உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன. இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார். ஆனால…
-
- 3 replies
- 1.1k views
-
-
பணகுடி: செல்போன் வாங்க தாய் பணம் தராததால் மனமுடைந்த தனியார் ஐடிஐ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகவல்லிபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணகுமார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தனது அம்மாவிடம் செல்போன் வாங்க சரவணகுமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா மறுத்தார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் thatstamil.com
-
- 2 replies
- 887 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வடகொரியா பிரகடனம் செய்தபோதிலும், அதன் கூற்றை நம்ப நிபுணர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். - குடியேறிகள் வருகையை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடு சுவீடன் நாட்டில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த பிபிசியின் நேரடித் தகவல். - திராட்சை ரசம் மேட்டுக்குடி பானம் என்ற மனப்பாங்கு சீனாவில் மாறுகிறது. அங்கு அதன் விற்பனை சாதாரண மக்களையும் கவர்ந்திருக்கிறது.
-
- 0 replies
- 399 views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
ஜனாதிபதியாக தெரிவான பின் முதன்முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒபாமாவின் இந்த சந்த…
-
- 0 replies
- 367 views
-
-
பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்... எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை. காரணம், காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள் என்பதால். ஆனால் பாகிஸ்தா…
-
- 1 reply
- 653 views
-
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது. இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்ப…
-
- 0 replies
- 248 views
-
-
ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி, தனது 93ஆவது வயதில் காலமானார். பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி எகிப்தியரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன. யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் ஆகிவற்றை உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார். ருவாண்டா இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறியமையை, பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி விமர்சித்த…
-
- 1 reply
- 350 views
-
-
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதை ஒட்டி சமுகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என வாக்க…
-
- 4 replies
- 654 views
-
-
அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும் – ஈரான் அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி ஐ.எஸ். மற்றும் அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாகப் போராடியவர். அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலை நகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும். சோலெய்மனியின் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதிப் பதில் அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அடித்து அனுப்பப்படுவதாகும்” என…
-
- 0 replies
- 681 views
-
-
அரிசியை இலவசமாகப் பெற்ற விவகாரம்: ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா! ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ(Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத…
-
- 0 replies
- 210 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார். உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத…
-
- 0 replies
- 237 views
-
-
சென்னை: ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸுடன் பேசப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது. ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சின…
-
- 2 replies
- 1k views
-
-
மோல்கா - spy Camera தென் கொரியாவின் அசுர தொழில் நுட்ப வளர்ச்சி புதிய பிரச்சனையினை கிளப்பி விட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு. மோல்கா - (ஸ்பை கேமரா) எனப்படும் இந்த கிரிமினல் வேலையினால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த வகை காமெராவின் அளவு சிறிதாகி, குண்டூசியின் தலை அளவுக்கு வந்து விட்டதால், இது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்று அவசரத்தில், பப்ளிக் வாஷ்ரூம் போகும் பெண்களும், சிலவேளை ஆண்களும், பாதிக்கப்படுகின்றார்கள். மேலும், மணித்தியால கணக்கில் அறைகளை வாடகைக்கு விடும் மோட்டல்களில் பாலியல் நோக்கத்துடன் ஜோடிகள் வரும் போது அவர்களுக்கு, இந்த வகை கமெராக்கள் இருப்பது தெரிவதில்லை. அவர்களது நடவடிக்கைகள் லைவ்வாக, உலகின் வேறு பகுதியில் பணம் கொடுக்கும் வாட…
-
- 0 replies
- 329 views
-
-
இந்தியாவை கடுப்பேற்றுகிறாரா விஜய் மல்லையா ? - வீடியோ இணைப்பு ஒன்பதாயிரம் கோடி கடன் வைத்துள்ள விஜய் மல்லையா இந்தியாவுக்கு தண்ணி காட்டிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். சாதாரண விவசாயியிடம் ஐம்பாதாயிரம் கடனை வசூலிக்க அட்ராசிட்டி செய்யும் வங்கி நிர்வாகங்கள் ஒன்பாதியிரம் கோடியை கை கழுவிவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஐ.பி.எல் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த ஞாயற்று கிழமை நடந்த இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியுடன் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது. லண்டனில் இருந்து இப்போட்டியை தனியறையில் மிகப்பெரிய திரையில் விஜய் மல்லையாவும் அவ…
-
- 1 reply
- 703 views
-
-
ப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிஸ்டினா கிரிம்மி, தி வாய்ஸ் என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு தன்னுடைய ரசிகார்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் கிரிம்மி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுத்த போது, அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்க இராணுவ செயலாளர் உக்ரைனுக்கு உடனடி தோல்வி குறித்து எச்சரித்தார், அதே நேரத்தில் ஆரம்ப அமைதித் திட்டத்தை முன்னெடுத்தார். உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து டிரம்ப் நிர்வாகத்திற்குள் நீண்டகாலமாக நிலவி வரும் பிளவின் சமீபத்திய உதாரணம்தான் கடந்த வாரம் நடந்த சந்திப்பு. டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் குறித்து அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், நட்பு நாடுகள் கவலை தெரிவிக்கின்றனர். 02:07 மேலும் செய்திகளைப் பெறுங்கள்அன்று நவம்பர் 26, 2025, 12:34 PM GMT+11 டான் டி லூஸ் , கோர்ட்னி குபே மற்றும் அபிகெய்ல் வில்லியம்ஸ் ஆகியோரால் கடந்த வாரம் கியேவில் உக்ரேனிய அதிகாரிகளுடனான சந்திப்பில், அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் ஒரு கடுமையான மதிப்பீட்ட…
-
- 0 replies
- 156 views
-
-
அமெரிக்க தேர்தலின் இறுதி விவாதம் (ஒபாமா vs மெக்கேய்ன்)
-
- 0 replies
- 731 views
-
-
திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.? வெளியான ஆராய்ச்சி முடிவு.! பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே போல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்…
-
- 4 replies
- 901 views
-
-
பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரஃபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.[size=3] 2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரஃபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்.[/size][size=3] யாசர் அரஃபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரஃபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பி…
-
- 0 replies
- 514 views
-
-
ஆங்கில கால்வாய் ஊடாக கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! சாதகமான வானிலையை பயன்படுத்தி அண்மைய நாட்களில், மக்கள் கடத்தல் கும்பல்கள் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதால் 82 புலம்பெயர்ந்தோருடன் ஐந்து படகுகள் ஆங்கில கால்வாயில் எல்லைப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதாவது, இரண்டு நாட்களில் 13 சிறிய படகுகளில் மொத்தம் 227 பேர் கலீஸிலிருந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், 44 புலம்பெயர்ந்தோர் கடக்கப்படுவதைத் பிரான்ஸ் எல்லைப் படை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதுதவிர சமீபத்திய படகில் சுமார் 17 பேர் இருந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து immigration compliance அமைச்சர் கிறிஸ் பில்ப் கூறுகையில், ‘மக்கள் கடத்தல் வர்த…
-
- 0 replies
- 454 views
-
-
டாகாவில் தீவிரவாத தாக்குதல்; காவல்துறை அதிகாரி பலி; பலர் சிறைபிடிப்பு துப்பாக்கி சூடு நடந்த கஃபேவில் தற்போது பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிப்பு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிக்கப்பட்டுள்ளனர். டாகாவிலுள்ள ஒரு பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் பலரை பணயக்கைதிகளாக சிறைபிடித்துவைத்திருப்பதாக வங்கதேச சிறப்பு காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். சிவிலியன்களை சிறைபிடித்திருக்கும் ஆட்களிடம் தொடர்பை ஏற்படுத்த தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பத…
-
- 2 replies
- 285 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார். அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்க…
-
- 0 replies
- 303 views
-
-
நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது. துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன் 28 முட்டைகளை சாப்பிட்டவுடன், கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …
-
- 0 replies
- 564 views
-
-
ஆஸ்திரேலியா: தடுப்பு மைய உரிமை மீறல் புலனாய்வின் தலைவர் பதவி விலகல் ஆஸ்திரேலியாவில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீது நடத்தப்பட்ட உரிமை மீறலை விசாரிப்பதற்காக அமைத்திருந்த புலனாய்வின் தலைவர், நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த பதவிலியிருந்து விலகியுள்ளார். உள்நாட்டு பழங்குடியினத் தலைவர்களிடம் இருந்து ஆதரவு இல்லாததை முன்னாள் நீதிபதியான பிரேயின் மார்டின் குறைகூறியிருக்கிறார். தடுப்பு காவல் மையம் ஒன்றின் காவலர்கள், அங்குள்ள பெரும்பாலும் பழங்குடியின, பதின்ம வயதான இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதையும், தாக்குவதையும் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதை அடுத்து இந்த புலனாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களுக்கு பிர…
-
- 0 replies
- 473 views
-