உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
தென்மேற்கு பிரித்தானியாவில் ரயில் மோதியதில் பலர் காயம் தென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளன சாரதி உட்பட சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சாலிஸ்பரி நிலையம் அருகே தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 100 பேரை வெளியேற்ற உதவியதாக டோர்செட் & வில்ட்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்து…
-
- 0 replies
- 248 views
-
-
தனிமைப்படுத்தல் இல்லாது பயணிகளை வரவேற்கும் தாய்லாந்து தாய்லாந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது. 18 மாத கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நாடு தனது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிப்பதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேங்கொக் மற்றும் ஃபூகெட்டை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இராச்சியத்தின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது, சுற்றுலா அதன் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த ஆண்டு அதன் பொருளாதாரம் மோசமான செயல்திறனைக் கண்டது. புதிய பயண வழிகாட்டல்கள் நவம்பர் 1 முதல் 60 க்கும் மேற்பட்ட "குறைந்த ஆபத்துள்ள" நாடு…
-
- 0 replies
- 287 views
-
-
டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஜோக்கர் வேடம் தரித்து கத்திக்குத்து ; 17 பேர் காயம் டோக்கியோவில் பயணிகள் ரயிலொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் கொலை முயற்சியில் ஈடுபட்ட 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பேட்மேன் திரைபடத்தில் ஜோக்கரின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ஆடையை அணிந்திருந்தார் என்று சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலினால் 70 வயதுடைய பயணியொருவர் மார்பில் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார். தாக்குதல் நடந்தபோது, ரயிலுக்குள் இருந்து பயணிகள் ஓடும் காட்சிகள் கையடக்கத் த…
-
- 0 replies
- 670 views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் பொய்யுரைத்துள்ளார் – மக்ரோன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விடயம் குறித்து தன்னிடம் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பொய் கூறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க 37 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்த காரணத்தால் பிரான்ஸ் கோபமடைந்துள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அவுஸ்ரேலியா பேச்சுவார்த்தை நடத்தயது. கடந்த செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடு காணப்படும் நிலையில் G20 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாட…
-
- 0 replies
- 158 views
-
-
-
- 0 replies
- 641 views
-
-
ஏமன் விமான நிலையம் அருகே நடந்த வெடி விபத்தில் 12 பேர் பலி ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயம். எனினும் இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய டிரக் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. வெடிப்பு சம்பவம் பலமாக இருந்தது மற்றும் நகரம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதால் அருகிலுள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்க…
-
- 0 replies
- 274 views
-
-
முதன்முதலில் பொது வெளியில் தோன்றினார் தலிபான் தலைவர் ! தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார். தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார். புதிய தலிபான் அரசின் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் க…
-
- 0 replies
- 298 views
-
-
சீனாவின் மெக்னீசியம் கிடைப்பதில் நெருக்கடி – ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கவலை கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்றான மெக்னீசியத்தினை ஐரோப்பிய நாடுகளுக்கு சீனாவே வழங்கி வருகின்றது. தற்போது சீனாவின் மெக்னீசிய விநியோகப் பற்றாக்குறையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறைகள் ஆபயகரமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றுநோயினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழில்துறை மீட்சியைக் வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிற்துறைக்கு தேவையான மெக்னீசியததில் 95சதவீதமானவற்றை …
-
- 0 replies
- 198 views
-
-
டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரிய வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உ…
-
- 0 replies
- 160 views
-
-
அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1876ம் ஆண்டு நடந்த லிட்டில் பிக்ஹார்ன் போரில் 1,500 பூர்வகுடி அமெரிக்கர்களைக் கொண்ட படைக்கு சிட்டிங் புல் தலைமையேற்று போர் புரிந்தது மிகவும் புகழ் பெற்ற சம்பவம். 19-ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க பூர்வகுடி இனத் தலைவர் 'சிட்டிங் புல்' என்பவரின் தலைமுடி மாதிரியை வைத்து அவரது கொள்ளுப் பேரன் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிட்டிங் புல்லின் தலை முடி…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
2025ஆம் ஆண்டு வரை, மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்! உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறினார். பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திர…
-
- 0 replies
- 338 views
-
-
இரு விமான சேவைகளுக்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை மற்றும் ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமான சேவை ஆகியவை காபூலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன், தமது விதிகளை பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை மற்றும் ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமான சேவை ஆகியன மீறினால் விமான நிறுவனங்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காபூலில் இருந்து இஸ்லாமாபாத் செல்லும் ஒவ்வொரு பயணியிடமும் 250 டொலர்கள் வரையில் கட்டணம் அறவிட்டதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பு…
-
- 0 replies
- 500 views
-
-
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம் 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2016-ஆம் ஆண்டில் சுனாவோ சுபோய் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவரும் ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டவருமான சுவானோ சுபோய் தமது 96-ஆம் வயதில் மரணமடைந்தார். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சுனாவோ சுபோய் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அன்றுதான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட சுனோவோ சுபோய், உடல் முழுவதும் தீக் …
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது. சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத…
-
- 3 replies
- 445 views
- 1 follower
-
-
18 மாதங்களின் பின் கொவிட்-19 பயண ஆலோசனைகளை எளிதாக்கிய அவுஸ்திரேலியா 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கான கொவிட்-19 தொடர்பான பயண ஆலோசனையையும் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தளர்த்தியுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் முழுத் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வெளியூர் பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்குகிறது. ஏனெனில் அதன் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை தனிமைப்படுத்தலின்றி வெளிநாட்டுப் பயணிகளின் உள் நுழைவ…
-
- 0 replies
- 242 views
-
-
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார். அவர் 2001-09 க்க…
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்! சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 18ஆம் திகதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 266 views
-
-
சீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து' 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஜெசிகா ரோசன்வார்செல் சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை "தேசிய பாதுகாப்பு" குறித்த காரணங்களால் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 'சீனா டெலிகாம்' என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது சீன அரசு செலுத்திய ஆதிக்கம், அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ: மனித குலத்திற்கு எதிரான குற்றம், தொடர்ந்து பரப்பிய போலிச் செய்திகளால் சட்ட நடவடிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேசிலின் செனட் கமிட்டி (நாடாளுமன்றக் குழு) அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது சட்டபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவர் செனட்டர் ஒமர் அசிஸ், பொல்சனாரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பிரேசிலில் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சுயாதீன விசாரணை அமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளார். சயீர் பொல்சனாரூ…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கனடா நாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது பெண்மணியான அனிதா ஆனந்த், கனடாவின் ஒக்வில்லே பகுதியில் நடைபெற்ற தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சஜ்ஜன், ராணுவத்தில் பாலியல் தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் வேறு துறைக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 549 views
-
-
மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏ…
-
- 0 replies
- 200 views
-
-
புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும்? பிரித்தானியாவிடம் ஆப்கானியர்கள் கேள்வி! புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர். தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், ‘நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்’ என கூறியுள்ளனர். கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆ…
-
- 0 replies
- 157 views
-
-
சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்! சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டின் சிவில் தலைமையின் பல உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் தொலைத்தொடர்பு அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்டூம் நகரத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பாலங்களையும் இராணுவம் தடுத்துள்ளது. இங்குதான் அரச நிறுவனங்கள் உள்ளன. அங்குதான் ஜனாதி…
-
- 1 reply
- 313 views
-
-
முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம்: அமெரிக்கா! முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளதாக, தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் சுங் கிம் தெரிவித்துள்ளார். வொஷிங்டன்- பியாங்யோங் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில், வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து விவாதிக்க தென் கொரிய அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் முன்நிபந்தனைகள் இல்லாமல் வடகொரியாவை சந்திக்க தயாராக இருக்கிறோம். வடகொரியா மீது அமெரிக்கா எந்தவிதமான விரோத நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகின்றோம். வடகொர…
-
- 0 replies
- 318 views
-
-
அமெரிக்காவில் தடுப்பூசி ஏற்றாத மருத்துவ ஊழியர்கள் பணி நீக்கம் ம.ரூபன். உலகில் 2020 ஜனவரி-2021 மே வரை கொவிட் நோயால் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை ஊழியர்கள் மரணமானதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறையும்போது தற்போது ரஷ்யாவில் தொற்று அதிகரித்துள்ளது. இந்நோய் பரவ காரணமான சீனாவில் மீண்டும் தொற்று கூடியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொள்கிறார்கள். எனினும் சில இடங்களில் கோவிட் தொற்றால் பலர் மரணமடைகின்றனர். கொரோனா ஆட்கொல்லி நோய் அமெரிக்காவிலேயே பல இலட்சம் பேரை காவு கொண்டு பொருளாதாரத்தையும் பாதித்து யுத்த கால சூழலைப்போல மக்களின் வாழ்க்கை காணப்பட்டது. ஜனாதிபதி த…
-
- 0 replies
- 287 views
-