…
-
- 35 replies
- 4.1k views
-
-
போர்டு பவுண்டேஷன் - சி.ஐ.ஏ உறவு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்; பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கைக் குலைக்கவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும் - ஜேம்ஸ் பெட்ராஸ் - The ford foundation and the CIA doccumented Case of philanthropic collaboration with the secred police. காலாவதியாகிவிட்ட பின்நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவது தேவைதானா? என்று கேள்வி எழலாம். உண்மைதான். அது தோன்றிய இடங்களிலேயே ஊற்றி மூடப்பட்டு, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு விட்டதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இங்கு பின்நவீனத்துவவாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கிய பா.ம.க மற்றும் தலித் அமைப்புகள் தீவிரமாக ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
நீ அறிவாளியா? வா. மணிகண்டன் சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள். …
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்கள உறவுகளிடம் , தாயக முன்னேற்றத்தை உயரிய நோக்காகக் கொண்டு "எமக்காக நாம்" எனும் தலைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆதரவு தாருங்கள் உறவுகளே இத்திரியினூடாக தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், கல்விச்சமூகத்தினர் போன்றோரிடம் தாயகம் சார்ந்த எமது கருத்துக்கள், ஆலோசணைகள் , அனுபவங்களை பகிர்வோம். எமக்குத் தெரிந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம் இதன் மூலம் புலத்திற்கும் நிலத்திற்கும் இடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி தாயகமுன்னேற்றத்திற்காக உழைப்போம். இத்திரியை திறப்பதற்க்கு எனக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தூண்டுகோலாக இருந்தன. ஒன்று புலத்தில் நாம் வாழும் நாடுகள் அணை…
-
- 2 replies
- 726 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
கடவுள் பெயரால் ஒரு மோசடி மு.கு 1: இது மிக சீரியஸான பதிவு. போரடிக்கும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன் மு.கு 2: இங்கே கடவுள் என்ற பதம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளை மட்டும் குறிக்கவில்லை. கடவுள். என்ன ஒரு உன்னதமான ஒரு சொல்!! நம்புபவன், நம்பாதவன் எல்லோருடைய எண்ணங்களுமே இவரை சுற்றியே பெரும்பாலும் இருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடவுள் என்ற சொல்தான் மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு சொல். உலகிலேயே அதிகம் பாராட்டப்பட்டவர் கடவுள். அதிகம் இகழப்பட்டவர் கடவுள், அதிகம் விமர்சிக்கப்பட்டவரும் கடவுள்தான். இப்படி எங்கும் நிறைந்திருப்பதால்தான் அவரை கடவுள் என்கிறார்களோ என்னவோ? இப்போது நான் சொல்வது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றிய ஆராய்ச்சி அல்ல.…
-
- 0 replies
- 1.8k views
-
-
மூடநம்பிக்கையை மூலதனமாக்கி... இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும். ‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒர…
-
- 4 replies
- 6.8k views
-
-
திருமணத்தின்போது மோதிரம் போடுவதன் ரகசியம் தெரியுமா? தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம். தோடு: எதையும் வெளியில் சொல்லாமல், காதோடு போட்டு வைத்துக்கொள். மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால். வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக. ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக. மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. இந்த ஆறு நகைகளையும் அணிந்தால் தான், ஒரு பெண்ணின், பெண் தெய்வங்களின் அலங்காரம் முழுமை அடைந்ததாக பொருள். இந்த பலன்களை, பெண்களாகிய நாம் நமக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டியது தான். எந்த விரலில் அணியலாம் மோதிரம் அணிந்திருக்கும் பெண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும். தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை. தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம். தோல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேசினாலும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால்…
-
- 1 reply
- 1.3k views
-
-
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக…
-
- 3 replies
- 7.2k views
-
-
படித்ததில்.... (From : Maattru.com) ---------------------------- அன்பானவனே! “நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன. என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்கு பெயர் போட்டு கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை.…
-
- 0 replies
- 721 views
-
-
எங்கள் நாட்டில் சாதி இல்லை! யோகி மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட சீமான் போன்றவர்களின் அரசியலே சாதியை வளர்க்ககூடியது. ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்வார்களாம். ஆனால் சாதிய மனம் அப்படியே அடியில் இருக்குமாம். இவர்கள் சொல்லும் தமிழர்கள் இணைப்பில் தலித்துகளோ அவர்கள் நலன்களோ காக்கப்படாததும், அவர்களுக்காக எவ்விதத்திலும் போராடாததற்கும் தருமப…
-
- 0 replies
- 1k views
-
-
அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது…
-
- 1 reply
- 884 views
-
-
ஏப்ரல் மாதம் நடந்த வருடாந்திர தேசியத் திறனறித் தேர்வுகளின் முடிவுகளை ஜப்பான் கல்வி அமைச்சகம் பொதுப்பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது. 2007 முதல் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஜப்பானிய மொழியறிவு, கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி விகிதத்தை, பொதுப்பார்வைக்கு வெளியிடுவது என்ற கல்வி அமைச்சகத்தின் முடிவு பிரச்சினைக்கு உரியது. இதுபோன்ற நடவடிக்கைகள் பள்ளிகளிடையே போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடும். ஏனெனில், கல்வி அமைச்சகத்தின் முடிவின்படி, இந்தப் பள்ளிகள் தேர்வு முடிவுகளை மட்டுமல்ல, அம்முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கையையும், மாணவர்களின் மதிப்பெண…
-
- 2 replies
- 792 views
-