Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 10 வயது சிறுவன் கியரான் வில்லியம்சன். இவன் அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் படிக்கிறான். இவன் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன். தனது 5 வயதில் இருந்து ஓவியம் வரைந்து வருகிறான். இந்த நிலையில் அவன் வரைந்த ஒரு ஓவியம் இ–மெயில் மூலம் ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவிய ஏலத் தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் அது ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் இவன் வரைந்த 23 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவை அனைத்தும் 20 நிமிட நேரத்தில் ரூ.2 கோடிக்கு விற்று தீர்ந்தன. அவன் வரைந்த ஓவியத்திலேயே தற்போது விற்பனை யான ஓவியம் தான் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஆனால் ஒரு ஓவியம் மட்டுமே ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மிக குறைந்த அளவு ஏலம…

  2. பிகாரில் சமூக நலத்துறை அமைச்சர் பர்வீண் அமானுல்லா தாக்கப்பட்டார்.பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விவரம்: அமைச்சர் அமானுல்லா, பாட்னாவில் இருந்து முஸாபர்பூருக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். ஹாஜிபூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் காரை வழி மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பாட்னா திரும்பினார். ஒரு கும்பல் எனது காரை வழி மறித்தது, கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் போலீஸார் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர் என்று அமைச்சர் அமானுல்லா கூறினார். ப…

  3. டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் இன்று பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 40-வது தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று பதவியேற்றுள்ள சதாசிவம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி வரை பதவியில் நீடிப்பார். தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி கடந்த 1951-54 ஆம் ஆண்டு காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அவருக்குப் பின் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நீதிப…

  4. உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரின் பிறந்தநாளை கனடிய மக்களும் வெகு உற்சாகமான நேற்று வியாழக்கிழமை கொண்டாடினார்கள். நெல்சன் மண்டேலா சென்ற மாதம் 8ஆம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்ந்த நான்கு நாட்களுக்கு முன் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர், தற்போது தேறி வருவதாக அவருடைய மகள் Zindzi Mandela கூறியதை அடுத்து, அவருடைய 95வது பிறந்தநாளை கனடிய மக்களும், குறிப்பாக டொரண்டோ மக்களும் வெகுவிமரிசையாக உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். Toronto's Honouring Mandela Committee, என்ற அமைப்பின் துணை தலைவர் Lloyd McKell, அவர்கள் கூறும்போது, இம்முறை மண்டேலாவின் பிறந்தநாளை பள்ளிக்குழந்தைகளுடன…

    • 0 replies
    • 409 views
  5. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு 'விக்டோரியா' அல்லது 'ஜேம்ஸ்' என்று பெயர் சூட்டக்கோரி பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன். இளவரசி கேத் மிடில்டன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வரும் சனிக்கிழமை குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து விமானப்படையில் பணியாற்றி வரும் இளவரசர் வில்லியம், மனைவி கேத்மிடில்டனுக்கு 'டெலிவரி' தேதி நெருங்கியுள்ளதால் விமானப்படை பணியில் இருந்து விடுமுறை பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் மனைவி அருகில் இருந்து கவ…

  6. எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் பிரான்ஸ் சந்திக்க உள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளன. நிழலிலேயே 30° வெப்பமும் தென்பகுதியில் 35° யைத் தாண்டியும் ய வெப்பநிலையும் அமைய உள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும் நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின் முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது. தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும் எதிர்ச்சூறாவளியினாலும் (anticyclone) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளது. குறைவான வெப்பநிலையாக 2…

  7. இந்தியாவின் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின் மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காலாவதியான உணவைச் சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அர்கானோபாஸ்பேட் என்ற அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தே கார…

  8. புன்னகை மன்னன் ,கன்னத்தில் முத்தமிட்டாள்,தெனாலி போல இதையும் விட்டு விட கூடாது தோழர்களே!! படத்தின் திரை தோல்வியே தமிழர் எழுச்சியின் மறுவடிவமாக மாறும்,இனி இப்படி ஈழவிடுதலை குறித்து தவறாக பேசும் படங்களின் வரவை ஒழிக்கும்!இப்படம் திரை இடப்பட்டால் திரை அரங்கத்தில் உள்ள திரை சீலையை கிழிப்பது உறுதி!இனி திரையிலும் தரையிலும் அடி தான்! இனம் வாழ நாம் செய்யும் செயல் இருந்தால்!அது தரம் தாழ்ந்து போவது போல் இருந்தாலும் தவறு இல்லை என்பது கருத்து!!!! ## இத்திரைப்படம் தமிழகத்தில் திரை இடப்பட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டால் கேட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல !அது எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுளாய் அமையும்!## -- மானம் உள்ள தமிழ் மாணவர்கள்-- மெட்ராஸ் கஃபே படத்துக்க…

  9. ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்முக் காஷ்மீர்ப் பகுதியில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆறுபேரைக் கொன்றுள்ளதோடு இன்னும் பலரைக் காயப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் ஒன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முகாமின் முன்னால் கூடிய பொதுமக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட பலர் காயமடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய ஆக்கிரமிப்பிற்குற்பட்ட காஷ்மீர் பகுதியெங்கும் பரவலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…

  10. இந்திய வான்வெளியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஊடுருவிய சீன ஹெலிகாப்டர்கள் சிறிது நேரம் பறந்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை ராணுவம் மறுத்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மக்கள் விடுதலை ராணுவ அமைப்புக்குச் சொந்தமானது. அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிப் பகுதிக்கு அருகில்தான் பறந்ததாகவும், இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவும், சீனாவும் நேரடியாக தொடர்பு கொள்வது சமர் பகுதியில் தான். அதனால், இப்பகுதியில் சீன ராணுவத்தினர் பலமுறை அத்துமீறியுள்ளனர். ச…

  11. தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக அவமானப்பட்டுதான் நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினோம். காங்கிரஸ் காரர்களை பார்ப்பது கூட எனக்கு அவமானமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பல காங்கிரஸ் காரர்கள் எங்கள் கட்சி தயவால் தான் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில்லரை வர்த்தகத்தில்…

    • 0 replies
    • 524 views
  12. வரலாற்றில் அமெரிக்காவை இதைவிட வேறு யாராலும் அவமானப்படுத்த முடியாது என்ற நிலையில், அந்த அரசுக்கு எதிராக ஸ்னோடென் கைவசம் அவ்வளவு தகவல்கள் உள்ளதாக, ஸ்னோடெனின் ரகசியங்களை அம்பலப்படுத்திவரும் The Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்னோடென், ''இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது'' என்று அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாக தகவலை வெளியிட்டார். இதனை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவர் மாஸ்கோ விமானநிலையத்தில் பதுங்கியுள்ளார். உலக நாடுகள் அவருக்கு தஞ்சம் அளிக்க கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தபின்னும் அவருக்கு க்யூபா, நிகராகுவே, வெனிசுலா போன்ற அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் ஸ்னோடென் பிர…

  13. கனேடிய அரசியலில் முதல் ஏழு பேரின் பட்டியலில் ராதிகா சிற்சபைசன். [Monday, 2013-07-15 16:15:58] கனேடிய அரசியலில் முதல் ஏழு பேரின் பட்டியலில் ராதிகா சிற்சபைசன் தமிழினத்துக்கு புதிய கௌரவம் கனேடிய அரசியலில் முதலிடம் பிடிக்கும் ஏழு பேர் குறித்த விடயங்களை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் சமூகத்தில் இருந்து முதலாவதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராதிகா சிற்சபைசனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழினத்துக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது.இதில் முதல் பிரதமர், 50 ஆண்டுகளாக கனடிய நாடாளுமன்றினை அலங்கரித்த முதல் உறுப்பினர் உள்ளிட்ட முதலிடம் பிடிக்கும் எழுவர் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. www.seithy.com

  14. ஜெய்ப்பூர்: ஓராண்டுக்கு யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும் என்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று (16ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் சுமார் 5000 கோடி டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி மிஞ்சும் என்றார். தங்கம் வாங்காமல் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைத்துவிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். அன்னியச் செலாவணி ஈட்டுவது அதனைச் செலவழிப்பதைப் பொறுத்தே ரூபாயின் மதிப்பு உயருவதும், சரிவதும் அமையும் என்று சிதம்பரம் கூறினார். ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க த…

  15. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் சமூகப் பணியாளர் ஒருவர், கறுப்பின இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜோர்ஜ் சிம்மர்மேன் என்ற குறித்த பணியாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ட்ரேவோன் மார்ட்டின் என்ற 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை இச் சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. தற்பாதுகாப்பு கருதியே குறித்த இளைஞனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஜோர்ஜ் சிம்மர்மேன் தெரிவித்தார். ஜோர்ஜ் சிம்மர்மேனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரை விடுதலை செய்தது. இதனையடுத்த…

  16. இன்றோடு விடைபெறுகிறது தந்தி... கடைசித் தந்தி கொடுப்போரை படம் பிடிக்க ஏற்பாடு. சென்னை: கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் அரும் சேவையாற்றி வந்த தந்தி சேவைக்கு இன்றோடு விடை கொடுக்கப்படுகிறது. கடைசித் தந்தி கொடுக்க வருவோரை வீடியோவில் படம் பிடித்து ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவில் தந்திதான் மிகப் பெரிய சேவையாக இருந்து வந்தது. அவரசத் தகவல்களைத் தெரிவிக்க அத்தனை பேருக்கும் இருந்த ஒரே சேவை தந்தி மட்டுமே. உடல் நலக்குறைவு, அவசரமாக வர வேண்டும், மரணச் செய்தி என முக்கியத் தகவல்களை ஒருவருக்குத் தெரிவிக்க தந்தியைத்தான் அனைவரும் நாடினர். ஆனால் பேஜர் வந்ததும் தந்தியின் சேவை முதலில் மெதுவாக குறைந்தது. பின்னர் இன்டர்நெட் வந்தது, இமெ…

  17. இந்தியாவுக்குள், ஊடுருவிய.... சீன ஹெலிகாப்டர்கள்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுமர் பகுதியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இருக்கும் சுமர் பகுதியில்தான் இந்தியா-சீனா ராணுவத்தினர் தொடர்பு கொள்வர். இப்பகுதியில் கடந்த 17-ந் தேதி சீனா ராணுவத்தினர் ஊடுருவினர். மேலும் அப்பகுதியில் இருப்போரையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சீனா ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அதே சுமர் பகுதியில் காலை 8 மணியளவில் ஊடுருவியிருப்பது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதை சீனா ராணுவம் மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமது ஹெல…

  18. பார்மர்: ராஜஸ்தானில் மிக்-21 பைசன் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் இருந்து மிக் 21 பைசன் ரக போர் விமானம் இன்று காலை பயிற்சிக்கு புறப்பட்டது. விமானம் காலை 9.30 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மிக் 21 ரக விமானம் இதே உத்தர்லாய் விமான தளத்தில் விபத்துக்குள்ளானது. அப்போது விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தநர். மிக் 21 ரக விமானங்கள் ச…

  19. தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய சக்திகளுள் ஒன்றான எம்.கே.நாராயணன் நாளை (15/07/2013 அன்று) திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய் சிங் ஆகிய மூவர் கூட்டணி, இலங்கையின் மூவர் கூட்டணியுடன் இனப்படுகொலை நிகழ்த்துவதை குறித்து தினந்தோறும் நிலைமைகளை ஆராய்ந்து செயல்படுத்தியது. அத்தகைய நபர் தற்பொழுது பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா என்னும் பெயரில் தமிழகத்திற்கு வருவதன் நோக்கம் என்ன? பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்; அடுத்த பிப்ரவரி வாக்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். சம்பந்தமில்லாமல் ஜூலையில் எம். கே. நாராயணன் வருவது எதற்காக? மேலும்…

  20. இந்தியாவைக் கலக்கிய மாபெரும் ஊழலான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலின் முக்கிய காரணகர்த்தாவான இத்தாலி நாட்டு புரோக்கர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி மாரடைப்பால் மரணமடைந்தார். இத்தாலியின் மிலன் நகரில் வெள்ளிக்கிழமை இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குவாத்ரோச்சியின் மரணச் செய்தியை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்தியாவை உலுக்கிய போபர்ஸ் இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களில் ஒன்று போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். ராஜீவ் காந்தியை நிலைகுலையச் செய்த ஊழலும் கூட. குவாத்ரோச்சிதான் புரோக்கர் 1986ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1500 கோடிக்கு பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பெருமளவில் லஞ்சம், ராஜீவ…

    • 4 replies
    • 787 views
  21. பூட்டானில் ஆட்சியைப் பிடித்தது எதிர்க்கட்சி! பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் அக்கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. இப்போதைய ஆளுங்கட்சியான துருக் பியூன்சம் ஷோக்பாவால் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பூட்டான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத்தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பூட்டானில் மொத்தம் 3.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 10,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியா சார்பில் 4,130 மின்னணு வாக்குப் பதிவு …

  22. பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்து கொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்களுடனான மோதல்களின் போது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே, படைவீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தற்கொலையும் ஒரு பெருந்து…

  23. கடல் எல்லைப் பிரச்னையில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சீன துணைப் பிரதமர் வாங் யாங், சீன மக்கள் குடியரசின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் யாங் ஜியிச் ஆகியோரிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிழக்குச் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தென்கொரியாவுடனும், தென் சீனக்கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் ஆகிய நாடுகளுடன் சீனாவுக்குப் பிரச்னை உள்ளது. இதில் அந்நாடுகளை தனது ராணுவ பலத்தின் மூலம் மிரட்டும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா - சீனா இடையிலான ராஜீய, பொரு…

  24. ரஷ்யாவில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுப் பொறிகளையே (டைப்ரைட்டர்ஸ்) பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது. தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்முறை இஸ்வேஸ்டியா (Izvestia) என்ற ரஷ்ய அரசுக்கு மிக நெருக்கமான நாளிதழ் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் லட்சக் கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டமையும், மிக அண்மையில், அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடன் அந்நாட்டின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியமையும் இதற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது. இந்த இரண…

  25. அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில் தற்சமயம் ரஷ்ய விமான நிலையமொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள அமெரிக்க முன்னாள் புலனாய்வு தொழில்நுட்பவியலாளர் எட்வார்ட் ஸ்னோவ்டன் முதன்முறையாக பொதுச் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். முன்னதாக 21 நாடுகளிடம் அகதி அந்தஸ்து கோரியிருந்த நிலையில் அவருக்கு வெனிசுலா, ரஷ்யா, பிலிவியா நிகாரகுவா, எகுவடோர் ஆகிய நாடுகள் அகதி அந்தஸ்து வழங்க முன்வந்திருந்தன. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பம் கொண்டிருப்பதாக கூறி ஸ்னோடன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கவுன்சில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம், டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நேஷனல், சர்வதேச ஊழல் கண்காணிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.