உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
வழமைக்குத் திரும்புகிறது ஜேர்மனி – கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் தொற்றின் தீவிரம் குறைவடைந்து வரும் நிலையில் பகுதியளவில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய சிறிய கடைகள், கார் மற்றும் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு மாத காலமாக முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருந்தும், சமூக இடைவெளியைப் பேணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ப…
-
- 1 reply
- 467 views
-
-
கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை சோதனைகளுக்காக கொண்டு சென்ற சாரதி சுட்டுக்கொலை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாகன சாரதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மியன்மாரின் மேற்கு ராஹின் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் மாதிரிகளுடன் வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டிலேயே வாகன சாரதி உயிரிழந்துள்ளார் …
-
- 0 replies
- 241 views
-
-
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நாளை(ஏப்.,23) மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. இன்றைய தேதியில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் உற்சாகம் தரும் செய்தியை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரத் துறை செயலர் மட் ஹான்காக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, புதிய நோயான கொரோனா வைரஸை நீண்ட கால நோக்கில் தோற்கடிப்பதற்கு சிறந்த வழி தடுப்பு மருந்து மட்டுமே. தடுப்பு மருந்து கண்டறியு…
-
- 0 replies
- 494 views
-
-
சவுதி மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா..! அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
-
- 2 replies
- 449 views
-
-
கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்களை தணிக்கை செய்தமைக்காக சீனாவை கண்டித்துள்ள எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஊடகவியலாளர்களிற்கு சீனாவில் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் உலகளாவிய தொற்றினை கட்டு;;ப்படுத்தியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை குறைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரம் காணப்பட்டிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தவர்களை சீனா மௌனமாக்காமலிருந்திருந்தால்,உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்தியிருக்கலாம் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஐக்கிய இராச்சியத்திற்கான பணியகத்தின் இயக்குநர் ரெபேக்கா வின்சென்ட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஊடக சுதந்திரம் குறித்து தத்துவார்த்த ரீதியில் பேசுக…
-
- 2 replies
- 507 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஜோ பிடென் தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் முதல்பெண்மணி மிச்செல் ஒபாமாவை தெரிவு செய்வார் என கருத்து வெளியிட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவராக காணப்படுவார் என ஜோ பிடென் குறிப்பிட்டுள்ளார். இதயத்துடிப்பில் நான் அவரை தெரிவு செய்கின்றேன் என ஜோபிடென் தெரிவித்துள்ளார். அவர் மிகவும் திறமையானவர்,அவர் மிகச்சிறந்த பெண்மணி ஒபாமாக்கள் சிறந்த நண்பர்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் மிச்செல் ஒபாமாவிற்கு வெள்ளை மாளிகைக்கு அருகில் வாழுவதற்கான ஆசையில்லை என நான் கருதுகின்றேன் எனவும் பிடென் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதிய…
-
- 0 replies
- 344 views
-
-
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட உலகே பேசும் செய்தியாகி விடும். இளவரசி டயானாவிலிருந்து தற்போது அரச குடும்ப பாரம்பரியங்கள் ,சொகுசு வாழ்வை விட்டு நீங்கி கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் வரை, தினந்தோறும் ஏதாவதொரு செய்தி உலகின் எந்த ஊடகத்தையாவது ஆக்கிரமித்து தான் வருகின்றது. அந்த வகையில் அரச குடும்பத்தின் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டமை குறித்து உலக ஊடகங்கள் பேசின. அதே போன்று அவர் குணமடைந்து விட்டதையும் சற்று அமைதியான செய்தியாகவே வெளிப்படுத்தின. ஆனால் அவர் எவ்வாறு குணமடைந்தார், எந்த மருத்துவத்தை பின்பற்றினார் என்பதை மிக சூசகமாக மறைத்து விட்டன இந்த ஊடக மாபியாக்கள். ஏனெனில் இதன்…
-
- 9 replies
- 665 views
-
-
கொரேனா வைரஸ் ஆய்வு கூடத்திலிருந்து பரவியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் விலங்குகளில் இருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அனைத்து ஆதாரங்களும் கடந்த வருட இறுதியில் சீனாவில் வெளவாலில் இருந்தே வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் படெலா சைப் இன்று இதனை தெரிவித்துள்ளார். வைரஸ் விலங்கிலிருந்தே பரவியது என்பதனையே கிடைக்கின்ற அனைத்து ஆதாரங்களும் புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வு கூடம் எதிலும் உருவாக்கப்பட்ட அல்லது சிலரால் தங்களின் தேவைகளிற்காக தங்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தப்பட்ட வ…
-
- 3 replies
- 489 views
-
-
பெரும் மனித அழிவுகளுக்கு பின்னர் இத்தாலியில் இருந்து வெளியாகியுள்ள நற்செய்தி by : Yuganthini கொரோனா வைரஸ் பாதிப்பினால் பாரிய மனித அழிவுகளை சந்தித்து வந்த ஐரோப்பிய நாடான இத்தாலியில் எதிர்வரும் 4ம் திகதியில் இருந்து ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள இத்தாலிய பிரதமர் ஜியூஷெபி கொன்ரே (Giuseppe Conte), ஊரடங்கு தளர்வு குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இவ்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா பெருந்தொடரின் பாதிப்புகள் குறைந்துள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் பகுதி பகுதியாக அமுல்படுத்தப்படும் எனவும்…
-
- 0 replies
- 487 views
-
-
உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பா…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொரோனா குறித்த விசாரணை: சீனாவுக்குள் வர அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு! by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா அனுப்பும் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாத என சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. இது உலகில் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில…
-
- 0 replies
- 336 views
-
-
உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…
-
- 21 replies
- 1.5k views
-
-
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/80409
-
- 20 replies
- 2.4k views
- 1 follower
-
-
மனிதர்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையை ஆரம்பித்திருப்பதாக பிரித்தானிய அரசின் தடுப்பூசி கண்டுபிடிப்புக் குழுவின் உறுப்பினர் ஜோன் பெல் (John Bell) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் பிரித்தானியாவும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாகவுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு குழுவின் உறுப்பினர் ஜோன்பெல் கூறுகையில், “மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி சோதனையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கிவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம்…
-
- 0 replies
- 217 views
-
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்! பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறி பிரம்மன்பரியா மாவட்டத்தில் மதபோதகர் மவுலானா சுபாயர் அஹ்மத் அன்சாரியின் (Maulana Zubayer Ahmad Ansari) இறுதிச் சடங்கில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வெள்ளமெனத் திரண்ட மக்களைக் கட்டுப்படுத…
-
- 9 replies
- 1.1k views
-
-
மைனஸ் 37 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை! ஏன் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி? கொரோனா வைரஸ் வந்த பின், பங்குச் சந்தை சரிவு, மக்கள் மரணம், கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை என எல்லாமே நம்மை வாய் பிளக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு கொடுமையைத் தான் நேற்று அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலையும் சந்தித்து இருக்கிறது. அப்படி என்ன பெரிய விலை சரிவு? -37 டாலர் என்றால் என்ன பொருள் வாருங்கள் பார்ப்போம்.வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்கிற WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, New York Mercantile Exchange (NYMEX) சந்தையில், தாறுமாறாக விலை சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக WTI கச்சா எண்ணெய் மே 2020 ஃப்யூச்சர்ஸின் விலை மைனஸ் 37 டாலரைத் தொட்டு, வரலாறு காணாத வீழ…
-
- 1 reply
- 387 views
-
-
p>கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் கறுப்பினத்தவர்கள்,ஆசிய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் சனத்தொகையில் 14 வீதமாக காணப்படுகின்ற போதிலும் இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏற்றத்தாழ்வு நிலை சிக்கலானது,மாறுபட்டது என அவர் எழுதியுள்ளார். எனினும் இந்த சமூகத்தினர் சுகாதார பணியாளர்களாகவும்,வணிகவளாகங்களிலும், பேருந்து சாரதிகளாகவும் பண…
-
- 2 replies
- 635 views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடியின் மிக மோசமான விடயங்கள் இனிமேல்தான் இடம்பெறப்போகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அட்ஹனோம் கெப்ரெயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களை நம்புங்கள் ,மோசமான விடயங்கள் இனிமேல் தான் இடம்பெறப்போகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இது இன்னமும் பலர் புரிந்துகொள்ளாத வைரஸ் என தெரிவித்துள்ள அவர் இந்த துயரத்தினை தடுத்துநிறுத்வோம் என குறிப்பிட்டுள்ளார் இதுஆபத்தான கூட்டு,நூறுவருடங்களிற்கு பின்னர் இது மீண்டும் இடமபெறுகின்றது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கொரோனா வைரசினை 1918 இல் மில்லியன் கணக்கானவர்களை பலிகொண்ட ஸ்பானிஸ் காய்ச்சலுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது எங்களிடம் தொழில்நுட்பம் உள்…
-
- 4 replies
- 887 views
-
-
சிங்கப்பூரில், அதிகப்பட்சமாக, ஒரே நாளில், 1426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8014 ஆக உயர்ந்தது. இன்று பாதிப்பு உறுதியான 1426 பேரில், 1410 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள். மீதி 16 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப் படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை வழங்கியதில் சுகாதாரத்துறை காட்டிய தீவிரத்தால், சிங்கப்பூர் குடிமக்களிடையே கொரோனா பரவுவது பெருவாரியாக கட்டுப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/107480/சிங்கப்பூரில்,-ஒரே-நாளில்-1426பேருக்கு-க…
-
- 5 replies
- 677 views
-
-
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,268 பேருக்கு கொரோனா, 44 பேர் உயிரிழப்பு! by : Jeyachandran Vithushan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலதிகமாக 4,268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸினால் 6,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனபடி நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,121 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 44 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 356 views
-
-
உலக நாடுகளின் மாபெரும் சந்தேகத்துக்கு பதிலளித்தது சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுகூடம்! by : Litharsan உலககையே பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறித்து சீனாவை பல்வேறு நாடுகள் விமர்சித்து வருவதோடு சந்தேகத்தையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என வுஹானில் உள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையில் தோன்றியதாகக் கூறப்பட்டுவந்தது. எனினும் மற்றொரு பக்கத்தில் இந்த வைரஸ் வுஹான் நகரில் உள்ள வைரலொஜி இன்ஸ்ரிரியூட் ஆய்வுக்கூடத்தில…
-
- 0 replies
- 431 views
-
-
கொவிட் - 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது : வூஹான் ஆய்வுகூட பணிப்பாளர் கூறுவது இதுதான் ! புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த ஆட்கொல்லி வைரஸ் அங்கிருந்து தோன்றி உலகம்பூராவும் பரவி பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முதற்தடவையாக மறுத்திருக்கிறது. புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று இந்த ஆய்வுகூடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவைரஸ் தொற்றுநோயை கையாண்ட முறையில் ஔிவுமறைவின்றி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக ச…
-
- 0 replies
- 351 views
-
-
கொரோனாவிலிருந்து மீண்ட 163 பேருக்கு மீண்டும் கொரோனா! தென் கொரியாவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 163 பேருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தென் கொரியாவில் தற்போது அதன் தீவிரம் படிப்படியாக குறைவடைந்து வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்த 7 ஆயிரத்து 829 பேரில் 2.1 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 44 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ஆராய்ச்சியாளர்கள், குணமடைந்தவர்களின் உடலில் எஞ்சியுள்ள வைரசால் மீண்டும் அதன் தாக்கம் தீவிரமடைந்திருக்கக் கூடும் என தெரிவித…
-
- 2 replies
- 480 views
-
-
நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார். 23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இ…
-
- 3 replies
- 683 views
-
-
நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டி…
-
- 0 replies
- 890 views
-