உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
தனது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் டிரம்பின் சகோதரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சகோதரி மேரி ஆன் தமது சகோதரர் டொனால்டு டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என பேசியுள்ள ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் என்பவரிடமே 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் மேரி ஆன் குறித்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த உரையாடலை மேரி டிரம்ப் பதிவு செய்து பாதுகாத்து வந்துள்ளார். டொனால்டு டிரம்பின் சர்ச்சைக்குரிய புலம்பெயர்ந்தவர்களுக்கான கொள்கைகள், அவர்களது குழந்தைகள் குடும்பங்களிலிருந்து பிரித்து வைக…
-
- 0 replies
- 400 views
-
-
வெனிசுவேலா ஜனாதிபதியை கொல்ல ட்ரம்ப் திட்டம்: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட காணொளி பதிவில் அவர் கூறுகையில், ‘நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டொலர்கள் நிர்ணயித்துள்ளது. என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுவேலாவில் துப்பாக்கி சுடும் குழுவை நியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை ட்ரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்’ என கூறினார். எனினும், வெனிசுவேலா ஜனாதிபதி, அமெரிக்கா தன்னை கொல்வதற்கு முயற…
-
- 0 replies
- 361 views
-
-
ஐரோப்பாவின், மிகப்பெரிய அகதிகள் முகாமில்... பேரழிவு! ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13ஆயிரம் பேர் நிர்க்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தற்காலிக இல்லமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, முகாமின் பெரும்பகுதியை தீ அழித்தது. இதனால் 13,000 குடியிருப்பாளர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். எனினும், இந்த தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால் முகாமின் பரந்த பகுதிகளும், அருகிலுள்ள தளமும் தீயில் அழிந்தன. மருத்துவ வசதி மற்றும் கூடாரங்களின் சிறிய இடங்கள் மட்டுமே தீண்டப்படாமல் இருந்…
-
- 1 reply
- 567 views
-
-
‘‘வினோதினியின் முன் நாம் எப்படி நம் முகத்தைக் காட்டப் போகிறோம்?’’ வினோதினி பற்றி நாம் முன்பு எழுதிய கட்டுரையின் இறுதிவரியாக இதை எழுதியிருந்தோம். இப்போது அந்த இறுதி வரிகளையே முதல் வரிகள் ஆக்கவேண்டிய வேதனையான கட்டாயத்தை காலம் நமக்கு இட்டிருக்கிறது. மூன்று மாதங்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வினோதினி பிப்ரவரி 12-ம் தேதி காதலர் தினத்துக்கு இரு நாட்கள் முன்பு தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறாள்... மன்னிக்கவும் கொல்லப்பட்டிருக்கிறாள். அழகான முகத்தை உடைய அந்த சகோதரி ஒருவனை காதலிக்க மறுத்ததன் காரணமாக, முகத்தில் திராவகம் வீசப்பட்டாள். வேதனையும் வலியுமாக இத்தனை நாட்கள் மருத்துவமனையில் திணறிக் கொண்டிருந்த அவளை மரணம் அந்த வலியில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
சீன உயர் மட்டக் குழு ஒன்று அவசரமாக கொழும்பு வருகின்றது; ஜனாதிபதி, பிரதமருடன் மட்டும் சந்திப்பு சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை கொழும்பு வருகின்றது. இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர்கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆரபாய்வதற்காகவே இந்தக் குழு இலங்கை வருகின்றது. நாளை மறுதினம், ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என …
-
- 22 replies
- 2k views
-
-
வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது? 3 நவம்பர் 2020, 04:34 GMT பட மூலாதாரம், GETTY IMAGES ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் மற்றொரு கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நகரில் பெரும்பாலான ப…
-
- 1 reply
- 588 views
-
-
பிரிட்டன் பிரதமர் சுய தனிமைப்படுத்தலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் தொடர்புகளை கொண்டமைக்காகவே போரிஸ் ஜோன்சன் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார். எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் கொரோனா தொடர்பான எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்ல…
-
- 1 reply
- 755 views
-
-
கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி BharatiDecember 29, 2020 கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி2020-12-29T11:18:45+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore குரு அரவிந்தன் தினக்குரல் வாசகர்களுக்கு முதற்கண் இனிய புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தாண்டு எமக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உலகம் முழுவதும் அறிமுகமாகின்றது. இந்த வருடம் அதாவது 2020 ஆம் ஆண்டு கோவிட் -19 தாக்கம் காரரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதில் இருந்து மீள்வதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் நடைமுறைக…
-
- 0 replies
- 406 views
-
-
28 ஏப்ரல் 2013 கர்நாடக மாநிலத்தில் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் அரசு கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவி ஒருவர், கடந்த வாரம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கல்லூரிக்கு சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்ணை தேடிவந்தனர். இந்நிலையில் பெல்காமில் அருகில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் அப்பெண்ணின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால…
-
- 0 replies
- 527 views
-
-
பைடனின் உத்தரவை அடுத்து அமெரிக்கா-மெக்சிகோ இடையே எல்லைச்சுவர் கட்டும் பணி நிறுத்தம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் இரு நாட்டுக்கும் இடையே எல்லைப்பகுதியான நியூ மெக்சிகோவின் Sunland Park இல் சுமார் 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் பைடன் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பலவேறு உத்தரவுகளை பிறப்பித்தார்…
-
- 0 replies
- 527 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * போரினால் சீரழிந்த கிழக்கு அலெப்போவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரும்புவதாக ஐ நா கூறும் நிலையில், அங்குள்ள சூழலை ஆராய்கிறது பிபிசி. * தாய்லாந்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் குறைந்தது அறுபதுபேர் பலியாகும் நிலையில், அங்கு சாலை பாதுகாப்பு எப்படியுள்ளது? * அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி விலகிச் செல்லவுள்ள நிலையில், அவரது வெளியுறவு கொள்கைகள் எப்படியிருந்தன என்பது பற்றிய ஒரு பார்வை.
-
- 0 replies
- 412 views
-
-
தமிழர் உரிமைக்காக சில கோரிக்கை வைக்கின்றோம் - இயக்குனர் கவுதமன்
-
- 0 replies
- 408 views
-
-
தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய சக்திகளுள் ஒன்றான எம்.கே.நாராயணன் நாளை (15/07/2013 அன்று) திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் சிங் ஆகிய மூவர் கூட்டணி, இலங்கையின் மூவர் கூட்டணியுடன் இனப்படுகொலை நிகழ்த்துவதை குறித்து தினந்தோறும் நிலைமைகளை ஆராய்ந்து செயல்படுத்தியது. அத்தகைய நபர் தற்பொழுது பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா என்னும் பெயரில் தமிழகத்திற்கு வருவதன் நோக்கம் என்ன? பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்; அடுத்த பிப்ரவரி வாக்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். சம்பந்தமில்லாமல் ஜூலையில் எம். கே. நாராயணன் வருவது எதற்காக? மேலும்…
-
- 3 replies
- 692 views
-
-
சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சு…
-
- 0 replies
- 756 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 373 views
-
-
சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய துணை அமைச்சர் சிரியாவில் நடந்த இரசாயனத்தாக்குதல் குறித்து விசாரித்த ஐநாமன்ற விசாரணை அதிகாரிகள், பக்கசார்பான ஒருதலைப் பட்சமான அறிக்கையை தயாரித்திருப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த இரசாயனத் தாக்குதல்களை சிரிய அரசு நடத்தவில்லை என்றும், அரச எதிர்ப்பாளர்களே இதை நடத்தினார்கள் என்பதற்கு தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சிரியாவுக்கு சென்று திரும்பிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் செர்கி யப்கோவ், இந்த இரசாயனத்தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சிரிய அரசு தம்மிடம் அளித்திருப்பதாகவும், அவற்றை தாம் ரஷ்ய நிபுணர்களிடம் கையளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்புடைய வி…
-
- 1 reply
- 390 views
-
-
பருவநிலை ஒப்பந்தம்: டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு - சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்ற அதிபர் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவுக்கான அமெரிக்க தூதர் ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்: பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 222 views
-
-
மோடி பிரதமராகக்கூடாது! - அ. குமரேசன் “இணக்கம் மிகுந்த வாழ்க்கை, வந்தாரை வரவேற்கும் இன்முகம் – இவற்றுக்கு அடையாளமானவர்கள் குஜராத் மக்கள்.” -முப்பது ஆண்டுகளுக்கு முன் எனது நண்பனோடு குஜராத்திற்கு அவனது தொழில் தொடர்பாக ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒரு ஆசிரியர் இப்படிச் சொல்லி வழியனுப்பி வைத்தார். அந்த மாநிலத்தில் அதை நாங்கள் நேருக்கு நேர் அனுபவித்தோம். பலித்தானா என்ற ஊரில் நள்ளிரவு சென்று இறங்கியபோது, அந்த நேரத்தில் ஒரு கூலித்தொழிலாளி ஒரு குதிரை வண்டிக்காரரிடம் எங்களுக்காக அவர்களது மொழியில் பேசி, தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் வந்து, வண்டிக்காரர் சரியாகக் கொண்டுவந்து சேர்த்தாரா என்றும், விடுதி வசதியாக இருக்கிறதா என்றும் விசாரித்தார். அவருக…
-
- 1 reply
- 935 views
-
-
மாயமான மலேசியா விமானத்தை (எம்ஹெச் 370) தேடும் பணியின் போது கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத் தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை (எம்ஹெச் 370) தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியப் பெருங் கடலின் ஆழ்ந்த பகுதிகளில் அனைத்து விதமான தகவல்கள் அடங்கிய புள்ளி விவரம் சேகரிக் கப்பட்டு, நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1.20 லட்சம் சதுர கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்தத் துப்பும் கிடைக்க …
-
- 0 replies
- 441 views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.விக்டோரியா மற்றும் தென் அவுஸ்ரேலியா மாநிலங்களில் ஆபத்து. http://www.sbs.com.au/news/article/1158402/'Safer-places'-designated-as-fires-
-
- 1 reply
- 829 views
-
-
அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி கட்சியினர் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்…
-
- 2 replies
- 346 views
-
-
தெரேசா மே ஐரோப்பியபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றிய வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றிய தலைவர்களுடன் மூடிய கதவுகளிற்கு பின்னால் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளன. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தெரேசா மே ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவேண்டும் என நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் பிரதமர் நாடாளுமன்ற தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தயராகவுள்ளார் என டவுனி…
-
- 5 replies
- 342 views
-
-
ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம்- அமைதிப் பேச்சுக்களை நடத்த தயார்: உக்ரைன்! ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார். முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டோம் என்ற அறிக்கைகளை நான் மறுக்க வேண்டும். உக்ரைன் சண்டையின் முடிவு மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது. இதுதான் எங்களின் மாறாத நிலை. ரஷ்ய ஜனாதிபதியின் சலுகைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 256 views
-
-
மத்திய டெல்லியில் ஒரு டென்மார்க் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை டெல்லியில் பஹர்கஞ் என்ற இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வழி தவறிய, இந்த 51 வயது பெண் சுற்றுலா பயணியை ஒரு கும்பல் தாக்கி அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்து, அவர் கத்தி முனையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை கூறுகின்றனர். இன்று புதன்கிழமை காலை அந்த பெண் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன. 2012 ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான…
-
- 13 replies
- 811 views
-
-
ரஷ்யாவை... ஜி20 அமைப்பில் இருந்து விலக்க, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் ! ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும் என்ற பரிந்துரையை போலந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்க கோருவது மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் பொருளாதாரத் தடைகளை அதி…
-
- 0 replies
- 152 views
-