சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
அச்சமும் துணிவும் மாறுபட்ட மனநிலைகளா? சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சமும் துணிவும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட மனநிலைகள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. பல சமயங்களில் உண்மையான துணிவுக்கு, அச்சமே செவிலித் தாயாக அமைகிறது! அச்சம் எப்போது ஏற்படுகிறது? ஒரு மனிதனை ஆபத்துகள் சூழும்போதுதான் அச்சம் தோன்றுகிறது. அந்த அச்சத்தின் பொருள் என்ன? அதனால் விளையக்கூடிய பயன் என்ன? நாம் காட்டு வழியே தனிமையில் நடந்து செல்லுகிறோம். அப்போது திடீரென்று ஒரு புலி எதிர்ப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே, நம் உள்ளத்திலும் உடலிலும் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். புலி நம்மீது பாயப் போகிறது. அதனிடமிருந்து நாம் எப்படியாவது …
-
- 1 reply
- 3.2k views
-
-
கோவையில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, சர்வதேச நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகளில், எம்.பி.ஏ. படித்த சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம…
-
- 0 replies
- 550 views
-
-
வழமையாக பார்த்துள்ளேன் தும்மினால் நூறாண்டு வாழ்க என குழந்தைகளை வாழ்த்துகின்றனாங்கள் அதே மாதிரி வெள்ளையலும் தும்மின உடனே "bless you" என்பார்கள் இப்படி வாழ்த்துவதனால் என்ன பயன்?
-
- 6 replies
- 1k views
-
-
நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதன…
-
- 2 replies
- 6.7k views
-
-
அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம். ‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர். இப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல…
-
- 0 replies
- 1.1k views
-
-
தூத்துக்குடியில் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தை கிழித்துத் தொங்கவிட்ட வீரத்தமிழன் சந்தோஷ்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் 'ரஜினிகாந்த் தூத்துக்குடிக்குச் செல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை', என்றார் நண்பர். 'நான் எதிர்பார்த்தேன்!' என்றேன் நான். வியப்புடன் உற்றுப்பார்த்த நண்பன், 'எப்படி?' என்றார் ஒற்றை வார்த்தையில். 'ஒன்றுமில்லை, காலாவுக்கு கன்னடத்தில் திரையரங்குகளில் தடைவிதித்து ஆப்படித்துவிட்டார்கள்! இளிச்சவாயன் தமிழன்களும் வரலேன்னா அம்போன்னு போயிருமேன்னு கவலைப்பட்டுப் போயிருப்பார்' என்று விரித்…
-
- 1 reply
- 1.4k views
-
-
தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்ற…
-
-
- 4 replies
- 833 views
-
-
தெரிதலும், புரிதலும்..! ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறு குழந்தை.. ஒரு நாள் வேலை விடயமாக அம்மா வெளியே சென்றுவிட, வீட்டில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தந்தை ஏற்கிறார். குழந்தையும் சமர்த்தாக தன்னுடைய விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தது.. அதில் உறவினர் ஒருவர் பரிசளித்த பொம்மை "காஃபி செட்" குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். தந்தை வரவேற்பறையில் அமர்ந்தவாறு தினசரிகளை படிக்கத் தொடங்கினார்.. சிறிது நேரத்தில் குழந்தை பொம்மை "காஃபி செட்டை" தந்தையிடம் நீட்டி, "அப்பா,.! இந்தா..நான் போட்ட டீ., குடி..!" என்றது. அந்த பொம்மையினுள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. தந்தையும் குழந்தையை கொஞ்சியவாறு " ஆஹா..செல்லம்.., நீ தயாரித்து கொடுத்த டீ மிகப் ப…
-
- 6 replies
- 865 views
-
-
தெற்காசிய பின்னணியுடைய பிரிட்டன் பெண்கள் புற்றுநோயை மறைத்து வாழ்வது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் புற்றுநோயை பற்றி சமூகத்தில் நிலவும் களங்கமான முத்திரையால், தெற்காசிய பின்னணியுடைய பல பிரிட்டன் மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய பெண்கள் தங்களுக்கு இருக்கும் புற்றுநோயை யாருக்கும் தெரியாமல் மறைத்து வாழ்வது பிபிசிக்கு தெரிய வந்துள்ளது. குடும்பத்தினரின் மறுமொழி எவ்வாறு இருக்…
-
- 0 replies
- 452 views
-
-
தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும் 25 Views நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் வடிவம். கேள்வி- பெண்களுக்கெதிரான வன்முறைகளை எத்தனை விதமாக வகைப்படுத்தலாம்? பதில் – பொதுவாக அமைப்பு ரீதியான வன்முறைகள். இந்த சமூகம் ஒரு ஆணாதிக்க அமைப்பாக பெண்ணின் மீது நிகழ்த்தகூடிய வன்முறைகள். மதம் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தக்கூடிய அல்லது மத ரீதியாக நடத்தக்கூடிய வன்…
-
- 0 replies
- 421 views
-
-
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம். எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் காதில் செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார். இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது. பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும். கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி எ…
-
- 1 reply
- 791 views
-
-
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேச…
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
#தேவதாசி 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது. முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார்,…
-
- 0 replies
- 4.5k views
-
-
20 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2020 இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர். யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி? தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி…
-
- 2 replies
- 780 views
-
-
தேவதைகளின் குசு by கங்காதுரை • January 1, 2019 எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்க…
-
- 3 replies
- 3.9k views
-
-
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி, வரவேற்பைப் பொறுத்து இதைப்போன்ற பல ஆக்கங்களை வழங்குகின்றேன்... ... கேள்விகளும் கேட்கலாம்.. தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.... நம் புலத்தமிழர்களிடம் தேவையான அளவு படிப்பறிவு, திறமை இருந்தும் நாம் ஏன் இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை? சிலர் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் மதிக்க கூடிய நிலையில் இருப்பதில்லை! நல்ல பட்டப்படிப்புகளை படிக்கின்றார்கள்... பின்னர் பார்த்தால் ஒரு கடையை வைத்திருக்கின்றார்கள். திறமை இல்லாததால் தான் என்று நினைத்தால் அது தப்பு. முயற்சி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் நாம் ஏற்கனவே இருக்கும் தொழிலை, மற்றவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவையை பாவித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும்? நாமாக …
-
- 16 replies
- 3k views
-
-
தை மாதம் முழுவதும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு தமிழர்களின்தாய் மொழியாம் தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பூண்டோடு அழித்திட உதயமாகியுள்ள நாசகார கும்பல்!!!
-
- 6 replies
- 564 views
-
-
தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும். [தமிழர் அறியவேண்டியது – RP] 14 ஆம் திகதி நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.) இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம். த…
-
- 0 replies
- 734 views
-
-
தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும் சமீபகாலமாக பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகளில் மிக முக்கியமான ஒன்று காதல் தோல்வியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், தற்கொலைகளும், கோர நிகழ்வுகளும்தான். வாழும் உலகில் காதல்கள் ஏன் தோல்வி அடைகின்றன. அதனைத் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கின்றன? பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் காதலைப் பற்றிய சரியான கண்ணோட்டமோ தெளிவான சிந்தனையோ இருப்பதில்லை. பருவவயதில் எழும் ஒரு உத்வேக உணர்வுக்கு காதல் என பெயர் சூட்டி, அது நிறைவேறாது போனால், காதலையும் கொலைசெய்து, தாங்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான்கைந்து முறை ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அப்புறம் சிரிப்பதும், கடிதம் கொடுப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்து…
-
- 17 replies
- 2.1k views
-
-
உடல்மொழியானது ஒரு மனிதனின் மனோபாவம் அல்லது மனநிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவக்கூடிய வகையில் குறிப்புகளை வழங்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அது முரட்டுத்தனம், சலிப்பு, தளர்வான நிலை, போன்றவற்றையும் இன்னும் பல மனநிலைகளையும் உணர்த்தலாம் கையசைவு, சுட்டுதல், தொடுதல் மற்றும் சாய்ந்த உடல் நிலை (கூன் விழுந்த நிலை) ஆகியவை அனைத்து வகையான சொல்லில் இல்லாத தகவல்தொடர்பு வகைகளாகும். உடல் அசைவு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு உடலசைவியல் எனப்படுகிறது. மனிதர்கள் பேசும்போது உடலை அசைக்கின்றனர், ஆராய்ச்சிகளின் படி இதனால் "தகவல்தொடர்பு கடினமானதாக இருக்கும்போது, மன ரீதியான சிரமம் குறைக்கப்படுகிறது" என்பதே அதற்குக் காரணமாகும்.உடல் ரீதியான வெளிப்படுத்தல்கள், அவற்றைப் பயன்படுத்தும் …
-
- 12 replies
- 7.8k views
- 1 follower
-
-
தொடாமல் சுடுவது... வெறுப்பாகும்! விமானத்தில் பெண் ஒருவள் பயணம் செய்கையில், ஒரு ஆபிரிக்க கறுப்பரின் அருகில் அமர நேர்ந்தது.இனத் துவேசியான அந்தப் பெண், விமானப் பணிப் பெண்ணை அழைத்து, ஒரு நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப் போவதையிட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அ…
-
- 5 replies
- 810 views
-
-
தொண்டு நிறுவனங்கள்: நடப்பது என்ன? மாற்றம் தேவையா? | Nerukku Ner | EP 016 | Part 01 | IBC Tamil TV தொண்டு நிறுவனங்கள்: உண்மையில் நடப்பது என்ன? தொண்டுப் பணிகளில் மாற்றம் தேவையா? பண உதவியால் மட்டும் எல்லாம் சாத்தியமாகுமா? நீண்ட கால திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றனவா? தொண்டு அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 4 replies
- 1.3k views
-
-
முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவு…
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.[/size][/size] [size=3][size=4]ஆனா…
-
- 2 replies
- 1.1k views
-