உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
பெய்ஜிங், லியோனிங் மற்றும் சீனாவின் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் புதிய வகை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சீன குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா தொற்றுநோயை மூடி மறைக்க சீன அதிகாரிகள் செயல்படுவதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/282165
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
சீனாவில் புதிய வைரஸ் காய்ச்சல் – மனிதர்களுக்கும் தொற்ற வாய்ப்பு! சீனாவில் ப்ளு (Flu) என அறியப்படும் வைரஸ் தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பன்றியிலிருந்து பரவும் இந்த வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. https://newuthayan.com/சீனாவில்-புதிய-வைரஸ்-க/
-
- 1 reply
- 409 views
-
-
சீனாவின் கிழக்கு பகுதியில் கௌதம புத்தரின் மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நஞ்சிங் மாகாணத்திலுள்ள குய்ஸியா என்ற இடத்தில் பழைமை வாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவில் தொல் பொருள் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அக்கோவில் சீரமைக்கப்பட்டது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மண்டை ஓட்டின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது புத்தமதத்தை நிறுவிய கௌதம புத்தரின் மண்டை ஓடு எனத் தெரிய வந்தது. அந்த மண்டை ஓட்டுக்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி சீனாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. புத்தர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி இந்தியாவில் இருந்து அசோக மன்னரால…
-
- 15 replies
- 1.1k views
-
-
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகமெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது, மக்கள் வெகு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபல்யமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் அமெரிக்க டொலர் போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மா…
-
- 0 replies
- 351 views
-
-
சீனாவில் பெண் குழந்தைகளை விற்பனை செய்த பெண் கைது [22 - June - 2007] சீனாவில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளை விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த ஒரு பெண்ணை செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர். சீனாவில் ஹேனன் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகரைச் சேர்ந்தவர் ஜி சியூலன் என்ற பெண். இவர் தனது கணவர், மகன் லியூ யூஜி மற்றும் மருமகள் உதவியுடன் இதுவரை 118 பெண் குழந்தைகளை விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்சியில் வசிக்கும் ஏழை மக்களிடமிருந்து பெண் குழந்தைகளை வாங்கி, அந்தக் குழந்தைகளை ஹேனன், ஹூபேய் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் ஜி சியூலன் விற்று விடுவார். கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச்சில், ஜி சியூலன் குடும்பத்தினர…
-
- 4 replies
- 1.2k views
-
-
சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை [27 - April - 2008] சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது. புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க ட…
-
- 2 replies
- 937 views
-
-
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய பறவைக்காய்ச்சலின் வகையொன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் தடவையாக இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது என பிரித்தானியாவின் மருத்துவ சஞ்சிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 32 வயதான பெண்ணொருவருக்கு அவரது தந்தையிடமிருந்து இந்தப் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் இருவரும் பின்னர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், H7N1 வைரஸ், மனிதர்களுக்குப் பரவும் அளவுக்கு விருத்தி பெற்றுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள 133 சம்பவங்கள் பதிவானதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளன…
-
- 0 replies
- 227 views
-
-
சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ஆவார். இவர் 31 மாகாணங்களில் உள்ள 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளார். ஹாங்காங் உள்பட பல நகரங்களிலும் இதனை விற்பனை செய்து வந்து உள்ளார். சன் என…
-
- 0 replies
- 427 views
-
-
தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மாணவிகளை விபசாரத்தில் தள்ளிவிட்டனர். குயிங்மேய், தன் வகுப்பைச்சேர்ந்த 23 மாணவிகளை கட்டாயப்படுத்தி, நிலக்கரி சுரங்க அதிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள செய்தார். அவர்களில் 6 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. viparam.com
-
- 1 reply
- 1.5k views
-
-
சீனாவில் மீண்டும் அதிகரிக்கின்றது நோயாளிகளின் எண்ணிக்கை- ரஸ்ய எல்லை நகரம் குறித்து அச்சம் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள சீனா ஞாயிற்றுக்கிழமை 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 108 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய வைரஸ் மையமாக ரஸ்ய எல்லையில் உள்ள அதன் நகரம் மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. சீனா ரஸ்ய எல்லையிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவிலிருந்து ஹெய்லோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்தவர்களில் 48 பேரிற்கு நோய் தொற்று உள்ளமை கண்டுபிடிக்…
-
- 0 replies
- 376 views
-
-
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்! சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 18ஆம் திகதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 266 views
-
-
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே? 19 ஜூலை 2020, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஷின் ஜியாங் மாகாணத்தில் அமைதிக்குலைவு ( ஆவணப்படம்) சீனாவின் அமைதி குலைந்த மேற்குப்புற மாகாணமான, ஷின்ஜியாங்கில் நடந்த வன்முறைக் கலவரங்களில், போலிசார் 14 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முஸ்லீம் பெரும்பான்மை மாகாணத்தில் பிரிவினைவாதம் காரணமாக அவ்வப்போது வன்செயல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் சிலரை கஷ்கார் நகருக்கருகே போலிசார் கைது செய்ய முயன்றபோது அவர்களை சிலர் வெடிபொருட்கள் மற்றும் கத்திகளைக் கொண்டு தாக்கியதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் இரண்டு போலிசாரும் கொல்லப்பட்டனர். சீனாவின் உய்குர் இன முஸ்லீம்கள் ( ஆவணப்படம்) இந்த ஆண்டு ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பல வன்செயல்களில் இத…
-
- 1 reply
- 441 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில…
-
- 0 replies
- 380 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 29 ஜனவரி 2024 கடனில் சிக்கித் தவிக்கும் சீன நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனத்தை கலைக்க ஹாங்காங்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிக்கலில் உள்ள இந்த கட்டுமான நிறுவனம் அதன் கடன்களை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க பலமுறை தவறியதை அடுத்து, நீதிபதி லிண்டா சான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் ($325bn - £256bn) அளவுக்கு கடன் உள்ளிட்ட நிதி சார்ந்த நெருக்கடியில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதத்தை பிடித்துள்ளது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவர்கிராண்டே…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
சீனாவில் வறுமை விவாதத்தை மீண்டும் தூண்டிய "பனிச் சிறுவன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவில் வலைதள பயன்பாட்டாளர்களால் "பனிச் சிறுவன்" என்று வருணிக்கப்படும் 8 வயது சீன மாணவன், குழந்தை பருவத்தில் வறுமை பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைPEOPLE'S DAILY குளிரால் வீங்கிய கைகளாலும், தலை முடியிலும். புருவங்களிலும் பனி உறைந்திருந்த ந…
-
- 0 replies
- 150 views
-
-
[size=4]சீனாவில் சிங்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் விமான நிலையத்தில் இருந்து டியான்ஜின் விமானம் இன்று மதியம் உரும்குயிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் இருந்த 6 பேர் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டினர்.[/size] [size=4]சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை மறுபடியும் ஹோட்டன் விமான நிலையத்துக்கு செலுத்தி பத்திரமாக தரை இறக்கினார். இந்த சம்பவத்தில் கடத்தல்காரர்களை எதிர்த்து செயல்பட்டதில் விமானத்தில் இருந்த 2 விமான போலீசாரும், ஒரு விமான பணியாளரும், 7 பயணிகளும் காயமடைந்துள்ளனர்.[/size] [size=4]விமானம் தரையிறங்கியதும் கடத்தல்காரர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இவர்கள் சிங்ஜியாங் பகுதியை சேர்ந்த உய்குர் இன முஸ்…
-
- 0 replies
- 468 views
-
-
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை! சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 229 views
-
-
சீனாவில் விழுந்துபோயுள்ள சுரங்கத்தின் உரிமையாளர் தற்கொலை விபத்து நடந்த ஜிப்சம் சுரங்கம் சீனாவின் கிழக்கில் ஷன்டொங் மாகாணத்தில் அண்மையில் விபத்து நடந்த ஒரு ஜிப்சம் சுரங்கத்தின் உரிமையாளர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார் என சீனாவின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள பதினேழு பணியாளர்களை சென்றடைய மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் முயன்றுவருகின்றனர். வேறு பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுமானப் பணிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் ஜிப்சம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கம் இது. கடந்த ஓராண்டில் சீனாவில் சுரங்க விபத்துகளில் தொள்ளாயிரம் பேருக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
சீனாவில் விஷ வாயு தாக்கி 450பேர் பாதிப்பு பீஜிங்: தென்மேற்கு சீனாவில் ரசாயன உர தயாரிப்பு தொழிற்சாலை வெளியிட்ட கழிவுகளில் உள்ள ரசாயனங்களால் சுமார் 450 பேர் பாதிப்படைந்துள்ளனர்கள். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சுத்திகரிக்காமல் உர தொழிற்சாலை, ரசாயனக்கழிவுகளை சுற்றுப்புறத்தில் பாதுகாப்பில்லாமல் வெளியிட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த 450க்கும் மேற்பட்டோர் சுவாச பிரச்சினையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆசிரியர்கள் 135 பள்ளிக்குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூலம் - தினமலர்
-
- 1 reply
- 812 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குவாங்சி மாகாணத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், மேட் மெக்ராத் பதவி, சுற்றுசூழல் செய்தியாளர் 20 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 691 views
- 1 follower
-
-
சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா? இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவத்தின் காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்காணொளியில் குழந்தை வாகனத்தில் மோதப்படுவது முதல் மற்றையவர்கள் அலட்சியமாக விலகிச் செல்வது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. மேலும் சீனர்களில் மனிதாபிமானம் தொடர்பிலும் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பில் விசார…
-
- 9 replies
- 1.1k views
-
-
சீனாவில்... ஆலங்கட்டி மழை- வேகமான காற்றில் சிக்கி 21 ஓட்டப் பந்தய வீரர்கள் உயிரிழப்பு! சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணி தலைமையகம் தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்ற மற்ற 172 பேரில் 8 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள கன்ஷு மாகாணத்தில் மலைப் பகுதியில் 100 கி.மீ. தொலைவு மரத்தன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. போட்…
-
- 0 replies
- 766 views
-
-
சீனாவில்... ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம் கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1228574
-
- 0 replies
- 302 views
-
-
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றத…
-
- 0 replies
- 119 views
-