உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
லண்டனில் உள்ள மிகவும் தீவிரமான நிலக்கீழ் தொடரூந்து வழிகளில் ஒன்றான "சென்றல் லைன்" தொடரூந்து Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கிடையிலான பாதையில் தரம்புண்டதை அடுத்து பல பயணிகள் காயமைடந்தும் பலர் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர். இப்பயணப் பாதை எப்போதும் தீவிரமானதுடன் அதிக எண்ணிக்கையான பயணிகள் பயணம் செய்யும் பாதையும் ஆகும்..! பயணிகள் தொடரூந்து தடம் புரண்ட போது குண்டு வெடித்ததாக நினைத்துப் பெரும் பீதியடைந்துள்ளனர். 2005 இல் குண்டு வெடிப்பின் போதும் இதே வழி தொடரூந்து பாதிப்புக்குள்ளானதுடன் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்..! Mile end - Bethanl green நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன..! http://news.bbc.co.uk/1/hi/england/l…
-
- 6 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது. அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள். இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன. மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 17 replies
- 1.7k views
-
-
இந்துக் கலாச்சாரம் - பப் கலாச்சாரம், இந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம்! அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தா…
-
- 0 replies
- 1.7k views
-
-
புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…
-
- 3 replies
- 1.7k views
-
-
முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி மாணவ-மாணவிகள் கட்டிப்பிடி போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. இளைஞர் அணியினர், அந்த ஓட்டலை அடித்து சூறையாடினார்கள். இதற்கு குறும்பட இயக்குனர் தலைமையில் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற இணைய தள அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஓட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர். மேலும்…
-
- 6 replies
- 1.7k views
-
-
சென்னை: தனக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு தராததால் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுதார். சட்டசபையில் இன்று கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபிநாத் பேசுகையில், முதலாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்று உள்ள தால் எல்லை மாவட்டங்களில் படிக்கக்கூடிய தெலுங்கு மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனால் சுமார் 1 லட்சம் தெலுங்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அப்போது சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. உட்காருங்கள் என்று கூறி அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார். தன்னை தொடர்ந்து பேச விடாமல் தடுத்…
-
- 5 replies
- 1.7k views
-
-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் . திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொ…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி: கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் சென்னை, மே. 11- தமிழக சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 4.63 கோடி வாக்காளர்களில் 3 கோடியே 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 70.22 சதவீத ஓட்டுப் பதிவாகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் தொடங்கியது. 60 நகரங்களில் உள்ள 82 மையங்களில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஆயிரத்து 888 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். "சீல்'' வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் சரி யாக 8 மணிக்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஏஜெண் டுகள் முன்னிலையில் திறக் கப்பட்டன. பிறகு ஒவ் வொரு மேஜையிலும் ஒரே சமயத்தில் 14 எந்திரங்கள் வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
. 106 வயதில் ஒரு கன்னிப் பெண்! இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண். இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இப்படி திருமணம் செய்யாமல், கற்பைப் பறி கொடுக்காமல் வாழ்ந்து வருவதே தனது நீண்ட கால ஆயுளின் ரகசியம் என்று படு தெளிவாகப் பேசுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இளமைப் பருவத்தில் என்னிடம் யாரும் நெருங்கியதில்லை. நானும் யாரையும் அனுமதித்ததில்லை. ஏன், யாரும் ஒரு முத்தம் கொடுக்கக் கூட நான் அனுமதித்ததில்லை. எனக்கு காதல் தேவை, ரொமான்ஸ் தேவை, …
-
- 8 replies
- 1.7k views
-
-
வயது 8 எடை 99 லண்டன்: அதிக உடல் பருமன் இப்போது உலகளவில் பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் கோளாறுகள், சாப்பாட்டு பழக்கங்களே இதற்கு காரணம். இப்படித்தான் லண்டனிலும். படத்தில் இருக்கும் சிறுவன் கானர் மெக்கிரட்டிக்கு 8 வயசுதான் என்றால் நம்ப முடிகிறதா? இந்த வயசில் 99 கிலோ எடை இருக்கிறான் கானர். அவனை ஆறுதலாக அரவணைத்து இருப்பது தாய் நிகோலா. தன் வயசு பையன்களின் சராசரி எடையை விட, மூன்று மடங்கு அதிக எடையுடன் இருக்கிறான் இந்த பொடியன். இன¤யும் இதே வேகத்தில் எடை அதிகரித்தால் ஆபத்து என்பதால், சிகிச்சை பெற இருக்கிறான் கானர். http://www.dinakaran.com
-
- 8 replies
- 1.7k views
-
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி தாக்குதலுக்கு இலக்கான பேருந்து இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. சர்ச்சைக்குரிய காஷ்மீர் ப…
-
- 15 replies
- 1.7k views
-
-
சேது சமுத்திரத் திட்டம், மதப் பிரச்னையாகி பந்த், போராட்டம் என்று பூதாகரமாகியுள்ள நிலையில், துக்ளக் ஆசிரியர் சோவைச் சந்தித்தோம். தனக்கேயுரிய பாணியில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்துவைத்தார் அவர். பாரதிய ஜனதாவின் வேதாந்தி ‘தலையைக் கொண்டு வா’ என்கிறார். பதிலுக்கு தி.மு.க. வன்முறையில் இறங்குகிறது. இரண்டு தரப்பினரையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ‘‘இரண்டுமே இரண்டு காட்டுமிராண்டித்தனம். வேதாந்தி கொடுத்த மறுப்பு இன்னமும் மோசம். கடவுள் இல்லை என்று பேசுகிறவர்கள் கழுத்தையாவது, நாக்கையாவது வெட்டவேண்டுமென்று பகவத் கீதையில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார். அந்த மாதிரி கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. பகவத்கீதையில் இல்லாத ஒரு வக்ரமான விஷயத்தை இப்படி அவர் சொல்வதே கூட இந்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: 930 விமானங்களை ரத்து செய்தது லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கும் 930 விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்தது. லுப்தான்சா விமான பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து 930 விமானங்களை ரத்து செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பிராங்பர்ட், மூனிச், டஸல்டர்ப் ஆகிய பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தொலைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தாங்கள் விரும்புவதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வே…
-
- 14 replies
- 1.7k views
-
-
விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன. அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும் வியாபித்திருப்பதாகவும் அவற்றால் விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் பிற செய்மதிகளுக்கும் அல்லது செயற்கைக் கோள்களுக்கும் ஆபத்து உருவாகலாம் எங்கின்றனர் அவதானிகள். அதுமட்டுமன்றி வெடித்துச் சிதறிய செய்மதிகளின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்டு அவை பூமியை நோக்கி எரிந்து விழக்கூடிய வாய்ப்புக்களும…
-
- 0 replies
- 1.7k views
-
-
10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்! திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊ…
-
- 20 replies
- 1.7k views
-
-
இப்பதான் விளங்கினதாக்கும்? இல கணேசனுக்கும் கோபம் வருகுதுபோல... http://thatstamil.oneindia.in/news/2006/05...5/26/lanka.html
-
- 8 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி! மதுரை- செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007 : இலங்கையில் உணவு, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு உதவக்கோரி புதிய தமிழகம் சார்பில் கோட்டை நோக்கி அக் 6ம் தேதி பேரணி நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 9 தென் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டிசம்பர் 15ல் மதுரையில் மண்டல மாநாடு நடத்தப்படும். அடுத்த ஆண்டு சென்னையில் மாநில மாநாடு நடத்தப்படும். இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்று…
-
- 4 replies
- 1.7k views
-
-
சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி! கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து …
-
- 16 replies
- 1.7k views
-
-
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார். http://virakesar…
-
- 20 replies
- 1.7k views
-
-
திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்) இலண்டனின் சில பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர். எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது. அதில், தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் …
-
- 0 replies
- 1.7k views
-
-
திருமணம் செய்து கொள்வதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறதாம். இங்கிலாந்து தேசிய புள்ளியியல் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதியளவுக்கும் சற்றே கூடுதலாக கடந்த 1895ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான திருமணங்கள் நடந்த ஆண்டு 2006 தான். அந்த ஆண்டில் 1000 பேரில் ................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3651.html
-
- 10 replies
- 1.7k views
-
-
அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 16 replies
- 1.7k views
-
-
அதிமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி உள்ளார். இன்று மாலை கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திருமாவளவன் விலகி விடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஜெயலலிதா விடுதலை சிறுத்தைகளுக்கு 4 வீதம் மட்டுமே ஒதுக்கியதால் கடும் அதிருப்தி அடைந்த திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்
-
- 7 replies
- 1.7k views
-
-
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு. ஆனால் நத்தார் என்பது போர்த்துக்கீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல). நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை. கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தி…
-
- 4 replies
- 1.7k views
-