Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்தப் பணிகளைக் குறி வைத்தும், இந்தியர்களைக் குறி வைத்தும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு வரும் பணிகளை விரைவில்…

    • 3 replies
    • 439 views
  2. ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் புகுந்த இருவர், மூத்த பாதிரியார…

    • 1 reply
    • 335 views
  3. சென்னை: பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பெய்து வரும் மழை தொடர்ச்சியாக செப்டம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/09/10/tamilnadu-dmk-s…

  4. தொடர்ச்சியாக 11 தீவிரவாதத் தாக்குதல்கள்: கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்! உலகின் ஃபேஷன் நகரமான பாரீஸ் இப்போது கதிகலங்கி நிற்கிறது. பிரான்சில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 7- 9 2015: கார்ட்டூன் பத்திரிகையான ’சார்லி ஹெப்டோ ’ அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு 8 கார்ட்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியாகினர். அருகில் இருந்த யூத மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த இரு தாக்குதலையும் நடத்தியவர்களை போலீச…

    • 2 replies
    • 1.1k views
  5. தொடர்ச்சியான தீ - வெடிப்பு சம்பவங்கள்: துறைமுக தீவிபத்து குறித்து ஈரான் அதிகாரிகள் விசாரணை! பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் தென்மேற்கு துறைமுகமான புஷெஹரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த பாரிய தீவிபத்தில், குறைந்தது ஏழு கப்பல்கள் தீக்கிரையாகியதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து சந்தேகங்களை எழுப்பிய தீ மற்றும் வெடிப்புகளின் தொடர்ச்சியான சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போது தெற்கு துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டடத்தில் கருப்பு புகை காற்றில் பறப்பதைக் காட்டும் புகைப்படத்தை அதிகாரப்ப…

  6. தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரம் கடலுõரில் கின்னஸ் சாதனைக்கு முயற்சி கடலுõர்:கடலுõரில் தொடர்ந்து 126 நாட்கள் சூரிய நமஸ்காரத்தை கின்னஸ் சாதனையாளர் ஜெயராமன் நேற்று துவக்கினார். கடலுõர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(79). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஜெயராமன் உலக அமைதிக்காக வட சென்னையில் தொடர்ந்து 200 மணிநேரமும், கோல்டன் பீச்சில் 360 மணிநேரமும் பேசி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் உலக அமைதி வேண்டி சிதம்பரத்திலிருந்து தரையில் உருண்டபடி (அங்கபிரதட்சணம்) சென்னை வரை 250 கி.மீ., துõரம் சென்றும், மெரினா கடற்கறையில் ஆயிரத்து 8 மணிநேரமும், சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் 508 மணி நேரமும் தொடர்ந்து பேசி சாத…

  7. தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வானவேடிக்கை நடத்துகிறது வடகொரியா! [Wednesday, 2014-03-26 18:36:57] வடகொரியா தீபகற்பத்தில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை வீசி வடகொரியா பரிசோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று ‘நொடாங்’ என்ற நடுத்தர தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. இது 1000 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்லது. பியாங்யாங் வடக்கேயுள்ள சக்கான் மாகாணத்தில் இருந்த கடலில் விழக்கூடிய வகையில் இது ஏவப்பட்டது. இது ஐப்பானை மட்டுமின்றி ரஷியா மற்றும் சீனாவையும் குறிபார்த்து தாக்கும் திறன் படைத்தது. இத…

  8. பெண்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதே பொதுவாக ஒரு அபூர்வ நிகழ்வாக கருதப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து மூன்று பிரசவத்திலும் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரீன் ரோட்கெர் என்ற 41 வயது பெண்ணுக்க் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கனவே இவர் இரண்டு முறை இரட்டைக்குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவர்களுக்கு தற்போது 14 மற்றும் 12 வயது ஆகிறது. மூன்றாவது முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை எண்ணி தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும் இது தங்களுக்கு கடவுள் அளித்த வரம் என்றும் கரீன் ரோட்கெர் மற்றும் அவரது கணவர் கோலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுபோன்ற இரட்டை குழந்தைகள் பெற்ற…

    • 0 replies
    • 366 views
  9. தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது: பிரான்ஸ் பிரதமர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க முடியாது என பிரான்ஸ் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான திட்டவரைபை, நேற்று (திங்கட்கிழமை) செனட் சபையின் வாக்கெடுப்பிற்காக முன்வைத்த பின்னர், அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் கூறுகையில், ‘இது பெரும் சிக்கலான விமர்சனத்திற்குரிய நேரம். ஆனால் நாம் தொடர்ந்தும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையை நிறைவேற்றிப் பொறுப்புடன் நடந்து கொண்டமையால், அதன் பலனை நாம் பெற்றோம். கொரோனாப் பரவலைத் தடுத்துள்ளளோம். …

  10. தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. ஹங்கேரி வான் பகுதியில…

  11. . தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புத…

  12. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள் 51 Views காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப் பெயரிட்டு அழைக்கிறது. தீவிர வலதுசாரிகளான இந்துத்துவ தேசிய அமைப்புகள் பாசிசத் தன்மையுள்ள தங்கள் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் அதனைக் காலனீயத்திலிருந்து மீளுதல் என்றும் இனவாதத்துக்கு எதிரானதென்றும் அழைக்கிறார்கள். அதேவேளை மியன்மாரில் இனவழிப்பை நியாயப்படுத்துகின்ற பௌத்த துறவிகள் ‘அமைதிக்கான சமயம்…

  13. அமெரிக்காவின் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுக்கும் ஈரானியகப்பல்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துவிடுமாறு அமெரிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுத்தால் ஈரானின் எந்த பீரங்கிபடகுகளையும் அனைத்து பீரங்கிபடகுகளையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளேன் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொள்;ளுமாறு உத்தரவிட்டுள்ளேன் என டிரமப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது முதலாவது இராணுவசெய்மதியை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக இன்று அறிவித்துள்ள நிலையில் டிரம்ப் இந்த  தகவலை வெளியிட்டுள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் வளைகுடாவில் ஈரானின் கடற்படை கப்பல்கள் அமெரிக்க கடற்படை கப்பலை நெருங்கி வ…

    • 0 replies
    • 622 views
  14. “நடுத்தர வயதில் உடல் குண்டடித்து, பெரிய தொந்தியுடன் இருப்பவர்களுக்கு, வயதான பின்,மனநல பாதிப்பு ஏற்படும்’என, ஆய்வில் தெரியவந்துள்ளது. நொறுக்கு தீனிகளை கண்டபடி உள்ளே தள்ளி,குண்டடித்துப் போய் இருப்பவர்களுக்கு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பது, ஏற்கனவே தெரிந்தது தான். அதிகமான உடல் எடை உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படும் என்பதும் தெரிந்தது தான். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், “நடுத்தர வயதுடையவர்களுக்கு, தொந்தி பெரிதாக இருந்தால், 70 வயதை எட்டும்போது, அவர்களுக்கு “டிமென்ஷியா’என்ற மனநல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது’என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ராக்கெல் ஒயிட்மெர் கூறியதாவது................................. தொடர்ந்து வ…

  15. தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு. “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார். குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய…

  16. தொற்றுப் பரவல் பாதிப்புக்கு பிறகு வாடகை கார் ஒட்டுநர்கள் பற்றாக்குறை! உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 300,000 என்ற பலம் வாய்ந்த பணியாளர்கள் படையில், தற்போது 160,000பேர் குறைவாக உள்ளதாக உரிமம் பெற்ற தனியார் கார் வாடகை சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் இரவு நேர பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல போராடி வருபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. முடக்கநிலையின் போது, மக்களின் தேவை சரிந்ததால் பல ஓட்டுநர்கள் தொழிலை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  17. தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றம் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14-ம் த…

  18. தொலைக்காட்சி விவாதத்தில் ஹிலரி, டிரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு அமெரிக்காவின் அடுத்த அதிபராக போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்பும், ஹிலரி கிளிண்டனும் இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுக்களை பரிமாறியுள்ளனர். ஒருவரையொருவர் மதிக்கின்ற அம்சம்: டிரம்பின் குழந்தைகளை போற்றுவதாக ஹிலரியும், ஹிலரி விட்டு கொடுக்காமல் இருப்பதை மதிப்பதாக டிரம்பும் தெரிவித்துள்ளனர் பாலியல் ரீதியாகப் பெண்களைத் தொடுவது குறித்து டிரம்பின் கருத்துக்கள், அவர் அதிபராக தகுதியற்றவர் என்பதை காட்டுகின்றன என ஹிலரி கூறியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சாராக இருந்தபோது, தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தியதால் ஹிலரி சிறை…

  19. தொலைக்காட்சி விவாதம்: ரோம்னி "வெற்றி" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 அக்டோபர், 2012 - 10:26 ஜிஎம்டி ஒபாமா-ரோம்னி தொலைக்காட்சி விவாதம் புதன் கிழமையன்று அமெரிக்காவில் நடந்த அதிபர் பதவி வேட்பாளர்கள், ஒபாமா மற்றும் மிட் ரோம்னி இடையேயான, முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தை பார்த்து ஆராய்ந்த நோக்கர்களும், அதன் பின் நடந்த கருத்துக்கணிப்புகளும், இந்த விவாதத்தில் ரோம்னியே வென்றிருக்கிறார் என்று கூறுகின்றார்கள். அதிபர் பராக் ஒபாமாவுடன் நடந்த ஒன்றரை மணி நேர விவாதத்துக்குப் பின்னர், நடத்தப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளில் ,46லிருந்து 67 சதவீத மக்கள் இந்த விவாதத்தில் ரோம்னிக்கே அனுகூலம் இருந்தது என்று கூறினர். 22லிருந்து 25 சதவீதம் பேரே ஒபாமா வென்றார் என்று க…

    • 21 replies
    • 1.3k views
  20. http://www.bbc.co.uk/news/uk-14070733 http://www.heraldsun.com.au/news/world/bskyb-bid-at-risk-from-phone-tapping-scandal/story-e6frf7lf-1226090292611 http://old.news.yahoo.com/s/digitaltrends/20110707/tc_digitaltrends/phonehackingscandalforcesnewsoftheworldshutdown ..... http://www.newsnow.co.uk/h/Hot+Topics/Phone+Hacking

    • 9 replies
    • 1.4k views
  21. தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் கையட்க்க தொலைபேசிகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளன…

  22. June 20th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. தொலைபேசியை முதன் முதலாக கண்டுபிடித்தவர் என உலகம் பூராகவும் அறியப்பட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரஹம் பெல். ஆனால் இவருக்கு 16 வருடங்களுக்கு முன்பே தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாம். அந்நபர் யார் என பலருக்கு இன்றளவிலும் தெரியாது. இத்தாலியைச் சேர்ந்த அன்டொனியோ மியூசியோ என்பவரே முதன் முதலாக தொலைபேசியைக் கண்டுபிடித்துள்ளார். இதனை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் 2002ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் திகதி அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. 1860 ஆம் ஆண்டில் மியூஸி முதலாவது தொலைத்தொடர்பு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதுவே முதல் தொலைபேசி என நம்பப்படுகின்றது. இருப்பினும் அப்போது 10 அமெரிக்க டொலர்களை செலுத்தி மியூஸி காப்புரிமை பெற…

  23. தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…

    • 0 replies
    • 991 views
  24. தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படத்துக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. "பிரபாகரன்" என்ற பெயரில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் சென்னையில் பதனீட்டுப் பணிகளை மேற்கொண்டிருந்த சிங்களத் திரைப்படத்தை முடக்க வேண்டும் என்றும் அப்படத்தின் பிரதிகளை இந்திய அரசுக்கு அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை மாநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று புதன்கிழமை நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொல். திருமாவளவனின் சட்டவாள…

  25. தொல்பொருள் ஆய்வில் பிரித்தானிய சிறுமி சாதனை வீரகேசரி இணையம் 3/18/2011 6:15:44 PM பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160,000 மில்லியன் வருடங்கள் பழமையான 'அமொனைட்' எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார். ' அமெனைட்' எனப்படுவது டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும். எமிலி பால்ட்ரி என்ற அச்சிறுமி சிறிய மண் தோண்டும் உபகரணத்தின் மூலமே இதனைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பானது தன்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதாக சிறுமையின் தந்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தொல்பொருளியல் ஆய்வாளர்கள் இது மிகவும் அரிய வகை கண்டுபிடிப்பென தெரிவித்துள்ளன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.