சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இளைய பாரதத்தினாய்….. ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன். படித்து விட்டு வேலையில்லாமலிருந்த இளம்வயதில் நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி, தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவி…
-
- 0 replies
- 638 views
-
-
கைக்கடிகாரம் மணிகாட்டிறதுக்கு (அதுக்குத்தான் CASIO இருக்கவே இருக்கே) என்று இருந்தது போய் இப்ப எல்லாம் முதலீட்டுக்கு வாங்கிறது (நகை வாங்கிறது போல) தான் வாடிக்கை. நானும் ஒன்று வாங்கி வைப்பம் என்று இணையத்தில தேடினால்.. பல ரகங்கள் பல விலைகளில் வருகின்றன. எல்லாமே பார்க்க கவர்ச்சியாகவும் அழகாகவும்.. இருக்கின்றன. அந்த வகையில் எந்தக் கடிகாரம் வாங்கினால் நல்ல அழகாகவும்..முதலீடாகவும்.. இருக்கும். அத்தோடு நேரமும் சரியாக் காட்டோனும். Rolex வாங்கிற அளவுக்கு நான் பணக்காரன் இல்லை. Citizen Seiko Ben Sherman Emporio Armani Brevet Omega இப்படியான ரகங்களில் எது நல்லது.. நீண்ட காலம் விலைமதிப்பிறக்கம் இன்றி வைத்திருக்கக் கூடியது..??! இப்ப…
-
- 35 replies
- 8.2k views
-
-
வன்முறைதான் வழியா? ஸ்ரீரஞ்சனி வன்முறை என்பது, அதிகாரம் அல்லது உடற்பலத்தைப் பயன்படுத்தி ஒருவரை அல்லது அவர் சார்ந்த குழுவைத் துன்புறுத்துதல் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துவதன் மூலம் குறித்தவரை அல்லது குறித்த குழுவைப் பயப்படுத்துதல் ஆகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையே சிறந்த வழி எனப் பலர் கருதுகின்றனர். அதற்கு, அவர்கள் வளர்ந்த முறையும், வாழ்ந்த சு10ழலும் முக்கிய காரணமாகின்றன. “அடி வாங்கி வளர்ந்ததால் தான், நான் இன்று ஒர் உயர்நிலையில் இருக்கிறேன். தழும்பு வந்தால் பெற்றோர்களிலும், ஆசிரியர்களிலும் ஒரு மரியாதையையும் பயமும் தானாகவே வந்துவிடும்!”- எமது சமுதாயத்தில் பெரியமனிதர் என மதிக்கப்படும் ஒருவர், இங்கு நிகழ்ந்த நடன அரங்கேற்றமொன்றில் சொன்ன வசனங்கள் இவை. இவ்வக…
-
- 1 reply
- 790 views
-
-
-
- 0 replies
- 688 views
-
-
சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார். சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி …
-
- 3 replies
- 763 views
-
-
முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் …
-
- 19 replies
- 1.8k views
-
-
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும் வாழ்கிறார்... * * * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஹிந்துக்களின் சாதிவெறிக்கு வெள்ளைக்காரன் தான் காரணம் ? மதங்களைத் தாண்டி எழுத நினைத்தாலும் பலதடவை முடிவதில்லை, தினமும் மதங்களின் பெயரால் சொல்லப்படும் பரப்புரைகளைக் கேட்கும் போது சிரிப்பதா, கோப்படுவதா எனத் தெரியவில்லை. ஹிந்து அடிப்படைவாதிகளால் கூட பலமுறை சாதி முறை சரியான ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவற்றை களைவதற்கு முன்வருவதில் தயக்கம் காட்டியே வருகின்றார்கள். பலர் நமது பாரம்பரியத்தில் பெருமிதம் உடையவர்களாக இருக்கின்றார்கள், சாதியத்தையும் அதன் அங்கமாகவே பார்க்கின்றார்கள். ஆனால் அண்மையக் காலமாக எழுந்துள்ள புதிய ஹிந்து அறிவுஜீவிகள் பலர் இந்தியாவின் சாதியத்துக்கு முகாலயர்களும், பிரித்தானியர்களும் தான் காரணம் என்ற புதுவித விளக்கங்களை முன்வைக்கத் தொட…
-
- 1 reply
- 2.4k views
-
-
எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது. அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று…
-
- 0 replies
- 676 views
-
-
லைவாணி எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவாள். அவள் அழுகையை அவ்வளவு சீக்கிரம் நிறுத்தவும் முடியாது. அதோடு, எப்போதும் அது இப்படி இருக்குமோ.. அப்படி இருக்குமோ என்று யோசித்துக் யோசித்து குழம்பிக் கொண்டே இருப்பாள். இதனால் அவளுக்கு அடிக்கடி தீராத தலைவலி வந்து சேரும். தலைவலிக்கு வைத்தியம் பார்க்க போனபோது தான் தெரிந்தது அவளுக்கு இருப்பது மன அழுத்தம் என்று. இதைக் கேட்டு அவளின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். காரணம் அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் எப்படி மன அழுத்தம் வரும் என குழம்பிப் போனார்கள். கலைவாணி மட்டுமல்ல, இது போன்ற பலரும் இந்த மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த மன அழுத்தம் யாருக்கு வரும், எதனால் வரும், அதை எப்படி தீர்ப்பது என்று சொல்லுகிறார் மனநல மருத்த…
-
- 26 replies
- 8.7k views
-
-
கொலை, பாலியல் வன்முறைகளில் சிறுவர்கள் - சமூக வலைதளங்கள் காரணமா? டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் இடம் பெற்றிருப்பதால், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மைனர் என்பதற்காக வயதை குறைக்கலாமா என்ற பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு வரை 33 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மீது குற்றவழக்குகள் அந்தந்த மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் …
-
- 0 replies
- 686 views
-
-
இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்... ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம். பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திரு…
-
- 1 reply
- 723 views
-
-
ஏன்னுடன் வேலை செய்பவர்களில் ஆபிரிக்காகாரன ஒருவனுமிருந்தான்.. மிக நல்லவன் நல்ல பகிடிகாரன். ஒரு நாள் மேலதிகாரி ஒருவர் வந்து தேவையில்லாமல் மிக அதிகமாக அவனிடம் கத்தினார். அவனோ மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்தவன் திரும்பி என்னை பார்த்தான் ஏதோ ஆப்பிரிக்க மொழியில் சொல்லிவிட்டு பழையபடி வேலை செய்யத் தொடங்கினான். சிறிது நேரம் அவனது கோபம் அடங்க விட்டு மெதுவாக அவனிடம் என்னநடந்தது என்னக் கேட்டேன். மேலதிகாரி போன பக்கம் பார்த்து 'சிக்கன் மைண்டட் மான்'; என்றான் இப்போ எனக்கு நடந்த பிரச்சனை பற்றி கேட்ட கேள்வி மேலான ஆவல் போய் கோழிப் புத்தி பத்தி கேட்க வேணும் போல இருந்தது. மெதுவாக கோழிப் புத்தி பற்றி கேட்டேன். அது என்னடாப்பா அந்த கோழிப் புத்தி? மிக ஆறுதலாக என்னைப் பார்த்தான் ப…
-
- 2 replies
- 790 views
-
-
"தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்", இது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பொன்மொழி. "அட அதான் தெரியுதுல, பிறகு ஏம்மா கண்ணு திரும்ப சொல்ற..?", னு கேக்கறிங்களா? இந்தக் கூற்ற நான் இப்போ மறுத்துப் பேசப் போறேன். நமக்குப் போக தான், எஞ்சியத பகிர்ந்து கொள்ளனுமா? இதோ பார்க்கலாம் அது பற்றி. நீங்கள் அறிவாளியா? தினமும் ஏதேனும் வாசிப்பவரா? மாணவரா? இந்தப் பழமொழி உங்களுக்கு சிறிதும் பொருந்தாது. நான் சொல்வது இப்பொழுதே உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சரிதானே? இன்று நாம் அனைவரும் படிக்கிறோம். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், இதனால் என்ன பயன்? நமக்கு என்ன பயன்? இதனால் நமக்கு உறுதியாக பயன் உண்டு, ஆனால், பிறருக்கு? அது தான் சொல்ல வரு…
-
- 0 replies
- 561 views
-
-
புலம்பெயர் மேற்குலக நாடொன்றில்.. காஸ் அடுப்பிட்டு பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொங்கல். மலேசிய நாட்டில்.... வீதியோரம் பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொங்கல்.! ஈழத்தில் போர்க்களத்து வெளியினில் பொங்கினான் தமிழன் பொங்கலோ பொங்கல். (பழைய படம் . 2009 க்கு முன்) வீதியிலோ.. வெளியிலோ.. பொங்க முடியாத தமிழன் வீட்டுக்குள்ளே.. காஸ் அடிப்பில் பொங்குகிறான் பொங்கலோ பொங்கல். வீட்டிலோ வீதியிலோ பொங்கிவிட்டு வீட்டுக்குள் படையல் செய்கிறான் தமிழன் பொங்கலோ பொங்கல். போர் தந்த சுமை தாங்கி.. கல்லடுப்பு வைச்சு முற்றத்தில் வைத்துப் பொங்குகிறான் ஈழத்தமிழன் பொங்கலோ பொங்கல். லண்டனிலே ஓட்டைக்கல்லடிக்கி கார்டனில் வைத்துப் பொங்குகிறான் தமிழன் பொங்கலோ பொ…
-
- 11 replies
- 3.4k views
-
-
சாதியம் எனது பார்வையில் ஈழம் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த காலப்பகுதி..…. தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வரும் போது காலணி அணிந்திருந்ததற்காக ஒரு சாதிக்கலவரம்….. தாழ்ந்த சாதி என்ற வார்த்தைப்பிரயோகத்தை விட தாழ்த்தப்பட்ட சாதி என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். மூன்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உயிருடன் குடிசையொன்றில் போட்டு கொளுத்தப்பட்டார்கள்…… இது அண்மையில் ஒரு வயோதிபர் கூறிய தகவல். இதெல்லாம் அந்தநேரத்தில சர்வ சாதாரணமாய் நடந்தது தம்பி என்றார். அது மட்டுமல்ல உயர் சாதியினரின் கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக கொலைசெய்யப்படுவதும் உயர் சாதிப்பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் ஓரளவு சா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மும்பையில் இருந்த காலத்தில் சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாயுடன் ஜாக்கிங் செல்வது என் வழக்கம். அங்குத் தான் அந்த பையாஜி அறிமுகம். பொதுவாக உ.பி., பிஹார் உள்ளிட்ட வட இந்தியர்களைப் பையாஜி என்று அழைப்பது ஒரு வழக்கம். அவர் ஒரு பானிபூரி வியாபாரி. கடற்கரையில் கடை போட்டிருந்தார். கடை என்றால் நீங்கள் நினைப்பதுபோல் அல்ல.. ஒரு நீளமான கூடை. அதன் மேல் ஒரு பெட்டி வைத்து உள்ளுக்குள் பானிப்பூரி ஐட்டங்கள் இருக்கும். வீடு திரும்பும் போது கடையை முதுகில் கட்டி கொண்டுவந்துவிடுவார். அவ்வளவு தான் அந்தக் கடை. சிலமாதங்களாக அவர் கடை போடும் இடம் வெறுமையாக இருந்தது. ``ஊருக்கு போய்ருப்பார் போல..’’ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் பையாஜியை தெரிந்த இன்னொரு நண்பரை பார்த்தபோது விசாரித்தேன். ``எனக்கும்…
-
- 3 replies
- 705 views
-
-
என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 வழிகள் இதோ… 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். 2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதி…
-
- 13 replies
- 2.9k views
-
-
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ”உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே” என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ”அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்” என்று சொல்ல நேரிடலாம். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொனனுடுவேன், தலையை திருகிடுவேன், கையை முறிப்பேன் போன்ற வார்த்தைகளை உபய…
-
- 9 replies
- 3.6k views
-
-
ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. மேலும் அந்த நேரம் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். எனவே அவர்கள் எதனால் அதை செய்கிறார்கள், அப்படி செய்யும்போது என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றிய சில ஆலோசனைகளைப் பார்ப்போமா!!!. முதலில் வாழ்க்கைத்துணை உண்மையில் ஏமாற்றுகின்றனரா, இல்லை நமக்கு சித்தப்பிரம்மை பிடித்துள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது வெளியே செல்லும் போது சீக்கிரம் செல்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அழகான கைகள் யாருடைய கைகள்? சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இ…
-
- 1 reply
- 2.3k views
-
-
A : ஏங்க இந்த ஏரியால இனியவன்-னு ஒருத்தர், அவரு வீடு எங்க இருக்கு-னு தெரியுமா? B : இல்லைங்க தெரியாது A : அவரு பிரபல எழுத்தாளருங்க,நிறைய விருதுலாம் வாங்கி இருக்காருங்க B : அப்படியா! தெரியலைங்களே A : (தயங்கியபடி) அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்ல B : அட அந்த கால் கொஞ்சம்,நடக்க முடியாம தடுமாறி நடப்பாரே அவர சொல்லுறீங்களா? A : அவர்தான் B : இத முதல்லயே சொல்ல கூடாதா.... இப்புடியே நேரா போய் வலது பக்கம் திரும்புனீங்க-னா இரண்டாவது வீடு. இந்த நிகழ்வில் இருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? அவர் சக மனிதரை அடையாளப்படுத்திய விதம் சரியா? இப்படித்தான் இன்று பெரும்பாலான மக்கள் சக மனிதரின் குறையை சொல்லியே அவர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.சிலர் அறிந்தும்,சிலர் அறியாமலு…
-
- 0 replies
- 739 views
-
-
http://www.youtube.com/watch?v=78dGSRfGjjc இவன் தான் மனிதன். பலரும்சிந்திக்க வேண்டியது.
-
- 10 replies
- 1.3k views
-
-
பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும் நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும். " சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்! துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" " எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும். காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் …
-
- 3 replies
- 986 views
-
-
மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க…
-
- 5 replies
- 4.8k views
-