சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
குவைத்: இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் - பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அரபிக் சேவை நடத்திய புலனாய்வில், இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள் மூலமாக நடைபெற்று வருவதை கண்டறிந்தது. இந்த அடிமை வர்த்தக சந்தை, ஃபேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உட்பட கூகுள், ஆப்பிள் செயலிகள் மூலமும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. "இடமாற்றத்திற்கு பெண் வீட்டு வேலையாள்" அல்லது "விற்பனைக்கு பெண் வீட்டு வேலையாள்" என்று பொருள்படும் ஹாஷ்டேக்குகள…
-
- 1 reply
- 635 views
-
-
படித்ததும் பகிர்ந்ததும் -வீணா -32 பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாற்று நாயகர்! 1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி…
-
- 0 replies
- 634 views
-
-
திருமண உறவின் வரலாறு: 'தேன் நிலவு' என்பது என்ன? ஏன் அந்தப் பெயர் வந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்குப் பிறகு தங்களை நெருக்கமாக்கிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் கவனத்தை ஈர்க்க விரும்புவது இயற்கையானது. இதற்காக திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணம் நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருக்கிறது. இது பெரும்பாலும் பணக்காரத் தம்பதிகளுக்கே உரியது. தொடக்க காலத்தில் திருமணத்திற்குப் பிந்தைய 'சுற்றுப்பயணத்தை' மேற்கொள்வது நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க பணக்கார தம்பதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும் மு…
-
- 0 replies
- 634 views
- 1 follower
-
-
எனது மகள் சோம. அழகு 2016ல் 'திண்ணை' இணைய வார இதழில் எழுதிய கட்டுரை . மேற்கூறிய சட்டம் தொடர்பான பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது : ரௌத்திரம் பழகுவேன் - சோம. அழகு உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் சில பல அடிவருடிகளின் பிரதிநிதியாக இவரைக் கொள்ளலாம். இந்த …
-
- 2 replies
- 633 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? ஜெயமோகன் இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள். அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினி…
-
- 5 replies
- 633 views
-
-
பக்கத்து வீட்டில் இருந்து கிடைக்கும் பாசம்.. பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். அதை தவிர்த்து பக்கத்து வீட்டினரிடம் மோதிக்கொண்டே இருந்தால், இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும். எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜ…
-
- 0 replies
- 633 views
-
-
கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? சில நாடுகள், குறிப்பாக இன்னும் மோசமாக பாதிக்கப்படாத, ஆனால் பாதிக்கப்படுவோம் என எண்ணும் நாடுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி. வேகமாகாப்பரவி கோவிட் 19 தொற்று பரவி வரும்பொழுது பல நாடுகளில் உயிர்கள் காவு கொல்லப்படுகின்றன. அவ்வாறு நடந்த நாடுகளில், வைத்தியர்கள் அறிந்து கொண்ட ஒன்று : எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவரை சுவாசிக்க உதவவும் இயந்திரத்துடன் ( வெண்டிலேட்டர் ) இணைக்கின்றோமோ அவ்வளவிற்கு அவர் உயிர் தப்பாது சாத்தியங்கள் அதிகம் என்பதே. ஆனால், சுவாசிக்க உதவவும் இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளில் உள்ளன. பொதுவாக இவை அவசர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும். நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடையே, ம…
-
- 3 replies
- 633 views
- 1 follower
-
-
கண் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை எங்கே போவது என்பது தெரியும் ஆனால் எப்படி போவது என்பது என்று தெரியாது எல்லா திறமைகளும் இருக்கின்றது அதை எப்படி செயற்படுத்துவது என்பது தெரியாது இப்படித்தான் பல திறமை சாலிகள் தங்களிடம் இருக்கும் பல வரங்களை வைத்து கொண்டு அவற்றை எப்படி இந்த உலகிற்கு காட்டுவது என்பது தெரியாமல் அடைக்கப்பட்ட பாதையில் நிற்பதை போல விழித்து கொண்டிருக்கிறார்கள் . பல மனிதர்கள் தமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க விரும்புவதில்லை தான் மட்டும் சாதிக்க வேண்டும் தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தங்களை போல் வரக்கூடாது என நினைக்கிறார்கள் சில வெற்றியாளர்கள் தன்னை பற்றி சொல்லும் போது மிகவும் கடுமையான உழைப்பில்தான் நான் உயர்ந்து நிற்கிறேன் என்று மட்டுமே ச…
-
- 2 replies
- 633 views
-
-
அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும் (Female Genital Mutilation-FGM) சடங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக மழுங்கிய கத்தி ஒன்றைக் கொண்டு செல்லுவார். அதன் பின் நாகியா தன்னுடைய உறவினர்களிடம் சடங்கு முடிவடைந்ததாகக் கூறக் கூடியதாக இருக்கும். எந்தவிதமான இரத்தப்போக்கோ அல்லது வலியோ காணப்படமாட்டாது. கடுமையான உடல் உளப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடிய எப்ஜிஎம் ஆனது அதிகமாக ஆபிரிக்க நாடுகளுடன் தொடர்புடையதாக இருப்பதுடன் இப்பழ…
-
- 0 replies
- 632 views
-
-
குழந்தைகள் முன்பு பெற்றோர் முத்தமிட்டுக் கொள்வதன் விளைவுகள்... தேவை கவனம்! முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள். கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும். ``இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. க…
-
- 0 replies
- 632 views
-
-
பெற்ற தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை [^] வேப்பேரி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார். இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்மு…
-
- 0 replies
- 631 views
-
-
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்" ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு மாம்பழங்கள் வைத்திருந்தாள் ..... அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு மாம்பழங்கள் வைத்திருக்கிறாய், அதில் ஒன்றை உன் அம்மாவிற்கு, எனக்கு கொடுக்கலாமே என்றாள் ....... தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, ...... பின் உடனே ஒரு மாம்பழத்தை நறுக்கென்று கடித்து விட்டாள் ..... அதைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மாம்பழத்தையும் கடிக்கத் தொடங்கினாள் ..... தாயின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு உறைந்து போனது ..... கோபமும் ஏமாற்றமும் தலை தூக்கியது ..... என்றாலும், தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள் ...... …
-
- 0 replies
- 629 views
-
-
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மார்ச் 2023, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன. அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்ட…
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
சிறப்புக் கட்டுரை: மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மின்னம்பலம் அ. குமரேசன் மனதைத் தொடும் மனிதநேயச் செயல்பாடுகள் தொடர்பான பல செய்திகள் கொரோனா காலத்தில் வருகின்றன. அத்தகைய ஒரு செய்தி மனதைத் தொட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் செயல்பாடு குறித்த விரிவான சிந்தனைக்கு இட்டுச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (66) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். பலரும் நிதியுதவி செய்கிறார்கள், இதைவிடப் பெரிய தொகை வழங்குகிறார்கள் என்றாலும் இந்தச் செய்தி ஏன் மனதைத் தொடுகிறது என்றால், பாண்டி அந்தத் தொகையைப் பிச்சை எடுத்துத் திரட்டி வழங்கியிரு…
-
- 0 replies
- 627 views
-
-
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவ…
-
- 0 replies
- 626 views
-
-
-
இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள் Image captionதிருமணத்தை தடுப்பதற்காக தனது கைகளை இவர் வெட்டிக்கொண்டுள்ளார் இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார். 15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார். '' என…
-
- 0 replies
- 626 views
-
-
365 பெண்களோடு டேட்டிங் செல்ல இலக்கு வைத்திருப்பது ஏன்? அனைத்து வயது வரம்பு பெண்களோடும் இவர் ஏன் டேட்டிங் செல்கிறார்? கீதா பாண்டே பிபிசி செய்திகள், டெல்லி 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டேட்டிங் செல்லும் சுந்தர் ராமு தமிழ் நடிகர், தொழில்முறை நடனக் கலைஞர் மற்றும் புகைப்படக் கலைஞர் சுந்தர் ராமு கடந்த சில ஆண்டுகளில் 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார். ஆனால் 365 டேட்டிங் செல்ல வேண்டும் என்கிற தனது இலக்கை அடைய இன்னும் 30 குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார். அவர் விவாகரத்தானவர். ஆயினும் "காதலை வெறுக்கவில்லை" என்கிறா…
-
- 3 replies
- 625 views
- 1 follower
-
-
லாக்டவுன் காலகட்டத்தில் பெருகி வரும் பாலியல் சீரழிவுகள் ! ஒருபுறம் வி.பி.என். மூலம் ஆபாசத் தளங்கள் இளைஞர்களைச் சுரண்ட, டிக்டாக் போன்ற செயலிகள், யூ-டியூப் மூலம் இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது, ஆபாச நடன அசைவுகள் போன்றவற்றின் மூலம் பெண்கள் நுகர்வுப் பண்டமாக காட்டப்படுகின்றனர். July 9, 2021 பத்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர்களான ராஜகோபால், கெவின் ராஜ் ஆகிய பாலியல் பொறுக்கிகளை பள்ளியில் படிக்கும் இன்னாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அம்பலப்படுத்தத் துவங்கிய நாள் முதல் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளிலும் நடந்து வந்த இத்தகைய பாலியல் பொறுக்கித்தனங்கள் அனைத்தும் அம்பலமாகத் துவங்கின. சிவசங்கர் பாபா எனும் ஆன்மிகக் கிரிமினல், தாம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களின் உதவியு…
-
- 5 replies
- 625 views
-
-
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர். ஒரு ஆண் பெண்ணை நேசிப்பதைப்போல், ஒரு பெண்ணாய் சக பெண்ணை காதலிக்கும் ஒரு பாலின ஈர்ப்பாளர். நானும், நாமும் நான் என்பது சுயநலமான சொல் என்றே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்பது சுயநலமான சொல் அல்ல. மிகவும் சுய மரியாதையான சொல். …
-
- 0 replies
- 625 views
-
-
இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், …
-
-
- 4 replies
- 625 views
-
-
லாக் டவுனும் எடைக்குறைப்பும் ஆர். அபிலாஷ் இந்த லாக்டவுனில் சிலர் பிரபலங்கள் மூச்சைப் பிடித்து டயட்இருந்து எடை குறைத்து அந்த ‘எப்படி இருந்த நான் இப்படிஆயிட்டேனே’ படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றில் பரபரப்பைஏற்படுத்த இன்னும் பல பிரபலமல்லாதவர்களும் கூட தங்கள்உணவுப்பழக்கம், எடை குறைப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறைஎடுத்து வருவதைப் பார்க்கிறேன். அவர்களிடம் ஏன் இந்த திடீர்லட்சியம், திடீர் தன்முனைப்பு, வெறி எனக் கேட்டால் அவர்கள்பொதுவாக சொல்வது “லாக்டவுனில் வெளியே செல்லத்தேவையில்லை, வீட்டு உணவை உண்ணலாம், கட்டுப்பாடாய்இருக்கலாம், அது எளிதாக இருக்கிறது” என்பது. இதை ரிவர்ஸில்பார்த்தால் வெளியே அதிகம் செல்வது, அதனாலே வெளி உணவைகட்டுப்பாடின்றி புசிப்பது எடை அதிகமாகக்…
-
- 0 replies
- 624 views
-
-
பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. பொருளின் மதிப்பைவிட அதிகமான தொகையைத்தான் கொடுக்கிறோம் என்று தெரிந்துகொண்டே பிராண்டட் பொருட்களுக்கு அதிக விலை கொடுக் கிறோம். ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை. தனி அந்தஸ்தை கொடுக்கும் சில பிராண்டுகளுக்கும் அதிக விலை கொடுக்கத்தான் செய்கிறோம். அதே சமயத்தில் பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. பிராண்டட் பொருட்களுக்கு ஈடான அதே தரத்தை பிராண்டட் அல்லாத பொருட்களிலிருந்தும் பெற முடியும். பெரிய நிறுவனங்கள் தங்களது பிராண்டை உருவாக்க கோடி கோடி யாக செலவு செய்து மக்களிடம் நம்பிக் கையைப் பெறுகிறார்கள். அதற்காகும் செலவுகளை பொருட்…
-
- 0 replies
- 624 views
-
-
மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் நலமுடன் இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால், அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள். மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார். சமூகத்துடன் நாம் பழகும் போ…
-
- 5 replies
- 624 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 623 views
- 1 follower
-