Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆந்திராவில் யுரேனியம் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அணுமின் நிலையத்திற்கு தேவையான முக்கியமான பொருள்களில் ஒன்றான யுரேனியம் தாது ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ளதாக அணு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும்பலப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள சுரங்கங்களில் இந்தவகை தாதுப்பொருள் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும் உலகிலேயே அதிகளவிலான யுரேனியம் இங்கு கிடைக்க கூடும் என அணுசக்தி கமிஷனின் சேர்மன் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்ட்டிருக்கும் ய…

    • 2 replies
    • 1k views
  2. அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் சென்னை பெண்.. டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் தமிழ் வாரிசு! அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் 2020 இறுதியில் முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அதே வருடம் நடக்கும். கடந்த வாரம்தான் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து 2020 அதிபர் தேர்தலிலும் இதேபோல் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. அந்த கட்சியின்…

  3. அமெரிக்கா தீ விபத்தில் சிக்கி 3 இந்திய மாணவர்கள் பலி தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் நாயக். பாதிரியாரான இவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்துக்காக ஐதராபாத் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றியவாறு கிறிஸ்தவ பிரசார காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது குழந்தைகள் சுவாதிகா நாயக், சுஷான் நாயக், ஜெயா சுஜித் ஆகியோர் அமெரிக்காவின் டென்னெசீ மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பிரென்ச் கேம்ப் பகுதியில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி படித்து வந்தனர். குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காரி கோட்ரியெட் என்ற பெண்ணுக்கு சொந…

  4. உலக வங்கியின் தலைவர் பதவிவிலகுவதாக அறிவிப்பு January 8, 2019 அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது. அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகத…

  5. ஒரிசா ஆஸ்பத்திரி அருகில் 25 பச்சிளம் குழந்தைகள் உடல்கள் கண்டுபிடிப்பு- பாலிதீன் பையில் சுருட்டி புதைத்த கொடூரம் நயகர் (ஒரிசா), ஜுலை. 23- ஒரிசா மாநிலம் நயகர் மாவட்டத்தில் ஒரு மலை அடி வாரத்தில் கடந்த 14-ந்தேதி 7 பச்சிளம் குழந்தைகளின் பிணங்கள் வீசப்பட்டு இருந்தன. அவை பெண் குழந்தைகள் என்றும், பிறந்த உடன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் பிணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒரிசா மாநில அரசு உத்தரவிட்டது. போலீசார் நயகர் மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது நபகன் பூர் கிராமத்தில் உள்ள 36 தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏ…

  6. ஜமால் கஷோக்கி கொலை விவகாரம் : முதல்கட்ட ஆய்வறிக்கை! சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை பற்றி விசாரிக்கும், துருக்கியின் திறனை சவுதி அரேபியா மிக குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகே அங்கு சென்று விசாரிப்பதற்கு துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 2 ஆம் திகதி, கஷோக்கி சென்றபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய ஊடகவியலாளராக அவர் கருதப்பட்டார். இவ்…

  7. ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி February 14, 2019 ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் சென்ற போக்குவரத்து பேருந்தினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய போராளிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/113140/

  8. இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன் பதவி, பிபிசிக்காக 40 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர். எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார். 'முறையாக சேகரிக்…

  9. கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை மரணம்! பியூனஸ் அயர்ஸ் : கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தந்தை டான் டியாகோ வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடனோவின் தந்தை வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட அவர் பியூனஸ் அயர்சில் உள்ள லாஸ் ஆர்காஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில தினங்களாக கோமாவில் இருந்த அவர், நேற்று மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தந்தை இறந்த தகவல் துபாயில் இருந்த மரடோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். கடந்த இரு நாட்களுக்கு முன்தான், மரடோனா தனத…

  10. போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்கள…

  11. பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறிய இடத்திற்கு ஊடகங்களை அனுமதித்தது பாகிஸ்தான் - BBC Exclusive 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புத…

  12. ஆரம்பம் அடுத்த சர்ச்சை... ராமர் போய் இராவணன் வந்தார்...! ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்! ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயர…

  13. ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா! இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர். …

  14. பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து 3 விமானங்களிலும் வெடிகுண்டு உள்ளதா? என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புறப்பட்டு சென்ற ஒரு விமானமும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதேபோல டெல்லி விமான நிலையத்திற்கும் மிரட்டல் வந்தது. சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. 2 விமான நிலையங்களிலும் 7 சர…

  15. அண்டை நாடான நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கும் திட்டத்தை, அந்நாட்டு பார்லிமென்ட், நேற்று நிராகரித்தது.நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக விளங்கியது. அங்கே, 2006ல், துவங்கப்பட்ட மக்கள் இயக்கத்தின், வெற்றிகரமான பிரசாரத்தால், 2007ல், அது, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேபாள நாட்டின் புதிய அரசியல் சாசன வரைவு மீது, ஓட்டெடுப்பு நடத்தும் நடவடிக்கைகள், பார்லிமென்டில் துவங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றும் வகையில், அரசியல் சாசனத்தை திருத்த, இந்து ஆதரவு கட்சிகள் முயன்று வருகின்றன. இதற்கான தீர்மானத்தை, நேபாள தேசிய ஜனநாயக கட்சி, நேற்று பார்லிமென்டில் கொண்டு வந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இதற்கு எதிராக ஓட்டளித்து…

  16. படத்தின் காப்புரிமை Reuters சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். செவ்வாயன்று இந்த திட்டத்துக்கான ம…

  17. மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தபட்சம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொமாயாங்குவா நகரிலுள்ள சிறைச்சாலையில் புதன்கிகிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளின் கலகம் காரணமாக அல்லது மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹொண்டுராஸ் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி டானியெலோ ஒரெல்லானா கூறியுள்ளார். http://www.eeladhesa...ndex.php?option

  18. பிரான்ஸ்7தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்த பிரான்சில் தொடரும் துயரமாக, அதிவேக இரயில் தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரான்சின் Strasbourg பகுதியில் TGV அதிவேக இரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 49 பேருடன் பயணப்பட்ட இந்த இரயில் வேகத்தை அதிகப்படுத்தியதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரயில் கவிழ்ந்த பகுதி கால்வாய் என்பதால் விபத்துக்குள்ளானவர்களை தேடும் பணி விரிவு படுத்தப்பட்டுள்ளது. …

  19. புலிகள் ஊடுருவல் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - ஜெயலலிதா தெரிவிப்பு [Monday February 18 2008 05:00:51 PM GMT] [யாழினி] தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்றத்திலும் தமது கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தப் பிரச்சினையை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு …

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - மாலி தலைநகர் பமாகோவில் பயங்கரவாதத் தாக்குதல்! ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ள துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் பெரும்பான்மையானோர் விடுவிப்பு! - பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கவும், ஐரோப்பிய பிரஜைகளையும் தேச எல்லைகளில் பரிசோதிக்கவும் ஐரோப்பிய அமைச்சர்கள் ஒப்புதல்!

  21. வாஷிங்டன்: மற்ற நாடுகளை விட பெரிய அளவில் ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: மற்ற நாடுகளை விட வேகமாக ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, அந்த நாடு அமெரிக்க பணத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் பணத்தை, சீனா எடுத்து கொள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனுமதித்தனர். எங்களின் அறிவுசார் சொத்துரிமையையும் சீனா திருடவும் அனுமதித்தனர். ஆனால், அதனை நான் விட மாட்டேன். வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருக…

    • 0 replies
    • 488 views
  22. Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்ட…

  23. நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு! நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக சென்ற 67 பேர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு கடுமை…

  24. கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, பெரும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் இருந்த பெரும் தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளா…

  25. 2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது. முந்தைய 2023ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க அரசுத் துறை தெரிவித்தள்ளது. ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் நாளில் உலக மக்கள் தொகை 809 கோடியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.