Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர்.இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர். அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில், உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். விஷமிகள் சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனின…

  2. தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.…

  3. ஒபாமாவின் நம்பிக்கையைத் தகர்த்த கைதி! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ர…

    • 2 replies
    • 478 views
  4. ஒபாமாவின் பெண்கள் தின உரை. யாழில் யாரும் பெண்கள் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது....யாழில் ஆண்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும்.இதைப்போக்குமுகமாக எமது தலைவர் ஒபாமா குரல் கொடுத்துள்ளார்.

    • 0 replies
    • 351 views
  5. வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார். இதையொட்டி பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘பீஸ்ட்’ கார் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிளாக்பெர்ரி போனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் அந்த போனை பயன்படுத்திக் கொள்வார். அந்த போனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:- உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அதிபர் ஒபாமா பயன்படுத்தும் போனில் பாஸ்வேர்ட…

  6. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1776-ம் ஆண்டு விடுதலை பெற்ற அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.சுதந்திர நாடாக அமெரிக்கா பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக கையில் மைக்கை பிடித்து தாய்நாட்டை வாழ்த்தி அதிபர் ஒபாமா ‘ஹாப்பி பர்த்டே’ பாட்டைப் பாடினார். பின்னர், அதேநாளில் பிறந்த தனது மூத்த மகள் மாலியாவின் பிறந்தநாளுக்காக மகளை அருகில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் ‘ஹாப்பி பர்த்டே’ பாடும் காட்சியும், தனது பிறந்தநாளை அரசு விழாவைப்போல் சிறப்பித்த தந்தை ஒபாம…

  7. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேமிராவில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெலி ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, போட்டோகிராபியை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள…

    • 0 replies
    • 330 views
  8. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸை ஒபாமாவர்ணித்து பேசியதாக எழுந்த பிரச்சனையில் நேற்று ஒபாமா தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தார். இதற்கு இன்று பதில் கூறிய கமலா ஹாரிஸ் தரப்பு, அதிபர் ஒபாமாவின் வருத்தத்தை தான் ஏற்றுக்கொண்டதாகவும் இதை ஒரு பெரிய விஷயமாக தாம் நினைக்கவில்லை என்றும் அறிவித்திருக்கின்றார். இத்துடன் ஊடகங்கள் இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கமலா ஹாரிஸ் பல வருடங்களாக நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கின்றார் என்றும் அன்றைய நிகழ்ச்சியில் ஒபாமா தன்னுடைய அழகை வர்ணித்து கூறியதை தாம் தவறாக ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், ஊடகங்கள…

    • 0 replies
    • 608 views
  9. ஒபாமாவின் மாமனார் கைது. அமெரிக்காவின் மாசூஸெட்ஸ் நகரில், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றாச்சாட்டின் பேரில் அமெரிக்க ஜனாதிபதியின் மாமனார் குடியகல்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்யங்கோ ஒபாமா ஃபிராமிங்காமில் (வயது 67) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரிடம் யாருக்காவது தொலைபேசியில் பேச விரும்புகிறீர்களா? எனக் கேட்டபோது, வெள்ளை மாளிகைக்கு பேசலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆன்யாங்கோ ஒபாமா கென்யாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.

  10. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள் பற்றி நடத்தபட்ட விவாதங்கள், நிகழ்ச்சிகளுக்கான கால அட்டவணைகள் போன்ற பல முக்கிய தகவல்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒபாமாவின் தனிப்…

    • 0 replies
    • 220 views
  11. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார் . அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார். புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட…

  12. ஜனாதிபதி மாளிகையில் எட்டிப்பார்த்த நாய்!!: துரத்தி பிடித்த போலீஸ். வர்றார்... ஒபாமா வர்றார்... என இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்க... டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் எறும்பு கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தெரு நாய் ஒன்று கடும் பாதுகாப்பையும் மீறி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஹாயாக வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் 66 வது குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று வருகை தந்தார். அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒபாமா வர இருந்த சம…

  13. ஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல் Maschom Watch எனப்படும் இஸ்ரேலிய மனித உரிமைகள் ஸ்தாபனம், அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பாராக் ஒபாமாவிற்கு, பாலஸ்தீன மக்களின் அவல வாழ்வை தெரிவிக்கும், திறந்த (வீடியோ) மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலிய படைகளினால் வீதித் தடை சோதனைகளில் சிறுமைப்படுத்தப்படும் பாலஸ்தீன மக்களை இந்த வீடியோ பதிவு செய்து காட்டுகின்றது.

    • 0 replies
    • 693 views
  14. அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு 3 மில்லியன் டொலர் தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப் போல மேலும் 9 பேருக்கும் …

  15. ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிறது - சி.என்.என் கருத்துக் கணிப்பு Published: புதன்கிழமை, செப்டம்பர் 12, 2012, 10:36 [iST] Posted by: Shankar வாஷிங்டன்: சென்ற வாரம் நிறைவடைந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு தேசிய அளவில் ஒபாமாவுக்கு 52% சதவீத வாக்காளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்த்து போட்டியிடும் ராம்னிக்கு 46 சதவீதமே ஆதரவு உள்ளது' என்று திங்கள்கிழமை வெளியான சி.என்.என் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இது 48% - 48% என இருவருக்கும் சரி சம்மாக இருந்தது. மாநாட்டில் க்ளின்டனின் ஆதாரப்பூர்வமான பேச்சும், ஒபாமாவின் ஏற்புரை பேச்சும் இந்த மாற்றத்திற்கு பெருமளவில் காரணமாக கருதப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இன…

  16. ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை! புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது. இந்தியாவில்…

  17. நியூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக நமது தேசியக் கொடியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்டோகிராப் போட்டு அதை பிரபல சமையல்கலைஞர் விகாஸ் கன்னா மூலம் ஒபாமாவிடம் சேர்ப்பிக்க திட்டமிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்தக் கொடியை விகாஸ் கன்னா மூலமாக ஒபாமாவிடம் சேர்க்கவிருந்த நிலையில் தற்போது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாம். http://tamil.oneindia.com/news/international/controversy-on-pm-signing-on-national-flag-236448.html

  18. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 57 வயது பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. "டெடிபேர் பாரடைஸ்' என்று அறியப்படும் என்ற அந்த பெண்ணின் பெயர் டெனீஸ் ஓநீல். அதிபர் ஒபாமாவை கொல்லப் போவதாக அவருக்கு 15-பக்க கடிதம் எழுதியதாக கடந்த மாதம் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். வெறும் மிரட்டலோடு நின்று விடாமல், அந்த மிரட்டலை நிறைவேற்றும் எண்ணத்திலும் ஓநீல் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடம் வரை சிறை தண்டனையும், 2,50,000 டொலர்கள் வரை அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம். ஏற்கெனவே 2008-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர…

  19. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில் ரிசின் என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ´செனட்´ உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு வந்த ஒரு மர்ம கடிதத்திலும், இவ்வாறு விஷம் தடவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-…

  20. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்ட…

  21. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரெசின் எனப்படும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. போலீசார் பலரிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார். தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை மற்றும் விஷம் தயாரிப்பது தொடர்பாக அவரது கணவர் இண்டர்நெட்டில் தகவல்களை தேடியது போன்றவற்றை அந்த பெண் குறிப்பிட்டார். இதனையடுத்து, அவரது கணவரிடம் விசாரித்து வந்தபோது போலீசாரின் சந்தேகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது.…

  22. ஒபாமாவுடன் ஒரு செவ்வி கேள்வி பதில்கள்

    • 0 replies
    • 1.2k views
  23. வரும் 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். பாலின் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். அவரிட…

    • 4 replies
    • 691 views
  24. வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள். மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார். ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந…

  25. அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினமான இன்று ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இத்தாக்குதல்கள் ஒபாமாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. இச்சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கான் பொலிஸாருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்கானி்ன் கிழக்கு மாகாணத் தலைநகரில் அமெரிக…

    • 0 replies
    • 573 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.