Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவின் மத்திய வங்கி தனது பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5 ஆக குறைத்துள்ளது. இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக இந்த வெட்டு இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நிலையாக வைத்திருந்த பின்னர் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை புதன்கிழமை வங்கி அறிவித்துள்ளது.கனடிய லூனி கிட்டத்தட்ட கால் பகுதியாக -78.79 ஆக குறைந்துள்ளதாக யு.எஸ். செய்தி தெரிவித்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46233.html#sthash.gHpsBOQy.dpuf கடந்த வருடம் இதே காலப் பகுதியில் அமெரிக்க டொலருக்கு கிட்டத்தட்ட 1.23 சதமாகவிருந்த கனடிய டொலரானது கடந்த ஜனவரியில் 1.00 ரூபாயாகி சரி நிகர் என்ற நிலையிலிருந்தது.மீண்டும் கடந்…

    • 0 replies
    • 553 views
  2. இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்க…

  3. Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 12:16 PM விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய 13 வயது சிறுவனை அமெரிக்க பொலிஸார் சுட்டுக்கொல்வதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பொலிஸாருக்கு விளையாட்டு துப்பாக்கியை காண்பித்த 13 வயது சிறுவனை நியுயோர்க் பொலிஸார் சுட்டுக்கொல்லும் வீடியோ அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மான்ஹட்டனிலிருந்து வடமேற்கில் உள்ள உட்டிகா நகரின் பொலிஸார் ஆயுதமுனையில் கொள்ளை தொடர்பில் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடுத்துநிறுத்தப்பட்ட இரண்டுசிறுவர்களும் சந்தேகநபரின் சாயல் கொண்டவனாக காணப்பட்டனர் என தகவல்கள் வெ…

  4. மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு இந்தியாவின் இமய மலைத்தொடரில் ஏறச் சென்ற போது காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த தகவலை உறுதிசெய்துள்ளனர். குறித்த காணாமல் போன குழுவினரில் 4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கிய இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அவர்…

  5. திரைமறைவில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் அரசியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அரசியல் நடத்த வேண்டும். ஆனால், திரைமறைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் அரசியல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. எம்.எல்.ஏக்களை ஏவி விட்டு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார். மக்களை நேரடியாக சந்திப்பதில்லை. இந்தத் திரைமறைவு அரசியல் நீடிக்காது. மக்கள் பணிக்கும், சமூக பணிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளையே மக்கள் நம்புவார்கள். கொடி இல்லாமல், முத்திரை இல்லாமல் மக்களுக்காக இயங்கும் கட்சியாக …

    • 0 replies
    • 627 views
  6. மறைந்தும் மறையாத தலைவர் மக்கள் திலகம் மறைந்து 20 ஆண்டுகள் -பண்ருட்டி இராமச்சந்திரன்- எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால், எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம் தான் இருந்தது. அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்றபிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த…

    • 2 replies
    • 1.7k views
  7. (தினத்தந்தி) பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அவருடைய 19 வயது மகன் பிலாவல் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பெனாசிரின் கணவர் சர்தாரி, கட்சியின் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் வருகிற 8-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். புதிய தலைவர் பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது. அவருடைய படுகொலை பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பெனாசிரின் `பாகிஸ்தான் மக்கள் கட்சி'க்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெனாசிரின் மூத்த மகன் பிலாவல், கணவர் ஆசிப் அ…

  8. பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத் தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 20…

  9. லண்டன் மாநகரக் காவல்துறையில் சற்று வித்தியாசமான திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். தாங்கள் பார்க்கின்ற கிட்டத்தட்ட எல்லா முகங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் அசாத்திய திறமை இந்த சூப்பர் ரெக்கக்னைசர்களுக்கு (Super Recogniser) உள்ளது. மக்கள் கூட்டங்களுக்குள்ளே குற்றவாளிகளையும் சந்தேகநபர்களையும் தங்களின் கழுகுக் கண்களைக் கொண்டு கண்டுபிடிப்பது தான் அவர்களின் வேலை. http://www.bbc.com/tamil/global/2015/10/151021_super_recognisers

  10. இலங்கைக்கு எதிரான ஐ.நா. விவாதத்தில் பசுமைத் தாயகம் பங்கேற்றுள்ளது-டாக்டர் ராமதாஸ் சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடந்து வரும் விவாதத்தில் பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பும் பங்கேற்றுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, ஐ.நா.மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஆதரிப்பது குறித்த அறிவிப்பை குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசு வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்பார்த்தது. ஆனால் குடியரசு தலைவர் உரையில் இது குறித்து எந்த அறி…

  11. அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும்…

    • 1 reply
    • 443 views
  12. மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி! ரங்கூன்: மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று(ஞாயிறு) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே ஊ, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது…

  13. கருணையல்ல, சந்தர்ப்பவாதம்! மார்ச் 31-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்த பல்வந்த் சிங்கின் மரண தண்டனையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தானே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து கருணை மனு கொடுத்ததால் இந்த நடவடிக்கை. மனு கொடுத்த மிகச் சில மணி நேரங்களிலேயே தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகின்றது என்பதைப் பார்க்கும்போது, இந்த முடிவு பல்வந்த் சிங் மீது ஏற்பட்ட பரிவினால் அல்ல. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இந்த அரசியல்தான் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு வகையான மனக்கசப்பை மேலும் கூட்டுகிறது. ஒரு கொலைக் குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதில் நீதிமன்றத்தைக் காட்டிலும் கூடுதலான ஒரு சலுகை…

    • 0 replies
    • 350 views
  14. Image captionஹன்ஸ் யர்க் மாசென் சிரியாவிலிருந்தும் இராக்கிலிருந்தும் புதிதாக வந்துள்ள குடியேறிகளுக்கு ஜெர்மனியில் வைத்தே பயங்கரவாத சித்தாந்தம் புகட்டப்படலாம் என்ற கவலை தனக்கு இருப்பதாக ஜெர்மனியின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான தலைமை அதிகாரி தெரிவிரித்துள்ளார். 129 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையில், பிபிசிக்கு பேட்டி அளித்த ஹன்ஸ் யர்க் மாசென், ஜெர்மனியின் இஸ்லாமியவாதிகள் நாட்டுக்குள்ளிருந்தே இளைஞர்களை தமது அமைப்பில் சேர்க்க முயன்ற பல சம்பவங்கள் பற்றி தான் கேள்விப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஜெர்மனிக்கு இந்த ஆண்டில் மட்டுமே லட்சக்கணக்கான குடியேறிகள் வந்துள்ள நிலையில், குடியேறிகளின் பின்னணியை அறிந்துகொள்ளவ…

  15. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Charles Taylor, குற்றவாளியென சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சாள்ஸ் ரெய்லர், போர்க் குற்றக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென சியேரா லியோனுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சியேரா லியோனில் உள்நாட்டுப் போரின்போது புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பாக, போர்க் குற்றங்களும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுமாக 11 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடம்பெற்ற நியரென்பேர்க் விசாரணைக்குப் பின்னர், தற்போதுதான் உலக நாடு ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் போர்க் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். மே மாதம் முப்பதாந்…

    • 2 replies
    • 551 views
  16. புத்தாண்டு கொண்டாட்டம்: ஐரோப்பிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் கொண்டா…

  17. ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்! ஈரான் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-35 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஒருவர் திங்கள்கிழமை (27) தெரிவித்தார். தெஹ்ரானுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்து மேற்கு நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஈரானிய அதிகாரி ஒருவர் Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதை உறுதி செய்வது இதுவே முதல் முறை. எனினும், எத்தனை ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன, அவை ஏற்கனவே ஈரானுக்கு வழங்கப்பட்டதா என்பது போன்ற விடயங்களை IRGC தளபதி அலி ஷத்மானி அவரது அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. 2023 நவம்பரில் ஈரானின் Tasnim செய்தி நிறுவனம், ரஷ்ய போ…

  18. பட மூலாதாரம்,@NARENDRAMODI படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று நடந்த தொலைபேசி உரையாடலில் மோதியை அமெரிக்காவுக்கு அழைத்தார் டிரம்ப் 12 பிப்ரவரி 2025, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் வி…

  19. திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - ஸீகா வைரஸ் உடலுறவு மூலம் பரவிய ஆபூர்வ சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. பொதுவாக இது கொசுக்களின் மூலமே பரவும். - அடைக்கலம் தேடிச் சென்ற தங்களை, ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, மூன்றாவது நாடுகளில் கொண்டுபோய் இஸ்ரேல் தள்ளுவதாகக் கூறும் ஆப்பிரிக்க குடியேறிகளுடன் பேசியது பிபிசி. - ஒல்லிதான் பேஷன் என்ற காலம் மாறுகிறது. மிகவும் ஒல்லியாக இருக்கும் மாடல்களை ஃபேஷன் துறையில் பயன்படுத்த தடை கொண்டுவருகிறது பிரான்ஸ்.

  21. தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுப்பதற்காக பெண்போல வேடமிட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு பிரேசிலின் போர்டோ வெல்ஹோ பகுதியை சேர்ந்த 60 வயதான மரியா என்கிற பெண், மூன்று முறை முயற்சித்தும் ஓட்டுநர் சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் சோகமானதை பார்த்த அவருடைய மகன் ஹீட்டர் ஷியாவே (43), நான்காவது முறை எப்படியும் தாய்க்கு ஓட்டுநர் உரிமம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய தாய் போல உடை, அலங்காரங்கள் செய்து ஓட்டுநர் சோதனையை மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய அங்கிருந்த அதிகாரிகளை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூட கூறலாம். இருப்பினும், கார் ஓட்டும் போது வழக்கத்திற்கு மாறாக அவருடைய கை நீளமாகவும், குரல் வலிமை வாய்ந்ததாகவும் இருந…

  22. ஐ எஸ் அமைப்பு மீதான தாக்குதலை சவுதி தீவிரப்படுத்துகிறது சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த தயார் நிலையில் சவுதி இராணுவ விமானங்கள் துருக்கியத் தளம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் துருக்கியிலுள்ள ஒரு தளத்துக்கு தமது போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. இதுவரை காலமும் அந்த அமைப்பின் மீதான அனைத்து தாக்குதல்களும் சவுதி விமானப்படைத் தளங்களில் இருந்தே நடத்தப்பட்டன. தமது விமானங்களை துருக்கிக்கு நகர்த்துவது, வடக்கு சிரியாவில் தாம் தாக்கத் திட்டமிட்டுள்ள இலக்குகளுக்கு அருகில் செல்ல…

  23. தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத வன்முறைகளுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் தாய்லாந்த் செல்கிறார்கள். தாய்லாந்த் அகதிகளை ஏற்பதில்லை என்பதால் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். விரோதியாக பார்க்கும் அண்டை அயலாரை விட்டு தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் அவலம் தாய்லாந்திலும் தொடர்கிறது. பாங்காக்குக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய குடும்பங்கள் தொண்டு நிறுவனங்கள் தரும் உணவை நம்பியே வாழ்கிறார்கள். தஞ்சக்கோரிக்கையாரிக்கையாளர்களை கையாள்வதற்கான ஐநா சர்வதேச ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்த…

  24. ஜூன் 14 உலக மக்களால் என்று மறக்கபடாத மனித குலப்போராளி சே குவராவின் 80 வது பிறந்த தினமாகும் 1967 ம் ஆண்டில் பொலீவிய இராணுவத்தால் தைது செய்யபட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட இப்போராளியின் உடலம் கூடவெளியே தெரியாதபடி இரகசிய இடத்தில் எரியூட்டபட்டது. உலகின் நினைவிலிருந்து அவரை அகற்ற ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அம்முயற்சி நிறைவேறவில்லை. இன்றும் அவரது நினைவுகளைஉலக மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை. அம்மாவீரனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போராளியின் நினைவுகளை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் செப்ரெம்பர் 2007 ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சேகுவராவின் வாழ்க்கை பதிவுகள் கொண்ட கட்டுரையை இங்கு தருகின்றோம். விபரம்: http://swissmurasam.info/content/blogca…

  25. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் 23 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. அத்துடன், ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூரில் 24 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் அந்த வைரஸ்…

    • 2 replies
    • 764 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.