Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்! சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெற…

    • 0 replies
    • 580 views
  2. இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடிபணிய மாட்டார்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உறுதிபட தெரிவித்தார். இஸ்ரேல் – பாஸ்தீனம் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முயன்று வரும் நிலையில், அவருக்கும் இஸ்ரேலுக்கும் அப்பாஸ் விடுக்கும் தகவலாக இப்பேச்சு கருதப்படுகிறது. அப்பாஸின் இந்த அனல் பறக்கும் பேச்சு அவருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதையே காட்டுகிறது. அப்பாஸ் தனது ஆதரவாளர் களின் மத்தியில் பேசுகையில், “கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்படாவிட்டால் அமைதி திரும்புவதற்கு வாய்ப…

  3. மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…

  4. யுக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து இன்று ஏப்ரல் 7ம் தேதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை. "ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை கவுன்சிலில் இருந்து …

    • 1 reply
    • 346 views
  5. ஆப்கானிஸ்தானில்... பாடசாலைக்கு அருகாமையில், தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் காயமடைந்தனர். நகரின் மேற்கில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட…

  6. கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionகலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். இந்த காட்டுத் தீ, கிராமப்புற பகுதிகளை தீக்கிரையாக்கியதில், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. விளம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவித்த கலிஃபோர்னியா மாகாண ஆளுநர், இந்த மாகாணம் இதுவரை சந்தித்திராத மோசமான பேரழிவு என்று வர்ணித்தார். இன்னும் 16 இடங்கள…

  7. ஐக்கிய அரபு அமீரகத்தின்... புதிய ஜனாதிபதியாக, ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு! ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…

  8. 3ஆம் உலகமகா யுத்தம் தண்ணீரினால் உருவாகலாம் - அப்துல் கலாம் மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 'சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும் - இன்றும்' என்ற தலைப்பில் கோவையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு பற்றிய கண்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அப்துல் கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்… கடந்த 15 வருடங்களின் முன்னர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் விற்பனைக்கு வருமென நினைத்துக்கூட பார்க…

  9. சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: வரலாற்றில் முதல்முறையாக கூட்டாக அறிவித்த பிரிட்டன் - அமெரிக்கா கோர்டன் கொரேரா பாதுகாப்பு நிருபர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UK POOL VIA ITN பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, "நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது" என்றும், சமீபத்திய தேர்தல் உ…

  10. மீண்டும் பறவை காச்சல்? நைஜீரியாவில் கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சலை உண்டு பண்ணியது ஹெச்.5.என்.1. வகை கிருமிதான் என்று உறுதிசெய்யப்பட்டது நைஜீரியாவின் பல்வேறு இடங்களில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சலைத் தோற்றுவித்த்திருப்பது மோசமான ஹெச்.5.என்.1 வகை கிருமியா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் முயன்றுவருகிறார்கள். நோய் பரவியிருப்பதாக கண்டறிந்ததை அடுத்து இருபத்து நான்கு மணி நேரமும் வேலைசெய்துவருவதாகவும், நோய்கண்ட பறவைகளைக் கொன்று, பண்ணையை வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தி வருவதாகவும் நைஜீரிய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்த வடக்கு நைஜீரியாவின் கடுனா அருகேயுள்ள கோழிப்பண்ணையை தாக்கியிருப்பது ஹெச்.5.என்.1 வ…

  11. சிறை வைக்கப்பட்டுள்ளாரா கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தம் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு கத்தார் செளதி அரேபியா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சுமூகமாக்க அப்போது பேச்சுவார்த்தை நடத்தி…

  12. 'பலஸ்­தீ­னர்­களை காத­லித்தால் எமக்கு சொல்­லி­வி­டுங்கள்' - இஸ்ரேல் நிபந்­தனை By VISHNU 06 SEP, 2022 | 03:40 PM இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தின் மேற்­குக்­கரை பிராந்­தி­யத்­துக்கு செல்லும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான புதிய நிபந்­த­னை­களை இஸ்ரேல் அமுல்­ப­டுத்­த­வுள்­ளது. மேற்குக் கரை­யி­லுள்ள பலஸ்­தீ­னி­யர்­களை வெளி­நாட்­ட­வர்கள் காத­லிக்க ஆரம்­பித்தால் அது குறித்து இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்­சுக்கு அறி­விக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் நிபந்­தனை விதித்­தி­ருந்­தது. நேற்று திங்­கட்­கி­ழமை (05) முதல் புதிய விதிகள் அமு­லுக்கு வர­வி­ருந்­தன. எனினும் இறுதி நேரத்தில் மேற்­படி காதல் தொடர்­பான நிபந்­த­னை…

  13. ஆப்கானிஸ்தான் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர தலிபான்கள் விருப்பம் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தாலிபன்கள் நடத்தி வருகின்ற தாக்குதல்களில் இதுவரை 31 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைவயில் அவர்கள் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர். அத்துடன் வருடம்தோறும் 7,000 படையினர் கொல்லப்படுவதுடன் பன்னாட்டுப் படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகின்ற நிலையில் தலிபான்கள் அந்த அறிவிப்பினை அறிக்கைஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். 17 வருடங்களாக நடக்கும் போரை நிறுத்த நினைக்கிறோம…

  14. அமெரிக்காவில் கருப்பர்களின் போராட்டம் தொடர்கிறது: ஊரடங்கு உத்தரவையும் மீறி கலவர பூமியானது பெர்குசன் கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதும், போராட்டம் நீடிக்கிறது. இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் மைக்கேல் பிரவுன் உடலில் 6 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. செயின்ட் லூயிஸ் மாகாணம் பெர்குசன் நகரில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கேல் பிரவுன் ஒரு கடையிலிருந்து சுருட்டுகளை திருடிக் கொண்டு ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வெள்ளை இன போலீஸ் அ…

  15. துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா? துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில் தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர். ஆனாலும் பிரதமர் சேக் முகமது தனது மகளை கட்டுப்படுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளார். சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்து, இந்தியாவை தேர்…

  16. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்! சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார். திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா, பிரான்சுக்கு அவர்களின் முடிவில் அதிகரித்த ரோந்துச் செலவை ஈடுகட்டச் செலுத்தும் தொகை ஆண்டுக்கு 55 பவுண்டுகளிலிருந்து 63 மில்லியன் பவுண்டுகளாக உயரும். மக்கள் செல்வதைத் தடுக்க பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை 200ல் இருந்து 300ஆக உயரும். மேற்குறித்த பணம், கூடுதல் அதிகாரி…

  17. நாளிதழ்களில் இன்று : ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆளே இல்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினமணி கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முன்வந்…

  18. ஸ்பெக்ட்ரம் ராசா கைது - நவீன திருதராஷ்டிரனின் விடாத பாசம்..! என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் சூடு நிறைந்த வார்த்தைகள்.. மறுபக்கம் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரை கலாட்டா காலனியாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. இவைகள் இரண்டில் தப்பித்து கடலில் குதித்தாலும் எதிரில் அலைபாய்ந்து வரும் தேர்தல் என்னும் சுறா.. இந்தப் பக்கம் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டி பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாத நிலைமை.. என்னதான் செய்வார் அடிமை மன்னமோகனசிங்..? அவருடைய ஆளுமையின் கீழ் வரும் சி.பி.ஐ.யை உச்சநீதிமன்றம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தகுந்தபடி வாதாட வழக்கறிஞர்களுக்கு வேண்டிய உண்மைத் தகவல்கள் கிடை…

  19. ஆக்கிரமிப்புக்கெதிரான நோர்வேயின் ஆயுதம் தாங்கிய போராட்டம் யேர்மனியப்படைகளுக்கான விநியோகத்தைத் தடுக்கும்முகமாக நோர்வேஜிய கடற்பரப்பிலே கண்ணிவெடிகளை தாம் விதைத்துள்ளதாக பிரித்தானியாவும் பிரான்சும் அறிவித்த மறுநாளே ஹிட்லர் தலைமையிலான யேர்மனியப்படைகளால் 1940 ஏப்ரல் 9 அன்று நோர்வே தாக்கப்பட்டது. 2ஆம் உலகயுத்தத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இத்தாக்குதலானது அரசியல் மையங்களை மட்டுமன்றி சாதாரண நோர்வே தேசத்துப் பொதுமக்களைக்கூட வியப்புக்குள்ளாக்கியது. ஏனென்றால் 1ஆம் உலகயுத்தத்தைப்போலவே 2ஆம் உலகயுத்தத்திலும் எந்தத் தரப்பையும் சாராது நடுநிலமை பேணுவதனூடாக யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற அவர்களின் கணிப்புகளை முற்றிலும் பொய்யாக்கும்…

  20. வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன் வடகொரிய இராணுவம் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், இராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/…

  21. தாக்குதல் அச்சுறுத்தல்: போர்க்கப்பல்களை கடலுக்குள் அனுப்பியது இந்தியக் கடற்படை திரும்பக் கடலுக்குள் அனுப்பப்பட்ட இந்திய கடற்படைப் போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.சுமித்ராஇந்தியாவின் கிழக்கு நகரான கொல்கத்தா துறைமுகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, துறைமுகத்திலிருந்த 2 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை மீண்டும் கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல்கள் செயல்பாட்டு காரணங்களுக்காக கடலில் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை வந்ததாக கடலோர பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்தியக் கடற்படை தினத்த…

  22. 5 பெண் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் வன்புணர்வு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு எதிராக தெருவோர நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண் செயற்பாட்டாளர்கள், கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Getty Images மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர் அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக கார்களில் ஏற்றிச் செல்லப்பட்டு யாருமற்ற ஓர் இடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதாக போலீசார், பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக போலீசார் கூறுகின்றனர், ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.…

  23. பாஸ்டன்: பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறார் என்று கூறி அமெரிக்க விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டவருக்கு 4 லட்சம் டாலர்கள் நிவாரணத் தொகையாக வழங்க விமான நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்தவர் ஜான் செர்குய்ரா. இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இவர் பாஸ்டனிலிருந்து புளோரிடாவின் போர்ட் லாடரேல் நகருக்குச் செல்ல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்தார். ஆனால் இவரும், மேலும் இரண்டு இஸ்ரேலியர்களையும் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். இரு இஸ்ரேலியர்களும் ஆங்கில மொழியில் இல்லாமல் வேறு மொழியில் மிக சத்தமாக பேசியபடி இருந்ததால் அவர்கள் …

  24. உலகப்பார்வை: அமெரிக்க சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் லிபர்டி தீவில் உள்ள நியூயார்க் துறைமுகத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலை தளத்தின் மீது பெண் ஒருவர் ஏறியதையடுத்து, சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பெண்ணிடம் மூன்று மணி நேரம் பேசி சமாதானப்படுத்தி அவரை ஏணி மூலம் கீழே இறங்க வைத்த காவல்துறையினர், தற்போது அவரை விசாரித்து வருகின்றனர். இதனை நேரில் பாரத்த பலரும், அதனை படம் மற்றும் வீடியோ பிடித…

  25. கடந்த சனியன்று எனது வீட்டு அருகில் இருக்கும் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான தலைமுடி வெட்டும் கடைக்கு தலையை மேலால எடுக்க சென்றிருந்தேன். அங்கு சில பெண்கள் உட்பட பத்து வட இந்தியர்கள் இருந்திருப்பார்கள். போனது தொடக்கம் முடியும் வரை கட்டிப்பிடித்து அழாத குறையாக விம்மிக் கொண்டிருந்தார்கள். என்ன???? "பிரித்தானியாவில் சில்பா செட்டி இனவாதத்தால் பாதிப்பாம்". அரை மணி நேரம் தலையை குடுத்துக் கொண்டிருந்த எனக்கோ பொறுமை இழந்து "இந்தியர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாடம்" என்றேன். "ஏன்?" என்றார் ஒருவர். நானோ "இந்தியாவில் இல்லாத இனவாதமா??, மொழி வாதாமா? சாதியமா? ... " என்று ஒரு பட்டியல் போட்டேன்.எப்படி இந்தியாவில் சாதி என்ற மிருகம் தலை விரித்தாடுகின்றதை மெல்லமாக விட்டு விட்டு, வீடு வந்தேன். ஒ…

    • 5 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.