Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. June 20th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. தொலைபேசியை முதன் முதலாக கண்டுபிடித்தவர் என உலகம் பூராகவும் அறியப்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரஹம் பெல். ஆனால் இவருக்கு 16 வருடங்களுக்கு முன்பே தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அந்நபர் யார் என பலருக்கு இன்றளவிலும் தெரியாது. இத்தாலியைச் சேர்ந்த அன்டொனியோ மியூசியோ என்பவரே முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் திகதி அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. 1860 ஆம் ஆண்டில் மியூஸி முதலாவது தொலைத்தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதுவே முதல் தொலைபேசி என நம்பப்படுகின்றது. இருப்பினும் அப்போது 10 அமெரிக்க டொலர்களை செலுத்தி மியூஸி காப்புரிமை பெற…

  2. பெரு நாட்டில் மனைவி ஒருவர், தனது கணவரை காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அடித்து இழுத்து சென்றுள்ளார். பெரு நாட்டில், அய்யோகுச்சோ (Ayocucho) நகரில் நடந்த சினோர் எஸ்பெரிட்டு சன்டோ என்னும் காளை அடக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி, குடிபோதையில் இருக்கும் தனது கணவனை அடித்து இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அங்கு சுற்றியிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர், மேலும் இந்த காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் காளையை அடக்க முயன்ற நபர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://udakam.com/?p=24634 http://udakam.com/?p=246…

    • 6 replies
    • 1.3k views
  3. நாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன! நம் யுகத்தின் முக்கியமான தினங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: செப்டெம்பர் 11 (2001-ல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது மட்டுமல்ல, சிலேயில் 1973-ல் ராணுவப் புரட்சியால் சல்வதோர் அயெந்தேவின் ஆட்சி கவிழ்க் கப்பட் டதும் இதே தினத்தில்தான்), டி-தினம் (ஜூன் 6, 1944) என்று பல தினங்கள் நம் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் இன்னுமொரு தினத்தையும் நாம் சேர்க்க வேண்டியிருக்கலாம்: ஜூன் 19. நம்மில் பெரும்பாலானோர் பகல் பொழுதில் காற்று வாங்குவதற்காக நடப்பதை விரும்புவார்கள். சிலரால் அப்படிச் செய்ய முடியாமல் இருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கலாம். அதாவது, அவர்…

    • 0 replies
    • 352 views
  4. வாரணாசி: பகவான் புத்தர், முதன் முதலில், 'தர்மம்' என்பது குறித்து, தன் சீடர்களுக்கு போதனை செய்த, சாரநாத் புத்த மடத்தில் உள்ள, போதி மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாரநாத்தில், 'மூல்கந்த குடி விஹார்' என்னும் புத்தமட வளாகத்தில் போதி மரம் (அரச மரம்) அமைந்துள்ளது. ஞானம் பிறந்தது: கடந்த 2,600 ஆண்டு களுக்கு முன், புத்த கயாவில் அமைந்துள்ள, போதி மரத்தின் அடியில், புத்தருக்கு ஞானம் பிறந்தது. பின், இந்த மரத்தின் ஒரு கிளை, இலங்கையில் உள்ள புத்த மடத்தில், நடப்பட்டு வளர்க்கப்பட்டது. இலங்கையில் இருந்து, இந்த மரத்தின் ஒரு கிளையை, 'மகாபோதி சொசைட்டி ஆப் இந்தியா'வின் நிறுவனரும், புத்த துறவியுமான, அனாகாரிக் …

  5. சென்ற வருட இறுதியில் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியிருந்ததாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் Antonio Guterres குறிப்பிட்டுள்ளார். இவரின் அறிக்கையின்படி இரண்டாம் உலக போருக்கு பின்னர் இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் அரைவாசிப்பேர் சிறுவர்களாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். நடைபெறும் போர்களையோ அல்லது போருக்கான காரணிகளையோ சர்வதேச நாடுகளினால் தடுக்க முடியவில்லை. இடப்பெயர்வுகள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் அகதிகளான 11.7 மில்லியன் மக்களில் 53 வீதமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலி நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மூலம் : Reuters - https://fr.n…

  6. அரேபிய வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல். இராக்கில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் மேலும் ஒரு போர்க்கப்பலையும் இப்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. படம் ஏஎப்பி இராக்கில் பல நகரங்களையும் பெருமளவு நிலப்பரப்பையும் தங்கள் வசம் கைப்பற்றி வேகமாக முன்னேறி வரும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதலை நடத்தும்படி அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது இராக். அரசை எதிர்த்து போரிடும் சன்னி பிரிவு தீவிரவாதிகள் 8 நாளாக மின்னல் வேக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உத்தரவு பிறப்பிப்பது ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பாகும். தற்போது பாக்தாத் மீதும் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்துவ…

  7. அர்ஜூன் நடிப்பில் வித்யா சாகர் இசையில் உருவான 'தாயின் மணிக்கொடி' என்ற படத்தில் இடம்பெற்ற "நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூ அல்லவா...!?" என்ற பாடலை வைரத்து எழுதியிருந்தார். உண்மையில் இப்படியொரு பூ இருக்கிறதா? நீங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் தமிழர் என்றால் உடனடியாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பூங்காவுக்குச் செல்லுங்கள். அங்கே பெரும் கூட்டமாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிகப்பெரிய பூச்செடியில் நூறாண்டுக்கு ஒரு முறைதான் பூக்கள் பூக்கும் என்பதால் இப்போது இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது என்று பல்கலைக்கழக தோட்ட அலுவலர்கள் கூறினர். குவீன் ஆப் தெஆண்டிஸ் (PUYA RAIMONDII)என்று அறியப்படும் இந்த பூ மலரும் …

  8. புதுடெல்லி: இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார். பா.ஜனதா கட்சி கூட தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு தவறை செய்துள்ளது என்றும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார் http://news.vikatan.com/article.php?module=news&aid=29189

  9. (கோப்புப் படம்) இந்தியாவில் திருமணமான ஆண்களில் 8 நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் தான். இந்த கவுன்சின்லிங்கை தருவதற்கு ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் தத்துவ மொழிகள், இந்தியா முழுவதும் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 தன்னார்வல அமைப்புகளின் தொலைபேசி எண்கள், குடும்ப பிரச்சினை களில் வழங்கப்பட்ட முக்…

    • 0 replies
    • 366 views
  10. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நார…

  11. லண்டன்: தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளுக்கு தேசிய விடுமுறை அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகை தினங்களுக்கு இங்கிலாந்தில் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என இந்து, இஸ்லாம் மதத்தை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் கையெழுத்திட்டு ஆன் லைன் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். நீண்ட காலமாகவே இங்கிலாந்தில் வசித்து வரும் இந்து மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி, ரம்ஜானுக்கு தேசிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அனுப்பும் கோரிக்கைகளை பரிசீலிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி கோரிக்கை மனுவை அரசுக்கு…

  12. பிஜாபூர்: கர்நாடக மாநிலம், பிஜாபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிஜாபூர் மாவட்டம், நாகதானா கிராமத்தில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை நாய் துரத்தியுள்ளது. நாய்க்கு பயந்து ஓடிய குழந்தை, விளைநிலத்தில் தோண்டப்பட்டிருந்த 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகில் மற்றொரு குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. 20 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்…

  13. புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராமத்தில், பல்வேறு இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மத்திய அரசுக்கு கருணை மனு அனுப்பினார். இதேபோல், பல வழக்குகளில் தொடர்புடைய மேலும் 4 குற்றவாளிகளும் கருணை அனுப்பியிருந்தனர். இந்நிலையில், சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. http://news.vikatan.com/article.php?module=news&aid=29155

  14. Started by Athavan CH,

    பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் பூடானுக்குத்தான். சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள எட்டு நாடுகளின் தலைவர்களைத் தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்த மோடி, சுற்றுப்பயணத்துக்குத் தனது முன்னுரிமை நாடாக பூடானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுதந்திர நாடான பூடானின் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பேற்ற இந்தியா, அதன் வெளியுறவுக் கொள்கைத் தேவைகளையும் பூர்த்திசெய்துவந்தது. 2007-ல் செய்துகொண்ட நட்புறவு ஒப்பந்தப்படி அந்த நாடு, தன்னுடைய தேவைகளுக்கேற்ப எந்த நாட்டுடனும் உறவுகொள்ளத் தடையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், 2012-ல் வெளிநாட்டில் நடந்த சந்திப்பில் சீனப் பிரதமர் வென் ஜியாபோவை பூடான் பிரதமர் ஜிக்மே தின்லே தனி…

    • 0 replies
    • 248 views
  15. இராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியை அரசுக்கு எதிரான தீவிரவாத படையினர் கைப்பற்றினர். தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள சலாஹெய்டின் மாகாணத்தில் இருக்கிறது பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் இந்த ஆலையின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இத்தகவலை ஆலையின், மூத்த மேலாளரும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய உடனேயே, பாய்ஜி ஆலைய…

  16. புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகக் கருதப்படுகிறது. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களை அன்றாட வாழ்வில் பலர் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு கள்குறித்து, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். தற்போது, சுகாதார நிபுணர்களின் கவனம் ஈ- சிகரெட் மீது திரும்பியுள்ளது. சிகரெட்டுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்த மின்னணுப் பொருள் ஆரம்பத்தில், புகைப் பழக்கம் கொண்டவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க உதவுவதாகக் கருதப்பட்டது. இதையடுத்து, இவற்றின் விற்பனையும் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளில்தான் ஈ-சிகரெட் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலா…

  17. அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகள்குறித்த ரகசியங்களை வெளியிட்டவர் மனம்திறக்கிறார்! இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதென்று 2010-ல் நான் தீர்மானித்தேன். நாட்டின் மீது உள்ள பற்றினாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகுறித்த உணர்வாலும்தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். அதற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறேன். மார்ச் 2010-ல் இராக்கில் நடைபெற்ற தேர்தல்களைக் குறித்த செய்திகளை நீங்கள் தொடர்ந்து படித்திருந் தீர்களானால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக் கும். இராக் தேர்தல் என்பது பெரும் வெற்றி என்று தெரிவிக்கும் செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் ஆக்கிரமித்திருந்தன. கூடவே, வாக்களித்துவிட்டு மைவிரலைப் பெருமையாகக் காட்டி…

  18. பெர்லின் : கடந்த 6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரபல கார்பந்தய வீரர் ஷூ மாக்கர் உடல்நலம் பெற்றார். நலம் பெறுவது கடினம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தேறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது. பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் 'பார்முலா-1' கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆறுமாதம் கழித்து 'கோமாவில்' இருந்து மீண்டார். நினைவு திரும்பிய இவர், வீட்டிற்கு திரும்பினார். ஜெர்மனியின் முன்னாள் 'பார்முலா-1' கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் 'பார்முலா-1' போட்டிக்கு திரும்பிய ப…

  19. 16ஜூன் 2014 13: பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. சமீபத்தில் கடத்தி சென்ற 1700 ராணுவ வீரர்களை கொத்து, கொத்தாகக சுட்டு கொன்றதாக இந்த பயங்கரவாத அமைப்பினர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும், ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஷாகி நகர் மொசூல், திக்ரித், ஜலாலா, சாதியா, ஆகியன தற்போது பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலைகள் திக்ரித் நகரில் நடத்தப்பட்டதாக தெரிகிற…

  20. மாம்பழங்களைத் தொடர்ந்து வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு – ஐரோப்பிய யூனியன் உத்தரவு. லண்டன்: ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது. இந்தத் தடை குறித்து ஐரோப்பிய யூனியன், ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் "சால்மொலினா" என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த வெ…

  21. 34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா பற்றிய சுவையான முழுமையான பார்வை:- ஆசியாவிலேயே இரு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு இந்தியா:- முக்கிய படங்கள் இணைப்பு- 34 போர் விமானங்களை தங்கிச் செல்லக் கூடிய விக்ரமாதித்யா- ரஷ்யாவிடமிருந்து ரூ.15ஆயிரம் கோடி அளித்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல், 44,500 டன் எடை கொண்டது. 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் பரப்பளவாக கொண்ட இந்த கப்பலை 3 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஈடாக கூறலாம். ஒரே நேரத்தில் இக்கப்பலில் 1600 பேர் பயணிக்கலாம். ஒரு லட்சம் முட்டைகள், 20 ஆயிரம் லிட்டர் பால், 16 டன் அரிசி ஆகியவற்றை சேமித்து வைக்க இதில் வசதியுள்ளது. இது ஒரு விமானம் தாங்கி போர்க் கப்பலாகும். …

  22. உலகில் பிரச்சினைகள் சூழ்ந்துதான் கிடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகப் பெருகதான் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டது. வாகனம் கண்டுபிடிக்கப்பட்டபோது போக்குவரத்து எளிதானது. பிறகு விமானங்கள் வந்தன. போக்குவரத்து மிகவும் எளிதானது. டிராக்டர், பூச்சி கொல்லி மருந்துகள் போன்ற விவசாயக் கண்டுபிடிப்புகளால் உணவு உற்பத்திப் பெருகியது. பஞ்சம் விலகியது. இவ்வளவு கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் இன்றைக்கு அறிவியலைக் கொண்டு தீர்க்க வேண்டிய உலகின் பெரிய பிரச்சினை எது? இந்தக் கேள்வியை இங்கிலாந்து அரசு தன் மக்களிடம் முன்வைத்துள்ளது. அவர்கள் சொல்லும் பிரச்சினையைத் தீர்க்கும் கண்டுபிடிப்பைச் செய்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட…

    • 0 replies
    • 537 views
  23. பிரதமரின் கோரிக்கையை அடுத்து ஒருங்கிணைந்த ஆயுக்குழுக்கள் அரச படையுடன் இணைந்துள்ளன இராக்கில் மேற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்ற இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அரசாங்க விசுவாச படைகள் சமார்ரா நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளன. பிரதமர் நூரி அல் மாலிக்கியும் முக்கிய ஷியா மதபோதகரும் விடுத்துள்ள கோரிக்கைகளை அடுத்து ஒருங்கிணைந்துள்ள ஆயுதக்குழுக்கள் அரச படைகளுடன் இணைந்துகொண்டுள்ளன. ஆனால், இராக்கின் அரச தலைமை நாட்டை ஐக்கியப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இராக்குக்கு உதவுவதற்காக உதவிகளை அனுப்ப விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அப்படியான ஐக்கியப்படுத்தும்…

    • 0 replies
    • 421 views
  24. ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் ராஜ்சிவா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, ‘MH370’ போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு…

    • 2 replies
    • 1.4k views
  25. எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண்ணிக்கை. உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழப்பவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.