Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹொங் கொங்கில் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு – இளைஞர் படுகாயம் ஹொங் கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒரு இளைஞர் படுகாயடமந்துள்ளார். இன்று தாய்ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்த முற்பட்ட இளைஞர் மீதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை மருத்துவகிசிச்சைக்காக பொலிஸார் எடுத்துச்செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இதேவேளை கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் பொலிசாரை தாக்குவதை காணொளிகளும் வெளியாகியுள்ளன. சீனா மக்கள் குடிய…

  2. ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு. சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு 2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.…

  3. ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹொங்ககொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ஹொங்ககொங்கில் தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார். எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களின் போது, பொலிஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்…

  4. ஹொங்கொங் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி பெற்றுள்ளது! ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமை கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களால் ஹொங்கொங்கில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்துக்கு மத்தியில் ஹொங்கொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட மன்றங்கள் சார்பாக 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். …

  5. ஹொங்கொங் எல்லையில் படையினரை குவிக்கும் சீனா- வெளியாகின செய்மதி படங்கள் ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன. மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சிஎன்என்னும் உறுதி செ…

  6. ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்றுமுதல் பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிக்கலாம்! பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது. இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை (British National Overseas (BNO) செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தன. இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்றுமுதல்…

  7. ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…

    • 15 replies
    • 626 views
  8. ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…

    • 2 replies
    • 846 views
  9. ஹொங்கொங் தேர்தல்: வரலாறு காணாத அளவில் மக்கள் வாக்களிப்பு! ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட சபைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாதவாறு வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன்படி, வாக்குப் பதிவு ஆரம்பமாகி சுமார் 5 மணி நேரத்திலேயே 56 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 4.1 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 36 சதவீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை மக்கள் இரட்டிப்பாக வாக்களித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக அமைதியின்மை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்ப…

  10. ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றியுள்ளது. ஹொங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல் சட்டமூலம் ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும். அதே போல் “ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலத்தில் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும். அத்துடன் இந்த சட்டமூலங்கள் ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு …

  11. ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது… August 13, 2019 ஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. …

    • 2 replies
    • 901 views
  12. ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங் கூறினார். ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பத…

  13. ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்! ஹொங்­கொங்கில் குற்­ற­ச்­செ­யல்கள் தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களை விசா­ர­ணைக்­காக சீனா­விடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் புதிய சட்­ட­மூ­லம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, …

    • 1 reply
    • 734 views
  14. ஹொங்கொங்கிற்கு வருபவர்களுக்காக 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்: ஹொங் கொங் தலைவர் அறிவிப்பு By SETHU 02 FEB, 2023 | 08:59 PM ஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங், வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு பிரசித்தி பெற்றதாகும். 3 வருடகால கொவிட்-19 தனிமைப்படுத்தல், அரசியல் அடக்குமுறைகள் ஆகியவற்றின் பின்னர், மீண்டும் ஹொங் கொங்கை உலகை வரவேற்கும் 'ஹெலோ ஹொங்கொங்' பிரச்சார நடவடிக்கைகளை ஹொங்கொங் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஹொங்கொங்கின் பிரதம …

  15. ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு! ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹொங்கொங் மக்களுக்கான விசா கெடுவை நீடிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு அவுஸ்ரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தெரிவித்துள்ளார். இதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக அவுஸ்ரேலி…

  16. ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கமைத்து வழிநடத்திய ஜனநாயக சார்பு செயற்பாட்டாளரான ஜோஷூவா வொங் கைது செய்யப்பட்டுள்ள…

  17. ஹொங்கொங்கில் தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றம்! ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது’ என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. 8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத்…

  18. ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டம் சீனாவிடம் ஹொங்கொங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலை…

  19. ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019 ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹ…

    • 2 replies
    • 815 views
  20. ஹொங்கொங்கில் பொலிஸார் மீது தீ வைத்த போராட்டக்காரர்கள் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்கொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட…

  21. கொலம்பியாவில் உள்ள ஹொண்டியுராஸ் தூதரகத்தில், கிறிஸ்துமஸ் விருந்தின்போது பாலியல் தொழிலாளர்கள் வந்து அவ்விடத்தில் பொருட்களைத் திருடி அட்டூழியம் செய்தனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை விசாரிக்கப்போவதாக ஹொண்டியுராஸ் அரசாங்கம் கூறுகிறது. பொகோட்டாவில் உள்ள இந்த தூதரகத்தின் ஊழியர்கள் தமது கிறிஸ்துமஸ் விருந்திலே குடித்துவிட்டு களியாட்டம் போடுவதற்காக பாலியல் தொழிலாளர்களை அழைத்திருந்தனர் என்றும், அந்த விருந்தின்போது அங்கிருந்த கணிணிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை திருடுபோயுள்ளன என்றும் ஹொண்டியுராஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. களியாட்டம் போடச் சென்றவர்கள் தூதரின் அலுவலக அறைக்குள் மலம் கழித்துவிட்டுச் சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஹொண்டியுராஸ் மற்றும் கொலம்பியா இடையே போதைமர…

  22. மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தபட்சம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொமாயாங்குவா நகரிலுள்ள சிறைச்சாலையில் புதன்கிகிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளின் கலகம் காரணமாக அல்லது மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹொண்டுராஸ் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி டானியெலோ ஒரெல்லானா கூறியுள்ளார். http://www.eeladhesa...ndex.php?option

  23. ஹொலிவுட் வெயின்ஸ்டீனின் முடிவில்லா பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் – அந்தரங்கங்களை வெளியிட்டார் அந்தரங்க செயலர்… ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 65 வயதுடைய பிரபல ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் றைம்ஸ்’ இதழ் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர். அந்த வரிசையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் தற்போது இணைந்துள்ளா…

  24. ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…

  25. எகிப்திய ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக்கிற்கு இன்று ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தினை தனது குடும்ப ஆட்சியாக ஆண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிளர்ச்சியாளர்கள் பலரை ஹொஸ்னி முபாரக் கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழங்கு விசாரணை ட்றயல் அட்பார் முறையில் கடந்த 10 மாதங்களாக நடந்து வந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை ஆதரரித்து மக்கள் குதூகலத்தில் குதித்தமையையும் காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹொஸ்னி முபாரக்குடன் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹபீப் அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது h…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.