உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 09:35 AM இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்கவுள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியைச் சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதம…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் - ரஷ்யாவின் உடனடி பதில் இந்தோனேசியாவின் பாலித்தீவில் இன்று ஆரம்பித்த உலகின் முக்கிய பொருளாதார வலுக்கொண்ட நாடுகளின் ஜி20 மாநாட்டில் பங்கெடுத்த மேற்குலகத் தலைவர்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குரிய கண்டனங்கள் வெளிப்பட்டுள்ள அதேநேரம், உலகின் உணவு நெருக்கடிக்கு பாதுகாப்பை வழங்கும் தீர்வுகள் அலசப்பட்டுள்ளன. இதேவேளை, இன்று ஜி20 மாநாட்டில் மெய்நிகர் வழியில் உரையாற்றிய உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சமாதானப் பேச்சு இன்று ஆரம்பித்த ஜி20 உச்சிமாநாட்டில் தனது அமைதித் திட்டத்தை முன்வைத்த உக்ரைனிய அதிபர் அதில் அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப…
-
- 8 replies
- 889 views
- 1 follower
-
-
இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். எந்த விதத்திலும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகுவதில்லை என அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு தகவல் வழங்குவதற்கான வழியைத் தான் நான் கையாளுகிறேன். வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பிலும் நாம் தகவல் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.youtube.com/watch?v=GozqOMn6SmI முழு பேட்டியையும் கேட்க: http://www.watch60m…
-
- 0 replies
- 510 views
-
-
துனீசியா, எகிப்து நாடுகளின் மக்கள் எழுச்சியின் வெற்றியில் அல்ஜீரியா மக்களும் ஆர்பாட்டங்களில் இன்று ஈடுபட்டனர். மே 1 சதுக்கத்தில் கூடிய மக்கள் சனாதிபதி பூர்ரிபிக்கா வெளியேறு என கோஷமிட்டனர். அதிபர் பூர்ரிபிக்கா,President Abdelaziz Bouteflika, 1999 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருப்பவர்.எவ்வளவு மக்கள் பங்குபற்றினர் என்பது பற்றி சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருபது வடங்களுக்கு மேலாக அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள் தை மாதத்திலும் நடந்தன. http://www.nytimes.com/2011/02/13/world/africa/13algeria.html ==================================================================================== அல்…
-
- 1 reply
- 1k views
-
-
உலகப் பார்வை: 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ரா…
-
- 0 replies
- 403 views
-
-
சிரியா படையினரிடமிருந்து கைப்பற்றிய போர் விமானங்களை இயக்க, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இராக் அதிபர் சதாம் உசைன் படையில் பணியாற்றிய போர் விமானி ஒருவர் பயங்கரவாதிகளுக்கு அந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: சிரியாவின் அலெப்போ, ராக்கா மாகாணங்களில் சிரியா படையிடமிருந்து ஐ.எஸ். அமைப்பினர் சில விமான தளங்களைக் கைப்பற்றினர். இதன் மூலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில போர் விமானங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசமாகியுள்ளன. அவை மிக்-21, மிக்-13 ரக போர் விமானங்கள் எனத் தெரிகிறது. எனினும், …
-
- 1 reply
- 493 views
-
-
போட்டி மதிமுக பொதுக்குழு கூடியதுவைகோவை நீக்க தீர்மானம் டிசம்பர் 29, 2006 சேலம்: சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. இதில் வைகோவை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போ…
-
- 0 replies
- 1k views
-
-
ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. …
-
- 0 replies
- 295 views
-
-
கொலம்பியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிசால் நகரில் இருந்து ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. அது மலைப் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளதாக்கில் கவிழ்ந்தது. இதையடுத்து, அந்த பஸ் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் பலியானார்கள். அது போன்று பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=26965
-
- 0 replies
- 445 views
-
-
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அதிக அளவில் வழக்குகள் சேர்ந்ததால் தோஷம் நீக்க சிறப்பு யாகம் நடத்தி பூஜை நடத்தப்பட்டது. ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதிலும் குற்றவியல் வழக்குகள்தான் அதிகமாம். இதனால் காவல் நிலையத்தில் தோஷம் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதாக போலீஸ் தரப்பில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் குறையவும், காவல் நிலையத்துக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கவும் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செ…
-
- 0 replies
- 672 views
-
-
ரியடி ஜெனிரோ: ராணுவ சர்வாதிகார ஆட்சியில், தான் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் பெண் ஜனாதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில், 1964ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக்காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை, ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர். இந்நிலையில் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் அதிபராக இடதுசாரி கொள்கையுடைய தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய அதிபர் தில்மா ரூசெப்…
-
- 0 replies
- 574 views
-
-
தென் சீனக்கடலில் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்தும் சீனா, வரும் சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்கிறார் இம்ரான்கான், அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகளை கண்டறிய, ஹேக்கர்களாக மாறிய பள்ளிச் சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 437 views
-
-
‘இத்தாலி முதல் வெனிசுவேலா வரை’ உலகெங்கும் உச்சத்தில் குடியேறிகள் பிரச்சனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். வெனிசுவேலா, நிகராகுவே, இத்தாலி என உலகெங்கும் குடியேறிகள் விவகாரம்தான் உச்சத்தில் இருக்கிறது. அரசியல் ஸ்திரமற்றதன்மை, பொருளாதாரம் என பல காரணிகளால் உலகெங்கும் பல நாடுகளில் கொத்து …
-
- 0 replies
- 404 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2023 | 09:22 AM அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான வைத்தியர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில், "புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெ…
-
- 1 reply
- 520 views
- 1 follower
-
-
தற்கொலைக் குண்டுகள் மண்டபம் கடலில் மீட்பு! அகதிகள் அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம் தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகளை மண்டபம் கடற்பகுதியில் வைத்துப் பொலிஸார் மீட்டுள்ளனர். 5 வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியொன்றை புதன்கிழமை அதிகாலை மீட்டிருக்கும் மண்டபம் பொலிஸார் இந்தச் சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறித்த வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டி றெஜிபோமில் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதனை மீட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் விடிகாலை "சீல்' வைக்கப்பட்ட நிலையில் பெட்டியொன்றைக் கண்ணுற்ற ஈழத்தமிழ் அகதியொருவர் அதனைப் பிரித்து…
-
- 2 replies
- 916 views
-
-
2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல் ஜேர்மனியின் நிதியமைச்சரான அஞ்ஜெலா மெர்க்கல் 2021 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் தனது பதவிக்காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளார். சமீபத்திய பிராந்திய தேர்தலில் அவரது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமது பதவிக் காலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன் என பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 64 வயதான அஞ்ஜெலா மெர்க்கல் 2000ஆம் ஆண்…
-
- 1 reply
- 566 views
-
-
பெரும்பான்மையை இழந்த ட்ரம்பின் குடியரசுக் கட்சி : அமெரிக்க – மெக்சிகோ எல்லை சுவர் அமைக்கும் திட்டத்தில் நெருக்கடி! அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்திருப்பதால், மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை எனப்படும் கீழவையில் பெரும்பான்மை பெறவில்லை.ஆனால் செனட் அவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதை பெரிய வெற்றி என ஜனாதிபதி வர்ணித்து வந்தாலும், அவர் அறிவிக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, ஜனநாயக கட்சியின் சம்மதம் அவசியமானது. மேலும…
-
- 0 replies
- 589 views
-
-
சீன அணையால் பாதிப்பில்லை: பிரதமர் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதி மீது தாங்கள் கட்டிவரும் அணையால் இந்தியாவின் நலன் பாதிக்காது என்று சீனா தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா அணை கட்டி வருவது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரம்மபுத்திரா நதி மீது அணை கட்டும் விவகாரம் குறித்த…
-
- 0 replies
- 447 views
-
-
முடியல்ல... இந்த அரசியல்வாதிங்க மட்டும் எப்படி இப்படி.. அடுத்தவனை கொப்பி பண்ணுறதில.. அவ்வளவு அவசரமா இருக்காங்க. அதுவும் இப்ப மேற்குலக அரசியல்வாதிங்களுக்கு பாடம் எடுப்பது.. ஹிந்திய மோடி.. சொறிலங்கா மைத்திரி. உலகம் உருப்பட்ட மாதிரித்தான். Election 2015: David Cameron sets out plan for 'first 100 days' David Cameron has said wages, welfare, housing and childcare will be at the heart of the Conservatives' programme for government in its first 100 days. http://www.bbc.co.uk/news/election-2015-32470837
-
- 7 replies
- 624 views
-
-
ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்! வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இறுதி செய்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தா…
-
- 4 replies
- 650 views
-
-
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலர் காயம்-சுனாமி எச்சரிக்கை ஜூலை 16, 2007 டோக்கியோ: வட மேற்கு ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 190 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானின் வடமேற்கில் உள்ள நிகாடா மாகாணத்தில் உள்ள காஷிவாசாகி என்ற இடத்திற்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. ஏராளமானோர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளனர். அதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. இங்குள்ள கோவில்களின் கூரைகளும் இடிந்து விழுந்தன. நிகாடா மாகாணத்தில் உள்ள ஒரு அணு மின்சக்தி நிலைய…
-
- 0 replies
- 691 views
-
-
01 JAN, 2024 | 09:32 PM காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகபா வளைகுடாவில் அமைந்துள்ள ‘Epicon’ ஆனது, உயர் கட்டிடக்கலை மற்றும் ஆடம்பர வசதிகள் ஆகிய இரண்டிலும் உச்சம் தொடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில், 225 மீட்டர் உயரமும் 275 மீட்டரை எட்டும் அளவு உயரமும் கொண்ட இரு கண்கவர் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 41 முக்கிய ஹோட்டல்கள், 14 அறைத்தொகுதிகள் மற்றும் அதி சொகுசு குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 579 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார். …
-
- 0 replies
- 970 views
-
-
சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது. புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே …
-
-
- 16 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிலியின் அடகாமா பாலைவனத்தில் லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது "லித்தியம் முக்கோணத்தில்" உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், குளோபல் சைனா யூனிட் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு அர்ஜென்டினாவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டபடி நள்ளிரவில் ஐ கிங் கண் விழித்தார். அவர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார். அர்ஜென்டினா தொழிலாளர்கள் வளாகத்தைச் சுற்றி வளைப்பதையும், எரியும் டயர்களால் நுழைவாயிலைத் தடுப்பதையும் அவர் கண்டார். "எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால் நெருப்…
-
- 1 reply
- 568 views
- 1 follower
-