உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
எதியோபிய விமானம் விபத்து: விமானத்தில் பயணித்த 92 பேரும் பலி ; உறவினர்கள் கதறல் ஜனவரி 25,2010,08:57 IST பெய்ரூட் : 85 பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலையில் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறையுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் மத்தியதரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலோனார் 22 பேர் எதியேபியாவை சேர்ந்தவர்கள். …
-
- 1 reply
- 470 views
-
-
மும்பை, ஆம் ஆத்மி கட்சி பற்றி எங்களுக்கு எந்த வித பயமும் இல்லை என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆம் ஆத்மி டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மராட்டியத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், இதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர். இதனால், மராட்டியத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா–சிவசேனா கட்சிகளுக்கு நெருக்கடி முற்றி உள்ளது. தாயார் நினைவு தினம் இந்த நிலையில் நேற்று தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மும்பை தாதர் சிவாஜி பார்க் பகுதியில் அமைந்து உள்ள…
-
- 0 replies
- 329 views
-
-
பாரிய பூமியதிர்ச்சியையடுத்து சுனாமி எச்சரிக்கை ! மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியானது 8.0 ரிச்டர் அளவில் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாரிய பூமியதிர்ச்சியையடுத்த தென்னமரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24142
-
- 1 reply
- 611 views
-
-
கீவ் புறநகரை மீட்டது உக்ரேன் படை உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரேன் இராணுவம் மீட்டுள்ளது. அதேநேரத்தில் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி துவங்கிய இந்தப் போர், ஒரு மாதத்தை எட்டவுள்ளது. தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த அதன் புறநகர் பகுதியை உக்ரேன் இராணுவம் மீட்டுள்ளது. இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உ…
-
- 0 replies
- 419 views
-
-
ஈராக்கில் உதயமாகுமா தனிநாடு? ஈராக்கில், பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தான் சுயாட்சி குறித்த தேர்தலில், 92 சதவீதத்துக்கு மேலானவர்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்கள் செறிந்து வாழும் மூன்று மாகாணங்கள் அடங்கலான பகுதிக்கு சுயாட்சி அளிப்பதா, இல்லையா என்று முடிவு செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், முப்பத்து மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட குர்திஸ்கள் மற்றும் குர்திஸ் அல்லாதவர்கள் பங்கேற்றார்கள். இதில், சுயாட்சிக்கு ஆதரவாக 28 இலட்சத்து 61 ஆயிரம் பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்த கடைசி நேரத்தில், முடிவுகளை இரத்துச் செய்யுமாறு ஈர…
-
- 8 replies
- 1.6k views
-
-
ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள் ஜெர்மி போவன் பிபிசி செய்திகள், புச்சா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC/LEE DURANT படக்குறிப்பு, ரஷ்ய படையின் வாகனங்கள் சிதைந்து கிடக்கும் புச்சா நகரத்தின் புறநகர் தெரு ரஷ்யா கீயவை சுற்றி வளைத்து, அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியில் உருவான முதல் கல்லறைகளில் ஒன்றாக, புச்சாவின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு மரங்களடர்ந்த சாலை மாறியது. பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த …
-
- 39 replies
- 1.6k views
- 1 follower
-
-
பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார். பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன் கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களை அழைத்து கல்லறையிற்கு அருகில் மது விருந்தளித்துள்ளார். அப்போது ஷாப்பைன் என்ற ஒருவித மதுவினை கண்ணாடி குவளைகளில் ஏந்தியவாறு ஜோசைன், தனது கணவரது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூட்டத்தை கலைந்து செல்ல கூறியதுடன், ஜோசனைக்கு 38 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் …
-
- 0 replies
- 384 views
-
-
பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு 23 அக்டோபர் 2021 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LUKAS BISCHOFF/ALAMY படக்குறிப்பு, வண்ண மயமான கலவையின் காரணமாக ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள் மற்றும் மயக்கும் உப்புக் குகைகள் என இரானின் ஹோமுஸ் தீவு புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்று கூறலாம். "இந்த மண்ணின் சுவையை நீங்கள் உணர வேண்டும்" என தெற்கு இரானின் ஹோமுஸ் தீவில் எனது சுற்றுலா வழிகாட்டியான ஃபர்சாத் கே கூறினார். கருஞ்சிவப்பு நிழல் தரும் மலை, கனிமம்…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
இரான் இராக் எல்லையை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! நூற்றுக்கணக்கானவர்கள் பலி!! ஆயிரக்கணக்கானவர்கள் காயம்!! மணிலா சென்ற அதிபர் ட்ரம்ப், பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டர்டேவுடன் நல்ல நட்பு நிலவுவதாக அறிவிப்பு! கொரிய கடலோரம் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவ தளவாடங்கள்!! மற்றும் சினிமாவாகும் சிரியா ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையின் நிஜ உலக சாகசம்! ஆபத்திலிருந்த அகதிப்படகு கிரேக்கத்தில் கரையொதுங்க உதவியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 373 views
-
-
கணவர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவருவோம்: சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி. அகமதாபாத்: தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் வண்ணமயமாய் வாக்காளர்களின் கதவுகளை தட்டும். குஜராத் மாநிலத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி இருக்கிறதே கொஞ்சம் வித்தியாசமானதுதான். எனக்கு ஓட்டு போட்டால் மனைவியிடம் அடிவாங்கும் கணவரை பாதுகாப்போம் என்று ஆண்களை டச் செய்யும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு சுயேட்சை வேட்பாளர் சொல்லும் வாக்குறுதிகளும் அப்படித்தான் உள்ளது. ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தஷ்ரத் தேவ்தா என்பவர், மனைவியால் அடித்து- உதைத்து தாக்கப்படும் கணவரை காப்பாற்றுவோம். அதற்கு ஏற்…
-
- 4 replies
- 734 views
-
-
ட்ராம்பின் முன்னாள் ஆலோசகர் தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைன் ( Michael Flynn ) தாம் பொய்யுரைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் எப்.பி.ஐ இற்கு தாம் பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். ரஸ்ய தூதுவருடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையை பிழையாக வழிநடத்திய காரணத்திற்காக மைக்கேல் ஃப்ளைன் பணி நீக்கப்பட்டிருந்தார். ட்ராம்ப் பதவி ஏற்றுக் கொள்ள முன்னதாகவே அவர் பணி நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெரிந்து கொண்டே தாம் போலியான, பொய்யான தகவல்களை வழங்கியதாக ஒ…
-
- 0 replies
- 195 views
-
-
புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார…
-
- 1 reply
- 591 views
-
-
ஜெர்மனிய மக்கள் தொகை 1972-ம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நாடு ஜெர்மனிதான். ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தை என்ற அளவிலேயே பிறப்பு விகிதம் இருக்கிறது. 1960 முதல் 1967-க்குள் உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் 30 சதவீதம் ஜெர்மானியர்கள் குழந்தை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.7 கோடியே 55 லட்சமாக உள்ள ஜெர்மானிய மக்கள் தொகை இன்னும் 45 ஆண்டுகளில் 5 கோடியாக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது ஜெர்மானியத் தலைவர்களுக்கு கவலையை அளித்து உள்ளது. Thanks:Malaimalar.. என்னப்பா நம்மட ஆக்கள் எல்லாம் தூங்கினமா? :oops: :oops:
-
- 6 replies
- 2.1k views
-
-
‘மனித உரிமை மீறல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உடந்தை’ லிபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் உடந்தையாக இருக்கின்றன என, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. மத்தியதரைக் கடல் மூலமாக ஐரோப்பாவுக்கு வர முயலும் ஆபிரிக்காவைச் சேர்ந்த அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக, லிபியாவுக்கான உதவிகளை, ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக வழங்கப்படும் இவ்வுதவிகள், லிபியாவின் கடலோரக் காவல் படையினருக்கு உதவுதல், லிபியாவின் தடுப்பு முகாம்களின் வசதிகளை அதிகரிப்பதற்கான மில்லியன்கணக்கான யூரோக்களை வழங்குதல் எனக் காணப்படுகிறது. ஆனால், ஐரோப்…
-
- 0 replies
- 371 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான்: ஆர்ப்பாட்டத்தில் கலவரம் படத்தின் காப்புரிமைEPA இரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டாத்தில் கலவரம் வெடித்தது. மக்களின் வாழ்க்கைதரம் மிக மோசமடைந்துவருகிறது என்று சொல்லி கடந்த மூன்று நா…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை சமாதான தூதர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் எரிக் சொல்ஹைம் இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகளின் தலைமை அனுசரணையாளரான எரிக் சொல்ஹைம் தான் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் என்ற தனது புதிய பொறுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் இந்த முடிவு என்றும் ஆனாலும் இலங்கைய்ல் ஒரு நிரந்தர சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்றும் எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை சமாதான முயற்சிகளுக்கான நோர்வே தூதுக்குழுவின் தலைமை மத்தியஸ்தராகவும் சிறப்புத் தூதராகவும் இருந்துவருபவர் எரிக் சொல்ஹைம்தான். நோர்வேயில் சென்ற வருடம் பிற்பகுதியில் புதிய அரசு அமைந…
-
- 0 replies
- 650 views
-
-
தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம் சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் [^] கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார். சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள். காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக்…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஈரானில் ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து இன்று ஒரு மணித்தியாலத்தினுள் 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்திலேயே இவ்வாறு அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தலைநகர் டெஹ்ரானிலிருந்து சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் ஏனைய இடங்களில் ரிக்டர் அளவில் 5 அளவில் நிலறடுக்கங்கள் ஏற…
-
- 0 replies
- 214 views
-
-
மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கம் [ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2006, 06:59 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சர்வதேச ஊடகங்களில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்பின் உண்மைத் தன்மை குறித்து பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் விளக்கியுள்ளது. பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பான Human Rights Watch இனால் (மனித உரிமைகள் கண்காணிப்பு) கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை பல பொய்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைகளையும், ஒரு பக்கச் சார்பாக தமிழீழ விடுதலைப் ப…
-
- 0 replies
- 1.5k views
-
-
திருமணத்துக்குப் புறம்பான உறவில் ட்ரம்ப்? ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திருமணத்துக்குப் புறம்பான உறவொன்றை, தற்போது கொண்டிருக்கிறார் என, சர்ச்சைக்குரிய ஊடகவியலாளரான மைக்கல் வூல்ஃப் தெரிவித்துள்ளார். மைக்கல் வூல்ஃப் எழுதிய, “நெருப்பும் கோபமும்: ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகைக்கு உள்ளே” என்ற புத்தகம், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, புதிய சர்ச்சையை, வூல்ஃப் ஏற்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட வூல்ஃப்-இடம், அவரது புத்தகத்தில் எழுதப்பட்ட எந்த விடயமாவது, போதியளவு கவனத்தை ஈர்க்கவில்லையா எனக் கேட்கப்பட்ட போது, ஜனாதிபதி ட்ரம்ப்பின் திருமணத்துக்குப் புறம்பான…
-
- 0 replies
- 386 views
-
-
ரஷ்ய ராணுவத்திடமிருந்து சில பகுதிகளை மீட்டுள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேட்டி கீவ்: ‘கார்கிவ் நகரின் அருகே ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை, உக்ரைன் ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் தலைநகர் கீவ்வுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய நகரமான கார்கிவ், நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கீவ் நகரில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள கார்கிவ் நகரில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த பிப்.24ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியதும், கார்கிவ் நகரை அதிகமாக குறிவைத்து ரஷ்ய ராணுவம் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கார்கிவ் நகரை கை…
-
- 0 replies
- 574 views
-
-
துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்…
-
- 0 replies
- 230 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார். கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது. கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங…
-
- 4 replies
- 938 views
-
-
பிரித்தானிய சென்றுள்ள இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் . http://meenakam.com/2010/12/03/15267.html
-
- 0 replies
- 786 views
-
-
அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது By T. SARANYA 07 OCT, 2022 | 02:55 PM அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-