Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக …

  2. அங்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆகபதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எர்கிஸ் நகரம் மற்றும் வான் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எர்கிஸ் நகரில் 80 கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. வான் நகரில் 10 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பூகம்பத்திற்கு எர்கிஸ் நகரில் 45 பேரும், வான் நகரில் 15 பேரும் பலியாகியுள்ளனர். இந்த பூகம்பத்தில் 1000ம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு புவியியல் தலைவர் மதிப்பிட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=337245

  3. # அரக்கோணம் நகராட்சியில் திமுக வேட்பாளர் மனோகரன் முன்னிலை # கடலூர் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியன் முன்னிலை # கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வேதாரண்யம் நகாட்சியில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி முன்னிலை கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் தங்கமுத்து முன்னிலை # மேட்டூர் நகராட்சியில் திமுக வேட்பாளர் கோபால் முன்னிலை # பத்மநாபபுரம் நகராட்சியில் அதிமுக வேட்பாளர் சத்யாதேவி முன்னிலை

  4. ஆட்சி மாற்றத்துக்குப் பின் டுனீஷியாவில் தேர்தல் மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின்னர் அந்நாடுகளில் ஒன்றில் முதன் முதலாக நடக்கக்கூடிய தேர்தலாக டுனீஷியாவில் ஞாயிறு அன்று நடக்கும் தேர்தல்களில்மக்கள் வாக்களித்து வருகின்றனர். அரபு வசந்தகாலம் என்று சொல்லப்படுகின்ற மக்கள் எழுச்சி டுனீஷியாவில்தான் ஆரம்பித்திருந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் விஞ்சும் வகையில் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். நாட்டிற்கு புதிய அரசியல் சாசனம் ஒன்றை வகுப்பதற்கான மன்றத்தை இத்தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அந்த அரசியல் சாசன மன்றம் புதிய இடைக்கால அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அந்த அதிபர் நாட்ட…

  5. அங்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துறை தலைவர் கூறியுள்ளார். துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் என்ற மிகப்பெரிய நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் காயமடைந்தர்களில் பலர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மக்கள் பீதியில் தெருக்களில் குவிந்தனர். எரிக்ஸ் மாவட்ட மேயர் ஜூல்பிகர் அரபோகு கூறுகையில், "நிறைய கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன; பலர் பலியாகியுள்ளனர். எனினும், எத்தன…

  6. சவூதியின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பென் அப்துல் அசீஸ் காலமானதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் தனது 86வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தான் பென் அப்துல் அசீஸ் சவூதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.c.../18910/57/.aspx

  7. நேற்று டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடையில் 30 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தீஹார் சிறையிலிருக்கும் மகள் கனிமொழியை சந்தித்த கருணாநிதி மாலை 7.30 மணியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் போது ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மத்திய அமைச்சர் நாராயண சாமியும் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது கூடங்குளம் அணு மின் திட்டத்தை, மீனவர்களின் அச்சத்தை போக்கிய பிறகே தொடங்க வேண்டுமென கருணாநிதி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று கருணாநிதி டெல்லியிருந்து சென்னை திரும்புகிறார். http://www.seithy.co...…

  8. ஞாயிற்றுக்கிழமை, 23, அக்டோபர் 2011 (10:54 IST) லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு லிபியா அதிபர் கடாபி கடந்த 20ந் தேதி புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. லிபியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இன்று அறிவிக்கப்படுகிறது. சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், புதிய தலைவரும் அறிவிக்கப்பட உள்ளார். இந்த தகவலை லிபியா பிரதமர் முகமது ஜிப்ரில் தெரிவித்தார். பிரதமர் பதவியில் இருந்து முகமது ஜிப்ரில் விலகுகிறார். இன்னும் அங்கு 8 மாதத்தில் தேசிய கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அதில் …

  9. 'மோனிகாவுடன் காதல்வயப்பட்ட போது அவரை சமாளிப்பது எப்படி பில் கிளிண்டன் என்னிடம் ஆலோசனை கேட்டார'; - அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மோனிகா லெவின்ஸ்கியுடன் காதல்வயப்பட்ட போது, அவரை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள ஜாப்ஸின் நூலில் இந்த பரபரப்புத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது சுயசரிதை நாளை விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், ஜாப்ஸின் தனிப்பட்ட வாழ்ககை குறித்த பல சுவாரஸ்யமான பரபரப்பான தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மோனிகா லெவின்ஸ்கி-கிள…

  10. சர்வாதிகார அரசு ம‌த்‌திய அரசு- ஜெய‌ல‌லிதா காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று கு‌ற்ற‌ம்சாட்டியு‌ள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது எ‌ன்று‌ம் இது ஒரு சர்வாதிகார அரசு என்று‌ம் கூ‌றினா‌ர். டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய அபிவிருத்தி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் உரையை வாசித்தார். அதில், 12வது ஐந்தாண்டு திட்டத்தை விவாதித்து ஒப்புதல் அளிப்பதற்காக இந்த 56வது தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக நான் அறிகிறேன். இந்த தேசிய அபிவிருத்தி கவுன்சில் கூட்டம் ஒரு சடங்குக்காக கூட்ட படுகிறதேயன்ற…

    • 0 replies
    • 402 views
  11. நேற்று நெதர்லாந்தில் 5 தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில்.. அச்சுறுத்தி பணம் பெற்றது.. மற்றும் கிரிமினல் செயற்பாடு.. மற்றும் மூளைச் சலவை செய்தல் என்பதற்காக.. 6 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகளுக்கு.. பயங்கரவாதத்திற்கு.. ஆதரவளித்தது தவறல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்ன என்றால்.. மூளைச் சலவை செய்யும் வடிவில்.. நெதர்லாந்தில் தமிழ் பிள்ளைகளை சித்திர வடிவில் குண்டுகள்.. கிரேனேட் செய்ய பயிற்றுவித்தது குற்றமாம். அப்படி என்றால்.. நெதர்லாந்தில்.. பிள்ளைகளின் மூளையில்.. வன்முறை.. துப்பாக்கிப் பயன்பாடு.. குண்டு பயன்பாடு.. தயாரித்தல்.. போன்றவற்றை உள்ளடக்கிய பல.. அமெரிக்க மற்றும் மேற்குலக.. ஜப்ப…

  12. ஈராக் போர் முடிந்தது ஒபாமா அறிவிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து, இந்தாண்டின் இறுதிக்குள்ளாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி உடனான வீடியோ கான்பரன்சிங்கிற்கு பிறகு, வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை அதிபர் ஒபாமா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈராக்கில், முன்னாள் அதிபர் சதாம் உசேன் மறைவின் போதிலிருந்து அங்கே அமைதி திரும்பத் துவங்கி விட்டது. ஆனால், ஈரான் <மற்றும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளால் ஈராக்கிற்கு அச்சுறுத்தல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. அதற்காகவே, அமெரிக்கப் படைகள் அங்கு தங்க…

  13. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும், இலங்கையின் வெள்ளைக் கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சேர்ட் நகரில் கேணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

    • 2 replies
    • 1.2k views
  14. கிட்டத்தட்ட 42 வருடங்கள் லிபியாவை ஆண்ட கடாபி இன்று மேற்குலக ஆதரவுடன் கிளர்ச்சியார்களால் கொல்லப்பட்டார். இதனுடன் எட்டு மாத மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வரலாம். ஆனாலும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஒரு தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒரு கருத்துக்கணிப்பை/கருத்துக்களை பரிமாறுங்கள் - நன்றி. லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: http://www.yarl.com/...showtopic=93229 கடாபியின் கடைசி நாட்கள்? : http://www.yarl.com/...showtopic=90591 லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி : http://www.yarl.com/...showtopic=91691 எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

  15. புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் அபார வெற்றி பெற்றார். அத்தொகுதியில் காங்கிரஸ் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற்றது. அதிமுக உள்பட 5 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்று இந்திரா நகர். ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திரா நகர் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தனது அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனை வேட்பாளராக நிறுத்தினார் ரங்கசாமி. காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், அதிமுக சார்பில் பாஸ்கரன் ஆகியோ…

  16. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,694 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. அங்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர் மு.பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுகவின் கே.என்.நேருவை 14,694 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் 2வது முறையாக அவர் சட்டசபைக்குச் செல்கிறார். திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். பிற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யவும் இல்லை. 16 …

  17. உலகத்தின் எந்த பகுதி மக்கள் வேண்டுமானாலும் திரண்டு வந்து போராடிவிடுவார்கள். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அது நடக்கவே நடக்காது. காரணம், முதலாளித்துவத்தை ஆதரிக்கிற குணம் அமெரிக்கர்களின் ஜீனிலேயே உண்டு என்று சொல்வார்கள். ஆனால், அடி மேல் அடி விழும் பட்சத்தில் அமெரிக்க மக்கள்கூட நடுத்தெருவுக்கு வந்து போராடத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் 'வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்' (Occupy Wall Street) போராட்டம் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், ஏதேதோ முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை போட்டு பணத்தை இழந்தவர்கள், வருமானம் இல்லாததால் வீட்டை விற்றவர்கள், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாதவர்கள், இத்தனை நாளும் கிடைத்த வந்த அரசு வசதிகள் இன…

  18. "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை! பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில் நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் பாகிஸ்தான் …

  19. புதிய மலேரியா மருந்து 56 வீதம் பாதுகாப்பு மிக்கது உலகத்தின் புகழ் மிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜி.எஸ்.கே வெளியீடு செய்துள்ள மலேரியா தடுப்பூசி மருந்து முன்னைய மருந்துகளைவிட வீரியம் கூடியது என்றும், உயிர் காப்பதில் 56 வீதம் முன்னேற்றம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுளம்பு கடியினால் ஏற்படும் கொடிய மலேரியா காய்ச்சல் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் வருடாந்தம் எட்டு இலட்சம் சிறு பிள்ளைகளின் உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தடுப்பூசி ஏழு ஆபிரிக்க நாடுகளில் உள்ள 11 மையங்களில் பரீட்சார்த்தமாக போடப்பட்டது. பிறந்து 5 மாதங்கள் முதல் 17 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு மூன்று தடவைகள் இந்த மருந்தை ஏற்றப்பட்டது. சுமார் 15.000 குழந்தைகளுக்கு போடப்ப…

  20. ரஜீவ் கொலை பிரேமதாசவுக்கு தொடர்புண்டா..? October 17, 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகுமா? சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது. ஏற்கெனவே உ…

  21. அமெரிக்காவின் பொருளாதார மையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் பொருளாதார மையமான நியோயூர்க்கின் பங்குச்சந்தை உட்பட்ட முக்கிய வீதியான வால் ஸ்டீர்ட் இனை முடக்கும் போராட்டங்கள் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது. இந்த வார இறுதியில் பேர் 700 வரை கைது செய்யப்பட்டனர். வங்கிகளுக்கு அரசு தொடர்ந்து அளிக்கும் உதவிகளுக்கு எதிராகவும் வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் போராடுகின்றனர்.

    • 4 replies
    • 1.2k views
  22. நெருப்போடு விளையாடுகிறது இந்தியா தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்’ என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக…

    • 0 replies
    • 676 views
  23. வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார…

  24. அரசியல்வாதிகளின் சூதாட்டங்களுக்கு எதிராக உலக மக்கள்.. மக்களால் உலகத்தை புரட்டிப்போட முடியுமா..? தமிழ் மக்கள் ஆழமாக அவதானிக்க வேண்டிய உலகப் பொருளாதார சூறாவளிக்கண்.. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்,( occupy wall street ) முதலாளித்துவம், கம்யூனிசம், பயங்கரவாதம் ஆகியவற்றைத் தாண்டி உலக அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைக்கு எதிராக திசை திரும்பிவருகிறது. உலக முதலாளித்துவம் தற்போது அறிவித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உண்மையாகவே ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திட்டங்கள் அல்ல என்ற உண்மையை புரிந்து கொண்டு, பொருளியல் அறிவுள்ள மக்கள் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். இன்ற…

    • 2 replies
    • 722 views
  25. பாங்காக்: தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள், அங்கு தற்போது நிலவி வரும் கடும் வெள்ளம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுமாறு இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது. சமீபகாலமாக தொடர் மழையினால் தாய்லாந்து நாட்டில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள எல்லா ஆறுகளும் நிரம்பி அபாய நிலையில் உள்ளன. முக்கியமாக தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து தகவல்கள் அவ்வப்போது விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். பல அணைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.