உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
அதிர்ச்சியில் உறைந்துள்ள நேரில் கண்ட சாட்சிகள் ''மக்கள் மகிழ்ச்சியாக மதுவருந்திக் கொண்டிருந்தனர். நகரெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், வண்ண விளக்கு அலங்காரங்கள். நகரே விழா கோலம் பூண்டிருந்த சூழலில், திடீரென எங்கள் கண் முன் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது'' பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் 12 பேர் இறக்க காரணமான லாரி பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கும், 48 பேர் காயமடைந்ததற்கும் காரணமான கோர சம்பவம் குறித்து நினைவுகூர்கையில் அதிர்ச்சியில் உறைந்த பிரிட்டனை சேர்ந்த எம்மா ரஸ்டன் கூறியது தான் மேற்கூறியவை. பெர்ல…
-
- 0 replies
- 534 views
-
-
இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் l சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் அலேப்போ நகரை மீட்டுள்ள நிலையில் சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தநிறுத்தம் குறித்து ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ரஸ்ய அதிபர் புதன் அறிவித்துள்ளார். அத்துடன் இரண்டு தரப்புகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக தெரி…
-
- 0 replies
- 295 views
-
-
ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…
-
- 0 replies
- 394 views
-
-
6th June 2013 ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் ரைன், சாலே (Saale) ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரைன் நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலே (Saale) ஆற்றின் கரையில் உள்ள ஹல்லே (Halle) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். செக். குடியரசு தலைநகர் ப்ரேக் (Prague) -இல் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆபத்து கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பிற மத்திய ஐரோப…
-
- 14 replies
- 1.1k views
-
-
கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்ற இடத்தில் 20 வயது கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் கல்லூரி தேர்வு முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அருகில் இருந்த காம்பவுண்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்ந்தனர் . அவர்களுடன் போராடியதால் மாணவியை தாக்கி கொலை செய்து தப்பிச் சென்று விட்டனர். வன்புணர்வு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற திரிணாமுல் காங்கிர…
-
- 0 replies
- 415 views
-
-
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது. எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து …
-
- 0 replies
- 290 views
-
-
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது. அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. மேலும் சீன தொழில்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீன முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு அதையும் டாலரில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. அத்தோடு ஐரோப்பாவில் தொடரும் பொருளாதாரத் தேக்கத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு 11 Views இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்க…
-
- 18 replies
- 894 views
-
-
வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்குமாம் கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிப்போக்கு தொடர்ந்தால் அந்த நிலை மாறும். உலகின் வேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்கிறது அமெரிக்காவை தளமாகக்கொண்ட பீவ் ஆய்வு நிலைய ஆய்வு அறிக்கை. http://www.bbc.com/tamil/39295434
-
- 0 replies
- 467 views
-
-
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அமேத்தியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றிருந்தார். விழாவை முடித்துக் கொண்டு ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பிரியங்கா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் அமேத்தியில் இருந்து டெல்லி கிளம்பினர். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=88489&category=IndianNews&language=tamil
-
- 5 replies
- 567 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94807/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 375 views
-
-
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போரட்டத்தை தூண்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் வெள்ளை கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம், இந்து மகா சபை நிறுவன தலைவர் ஸ்ரீஜி, மாநகர் மாவட்ட பொது செயலாளர் மணி உள்ளிட்டோர் நெல்லையப்பர் கோவிலுக்கு தேசிய கொடி, மற்றும் வெள்ளை கொடியுடன் பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கூடங்குளம் செல்ல முயன்றனர். ஆனால் …
-
- 1 reply
- 378 views
-
-
வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும். தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்…
-
- 1 reply
- 449 views
-
-
மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள் [Friday 2017-05-05 15:00] தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் வசதி அந்த கழிப்பறையில் இல்லாததால் அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண மு…
-
- 0 replies
- 426 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது பா.ஜ.க! ஒன்றுகூடுகிறது எதிர்க்கட்சிகள் பா.ஜ.க சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஜூலை 17ஆம் தேதி, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க அமைச்சர்கள் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நி…
-
- 1 reply
- 509 views
-