உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா விலக முடியாது! - சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு!! ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணிய சுவாமியிடம் அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் நேரடியாக தெரிவித்துள்ளதாக அறியமுடிகின…
-
- 3 replies
- 777 views
-
-
சீனாவுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தில் 15 ஆசிய நாடுகள் கையெழுத்து பெய்ஜிங், தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள், அதனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள பிற கூட்டணி நாடுகளுக்கு, (FTA) இடையில் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்தான் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு(RCEP). ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய பிற நாடுகள் என மொத்தம் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆர்சிஈபி தற்போது இந்தியா விலகியுள்ளத்தைத் தொடர்ந்து 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டமைப்பாக மாறியுள்ளது. உலக மக்கள் தொகையில் சுமார் பாதி அளவைக் கொண்டிருந…
-
- 0 replies
- 857 views
-
-
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று தேர்தல் நடைபெறும் சமயத்தில் நள்ளிரவு கழித்து பில்லியார்ட்ஸ் கஃபே ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் 3 குழந்தைகளும் 2 பெண்களும் அடங்குவர். இன்று ஈராக்கில் நடைபெறும் தேர்தல் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதிலிருந்து இடம்பெறும் முதலாவது தேர்தல் ஆகும். இத்தாக்குதல் மூலம் நாளை நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலிலும் பாதுகாப்புக் குறித்த நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஈராக்கில் ஏற்கனவே 14 வேட்பாளர்கள் கொல்லப் பட்ட நிலையில் 3 மாகாணங்களில் அரசியற் பிரச்சினை காரணமாகத் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருந்தன. ஈராக்கில் நடைபெற்று வரும் இத்தேர்தல்களின் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும் என எதி…
-
- 0 replies
- 465 views
-
-
கொரோனா வைரஸ் புதிய திரிபு: "நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை ஜேம்ஸ் கல்லேகர் சுகாதார & அறிவியல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வை…
-
- 1 reply
- 628 views
-
-
பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. 223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 84 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடத்திலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதரகட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்ப…
-
- 5 replies
- 433 views
-
-
பெங்களூர்: பிரதமர் நாட்டுக்கு சுமையாகிவிட்டார் என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு பெரிய சுமையாகி விட்டார் என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ளது என்றும் விமர்சித்தார். சி.பி.ஐ.யை கொண்டே ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம்சாட்டிய நாயுடு, உயிர் காக்கும் கருவிகள் துணையுடனே அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மற்றொரு நாட்டின் ஊடுருவலை கூட தடுக்க முடியாத அரசாக உள்ளது என்றும் கூறினார். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் அமைக்கப்பட்ட அரசு புகார் தெரிவித்த வ…
-
- 0 replies
- 468 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. சில மாதங்களாக அடங்கி இருந்த துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா மோனிகா பகுதியில் நேற்று வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸ், சான்டா மோனிகா கல்லூரியில் உள்ள நூலகம் அருகில், ஒரு இளைஞர் துப்பாக்கியுடன் அனைவரையும் சுட்டப்படி வந்திருக்கிறான். இதனையடுத்து போலீஸாருக்கும், துப்பாக்கி வைத்திருந்த நபருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில்…
-
- 0 replies
- 441 views
-
-
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது. கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சு…
-
- 1 reply
- 733 views
-
-
நியூசிலாந்தில் விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த ஆக்லாந்து விமானநிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஒரு போலிஸ் மோப்ப நாயை போலிசார் சுட்டுக்கொன்றனர். பத்து மாத வயதான , தாடி போன்ற முடி கொண்ட கோலி மற்றும் குறைந்த முடி கொண்ட ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயர்கொண்ட இந்த நாயை காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற பிறகு, அங்கு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. படத்தின் காப்புரிமைAVSEC அந்த நாய் குட்டி வெடிபொருட்களை கண்டறிய பயிற்சி கொடுக்கப்படும் வேளையில் ஆக்லாந்து விமான நிலையத்தில் வேறு இடத்திற்கு ஓடிவிட்டது. மூன்று மணி நேரமா…
-
- 0 replies
- 269 views
-
-
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய பறவைக்காய்ச்சலின் வகையொன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் தடவையாக இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் மருத்துவ சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 32 வயதான பெண்ணொருவருக்கு அவரது தந்தையிடமிருந்து இந்தப் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் பின்னர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், H7N1 வைரஸ், மனிதர்களுக்குப் பரவும் அளவுக்கு விருத்தி பெற்றுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள 133 சம்பவங்கள் பதிவானதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளன…
-
- 0 replies
- 227 views
-
-
நீங்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படுமா? தெரிந்துகொள்ளுங்கள் 10 புதிய தகவல்களை! படத்தின் காப்புரிமைGOOGLE இந்தியாவில் விமான பயணத்தின் போது தவறாக நடந்துகொள்பவர்கள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த 10 முக்கியத் தகவல்களை பார்ப்போம் : 1. உடல் சைகைகள், வாய்மொழி துன்புறுத்தல் மற்றும் நிதானமில்லாத போதை ஆகியன சீர்குலைக்கும் நடத்தையில் முதல் நிலையாகும். 2. பிடித்து தள்ளுவது, எட்டி உதைத்தல் மற்றும் பொருத்தமற்ற முறையில் தொடுவது அல்லது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட உடல் ரீதியான தவறான நடத்தைகள் இரண்டாம் நிலையாகும். படத்தின…
-
- 0 replies
- 448 views
-
-
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், மூடிய அறைக்குள் வாதங்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூடிய அறைக்குள் மத்திய அரசின் வாதம் கேட்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று சுமார் 2 மணி நேரம் மூடிய அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இரண்டு சொலிசிடர் ஜெனரல், சிபிஐ மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர்…
-
- 0 replies
- 321 views
-
-
மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற…
-
- 0 replies
- 209 views
-
-
சிகாகோ: பறக்கும் விமானத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்திய எஞ்ஜினியருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சீனிவாச எர்ரமில்லி, வயது 46..இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன்மாதம் 14ம் தேதி சிகாகோ செல்லும் செளத்வெஸ்ட் விமானத்தில் பயணித்தார். அவரது பக்கத்து வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் உடன் பயணித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அப்போது 63 வயதாகும். தங்களது 34வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவர் லாஸ் வேகாஸ் பயணித்துள்ளார். பயணத்தின்போது தனது ஷார்ட்ஸுக்குள் 3 முறை கையை விட்டார் சீனிவாசா என்பது அப்பெண்ணின் புகார…
-
- 4 replies
- 721 views
-
-
பிரிட்டன் தேர்தலில் பின்னடைவு: பிரதமரின் இரண்டு நெருங்கிய ஆலோசகர்கள் ராஜினாமா பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் தெரசா மேயின் இரண்டு முக்கிய ஆலோசர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் க…
-
- 0 replies
- 235 views
-
-
சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…
-
- 0 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (11:31 IST) 11வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் பல்கேரியா நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி கோர்டசா (வயது 11). இவர் சிறு வயதிலேயே பருவம் அடைந்துவிட்டார். கோர்டசாவுக்கு ஜெலிஸ்கோ (19) என்ற ஆண் நண்பர் இருந்தார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். அடிக்கடி உல்லாசத்திலும் ஈடுபட்டனர். இதில் கோர்டசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் காலையில் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் கோர்டசாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. திருமண கோலத்தில் இருந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியோடு காணப்பட்ட கோர்டசா நா…
-
- 3 replies
- 2k views
-
-
பிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்மெஸ்-லெஸ் மிமோசெஸ் என்ற இடத்தில் பரவிய காட்டுதீயை அணைப்பதற்காக அதிகாரிகள் பெருமளவு தீயணைப்பு படையினரை ஈடுபடுத்தியுள்ளது மத்தியதரை கரையோரப்பக்கமாக உள்ள இந்த பகுதியில் சுமார் 4000 ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து சுமார் 10,000ற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர் திங்கட்கிழ…
-
- 0 replies
- 332 views
-
-
சௌதி கூட்டணியின் எச்சரிக்கையை மீறி இரானுடன் உறவைப் புதுப்பித்தது கத்தார் பகிர்க இரான் நாட்டுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும் என்னும் நான்கு சக அரபு நாடுகளின் வற்புறுத்தலையும் மீறி, அந்நாட்டுடனான ராஜாங்க உறவுகளைக் கத்தார் முழுமையாகப் புதுப்பித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபயணத் தடைக்குப் பின்பு தனது வான்வெளியை கத்தார் விமானங்களுக்கு திறந்து இரான் உதவியது இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 2016-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து இரானில் இருந்த சௌதி தூதரகங்கள் தாக்குதலுக்கு ஆளான பின்னர், கத்தார் இரானில் இருந்த தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற…
-
- 0 replies
- 370 views
-
-
நிர்வாணக்கோலத்தில் மோடிக்கு ஆதரவு தேடும் மேக்னா பட்டேல்! – பாஜக அதிர்ச்சி. [Tuesday, 2014-02-11 18:05:18] பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இணையதளங்களில் தற்போது பரபரப்பாகவும், மின்னல் வேகத்திலும் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மாதவ் பந்தாரி, ‘மோடிக்கு பலர் ஆதரவு திரட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும், இதைப்போன்ற ஆபாசமான அணுகுமுறைகள் ஏற்கத் தக்கதல்ல. சில நிமிடங்களுக்குள் பிரபலமட…
-
- 0 replies
- 714 views
-
-
"மேரியுபோல்" இரும்பு ஆலையில், தஞ்சம் அடைந்துள்ள மக்களை... வெளியேற்ற ரஷ்யா அனுமதி! கிழக்கு உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை, அப்பகுதியிலிருந்து வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினர் பாதுகாப்பான தூரத்தில், பிரித்தானிய உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரும்பு தொழிற்சாலைக்குள் தஞ்சம் புகுந்துள்ள வீரர்கள் கொல்லப்பட்டால், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் காயமடைந்த வீர…
-
- 0 replies
- 269 views
-
-
கனடாவில் கருணைக்கொலை கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. கருணைக்கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. குறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், பெரும்பாலும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும், வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25847
-
- 0 replies
- 544 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 100 மில்லியனைத் தாண்டியிருக்கிறது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா பெறுகிறது. இந்தியாவில் கைத்தொலைபேசி எண்ணிக்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் எதிர்கொள்ளும் அடுத்த சவால் என்பது இந்தியாவில் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை எப்படி 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுவது என்பதுதான் என்று அது கூறுகிறது. உலகெங்கும் 123 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஆசிய உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தனது வளர்ச்சிக்கு புதிய இடங்களைத் தேடி…
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாம…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அரசியல் கைதிகள் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 80 பேரை வெனிசுவேலா அரசு விடுவிக்கத் துவங்கியுள்ளது. கிட்டதட்ட 300 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாக எ…
-
- 0 replies
- 285 views
-