உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி(Robert F. Kennedy) தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்துள்ளார். 11 வேட்பாளர்கள் இந்நிலையில், நேற்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப் கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப் கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. …
-
-
- 12 replies
- 929 views
- 2 followers
-
-
சுவாரசியம் பெறும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவின் 58ஆவது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 8, 2016இல் இடம்பெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பிரசாரங்களும் போட்டிகளும் சூடுபிடித்து வருகின்றன. இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் வேட்பாளர்கள், தங்களுக்கிடையில் மோதி வருகின்றார்கள். ஆனால், குறித்த இரண்டு கட்சிகளினதும் வேட்புமனு கிடைத்தாவர்களில் சிலர், சுயாதீன வேட்பாளர்களாகப் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பான வேட்பாளராகத் தெரிவாகுவதற்கான முதலாவது விவாதத்திலும் கூட பங்குபற்றிய ஜிம் வெப், அப்போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு மாத்திரமல்லாமல், சுய…
-
- 0 replies
- 486 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு நிகழ்விலிருந்து டைனோசர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க் மார்க்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த படம் இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நேற்று (செவ்வாய்க் கிழமை), தாஜ்மகாலுக்கு சென்றிருக்கிறார். உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மகாலுக்குச் சென்ற மார்க், அங்கே கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மாலை 04.30 மணி அளவில் பதிவேற்றப்பட்ட அப்பதிவில், 'டவுன்ஹால்- கேள்வி பதில்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறேன். இந்தியா வருவது குறித்த திட்டத்தின் போதே, தாஜ்மகாலுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்…
-
- 0 replies
- 526 views
-
-
இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா! இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக் குழுவை அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவினை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், ஒரு முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான பரவலான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் மோதலை மேலும் தூண்டிவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒக்டோபர் 1 ஆம் திகதி ஈரான் சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. …
-
- 1 reply
- 403 views
-
-
பெனாசிர் புத்தகத்தில் திடுக் தகவல் Tuesday, 12 February, 2008 11:21 AM . கராச்சி,பிப்.12: பெனாசிர் பூட்டோவுக்கு அவரை கொலை செய்யப்போகிறவர்களின் செல்போன் நம்பர்கள் முதலிலேயே தெரியும் என்னும் திடுக்கிடும் தகவல் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் வெளியாகியுள்ளது. . பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் பூட்டோ கடந்த ஆண்டு இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். அல்கொய்தா தீவிரவாதிகளே அவரது படுகொலைக்கு காரணம் என்று கூறப்பகிறது. இந்நிலையில் படுகொலை செய்வதற்கு முன்பாக பெனாசிர் பூட்டோ எழுதிய புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. ரி கான்ஸ்சலேஷன் : இஸ்லாம் டமாக்ரசி அண்டு தி வெஸ்ட் என்னும் அந்த புத்தகத்தில் பெனாசிர் பூட்டோ பல திடுக…
-
- 0 replies
- 742 views
-
-
சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் புத்தாண்டை…
-
- 0 replies
- 550 views
-
-
பட மூலாதாரம்,NATALIA BOTERO-ACOSTA படக்குறிப்பு, கொலம்பியாவில் பசிபிக் கடற்கரை அருகே எடுக்கப்பட்ட படம். கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் இதுவரை பதிவான இடம்பெயர்வுகளிலேயே, மிக நீண்ட தொலைவு மற்றும் மிகவும் அசாதாரணமான இடம்பெயர்வை ஹம்பேக் (Humpback) திமிங்கலம் ஒன்று மேற்கொண்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த திமிங்கலம் 2017-ம் ஆண்டில் கொலம்பியாவில் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டது. அதன்பின், சில ஆண்டுகள் கழித்து 13,000 கி.மீ-க்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஸான்ஸிபார் அருகே காணப்பட்டது. …
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து பார்த்தது. இதன் மூலம் இதுபோன்ற வசதியை பெற்றுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை இடையிலேயே வழி மறித்து அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இப்பாதுகாப்பு ஏவுகணை மேலும் 5000 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று தாக்கும் வகையில், 2016 ஆண்டிற்குள் மேம்படுத்தப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரு நகரங்களில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்படும் எனவும், அந்த இரு நகரங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் …
-
- 58 replies
- 7k views
-
-
உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து 21 Feb, 2025 | 12:54 PM மூன்று வருடகால ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை எவ்வாறு முடிவிற்கொண்டுவருவது என்பது குறித்த அரசியல் பதற்றம் தீவிரமடைகின்ற அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் உக்ரைன்ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி கெய்தகெலொக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடே இரத்துசெய்யப்பட்டுள்ளது. இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அறிக்கைகளை வெளியிடவில…
-
- 0 replies
- 371 views
-
-
ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 484 views
-
-
பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மிஸ் பிரிட்டன் ஜெம்மா கரேட் போட்டி 19.05.2008 / நிருபர் குளக்கோட்டன் பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் `மிஸ் பிரிட்டன்' பட்டத்தினை வென்ற அந்நாட்டு அழகி ஜெம்மா கரேட் போட்டியிடுகின்றார். இதனால் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி அரசில் பிரதமராக கோர்டன் பிறவுண் இருந்து வருவதுடன் அண்மையில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் கோர்டன் பிறவுண் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றில் பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கைனித் டன்வூடி மரணமடைந்…
-
- 0 replies
- 752 views
-
-
ஆப்கான் தற்கொலை குண்டு தாக்குதலில் பத்துப்பேர் பலி [21 - June - 2008] ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள ஹெரஸ் மாவட்டத்தினூடு வாகனத் தொடரணியாகச் சென்று கொண்டிருந்த வெளிநாட்டு துருப்பினரை இலக்கு வைத்தே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெல்மண்ட் மாகாணமானது தலிபான்கள் அதிகமுள்ள பிரதேசமாக இருப்பதால் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. ஆப்கானின் தெற்கு நகரான கந்தஹாரிலிருந்து தலிபான் போராளிகளை விரட்டி அடித்ததைத் தொடர்ந்தே இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…
-
- 1 reply
- 644 views
-
-
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 2013-ம் ஆண்டு 11.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு சு…
-
- 0 replies
- 234 views
-
-
கொரோனா வைரஸ் – முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்! சீனாவில் முக்கிய அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஹூபேய் சுகாதார ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் குறித்த ஆணைக்குழுவிற்கான கட்சியின் செயலாளர் ஆகியோரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரினதும் பதவி வெற்றிடத்திற்கு, தேசிய பிரமுகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளரும் பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிர…
-
- 0 replies
- 520 views
-
-
காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் ரிச்சர்ட் கில்சீன் சனி, ஜூலை 19, 2025 காலை 8:01 IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார் காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார். பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ்…
-
- 0 replies
- 129 views
-
-
Chhotu வும் அதன் எஜமானி அம்மாவான ராஜ்குமாரி தேவி (வலது) யும். சோட்டுக்கு வயது 7. அவன் ஒரு அநாதையாக வீதியில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளான். கிழக்கு இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தில் வளர்ப்பு நாயான Chhotu, ஊரில் சிலரைக் கடித்து அமைதியை குலைத்ததற்காகவும் சட்டத்தை மதிக்காமல் நடந்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், விலங்குரிமை அமைப்பினரின் உதவியுடன் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் கீழ் நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளது. Chhotu உண்மையில் பொதுமக்களை கடிக்கவில்லை என்றும்.. அது அதன் எஜமானி அம்மாவின் வீட்டுக்குள் நுழைய முனையும் கள்வர்களைத்தான் கடிக்கின்றது என்றும் கள்வர்களுக்கு உதவும் அயலவர்கள் பொறாமையில் சொல்வது போல அதற்கு விசர் பிடிக்கவில்லை…
-
- 0 replies
- 673 views
-
-
நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்! in News, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு செய்தி -101 இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்புறம், அணு உலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட கடற்கரையில், சற்று வடக்குப்புறமாக, உலையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கலாக இடிந்த கரை ஊர் முழுவதும் இங்கே வந்துவிட்டது – நடக்கமுடியாத சில முதியவர்களைத் தவிர ஊருக்குள் வேறு யாரும் மிச்சம் இல்லை. குளிரில் நடுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 822 views
-
-
ஆபிரிக்காவை அச்சுறுத்தும் லாசா வைரஸ்: இரண்டு மாதத்தில் 100இற்க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை அரசு தொடங்கியுள்ளோம். மக்கள், எலிகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலமாகவே இந்த நோய…
-
- 2 replies
- 330 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 AUG, 2025 | 10:23 AM துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. துருக்கி உள்விவகார அமைச்சர் அலி யெர்லிகாயா, "இடிபாடுகளுக்குள் சிக்கிய 81 வயது முதியவர் மீட்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமாக இல்லை. இந்த பூகம்பத்தில் சிந்திர்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் நான்கு குடியிருப்புகளும், நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடங்களும் அடங்கும். …
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
உலக மக்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 33 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 676 பேர் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,626 என அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இந்த வார இறுதிக்குள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதே முடிவை பிரித்தானியாவும் மெற்கொள்ளுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே வே…
-
- 0 replies
- 553 views
-
-
மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? ஒபாமா பகிர்ந்த ஆய்வுக் கட்டுரை! தமிழில்: Shyamsundar நியூயார்க். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும் என்று அமெரிக்க ஆய்வு கட்டுரை ஒன்று விளக்கி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் அப்படி ஒரு வைரஸ் இருப்பது யாருக்குமே தெரியாது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த தொடக்க காலத்தில் SARS-CoV-2 என்று அழைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க எல்லா நாடுகளையும் ஏறத்தாழ பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 471,820 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 155 நாடுகளின் பொருளாதாரம் இதனால் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.…
-
- 1 reply
- 807 views
-
-
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் செயல்பாடுகள் மே 1ஆம் தேதி முதல் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இதனை அறிவித்தார். விமான நிலைய இயக்குநர், சில்லறை விற்பனை குத்தகைதாரர்கள், விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கான செலவுகளை விமான முனையம் மூடப்படுவதால் குறைக்கலாம் என்று கூறிய திரு கோ, தற்போதை விமானப் போக்குவரத்தைச் சமாளிக்க ஒரு முனையம் போதும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த முனையம் மூடப்படுவதால், இரண்டாவம் முனையத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் துரிதமடையும் என்றும் அவர் கூறினார். உலகளவில் அதிவேகமாகப் பரவி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் விமான பயணங்களின் எண்ண…
-
- 0 replies
- 339 views
-
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப் 28 Oct, 2025 | 10:27 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார். எனின…
-
-
- 8 replies
- 459 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கட்டுக்கடங்காத நிலையில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டனர். அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது. அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் ச…
-
- 1 reply
- 1.1k views
-