உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ஜேர்மனியில் ஆட்சியை கைப்பற்றும் மத்திய - இடதுசாரி ஜனநாயக கட்சி ஜேர்மனி தேர்தலின் முதன்மை பெறுபேறுகளின்படி அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் கட்சியை மத்திய-இடதுசாரி ஜனநாயக கட்சி தோற்கடித்துள்ளது. ஜேர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் நிதி அமைச்சர் ஒல்ஃப் ஸ்கால்ஸ் போட்டியிட்டார். ஜேர்மனி பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை மத்திய வலதுசாரி கொள்கை கொண்ட கட்சியான சிடியூ சிஎஸ்யு கட்சியின் அரசியல் தலைவர் ஏஞ்சலா மேர்கல் போட்டியிடவில்லை. நாட்டின் தலைவராக அதாவது சான்ஸ…
-
- 1 reply
- 421 views
-
-
ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என எச்சரிக்கை! ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கொரோனா இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொணடுவரப்படாத நிலையில், கடற்கரை ஒன்றில் கூட்டம் கூட்டமாக ஜேர்மனியர் கூடி பார்ட்டிகள் கொண்டாடும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகள் திறந்ததும் ஜேர்மனியர்கள் அதிகம் விரும்பும் கடற்கரையான ஸ்பெயினிலுள்ள Mallorca கடற்கரையில் பார்ட்டிகளுக்காக கூட்டம் கூட்டமாக கூடும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஜேர்மனியில் இரண்டாவத…
-
- 1 reply
- 478 views
-
-
ஜேர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறும் திட்டத்தை உறுதிசெய்தார் ட்ரம்ப்! by : Anojkiyan 9,500 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஐரோப்பாவின் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) அதன் கூட்டமைப்புகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த மாத தொடக்கத்தில் வீரர்கள் குறைப்பு பற்றிய வதந்திகள் அமெரிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டன. இந்த பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2…
-
- 3 replies
- 681 views
-
-
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலா மேர்க்கெல் நீண்ட காலமாக முடக்க நிலையை தொடர்வதற்கு விரும்பிய போதும் பிராந்திய முதல்வர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தினார். ஐரோப்பாவில் கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஜேர்மனியில் இவ்வாறான இறைச்சி விற்பன…
-
- 0 replies
- 336 views
-
-
ஜேர்மனியில் இலையுதிர்காலத்திற்கு முன் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை: மக்களுக்கு எச்சரிக்கை ஜேர்மனியில் மக்களின் நடத்தையைப் பொறுத்து இலையுதிர்காலத்திற்கு முன், இரண்டாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் என மூத்த ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அண்மைய தினங்களாக ஜேர்மனியில் வைரஸ் தொற்று வீதம் குறைந்ததால், நடைமுறையில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் தற்போது வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால், இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் இருப்பதாக, ஜேர்மனியில் உள்ள பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று குறைந்து வரு…
-
- 1 reply
- 384 views
-
-
05 SEP, 2024 | 02:47 PM ஜேர்மனியின் மியுனிச் நகரில் உள்ள இஸ்ரேலிய துணை தூதரகத்திற்கு அருகில் சந்தேகநபர் ஒருவர் மீது ஜேர்மனி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலின் துணைதூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் காயமடைந்துள்ளார் வேறு சந்தேகநபர்கள் இருப்பதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிபோன்ற ஒன்றுடன் காணப்பட்ட நபர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192925
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது. இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. 2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும…
-
- 8 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் ஏற்பட்ட கலவரத்தில் 120 பொலிஸார் காயம் ஜேர்மனியில் கடந்த மாதம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து பொலிஸிற்கு எதிராக தலைநகர் பெர்லனில் இடதுசாரி அமைப்புகள் நேற்று மேற்கொண்ட போராட்டத்தில் தீடீரென ஏற்பட்ட மோதலினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடந்தது. அதில் 3500 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் பங்கேற்றவர்கள் போத்தல்கள், கற்கள் மற்றும் தீப்பந்தங்களை கொண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அப்பகுதியில் வீதியில் …
-
- 0 replies
- 271 views
-
-
ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து சுமார் 450 பேர், சிரியாவிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் 150 பேர் நாடு திரும்பி விட்டதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த வடக்கு ரினே வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் வேட்டையில் 240 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதானவர்களுக்கு சொந்தமான எண்ணற்ற கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையு…
-
- 0 replies
- 391 views
-
-
ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்! ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக, பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. தொற்று வீதம் என்பது ஒரு நோயின் பரவலுக்கான திறனை மதிப்பிடுவதற்கான ஒரு வழியாகும். இது ஒரு நிலையான எ…
-
- 0 replies
- 332 views
-
-
24 AUG, 2024 | 07:53 AM ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191842
-
-
- 16 replies
- 979 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் மாணவிபலி - புகலிடக்கோரிக்கையாளர் மீது குற்றச்சாட்டு By RAJEEBAN 06 DEC, 2022 | 12:29 PM ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பாடசாலை மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 14 மற்றும் 13 வயது மாணவிகள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இல்லர்கிர்ச்பேர்க் என்ற கிராமத்தில் உள்ள அகதிகளிற்கான நிலையமொன்றிலிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் இந்தகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது 14 வயது மாணவி உயிரிழந்துள்ளார். எரித்திரியாவை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இந்த கத்திக…
-
- 13 replies
- 654 views
-
-
ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை …
-
- 21 replies
- 1.7k views
-
-
ஜேர்மனியில் குட்டிகளை ஈன்ற மூன்றே நாள்களில் அவற்றைக் கொன்று தின்ற தாய்ச் சிங்கம்! ஜேர்மனியிலுள்ள லெய்ப்ஸிக் (Leipzig) விலங்கியல் பூங்காவில், தான் ஈன்ற இரண்டு குட்டிகளை பிறந்து இரண்டே நாட்களில் தாய் சிங்கம் கொன்று தின்றுள்ளது. கிகலி (Kigali) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் சிங்கம், முதன்முறையாகக் குட்டிகளை ஈன்றது. அந்த விலங்கியல் பூங்காவில், கடந்த 15 ஆண்டுகளில், சிங்கக் குட்டிகள் பிறந்தது இதுவே முதன்முறையாகும். அந்தக் குட்டிகள் இவ்வாறு உயிரிழந்தமை விலங்கியல் பூங்கா ஊழியர்களிடையே கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, கிகலி குட்டிகளை ஈன்றது. ஆரம்பத்தில் பெண் சிங்கம் குட்டிகளை நன்றாகவே பராமரித்துப் பாலூட்டியது. ஆனால், திடீரென…
-
- 0 replies
- 544 views
-
-
ஜேர்மனியில் கொவிட்-19 உயிரிழப்பு குறைந்தது- தொற்று வீதம் அதிகரித்தது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 248பேர் பாதிப்படைந்ததோடு, 3பேர் உயிழந்துள்ளனர். எனினும், கொவிட்-19 வைரஸ் பரவும் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயின் பரவலுக்கான திறனை அளவிடும் ஜேர்மனியின் 7 நாள் வைரஸ் இனப்பெருக்கம் வீதம் ஞாயிற்றுக்கிழமை 1 முதல் 1.09 வரையிலான முக்கியமான மதிப்பை விட உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கள்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஜேர்மனி தனது நில எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக இந்த செய்தி…
-
- 0 replies
- 355 views
-
-
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 271பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 13பேர் உயிரிழந்தனர். மேலும், 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் ஒட்டுமொத்தமாக 183,765பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8,618பேர் உயிரிழந…
-
- 0 replies
- 436 views
-
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்! ஜேர்மனியின் புதிய சேன்சலராக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவர் ஃபிரிடிரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் பல்வேறு தாமதம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அந்தவகையில் இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக…
-
-
- 10 replies
- 536 views
-
-
ஜேர்மனியில் சோமாலியா இளைஞர் வெறியாட்டம் மூவர் பலி; பலர் காயம்! June 26, 2021 கத்தியுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். பத்துப்பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பவேறியா மாகாணத்தில் (Bavarian State) Würzburg நகரில் பொது இடம் ஒன்றில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பொலீஸார் விரைந்து வந்து காலில் சுட்டுக் கைது செய்யும் வரை அந்த நபர் எதிர்ப்பட்ட அனைவரையும் வெறித் தனமாக வெட்டிக் கொத்தித் தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த பகுதியை பொலீஸார் சுற்றிவளைத்து மூடினர். மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கா…
-
- 0 replies
- 278 views
-
-
ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது…
-
- 2 replies
- 489 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாலே நகரத்தில் உள்ள யூத வழிபாட்டு ஸ்தலத்திற்கு அருகிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-ப/
-
- 0 replies
- 372 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்! ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பி…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: ஏழு பேர் உயிரிழப்பு- எட்டு பேர் காயம்! ஜேர்மனியின் ஹம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களை மேற்கொள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நகரின் க்ரோஸ் போர்ஸ்டல் மாவட்டத்தில் உள்ள டீல்பேஜ் வீதியில் உள்ள யெகோவாவின் தேவாலயத்தில் 21:15 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு குற்றவாளி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை பொலிஸார்…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கிப் பிரயோகம் – நால்வர் காயம்! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேருக்கு துப்பாக்கிக்குண்டு காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவர் தனது உயிரை காப்பற்றிக்கொள்ள அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்ததில் அதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு …
-
- 0 replies
- 321 views
-
-
ஜேர்மனியில் தேர்தலில் வெற்றியீட்டிய ஏஎவ்டி கட்சி பிளவினை சந்தித்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி எதிர்பாராத வெற்றிகளை பெற்ற சில மணிநேரத்தி;ற்குள் கட்சி பிளவினை சந்தித்துள்ளது. புகலிடக்கோரி;க்கையாளர்கள் மற்றும் அகதிகளை தீவிரமாக நிராகரிக்கும் ஏஎவ்டி கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் கட்சிக்குள் உள்ள ஓரளவு மிதவாத போக்கை கொண்டவர்களின் முகாமை சேர்ந்தவருமான வுரோக் பெட்ரி ஆட்சி புரிவதற்கான தெளிவான திட்டமற்ற அராஜகவாத கட்சியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்துள்ளார். கட்சியின் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறிச்சென…
-
- 0 replies
- 504 views
-
-
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் மற்றும் பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல், ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மெர்கலின் திட்டம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஒரு வாரகாலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். ஜேர்மனியி…
-
- 9 replies
- 1.1k views
-