உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் ஈரானின் வெளிவிவகார அமைச்சிடம் முறையிடப்பட்டுள்ள போதும் அவர்கள் பதில் அளிக்க மறுத்துள்ளனர். ஈரானின் அரச தலைமைகள் அண்மையில் விடுத்த உத்தரவின் படி சைபர் கஃபேக்களில் இணையத்தை உபயோகிக்கும் ஈரானியர்கள், அவர்களுடைய ID, மற்றும் பெயர் விபரங்களை பதிவிட வேண்டிய விதிமுறை கொண்டுவரப்பட்டது. மேலும் லண்டன் ஒலிம்பிக்கின் லோகோவில் Zion எனும் வார்த்தை பிரயோகம் தோன்றுவதாகவும், இது இஸ்ரேல் அல்…
-
- 1 reply
- 510 views
-
-
-
அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், மக்கள் நலத்திட்டங்களுக்கான அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதை காரணம் காட்டி ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டின. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர். எனினும், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வல…
-
- 0 replies
- 506 views
-
-
டெல்லி: மனித வெடிகுண்டுக்குப் பலியான ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியை, அதேபோல மனித வெடிகுண்டுக்குப் பலியான பெனாசிர் பூட்டோவி்ன் மகன் பிலாவல் பூட்டோ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது மகன் பிலாவல் பூட்டோ மற்றும் குடும்பத்தினருடன் டெல்லி வந்தார். இன்று பிற்பகல் அவர் ஆஜ்மீர் தர்கா செல்கிறார். சர்தாரி பாகிஸ்தான் அதிபர் என்பதால் அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தியும், பிலாவல் பூட்டோவும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது. பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வருவது இதுவ…
-
- 0 replies
- 339 views
-
-
அல்லாவின் இராணுவமும் சனி துரத்தும் சார்கோசியும். ஒரு பேப்பரிற்காக சாத்திரி பிரான்சில் தேர்தல் இந்த மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இரண்டு தடைவை வலது சாரிக்கட்சி ஆட்சியில் இருந்து விட்டது இரண்டாவது தடைவை வலது சாரிக்கட்சியில் நிக்ககோலா சார்க்கோசி பிரான்சின் அதிபராகியிருந்தார். எனவே இந்தத் தடைவை சோசலிசக்கட்சியிடம் பிரான்ஸ் மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே கருத்துக்கணிப்புக்களும் ஊடகசெய்திகளும் வெளியாகிக்கொண்டிருந்தது. சோசலிசக் கட்சியின் வேட்பாளர் françois hollande கருத்துக்கணிப்புக்களில் முதலிடத்தில் இருந்தார். சார்க்கோசி இந்தத் தடைவை போட்டியிடமாட்டார் என்பது போல போக்கு காட்டிக்கொண…
-
- 12 replies
- 1.6k views
-
-
சீனாவின் தென் கடல் பகுதியிலில், இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், சீனாவின் தென் கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணையை எடுத்து வருகிறது. எனினும், இப்பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கு இந்தியாவிற்கு தார்மீக உரிமை இல்லை எனவும், இப்பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பாக நடந்த மாநாட்டின் நிறைவின் போது, தென் சீனாவின் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிறுவன தலைவர் வூ ஷிஹுன் இது குறித்து தெரிவிக்கையில், இந்தியாவுடன், சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல்…
-
- 2 replies
- 699 views
-
-
வட மாலி போராளிகள் தனிநாடு பிரகடனம் பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அங்கீகரிக்க மறுக்கின்றன! Mali's Tuareg rebels, who have seized control of the country's distant north in the chaotic aftermath of a military coup in the capital, declared independence Friday of their Azawad nation. “We, the people of the Azawad,” they said in a statement published on the rebel website, “proclaim the irrevocable independence of the state of the Azawad starting from this day, Friday, April 6, 2012.” http://www.theglobea...article2394040/
-
- 11 replies
- 992 views
-
-
அமெரிக்காவில் சிறுவர்கள் ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறார்கள். America's prisons are overflowing, but many who are kept behind bars, are just children. Thousands of youths are tried as adults in the U.S. every year - and some are given life sentences in the country's harshest jails. Many then find themselves becoming victims of sexual violence, and suicide.
-
- 0 replies
- 410 views
-
-
சிரிய தாக்குதல்களில் 130 பேர் பலி சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது. ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட…
-
- 0 replies
- 283 views
-
-
அமெரிக்க கப்பற்படை விமானம் குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது. இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் த…
-
- 0 replies
- 620 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று, பவுர்ணமி வழிபாடு நடத்தியுள்ளனர். மூன்று மாத இடைவெளிக்குப் பின் இணைந்த இருவரும், நேற்று முதல் முறையாக, பொது இடத்துக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு எதிராக சதி செய்ததாக குற்றம்சாட்டி, சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட, 20 பேரை, கடந்த டிசம்பரில் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த சதி பற்றி தனக்குத் தெரியாது என்றும், போயஸ் தோட்டத்தில் நான் இருந்ததால், அதைப் பயன்படுத்தி எனது உறவினர்களும், நண்பர்களும் முறைகேடாக நடந்து கொண்டனர். நான் எப…
-
- 2 replies
- 498 views
-
-
தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள், துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா, பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என க…
-
- 2 replies
- 580 views
-
-
அ.தி.மு.க-பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்? ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பர…
-
- 1 reply
- 552 views
-
-
பாகிஸ்தானின் இராணுவத்தினர் நூற்று முப்பது பேர் பனியில் புதையுண்டனர் பாகிஸ்தானின் சியாச்சின் மலைப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சுமார் 130 பேர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும், பனிச்சரிவில் சிக்குண்ட இராணுவத்தினரில் எத்தனைபேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றி இன்னமும் உறுதி செய்ய முடியவில்லை எனவும் மேஜர் ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்கு அருகிருள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள மேற்படி இராணுவ முகாம், உலகிலேயே அதி உயரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து …
-
- 0 replies
- 316 views
-
-
ஐரோப்பாவின் பொருளாதாரம்: தொடர்கிறது தற்கொலைகள் ஐரோப்பாவை தாக்கிய பொருளாதார நெருக்கடி தனது மோசமான பிரதிபலிப்புக்களை இப்போது மெல்ல மெல்ல காட்ட ஆரம்பித்துள்ளது. தனது கட்டிட நிறுவனம் வங்குரோத்து அடைந்துவிட்ட காரணத்தால் 59 வயதுடைய இத்தாலியர் ஒருவர் தனது தலையில் தானே வெடி வைத்து மரணமடைந்துள்ளார். இவர் எழுதிய கடிதத்தில் தனது தொழில் முடிவுக்கு வந்துவிட்டதால் வாழ்க்கையை முடிப்பதாக எழுதியுள்ளார். இதுபோல 78 வயது பெண்மணி ஒருவர் தனது ஓய்வூதியம் புதிய பொருளாதார மீதம்பிடிப்பால் குறைவதைத் தாங்க முடியாது தற்கொலை செய்துள்ளார். மறுபுறம் கிரேக்கத்தின் தலைநகர் எதென்சில் 77 வயதுடைய நபர் ஒருவர் பாராளுமன்றின் முன்பாக தலையில் வெடி வைத்து மரணித்துள்ளார். புதிய பொருளாதார நெரு…
-
- 13 replies
- 897 views
-
-
சோமாலிலாந்து அரசு தன்னைப் பிரிட்டிஸ் ஆட்சிப் பாதுகாப்பின் கீழ் இருந்த முன்னைய சோமாலிலாந்தின்(Protectorate) வாரிசாகக் கருதுகிறது. அது 1960ம் ஆண்டில் சில நாட்கள் தன்னாட்சி பெற்ற நாடாக இருந்தது. அந்த சில நாட்களில் அது சோமாலிலாந்து என்ற பெயருடன் நிலவியது. அந்த சில நாட்களின் பிறகு அது இத்தாலி அரசின் பிடியில் இருந்த இத்தாலியன் சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சோமாலியா குடியரசு (Somalia republic) என்ற நாடாக உருப்பெற்றது. வரலாற்று ரீதியாக சோமாலிலாந்து தன்னைப் பிரத்தியேகமான தரைப் பகுதியாகக் கருதி வந்துள்ளது. சோமாலியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி சியாட் பாரே (Siad Barre) அரசு சோமாலிலாந்து மக்களை மிகவும் கொடிய விதத்தில் படுகொலை செய்தது. இது ஒரு உள்நாட்டுப் போருக்கு அடிகோலியதோடு சோமாலி…
-
- 0 replies
- 886 views
-
-
பிரான்ஸின் வடமேற்கு நகரொன்றில் அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்லி நகரில் உள்ள குறித்த அணு மின் உலையின் இரு இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அணு உலையை குளிர்விக்கும் திரவம் வெளியேறியதாகவும், இதனால் அயல் பிரதேசங்களுக்கு கதிர்வீச்சு தாக்கம் பரவக்கூடும் எனவும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனினும் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ள அணு மின் உலை பாதுகாப்பு அதிகாரிகள், அணு உலையில் இருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை எனவும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அணு உலையின் குளிர்விக்கும் பகுதிக்கு கொண்ட…
-
- 0 replies
- 483 views
-
-
உகண்டாவின் கிளர்ச்சிக்குழு தலைவர் ஜோசஃப் கோனி பற்றி வெளியிடப்பட்ட Kony 2012 டாக்குமெண்டரி திரைப்படத்தின் புதிய பாகத்தை "Beyond Famous" எனும் பெயரில் Invisible Children குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமது குழுவின் நிறுவனர் ஜேசன் ருஸெலின் எந்தவொரு பங்களிப்பும் இல்லாது இம்முறை இப்புதிய பாகம் வெளியிடப்படுவதாக Invisible Children குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜோசஃப் கோனியின் LRA கிளர்ச்சிக்குழு பற்றிய விரிவான பார்வை, அவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கென இதுவரை எடுக்கப்பட்ட, இனிமேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பவை குறித்து இப்புதிய வீடியோ டாக்குமெண்டரி அலசுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்காவின் குறிப்பிட்ட சில நாடுகளில் இயங்கிவரும் LRA கிளர்…
-
- 0 replies
- 506 views
-
-
டெல்லி: கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது. திருமண பதிவாளர் அலுவலகம் மத்திய சுகாதாரத் துறையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது . அதில் கூறப்பட்டுள்ளதாவது,கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்திலும், 4.1 சதவீதத்தோடு டெல்லி கடைசி இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் 8.2 சதவீதத்துடன் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன. ஒடிஷா (7.2), இமாச்சலப் பிரதேசம்(7.1) மற்றும் மக…
-
- 0 replies
- 407 views
-
-
இந்திய கடற்படையிடம் அணுசக்தி- நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது. இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது. 8,140 தொன் எடையிலான அக்குலா II வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் ரஷ்யாவில் கே-152 நேர்பா என்ற…
-
- 4 replies
- 855 views
-
-
64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன. மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது. லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது bbctamil …
-
- 19 replies
- 2k views
-
-
2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது. யாகூ நிறுவன…
-
- 0 replies
- 384 views
-
-
-
டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா? டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்…
-
- 0 replies
- 516 views
-
-
அமெரிக்க ரைம்ஸ் என்னும் சஞ்சிகையில் நவநீதம்பிள்ளை வருவதற்காக எங்கள் பொன்னான வாக்கைப் போடுவோம் http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.htmlமேலுள்ள சுட்டியை அழுத்தி What do you think? என்னும் பகுதியைப் பாருங்கள் அங்கே Definitely No Way என்ற பகுதி இருக்கிறது இதில் Definiteiy என்ற இடத்தில உங்கள் புள்ளியைப் போடவும். உற்றார் உறவினர் நண்பர்களையும் கேடடு வாக்களிக்க வைக்கவும்.
-
- 2 replies
- 550 views
-