உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
அமெரிக்க ரைம்ஸ் என்னும் சஞ்சிகையில் நவநீதம்பிள்ளை வருவதற்காக எங்கள் பொன்னான வாக்கைப் போடுவோம் http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.htmlமேலுள்ள சுட்டியை அழுத்தி What do you think? என்னும் பகுதியைப் பாருங்கள் அங்கே Definitely No Way என்ற பகுதி இருக்கிறது இதில் Definiteiy என்ற இடத்தில உங்கள் புள்ளியைப் போடவும். உற்றார் உறவினர் நண்பர்களையும் கேடடு வாக்களிக்க வைக்கவும்.
-
- 2 replies
- 550 views
-
-
படத்தின் காப்புரிமை AFP/Getty Images Image caption நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ளது. (எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் உங்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கலாம்.) அந்த பெண் குழந்தைக்கு இப்போது மூன்று வயது. அந்த குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானபோது, வயது இரண்டுதான். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகப்படுபவர் மீதான விசாரணையில் இந்த குழந்தை சாட்சியம் அளித்துள்ளது. தனக்கு என்ன நடந்தது? என்று சிறப்பாக பயிற்சி பெற்ற வழக்கறிஞர் உடனிருக்கும்போது விக்டோரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் இரண்டு மணிநேரம் சாட்சியம் …
-
- 0 replies
- 637 views
-
-
சுதந்திர நாடு கோரி திபெத்தியர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் திபெத்தியர்கள். டில்லியில் உள்ள சீன தூதரகம் முன் பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் உள்ள சீன தூதரகத்தில் அத்து மீறி நுழைந்த திபெத்தியர்கள் அங்கிருந்த சீன கொடியை வலுக்கட்டாயமாக இறக்கி திபெத் கொடியை ஏற்ற முற்பட்டனர். திபெத் தலைநகர் லாசாவில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. தலாய் லாமா சீன அரசுக்கு திபத்தியர்களை கவுரமாக நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமைச்செயலகம் முன்பும் போராட்டம் நடந்து வருகிறது. ஆதாரம் தினமலர்
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை! அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவினால் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும்…
-
- 1 reply
- 723 views
-
-
ஒகேனக்கல் உரிமையை காக்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை மறுநாள் திங்கட்கிழமை (07.04.08) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 650 views
-
-
எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் இலக்கையும் தாண்டி அதிக அளவில் வந்துள்ளதால், கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் விசாக்களை வழங்க அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 2009ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களை விநியோகிக்கும் பணியை அமெரிக்க குடியுரிமைப் பிரிவு தொடங்கியுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பொதுப் பிரிவில் 65 ஆயிரம் விசாக்க..................... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/1.html
-
- 0 replies
- 649 views
-
-
நேபாளத்தில் ஆளும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (மாவோயிஸ்ட்) பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து தனிக் குழுவை அமைத்துள்ள மோகன் வைத்யா கிரண், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் நேபாளம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் கிரண் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லையில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில், கட்சியில் இருந்து விலகி தனிக் குழுவாக இயங்க இருப்பதாக கிரண் அறிவித்தார். "எங்களுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறையில் நம்பிக்கையில்லை. எனவே புதிய மக்கள் குடியரசை அ…
-
- 0 replies
- 299 views
-
-
ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவி முதல் தடவையாக சவுதிக்கு ஜீ 20 நாடுகளின் தலைமைப் பதவியை ஜப்பானிடமிருந்து சவூதி அரேபியா நேற்று (01) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அடுத்த வருடம் நவம்பர் 21, 22 ஆம் திகதிகளில் இதற்கான மாநாட்டை சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் பங்கு பற்றவுள்ளன. இந்த மாநாட்டையொட்டிய நூறு விஷேட வைபங்களையும் சவூதிஅரேபியா நடாத்தவுள்ளது. வரலாற்றில் அரபு நாடு ஒன்றுக்கு ஜீ 20 அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவைாகும். பழமைபேணும் நாடான சவூதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், சவூதியின் நடத்தைகள் தொடர்பில் சர்வதேச அளவில் …
-
- 0 replies
- 376 views
-
-
ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர் ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குழந்தைகள் அடங்கலாக குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் கூறியுள்ளார். வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ…
-
- 1 reply
- 422 views
-
-
15 APR, 2025 | 12:30 PM சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் த…
-
- 4 replies
- 407 views
- 1 follower
-
-
[size=4]அகமதாபாத்: மிகவும் அசாதாரணமான வாய்ப்பு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு வழங்கியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்திற்கு மலிவு விலையில் பெட்ரோல் வழங்கினால், தேசிய மின் கட்டமைப்புக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.[/size] [size=3][size=4]ஜூலை 30ம் தேதியும், 31ம் தேதியும் அடுத்தடுத்து 3 முறை வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மின் கட்டமைப்புகள் செயலிழந்து கிட்டத்தட்ட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கிப் போயின. இதையடுத்து தேசிய மின் கட்டமைப்புக்கு நிபந்தனையுடன் தேவையான மின்சாரத்தைத் தருவதாக மோடி அறிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து குஜராத் மின்சாரத்துறை அமைச்சர் செளரப் படேல் கூறுகைய…
-
- 9 replies
- 4.2k views
-
-
ரஷ்யா உக்ரேன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்! ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் உயிரிழப்புக்கும் வழி வகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே போர் முடிவுக்கு வருவது குறித்து எதிர்பார்க்கப்படும் தொலைபேசி அழைப்புக்கு முன்னதாக இந்த தாக்குதல் வந்துள்ளது. ரஷ்யா ஒரே இரவில் 273 ஷாஹெட் ட்ரோன்களை ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. முக்கியமாக மத்திய கீவ் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு 28 வயது பெண் ஒருவர் இதனால் உயிரிழந்தார். மேலும…
-
- 0 replies
- 344 views
-
-
Published By: RAJEEBAN 08 JUN, 2025 | 11:17 AM அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்…
-
- 7 replies
- 512 views
- 2 followers
-
-
01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் நேற்று அடையாளம் காணப்படவில்லை! சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலானது கொரோனா தொற்று தொடர்பில் சீனாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த பல வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வந்திருந்தினர். இதனால் சீன அரசாங்கம் பல மாதங்களாக நாட்டின் பல பகுதிகளை தனிமைப்படுத்தியும், பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றையும் விதித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரிதும் போரடி வந்தது. இந் நிலையில் அண்மைய நாட்களில் சீனாவில் புதிய கொ…
-
- 1 reply
- 327 views
-
-
இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்-வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இங்கிலாந்தில் ஊரடங்கை தளர்த்த பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளை நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ளார். பதிவு: ஏப்ரல் 17, 2020 12:54 PM லண்டன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்திருந்தார். இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது. வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியதாவது:- நடைமுறையில் இ…
-
- 0 replies
- 259 views
-
-
கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் உட்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சொந்த வர்த்தக நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் இதை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் மரணங்கள் குறித்த அறிக்கையை நான் பார்க்க…
-
- 4 replies
- 996 views
-
-
கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள் ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில் அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 46 டிகிரி அதிகம். அதேபோல கட்டங்காவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகும். மே மாதத்தில் சைபீரியாவில் வெப்பமான வானிலை நிலவுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குளிர்காலத்திற்கு பிறகு இங்கு வானிலை இப்படி ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மாற்றமானது, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்ப…
-
- 0 replies
- 380 views
-
-
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இராக்கின் போருக்கு உதவும் வகையில் அமெரிக்கா மேலும் 560 படையினரை அனுப்பவுள்ளது. பாக்தாத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்ட்டர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான நடவடிக்கையின் கவனம், நாட்டின் வட பகுதியில் உள்ள, அதன் கோட்டையான மொசூலின் நகரை நோக்கித் திரும்புகையில், அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு படைகள் ஐ.எஸ் வசமிருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கய்யாரா விமான தளத்தை திரும்ப கைப்பற்றின.. அது மொசூல் நகரை திரும்ப கைப்பற்ற பயன்படும் மையங்களில் ஒன்றாக செயல்படும் என கார்ட்டர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்கான தளவாட ஆதரவுகளை அமெரிக்கர்கள் வழங்குவா…
-
- 0 replies
- 168 views
-
-
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? ஐயோ என்ன கொடுமை? அதைப் பார்த்த அன்று முழுவதும் என்னால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை. -எஸ். சௌமியா அது சென்னை சட்டக் கல்லூரி அல்ல. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி. அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். நிஜமாகவே நடக்கிற எந்த சண்டையையும் இப்படி காட்சியாக்கி திட்மிட்டு தொகுத்து, பின்னுரைகளோடு ஒளிப்பரப்பினால், பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். நானும் அதைப் பார்த்த மாத்திரத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அந்தக் காட்சி என்னை பதட்டப்படவைத்தது. மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. கட்டையாலும், தடியாலும், குச்சியாலும் தாக்குகிற இந்தக் காட்சி…
-
- 5 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார். அண்மையில் பதவி விலகிய டேவிட் கமரூன் அரசாங்கத்தில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த, ஹியூகோ ஸ்வயருக்கு, புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படவில்லை. ஹியூகோ ஸ்வயர், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த போது, சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவரான இருந்து வந்தார். இந்த நிலையில், புதிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ள அலோக் சர்ம…
-
- 0 replies
- 213 views
-
-
கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாள் பாக்ஸிங் நாள் எனப்படும் நாள் இன்று கனடா முழுவதும் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் எந்தெந்த இடங்கள் இயங்கும் மற்றும் எவையெல்லாம் விடுமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் நூலகங்கள் போன்ற அரசுத்துறை அலுவலகங்களுக்கு இன்று விடுமுறையாகும். ஆனால் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு நிறுவங்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது வழக்கம்போல் இயங்கும் நிறுவனங்கள்: Restaurants Movie theatres Shopping centres (reduced hours) Grocery stores Public ice rinks ROM, 10 a.m. - 5:30 p.m. The AGO 10 a.m. - 4 p.m. Activities at the CN Tower are open…
-
- 0 replies
- 456 views
-
-
வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர். இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார். பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்…
-
- 0 replies
- 527 views
-
-
வணக்கம் உறவுகளே, மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கின்றது......ஊடங்களில் எல்லாம் முக்கிய செய்தியாக தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருப்பது கருணாநிதி அவர்களினுடைய பேச்சு அதாவது தனக்கு பிறகு ஸ்டான்லின் இருக்கின்றார் என்று அறிவித்ததன் மூலம் தி மு க என்ற மாபெரும் இயக்கத்தின் அடுத்த பொறுப்புக்கு ஸ்டான்லின் அவர்கள் வருவது ஏறத்தாள உறுதியாகி விட்டது.......... ஸ்டான்லின் ஒன்றும் அரசியலுக்கு தலைவரின் மகன் என்ற செல்வாக்கோடு வலம் வந்தவர் அல்ல மாறாக ஊர் ஊராக சென்று இயக்கத்தை வளர்த்து அரசியல் களம் பல கண்டு சிறை சென்று சென்னை மாநகராட்சி தலைவராக திறம்பட செயலாற்றி பின்பு அமைச்சராகி அதன் பின்பு துணை முதல்வராகி என்று திறம்பட செயலாற்றியவர் சரி இனி இன்றைய that's தமிழ் இல்…
-
- 1 reply
- 672 views
-
-
ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு அதிகாரி உள்பட 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை காஷ்மீரில் அடிக்கடி ஊடுருவும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல்…
-
- 0 replies
- 177 views
-