உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்! : அரசியல், இந்தியா, ஊழல், செய்திகள், ப.சிதம்பரம், மாற்று | Posted by: மாற்று இந்நேரம் என்.டி.டிவியில் ஹாட் நியூஸ் இதுவே. “நான் மிகவும் ஆழமாக காயமடைந்திருக்கிறேன்” என்று பாராளுமன்றத்தில் திருவாளர் பரிசுத்த சிதம்பரம் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார். புதுதில்லியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீதான வழக்கில் அவரை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திலிருந்து பரிந்துரை செய்ததாகவும், நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அவர் மத்திய உள்துறை அமைச…
-
- 1 reply
- 816 views
-
-
முல்லைப் பெரியாறு அணையில் தமிழன் உணர்ச்சிப் பிளம்பாகக் கிடக்க.. கூடன்குளம்.. அணு மின் நிலையத்தில் அவன் உணர்வை கட்டுப்படுத்தி.. கட்சி ஆதாயத்திற்காக.. அறிக்கையும் விட்டுவிட்டார் கருணாநிதி. மேற்கு நாடுகள் எல்லாம் அணு மின் நிலையங்களை எதிர் வரும் 50 ஆண்டுகளில் இல்லாமல் செய்வது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்க.. இந்தியாவோ.. அதன் வட மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை.. மற்றும் பிற தென் மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை தமிழகத்தில் மட்டும் அமைத்து துரிதமாக செயற்படுத்த தொடங்கி இருக்கிறது.. இதனை தமிழர் விரோதக் கட்சியான சோனியா காங்கிரஸ் துரிதமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. தமிழகம் நீண்ட கடல் வெளிகளையும்.. வயல் வெளிகளையும்.. மேட்டு நிலங்களையும் கொண…
-
- 0 replies
- 2.2k views
-
-
முல்லைபெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான மலையாளிகளின் கடைகள் தாக்கபப்ட்டன. கம்பம் பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்ட பேரணி இன்று நடத்தப்பட்ட நிலையில் கேரளத்திலிருந்து தொடர்ந்து தமிழர்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை தங்கவைத்து தேவாரம் பகுதி மக்கள் உணவழிப்பதோடு இங்குள்ள உறவினர்களின் வீடுகளுக்கும் சொந்த வீடு உள்ளவர்களுக்கு அவர்களின் ஊருக்குச் செல்லவும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய தமிழக டிஜிபி முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக 282 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மலையாளிகளால் தாக்கப்படுவதாகவும், தொடர் தாக்குதலால் அச்சமடைந…
-
- 0 replies
- 2k views
-
-
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து தமிழர்கள் துரத்தப்படுவதைத் தொடர்ந்து கேரள எல்லையான கம்பம் பகுதியில் இன்று அதிகாலை அனைத்து கிராமங்களிருந்தும் மக்கள் திரட்டப்பட்டன. இதுவரை ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டு வந்ததால் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள். லேசான தடியடி நடத்தியும் கலைந்து போகச் செய்தனர். ஆனால் இன்று சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிமான மக்கள் கம்பம் பகுதியில் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிடப் போவதாகக் கூறி கேரள எல்லையை நோக்கி திரண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றுவரை சுமார் 800 குடும்பங்கள் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 701 views
-
-
இந்தியாவில் விஷச் சாராயத்தால் 143 பேர் பலி இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்திய 143 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் பலர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சங்களும் எழுந்துள்ளன. மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தெற்கு 24 பர்காணா மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களிலுள்ள மக்கள் இந்த விஷச் சாராயத்தை பருகியுள்ளனர். பலர் பலியாக காரணமாக இருந்த விஷச் சாரயத்தை விற்ற ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்த தகவல் வெளியானவுடன் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வேறு பல சாரயக் கடைகளையும், சாராயம் காய்ச்சும் இடங்களையும் தாக்கி …
-
- 0 replies
- 2k views
-
-
ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர். இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன. ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெ…
-
- 1 reply
- 2k views
-
-
ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நுழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இதற்காக இவர்கள் செலவிட்ட மொத்தத் தொகை 1.000.000.000.000 டாலர்கள் ஆகும். இந்தப் போரில் 4.500 அமெரிக்கப் படைகள் கொல்லப்பட்டன, 1.00.000 ஈராக்கியர் கொலையுண்டார்கள். சுமார் ஒன்றரை மில்லியன் அமெரிக்கப்படைகள் அந்த மண்ணில் இறக்கப்பட்டன. இப்போது ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் போக சுமார் 200 வரையான இராணுவ நிபுணர்கள் அங்கு நிலை கொண்டு ஈராக்கிய படைகளை வழி நடாத்துவார்கள்…
-
- 0 replies
- 460 views
-
-
குடித்தனம் - குறும்படம்
-
- 0 replies
- 791 views
-
-
அணை உடைந்தால்... இந்தியா உடையும்! சமஸ் ஓவியம் : ஹரன் எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!'' - கோயபல்ஸ் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது…
-
- 0 replies
- 2.2k views
-
-
ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால் அவரே அடுத்த முதல்வர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார் என்று சினிமா பிரபலங்கள் தெரிவித்தனர்.ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது. வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த ம…
-
- 22 replies
- 5k views
-
-
கனடாவில் பிரஜாவுரிமை சத்தியப்பிரமாணத்தின்போது ஹிஜாப், புர்கா அணியத் தடை கனடாவில் புதிதாக பிரஜாவுரிமைப் பெறும் பெண்கள் பிரஜாவுரிமைக்கான சத்திரப்பிரமாணம் செய்யும் வைபவங்களின்போது புர்கா மற்றும் ஹிஜாப் அணிவது தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி கூறியுள்ளார். புதிய பிரஜைகள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அவர்கள் முகத்தை மறைத்துக்கொண்டிருந்தால் அவர்களை அடையாளம் காண முடியாதென்பதால் இந்நடவடிக்கை அவசியமானது என அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். சத்தியப்பிரமாண உறுதிமொழிகளை குறித்த நபர்கள் உண்மையில் உச்சரிக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்துகொள்வது கடினமாகவுள்ளதாக எம்.பிகள் மற்றும் நீதிபதிகளிடமிருந்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவ…
-
- 0 replies
- 787 views
-
-
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டது பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் நேற்று முதன் முறையாக பாலஸ்தீனக் கொடியை ஏற்றியுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கும் பாலஸ்தீனத்தின் முதல் வெற்றியாக மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவும் கருதப்படுகின்றது. இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், சர்வதேச சமூகம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முதற்கட்டம் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான சமாதான முயற்சிகளுக்கு ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் விரட்டியடிப்பு: கேரளத்தினர் வெறி இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள காரித்தோடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் தஞ்சம் தேடி ஓடி வந்தனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். http://www.nakkheera...ws.aspx?N=67087
-
- 16 replies
- 3.3k views
-
-
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய கேரள அரசின் மனு தள்ளுபடி புதுடெல்லி, டிச. 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை வாபஸ் பெறாவிட்டால் டிஸ்மிஸ் செய்வோம் என்று நீதிபதிகள் கூறியதைத் தொடர்ந்து மனுவை கேரள வக்கீல் வாபஸ் பெற்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி தமிழக மற்றும் கேரள அரசுகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சி.கே. பிரசாத் மற்றும் ஏ.ஆர். டேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொ…
-
- 0 replies
- 2k views
-
-
இஸ்லாமாபாத், டிச. 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்…
-
- 0 replies
- 2k views
-
-
கேரளம் தமிழகம் இடையே முல்லைப் பெரியாறுயை கேரளாவைச் சார்ந்தவர்கள் இடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடலூரிலிருந்து கேரளா நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். கடந்த மூன்று தினங்களாக இந்த பெருந்திரள் பேரணி நடந்து வருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தேனிஇ கூடலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓடாததால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போடியில் கேரளாவைச் சார்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சிலர் தீவைத்தனர். மத்திய அரசுக்குச் சொந்தமான ரப்பர் அலுவலகத்தை சிலர் தாக்கினர் இதனால் பெரும் பதட்டம் அப்பகுதியில் நிலவுகிறது. http://www.globaltam...IN/article.aspx
-
- 14 replies
- 1.5k views
-
-
தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் அமெரிக்க உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு புதிய இராணுவ கொள்கையை வகுத்துள்ளதை தொடர்ந்து,பாகிஸ்தான் இராணவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள்பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கபட்டு உள்ளது. இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”எங்கள் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம்” என்றார். http://www.tamilthai...newsite/?p=1465
-
- 0 replies
- 686 views
-
-
SocButtons v1.4 . சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்…
-
- 2 replies
- 1k views
-
-
தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் ! முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வ…
-
- 1 reply
- 803 views
-
-
முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும் இந்த பதிவிற்குள் போவதற்கு முன்னர் இவற்றை ஒரு தடவை படியுங்கள் தமிழக மக்கள் துடிக்கிறார்கள்! ஈழத்தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்? முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!! முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி தமிழ் மக்கள் என்றால் எல்லாருக்கும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக போய்விட்டார்களோ என்னமோ? எல்லா பக்கத்தாலும் அடி வாங்குகிறோம். வீரம் வீரம் என்று கூச்சலிடுகிறோம், நாம் வீரர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் அடுத்தவன் குட்டும்போது குனிந்து மடங்கி விழுந்தே போகிறோம். ஆக வீரம் என்பது எம்மை பொறுத்தவரை வரலாற்று …
-
- 3 replies
- 972 views
-
-
ஈராக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பில் குறைப்பு ஏதும் இல்லை வியாழன் அன்று ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உத்தியோகபூர்வமாக முடிவடைதல்மற்றும் ஒரு நாள் கழித்து பாக்தாத்தில் அமெரிக்கத் தலைமையகமான காம்ப்விக்டரியை மாற்றியது ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வுகள் மத்திய கிழக்கில்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி என்பதைப்பிரதிபலிக்கவில்லை. வடிவமைப்பு மாறுகிறது, ஆனால் உள்ளடக்கம் மாறவில்லை. ஈராக்கிற்கு எதிராக அதன் ஆக்கிரோஷப் போரை வாஷிங்டன் மார்ச் 20, 2003ல் இருபோலிக் காரணங்களைக் கூறித் தொடக்கியது: அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000பேரைக் கொன்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை நடத்திய அல்குவேடாபய…
-
- 0 replies
- 382 views
-
-
-
தடுக்க முடியுமா தகவல் நுட்பக் கிளர்ச்சியை? காங்கிரஸ் கட்சிக்கென ஒரு கலாச்சாரப் பெருமை உண்டு. கட்சிக்கு உள்ளே ஒரு பொதுக்கருத்து என்றில்லாமல் ஆளுக்காள் அவரவர் கருத்தை வெளியே பேசுவார்கள், அதை உட்கட்சி ஜனநாயகம் என்பார்கள்; ஆனால் கட்சிக்கு வெளியே மாறுபட்ட கருத்துகள் வந்தால் அந்த ஜனநாயக உரிமையை ஒடுக்கிவிட முயல்வார்கள். இந்த மரபின் புதிய பதிப்பாகத்தான் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மூலமாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இணையத்தின் மூலமாக இன்று பரவலாகி வரும் சமூகவலைத்தளங்களை, அந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த சமூக வலைத்தளங்களில் ச…
-
- 0 replies
- 464 views
-
-
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 73 பேர் மரணம் இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள். அடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங…
-
- 2 replies
- 593 views
-
-
தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப் பனிமலைகள் கரைதல், கடல்மட்ட உயர்வு என்று புவிமீது நடைபெறும் தாக்கங்கள் எல்லை மீறிவிட்டன. இந்தப் புவி மீது மக்கள் வாழ்வே அர்த்தமற்று போகப்போகிறது. மக்கள் மனதில் வளர்த்துள்ள கனவுகளை எல்லாம் இந்தப் பேரழிவு குலைத்து நாசம் செய்யப்போகிறது. புவியின் எதிர் காலம் குறித்த நம்பிக்கை …
-
- 7 replies
- 938 views
-