Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா. மனித உரிமை ஆணைய ஓட்டெடுப்பு: இலங்கையை இந்தியா ஆதரிக்கக் கூடாது- கருணாநிதி. சென்னை: இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்திடும் தீர்மானம் ஒன்றை 27-2-2012 அன்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ளதாகவும்; இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெறவிருக்கும் …

  2. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசர…

  3. படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி! டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி உள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 7 சதவீதத்துக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகப் பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருந்த 2007/2008 காலகட்டத்தில் கூட இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. இது அதற்கடுத்த ஆண்டுகளில் 8.5 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் 7 சதவீதத்துக்கு தேய்ந்து இப்போது 6.1-ல் வந்து நிற்கிறது. தொடர்ந்து 11 காலாண்டுகளாக சரிவுப் பாதையிலேயே உள்ளது இந்தியப…

  4. அமெரிக்காவில் விமானத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென ஒசாமா பின்லேடனின் புகழ் பாடி, ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் இருந்து டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனுக்கு கான்டினன்டல் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த வாரம் புறப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த யாசீத் முகமது அபுநயன் (19) என்ற வாலிபரும் இருந்தார். விமானம் பறக்க தொடங்கிய பிறகு, அபுநயன் திடீரென எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்ற வைத்தார். ஒசாமா பின்லேடன் புகழ் பாடும் வரிகளையும் பெண்களுக்கு எதிராகவும் அவர் திடீரென பாட்டு பாடி கோஷம் போட்டார். புகை பிடிப்பதையும் கோஷம் போடுவதையும் நிறுத்துமாறு பய…

  5. ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்பவத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்! இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை! ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல்…

  6. டெஹரான்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த நாட்டை பூண்டோடு அழித்து விடுவோம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அகமது வஹிதி அளித்துள்ள ஒரு பேட்டியில், இஸ்ரேல் எங்களை தாக்கி அழித்து விடலாம் என்று கருதினால் அது தப்புக் கணக்காகி விடும். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாடே இல்லாமல் போய் விடும். அந்த நாட்டை முழுமையாக அழித்து விடுவோம். எங்களை இஸ்ரேல் தாக்கினால், அந்த நாட்டை நிர்மூலமாக்கி விடுவோம். அதற்கான அத்தனை சக்தியும் எங்களிடம் உள்ளது என்றார் அவர். ஆனால் இஸ்ரேல் மீது என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பதை அகமது தெரிவிக்கவில்லை.…

  7. ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது. இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. 2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும…

  8. பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத் தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 20…

  9. நாம் தமிழர் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த சில இளைஞர்கள், இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின் கொலைக்களம் படத்தை நேற்று திரையிட்டனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள், குடியிருப்பு வாசிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதிர்ந்து போயினர். இப்படி எல்லாம் கொடுமை நிகழ்ந்துள்ளதா என வேதனைபட்டனர். இலங்கையை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இது போல் திரையிடப்படுதல் மற்ற பகுதியிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோளும் பொதுமக்கள் வ…

  10. கொள்ளையர்கள் தாக்கும்போது மனித உரிமை அமைப்புகள் ஏன் வருவதில்லை?- மக்கள் கேள்வி! சென்னை: கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களைத் தாக்கியபோது மனித உரிமை அமைப்புகள் வருவதில்லை. தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்றபோதும், தாக்கியபோதும் மனித உரிமை அமைப்புகள் வரவில்லை. இத்தாலியக் கப்பல் ஊழியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் குறித்தும் மனித உரிமை அமைப்புகள் கவலைப்படவில்லை. ஆனால் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றதும் வந்து விட்டார்கள் என்று கூறி வேளச்சேரியில் என்கவுண்டர் நடந்த வீட்டைப் பார்க்க வந்த மனித உரிமை அமைப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து உண்மை க…

  11. சீனாவுக்கு 'அதியுச்ச திமிர்' என்கிறது அமெரிக்கா சிரியாவின் விவகாரத்தில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ''அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா மறுதலித்திருக்கிறது. இராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐநா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்து வந்திருக்கிறது. இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவருவததற்கு சிரிய அதி…

    • 0 replies
    • 658 views
  12. டெக்ரான்: சர்வதேச திரைப்பட விருதான ஆஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கக் கூடிய ஒன்று! இன்று அறிவிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்". ஆஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது.. ஆம், ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான "புட்நோட்"டுடன்! ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் சொல்லவா வேண்டும்! ஈரானின் ஆஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு …

  13. சென்னையி்ல் வங்கி்க் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டனர். ஒரே தடவையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டார்.இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் த…

  14. மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா அனுமதி தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, வயிற்றுவலி தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 93 வயதான நெல்சன் மண்டேலா, கடந்த ஒருவருட காலத்திற்கும் மேலாக, சுவாசக் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க் மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலநாட்களுக்கு முன் தான் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413502

    • 5 replies
    • 653 views
  15. வாஷிங்டன்:பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்த…

  16. ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீடு தகர்க்கப்பட்டது கடந்தவருடம் மே மாதத்தில் பாகிஸ்தானில் வைத்து அல்-கயீடா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருந்தார். அமெரிக்க விசேட கொமாண்டோக்களின் திடீர் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தெரிந்ததே. பாகிஸ்தானின் அப்பொட்டாபாத் நகரத்தில் இருக்கின்ற, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டினை அதிகளவான மக்கள் சென்று பார்த்து வந்தனர். மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த வீட்டினை சுற்றி பாரிய மதில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே பாகிஸ்தானின் உயரதிகாரிகளினால் ஒசாமா பின்லேடன் கொலைசெய்யப்பட்ட குறித்த வீடு நேற்று சனிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகளை அணைத்துவிட்டு பலத்த இராணுவ, பொலிஸ் பாதுகாப்பின் மத…

  17. சிரிய போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு : போரில் திருப்பம் சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத்த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூனிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்கள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண வேண்டும் என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடைசி முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தத்திற்கான கோரிக்கையை சிரிய நண்பர்கள் குழு இன்று உத்தியோக பூர்வமாக முன் வைத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஆஸாட் ஏற்கப் போவதில்லை என்பது தெரிந்ததே. மேலும் இதனுடைய நோக்கம் வ…

    • 0 replies
    • 568 views
  18. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகளே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். 'சயின்ஸ்' என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய எரிசக்தி துறையில், அணு மின் திட்டத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. நாட்டு மக்களில் பெரும்பகுதியானவர்கள், அணு மின் திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சில அரசு சாரா அமைப்புகள், இந்தியாவில் எரிசக்தி துறையில் வளர்ச்சி ஏற்படுவதை விரும்பவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவதற்கு, இது போன்ற அரசு சாரா அமைப்புகள் இடையூறு ஏற்படுத்துகின்றன. இவை, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படு…

  19. "யூரோ நாடுகளில் பொருளாதார பின்னடைவு" யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகள் இந்த ஆண்டில் பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்லும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மைய காலங்களில் நிதிச் சந்தைகள் ஸ்திரமாகி வருவதாக சமிஞ்கைகள் வரும் நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் கருத்து வந்துள்ளது. இந்த ஆண்டு யூரோ நாடுகளின் பொருளாதாரம் 0.3 சதவீதம் சுருங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவான ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. யூரோ நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி என்பது சிறிய அளவிலானது என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஓலி ரெயின், அவை ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறியுள்ளார். கடந்த…

    • 0 replies
    • 503 views
  20. காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான…

  21. மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ? தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். …

  22. அணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது மிகவும் சிக்கலானதாகவே இருக்கும் என்று என்று அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கணிப்பீடு செய்துள்ளனர். அணுஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி, ஐ.நா. மற்றும் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தை 2 நாட்களுக்கு முன் ஈரான் அதிரடியாக நிறுத்தியது. அதேவேளை, அணுஆயுத திட்டங்களை கைவிட வேண்டும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. ஆனால், ஈரான் மீது இ…

    • 6 replies
    • 1.2k views
  23. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை என்று புதுடெல்லி விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற க…

    • 14 replies
    • 1.3k views
  24. கிரேக்க நாடு வங்குரோத்தாகும்? நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கடன் வாங்கி வாங்கி அதை மீள செலுத்தமுடியாமல் மேலும் கடன்வாங்கிய கிரேக்க நாட்டின் கடன் வலு திறன் மிகவும் கீழ்த்தரத்திற்கு © இறக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம் சடுதியான வங்குரோத்தை விட ஒரு படிப்படியான வங்குரோத்து நிலையை விரும்பியது. இப்பொழுது அந்தக்காலம் நெருங்கி வருகின்றது. அத்துடன், கிரேக்கம் 27 நாடுகளை கொண்ட ஒன்றியத்தில் இருந்து விலக்கவும் படலாம். ஆனால், கிரேக்கத்தை அடுத்து அதை விட பெரிய நாடுகள் மீது, அவற்றின் பெரிய கடன்கள் மீது கவனம் திரும்பலாம். Fitch downgrades Greece Fitch ratings agency downgrades Greece from CCC to C, indicating default 'highly likely'. The age…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.