உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26888 topics in this forum
-
நோர்வே பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு, பலர் காயம்! மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் வியாழன் (26) அன்று பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், நார்விக்கிலிருந்து சோல்வேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு நோர்வேயின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோபோடென் தீவுக்கூட்டத்தில், ராஃப்ட்சுண்டெட் அருகே உள்ள ஹாட்சல் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். …
-
- 0 replies
- 277 views
-
-
நோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது நோர்வேயில் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் கன்சவேற்றிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதனையடுத்து தற்போதைய பிரதமரான எர்னா சொல்பேர்க் ( Erna Solberg) இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார். இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்தத் தேர்தலில் எர்னா சொல்பேர்க்கை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹர் ஸ்ரோர் (Jonas Gahr Støre) தோல்வியடைந்துள்ளார். …
-
- 0 replies
- 425 views
-
-
மேற்கு நோர்வேயில் நடைபெற்ற ஒரு பேருந்து வண்டிக் கடத்தலின் போது மூவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் உள்ளூர் தகவல்களின் படி ஐம்பது வயதுமிக்க கடத்தல் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், மேற்படி சம்பவம் திங்கள் மாலை சோன் – பியோர்டன் (Sogn og Fjordane ) பிரதேசத்தில் உள்ள அர்டால் (Ardal) பட்டினத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது . TV-2 ஒலிபரப்பாளருக்கு வழக்குத் தொடுனர் ஜோர்ன் லஸ்சே ரெவ்ஸ்னர் (Jorn Lasse Revsnes) பேருந்தில் மூவர் மரணித்த நிலையில் இருந்தனர் என உறிதிப்ப்படுத்தியுள்ளார் . ஒரு ஆணும் , இரு பெண்களும் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். கத்தியுடன் காணப்பட்ட சந்தேக நபரை அங்கு வீதி விபத்து என விரைந்த தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட…
-
- 0 replies
- 544 views
-
-
நோர்வே பொதுத் தேர்தலில் பழைமைவாத கட்சியைச் சேர்ந்த எர்னா சோல்பேர்க் வெற்றிபெற்றுள்ளார். அந்நாட்டின் தொழிற்கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரொல்ரென்பேர்க் தோல்வியை ஒப்புக்கொண்டதையடுத்து ஆட்சியை அமைக்க எர்னா சோல்பேர்க் தயாராகிவருகிறார். மேற்படி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 4 வலதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய எர்னா சோல்பேர்க்கின் கூட்டமைப்பானது பாராளுமன்றத்தின் 169 ஆசனங்களில் 96 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. தேர்தல் வெற்றியையடுத்து எர்னா உரையாற்றுகையில், இது வலதுசாரி கட்சிகளுக்கான வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி எனக் கூறினார். 2011 ஆம் ஆண்டில் 77 பேர் பலியாவதற்க…
-
- 0 replies
- 338 views
-
-
நோர்வே அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பகங்களில் 52 சிறுவர்கள் மீது மோசமான துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 42 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றங்கள் நிருபிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டிருப்பதாக நோர்வேயின் ஊடகமான Addresseavisen தனது இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்று வந்திருப்பதால் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வேயில் குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் தவறிழைத்திருப்பதாகக் கூறிரய நோர்வே சிறுவர் காப்பகங்களால் சிறுவர்கள் பெற்றோரிடதிலிருந்து பிரிக்கப்படுகின்றனர். …
-
- 0 replies
- 475 views
-
-
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு …
-
- 0 replies
- 547 views
-
-
நோர்வேயில் 'இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" நூல் அறிமுகமும் வெளியீட்டு விழாவும் http://www.tamilnaatham.com/advert/20060621/NORWAY/
-
- 0 replies
- 790 views
-
-
நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் மற்றும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நோர்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோத…
-
- 1 reply
- 426 views
-
-
சில வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சமடைந்த ஈழத்தமிழர் அவர் தாய்நாட்டில் வாழ்ந்த போது புரிந்த கொலைக் குற்றங்களுக்காக அவர் மீது நோர்வே அரசு கொலைவழக்கு பதிவு செய்துள்ளது. இச் செய்தியை நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்கள் இன்று வெளியிட்டபோது வேலதிக விசாரணைகளின்போது குறித்த நபர் 3 கொலைக்குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனாலும் அவரால் கொலைசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 வரை இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அறிவித்திருக்கின்றன. கொலைகளை ஒத்துக்கொண்டதின்பேரில் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நபர் தான் விடுதலைப்புலிகளின் கட்டளையின் பேரிலேயே அக்கொலைகளைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் இக்கூற்றை அரசு நம்பவில்லை என…
-
- 1 reply
- 944 views
-
-
டாக்ப்லாடெற் (Dagbladet) நாளிதழ் மேற்கொண்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் நோர்வேயில் கடும்போக்கு இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கருத்துப்படி சுமார் 200 கடும்போக்கு இஸ்லாமியர் நோர்வேயில் தற்போது உள்ளனர். நோர்வேயில் ஷரீஆ சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே அவர்கள் அனைவரதும் பிரதான நோக்கம். இவர்கள் அதிகம் சர்வதேசத் தொடர்புகளைக் கொண்டவர்கள். நோர்வே பாதுகாப்பு முகவாண்மை இவர்களைக் கண்காணித்து வருகிறது. மதம் மாறிய நோர்வேஜியன்கள், வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்கான், பாகிஸ்தான், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, கிழக்காபிரிக்கா முதலான நாடுகளைப் பின்னணியாகக் கொண்ட குடிவரவாளர்கள், இளைஞர்களை இந்தக் கடும்போக்கு குழு கொண்டிருப்பதாக அவ்வாய்வு மே…
-
- 0 replies
- 621 views
-
-
நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி நோர்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி…
-
- 0 replies
- 361 views
-
-
கடும்போக்குக் குழுக்களிடம் சிக்கி இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாறுவதைத் தடுக்க, நோர்வே அரசானது புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்காக பத்து அமைச்சுக்கள் இணைந்து செயலாற்றவுள்ளன. "கடும்போக்கு வாதம் அதிகரித்துவருகிறது." என்று கூறிய நீதியமைச்சர் அண்டர்ஸ் அனண்ட்சன் (Anders Anundsen) தீவிரவாதம் சர்வதேச அளவில் வலுப்பெறும் போது, வித்தியாசமாகச் சிந்திப்பதும், முன்பிருந்ததை விட விதிமுறைகளை வலுவாக்குவதும் அவசியமான ஒன்றாகிறது என்றார். ஐந்து அமைச்சர்களும் அரச செயலாளர்களும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி, கடும்போக்குவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பது பற்றி கலந்துரையாடினர். வேறுபட்ட அமைச்சுக்கள் இச்செயலாக்கத்தில் ஈடுபடுத்தப்படும். "நாம்…
-
- 0 replies
- 536 views
-
-
Published By: Digital Desk 3 24 Sep, 2025 | 02:51 PM நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகி…
-
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன கொரோனா வைரஸ் காரணமாக நோர்வேயில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. அங்கு பாலர் பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் பதினைந்து நாட்கள் மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஏர்னா சூல்பேர் (Erna Solberg) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உலகநாடுகள் ஒரு கடினமான சூழலில் உள்ளநிலையில் நாம் இப்போது எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் வைரஸைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிகையலங்காரம், தோல் பராமர…
-
- 0 replies
- 317 views
-
-
நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்! தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அஸ்க் கிராமம் வழியாக ஒரு வீதியின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு கார்கள் கடந்து செல்ல முடியாத ஆழமான பள்ளத்தாக்கை விட்டுச் சென்றது. காணொளி காட்சிகள் ஒரு வீடு பள்ளத்தாக்கில் விழுவது உள்ளிட்ட வியத…
-
- 5 replies
- 1k views
-
-
நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை. இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது. விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவ…
-
- 11 replies
- 1.5k views
-
-
நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு! நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
- 23 replies
- 1.4k views
-
-
நோவா ஸ்கோஷியாவில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தின்போது, ஒரு ஆர்.சீ.எம்.பி. கான்ஸ்டபிள் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கிதாரி கப்றியேல் வோர்ட்மான் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும், 51 வயதுடைய, கப்றியேல் வோர்ட்மான் என்பவரும் இச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டுள்ளார். 23 வருடங்களாக ஆர்.சீ.எம்.பி. காவலதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹைடி ஸ்டீவன்சன் என்பவரே இ…
-
- 3 replies
- 689 views
-
-
நௌரு , மனுஸ் தீவில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்? அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிச் சென்று, நௌரு மற்றும் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் மீள்குடியேற்ற உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1800 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நௌரு மற்றும் மனுஸ் தீவுக…
-
- 2 replies
- 441 views
-
-
ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்.. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். 'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் 'சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது. 'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்’ என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஈழ நில…
-
- 3 replies
- 824 views
-
-
ப.சிதம்பரத்தை காணவில்லை: பரபரப்பு >> THURSDAY, APRIL 1, 2010 ப.சிதம்பரத்தை காணவில்லை: ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட இந்த துண்டு சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்கள் சார்பில் நேற்று (31.03.2010) ஆலங்குடியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் இந்த துண்டு சீட்டை ஒட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வடகாடு விஜய் ஆனந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். நாங்கள் இந்த துண்டு சீட்டை ஒட்டவில்லை. அப்படி நாங்க…
-
- 7 replies
- 1.2k views
-
-
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டது சென்னை உயர் நீதி மன்றம். கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு, உரிமையியல் வழக்கு ஒன்றில் வாதாட ஆஜரான வழக்கறிஞர் பாரி, தமிழில் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நடந்தது இதுதான்... நீதிபதி சிவக்குமார்: ''நீங்கள் ஏன் தமிழில் வாதாடுகிறீர்கள்? ஆங்கிலம்தானே நீதிமன்றத்தின் அலுவல் மொழி…
-
- 4 replies
- 717 views
-
-
மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சமூக சேவகர் அன்னா ஹசாரே பேசினார். புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த பிறகு உடல்நலம் தேறி அவர் கலந்துகொள்ளும் முதல் பொது மேடை இது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹசாரே பேசுகையில், எனது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஊழலுக்கு எதிராக நீண்ட காலம் போர் நடந்து வருகிறது. இதற்கு பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இளைஞர்களே இந்தியாவின் உண்மையான ஹூரோக்கள். மாற்றத்திற்கான போராட்டம் கிராமங்களிலிருந்து துவங்க வேண்டும். இந்தியாவில் 2வது சுதந்திர போர் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனை வேரிலிர…
-
- 1 reply
- 620 views
-
-
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரான பின்னர் மும்பையில் நடந்த முதல் தாக்குதல்! புதன்கிழமை, ஜூலை 13, 2011, 20:15 மும்பை: மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் மும்பையில் முதல் மற்றும் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இன்று நடந்துள்ளது. 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பதவி விலகினர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியேற்றது முதல் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் திறமையாக கையாண்டு வந்தார் ப.சிதம்பரம் என பாராட்டப்பட்டு வந்தது. உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியும் மிகத் திறமையாகவே அவர் செயல்பட்ட…
-
- 0 replies
- 531 views
-
-
ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டிய ஆக்கிரமிப்பு சுவர் மக்களால் இடிப்பு; பதற்றம்! சென்னை: சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை, இன்று அப்பகுதி பொதுமக்கள் இடித்துத் தள்ளினர். நீலாங்கரை அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமாக இடம் உள்ளது. அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை,அவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மீனவ மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், இன்று அவர்கள் த…
-
- 2 replies
- 548 views
-